வியாழன், 30 நவம்பர், 2023

காரைக்குடி முத்தாளம்மன் கோயில்

அம்மனின் முன் ஒரு சூலம் பார்த்திருப்பீர்கள். ஐந்து சூலங்கள் சந்நிதி முன் எலுமிச்சையோடு அலங்கரிக்க ஐந்து அம்மன்களை ஒரே சந்நிதியில் ஒரே கருவறை பீடத்தில் பார்த்திருக்கிறீர்கள். இல்லை என்றால் காரைக்குடிக்கு வாருங்கள். கண் குளிரப் பார்த்து மகிழலாம். காரைக்குடியில் அருளாட்சி செய்துவரும் அம்மன் கோவில்களில் ஒன்று முத்தாளம்மன் கோவில். 

இக்கோவில் காரைக்குடியின் மத்தியில் நகரச் சிவன் கோவிலுக்கு அருகில் முத்து ஊரணியின் கரையில் அமைந்துள்ளது .மிகச் சக்தி வாய்ந்த கோவில் இது. 

செவ்வாய்ப் பொங்கல் எனப்படும் வைகாசிப் பொங்கல் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெறும். அன்று புற்றுமண் மாற்றும் நிகழ்வில் அம்மனுக்குச் சிறப்பு  அலங்காரம் நடைபெறும்.

நாங்கள் சிறு பிள்ளைகளாய் இருந்தபோது இந்தத் திருவிழாவின் போதுதான் அம்மன் உருவத்தைப் பார்ப்போம். மற்றைய சமயங்களில் அக்கோயிலின் எல்லாச் சந்நிதிகளிலும்  இப்போது இருப்பது போல் மேற்கூரை இல்லாமல்தான் இருக்கும்.  இப்போது கருவறை மட்டும் நடுவில் திறந்த வெளியாய் இருக்கிறது.  சுற்றிலும் வேல் கொண்ட கம்பித் தடுப்புகள். 

முத்தாரம்மன் என்றும் சொல்கிறார்கள். நாங்கள் முத்தாளம்மன் என்றே கூறிப் பழக்கப்பட்டு விட்டோம். முத்து ஆரம் போல் ஐந்து அம்மன்கள் நெருக்கமாய் அமர்ந்த திருவுருவம் முத்தாளம்மா.

இக்கோயில் பத்மசாலியர், சேணியர் என்னும் சமூகத்தினரால் ( வேளாளர்கள் என்றும் சொல்வார்கள் ) நிர்வகிக்கப்படுகிறது.  


செவ்வாய், 28 நவம்பர், 2023

கறையான்கள்

கறையான்கள்

தேவி கருமாரியம்மா சிறந்த உபகாரி. அவள் தேசம் எல்லாம் காக்கும் அருள் செல்வி அவதாரி “ என்று பாடிக்கொண்டிருந்தது பெரியபாளையத்தம்மன் கோவிலின் லௌட் ஸ்பீக்கர். அன்று ஆடி வெள்ளியாதலால் புற்றுக்குப் பால் ஊற்ற பெண்கள் கூட்டம் க்யூ கட்டி நின்றது.

 

கூட்டத்துக்கு நடுவில் வாழையிலையில் தட்டு வைத்து அதில் மூன்று மாவிளக்கு உருண்டைகள் வைத்து அதற்கு மஞ்சள் குங்குமம் பூ வைத்து நடுவில் குழியாக்கி நெய் ஊற்றித் திரிப் போட்டு ஏற்றி வைத்துக் கொண்டிருந்தார் நீலாக்கா. சிறிது நேரத்தில் காரின் அருகில் வந்து மாவிளக்கைக் கொடுத்துவிட்டு ”தேவிம்மா கூட்டம் கொஞ்சம் கம்மியான மாதிரி இருக்கு. அதுனால சீக்கிரம் எட்டிப்பார்த்துக் கும்பிட்டு வந்துடலாம் வாம்மா” என்றார்.

திங்கள், 27 நவம்பர், 2023

எழுத்தில் எனைக் கண்டு கொண்டேன் !

 எழுத்தில் எனைக் கண்டு கொண்டேன் !



