19.
பிள்ளை பிறந்தது கேட்க - குழந்தை பிறந்ததைக் கேட்க
ஆம்பிள்ளையான் பேர் இட்டுக்க - கணவனின் பெயரை வாரிசுக்கு
இடுவது
அவ பேரைத்தான் இடோணும் - அவ பேரைத்தான் வைக்க வேண்டும்
பேரிட்டார்கள் - பெயரிடுதல் என்றால் பெயர் வைப்பது, பெயர்
வைத்தார்கள்.
வேளார் - குலதெய்வம் கோயிலில் தெய்வத்தொண்டு புரியும் பூசாரி.
படைப்பு வீடு - சாமிக்குப் படைக்க எனத் தனியாக வீடு இருக்கும்.
பூசை வீடு - திருக்கார்த்திகைப் பூசை செய்யும் வீடு.
மலயா ரிப்பனில் போ கட்டுவது - ரிப்பனை பூப் போல முடிவது.
லப்பர் பாண்டு- ரப்பர் பாண்ட்.
சமத்தி - கெட்டிக்காரி
அமயஞ்சமயம் - அவசரத்துக்கு, கை உதவியாய், அந்நேரத்துக்கு
புது நெறம் - மாநிறம் என்பதை புது நிறம் என்பார்கள்.
ஆத்தாப் பொண்ணு சீத்தாப் பழம் - பெண்குழந்தையைக் கொஞ்சுவது.
ரங்கம் பழம் என்றால் ஆண்குழந்தையைக் கொஞ்சுவது. சீதாப்பழம் என்றால் பெண் குழந்தையைக்
கொஞ்சுவது.
20.
பாங்கு மெர்ஜர் - திவாலான அல்லது நிர்வகிக்க முடியாத வங்கி
இன்னொரு தனியார் அல்லது அரசு வங்கியுடன் இணைவது.
அடிமொதல் - அஸ்திவாரம், பின்புலம், வீட்டில் இருக்கும் அனைத்துப்
பூர்வீகச் சொத்தும், வீட்டையும் சேர்த்து.
நடைமுறைச் செலவு - தினப்படிச் செலவு, மாதாந்திர வருடாந்திரச்
செலவுகளும் சேர்த்து.
ரோசிச்சபடி - யோசித்தபடி.
திருவனந்தல் - நகரச்சிவன் கோயில்களில் தினம் நடக்கும் காலைச்சந்தி
பூஜை.
கைப்பெட்டி - கணக்கு வழக்கு, மாமப்பட்டு, பட்டில் முடியும்
காசு, கணக்கு நோட்டு, நூல்கண்டு, எழுது பொருட்கள் உள்ள பெட்டி.
சாய்வு மேசை - கணக்கு எழுதப் பயன்படும் மேசைப் பலகை.
பேரேடுகள் - மொத்தக் கணக்கு வரவு செலவு அடங்கியது பேரேடு.
ஒட்டுவாரொட்டி - ஒருவரோடு ஒட்டிக்கொள்ளுதல். குழந்தைகள் அம்மாவின்
இடுப்பில் ஒட்டிக் கொள்வதை இப்படிக் கூறுவார்கள்.
முருதாடி - முரட்டுப் பெண்.
சீண்ட்ரம் - கோவக்காரி, பொல்லாதவள். சீண்டினால் பின் விளைவுகள்
கடுமையாக இருக்கும்.
பெறாத மகனாக - பெற்றெடுக்காவிட்டாலும் மகனாக நினைத்தல்
அடிப்பாதரவே - கவலை மேலிடக் கூறும் சொல்வழக்கு. அடப்பாவமே
என்பது போல்
பிரம்மோத்ஸவம் - கோவிலின் வருடாந்திரத் திருவிழா.
மொறைப்பலகாரம் - திருமணத்தின் போது பெண் வீட்டார் மாப்பிள்ளை
வீட்டாருக்குக் கொடுக்கும் முறைப் பலகாரம்.- தேன்குழல், முறுக்குவடை, மனகோலம், அதிரசம்
இதுபோல்
மக்க பொண்டுக - மக்கள், குழந்தைகள், பெண்டிர். தன்னைச் சார்ந்த,
தன் குடும்பம் சார்ந்த மனிதர்கள், குழந்தைகள், பெண்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)