நான்நாகாவின் நான்மீடியாவுக்காக எனது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்கிறேன். எனது பெயர் தேனம்மைலெக்ஷ்மணன். வலைப்பதிவர், எழுத்தாளர், சுதந்திரப் பத்திரிக்கையாளர். அடையாள அட்டைகளில் மட்டுமே அடையாளமாய் இருந்த என் பெயர் இன்று இணையத்தில் உயிர்ப்புடன் இனங்காணப்படுவதற்கு என் தொடர் எழுத்துக்களே காரணம். ஏழு வலைப்பூக்களிலும், தமிழ் கூறும் நல்லுலகின் பல இணைய மற்றும் அச்சு இதழ்களிலும் பங்களிப்புச் செய்துள்ளேன். அச்சில் 24 நூல்களும் அமேஸானில் 57 நூல்களும் வெளியாகி உள்ளன. 25 இணைய விருதுகளும், 20 க்கும் மேற்பட்ட பட்டயங்களும் சான்றிதழ்களும் என் தொடர் முயற்சிகளுக்கு வழங்கப்பட்ட கௌரவங்கள்.

எனது தொடர் உழைப்புக்கும் எழுத்துலகில் எனது பங்களிப்புக்கும் நான்மீடியா நாகா போன்ற பல மீடியா நண்பர்களும், தோழிகளுமே காரணம். என் மனத் தடைகளை மீறி நான் எழுத வந்தது போல் பல்வேறு தடைகளைத் தாண்டி சாதனை படைத்து வரும் மகளிர் பற்றிய எனது முதல் தொகுப்பே ”சாதனை அரசிகள்”. என் எழுத்துத் திறனைக் கண்டுபிடித்து ஊக்குவித்தவர்கள் என் தமிழாசிரியை சுசீலாம்மா, அடுத்து 24 ஆண்டுகள் இடைவெளிக்குப் பின் இணையத்தில் எழுதத் தொடங்கிய என்னைப் பத்ரிக்கையில் எழுத அழைத்தவர்கள் லேடீஸ் ஸ்பெஷல் ஆசிரியை கிரிஜாம்மா. இவர்கள் இல்லாமல் இன்று இருக்கும் நான் இல்லை.

சனி, 25 நவம்பர், 2023

வம்சம் தழைக்கச் செய்யும் ஊனையூர் ஸ்ரீ முத்து வெள்ளைச் சாத்தையனார்.

வம்சம் தழைக்கச் செய்யும் ஊனையூர் ஸ்ரீ முத்து வெள்ளைச் சாத்தையனார்.


சிவகங்கை மாவட்டம்  காரைக்குடிக்கு அருகிலுள்ள கானாடுகாத்தானிலிருந்து திருமயம் செல்லும் வழியில் இருக்கிறது  ஊனையூர்.  இங்கே பூரணா புஷ்கலா சமேத ஸ்ரீ முத்து வெள்ளைச் சாத்தையனார் கோயில் கொண்டிருக்கிறார். சக்தி வாய்ந்த தெய்வம். சாத்தன் என்ற பெயர் சமணச் சார்புடைத்தாம். சமண மதம் சார்ந்த சாத்தன் என்ற பெயர் ஐயனாரையும் குறிப்பது. ஐயனார் & சாத்தன் வணிகர்களின் குலதெய்வம். சாத்தன் என்றால் காப்பவன் என்று பேராம்.


தனது வணிகக் குழுக்களைக் காக்கும் தலைவன் பெயர் சாத்தன் என்றிருந்தது போல, மக்களைக் காக்கும் பேரரசர்களுக்கும் சாத்தன் என்ற பெயர் வழங்கப்பட்டிருக்கிறது வியக்கவைக்கும் ஒற்றுமை. அரசர்களின் பெயர்கள்  சாத்தன், சாத்தன் மாறன் , சாத்தன் பூதி, சாத்தன் பழியிலி மற்றும் ராணியின் பெயரும் சாத்தன் காளி என்று வழங்கப்பட்டிருக்கிறது.

யூ ட்யூபில் 2251 - 2260 வீடியோக்கள்

2251.பன்னிருநாமங்கள், #தேனம்மைலெக்ஷ்மணன்,

https://www.youtube.com/shorts/OmPlT2Xa1EM


#பன்னிரு நாமங்கள், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#PANNIRUNAMANGAL, #THENAMMAILAKSHMANAN, 



2252.நமச்சிவாய l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=mnlRYZAzSps


#நமச்சிவாய, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#NAMACHIVAYA,#THENAMMAILAKSHMANAN,

வெள்ளி, 24 நவம்பர், 2023

சாண்டர்ஸ் ட்ராகனோ

சாண்டர்ஸ் ட்ராகனோ

காற்றைக் கொஞ்சம் நிற்கச் சொன்னேன் பூப்பறித்துக் கோர்க்கச் சொன்னேன் ஓடிவந்து உன்னைச் சந்திக்க.. ” ஸாமின் செல்ஃபோன் ரிங்கிட்டது. சமீபகாலமாக அவன் இந்தப் பாட்டைக்கூட நேசிக்கத் துவங்கி இருந்தான்.

 

நேரம் கிடைக்கும்போதெல்லாம் எப்போதடா ராணியைப் பார்ப்போம் என்றே ஏங்கிக்கொண்டிருந்தது அவன் மனது. காலிங் பெல் அடிக்கும்போதும் மெல்லவே தட்டுவான். அவள் பயந்துவிடக்கூடாது என்று.  சரிந்த வயிற்றோடு மெல்ல மெல்ல நடந்து வந்து அவள் கதவைத் திறக்கும்போது அவள் வயிற்றில் கதவு இடித்துவிடுமோ என்று பயப்படும் அளவுக்கு அவனது பிரியம் எல்லை கடந்து கொண்டிருந்தது.

 

“ஹேய் ஒண்ணுல்லப்பா , குட்டீஸ் முண்டுறாங்க. ரெண்டு பக்கமும் வயிறு அசைஞ்சிச்சு அதான் சொல்ல கூப்பிட்டேன். என்னால அந்த பரவசத்தை தாங்க முடில. “ ஸ்கந்தபுரி எஸ்டேட்டில் இருக்கிறான் ஸாம். அவனது மனமோ பறந்து போய் அவளது வயிற்றைத் தொட்டுப்பார்த்துக் கொண்டிருந்தது.

யூ ட்யூபில் 2241 - 2250 வீடியோக்கள்.சினிமா பார்வை.

2241.2010: The Year We Make Contact l Peter Hyams l ThenammaiLakshmanan

https://www.youtube.com/watch?v=qnW3WsUC9yY


#2010:TheYearWeMakeContact, #PeterHyams, #ThenammaiLakshmanan,



2242.Glass l M.Night Shyamalan l ThenammaiLakshmanan

https://www.youtube.com/watch?v=d4K9dEdIBrQ


#Glass, #MNightShyamalan,#ThenammaiLakshmanan,

செவ்வாய், 21 நவம்பர், 2023

எந்த மாற்றம் வரினும் வாழ்க்கை வாழ்வதற்கே என்று கூறும் மணிமேகலை

 எந்த மாற்றம் வரினும் வாழ்க்கை வாழ்வதற்கே என்று கூறும் மணிமேகலை.



மணிமேகலை. இப்பெயரைக் கேட்டதும் உங்களுக்கு மணிமேகலைக் காப்பியம் நினைவுக்கு வரலாம். இவர் சிறந்த பட்டிமன்றப் பேச்சாளர்.தன் பத்து வயதிலேயே 1330 குறள்களையும் மனப்பாடம் செய்து ஒப்பித்துப் பரிசு வாங்கியவர். ஒரு கவிதை நூலுக்குச் சொந்தக்காரர். அனைவருடனும் தன்மையாக இயைந்து செல்லும் குணம் கொண்டவர். அழகப்பா கல்லூரியில் பி காம் படித்த இவர் சக்தி நிறுவனத்தின் தூணாக இருபத்தி ஐந்து வருடம் பணியாற்றினார். அதிலிருந்து விலக நேரிட்டதும் அடுத்த நாளே இன்னொரு கம்பெனியில் பணியில் அமர்ந்தார். ஆனால் தன் பூர்வீகப் பணியிடத்தைப் பற்றி ஒரு நாளும் குறை கூறியதே இல்லை. எதையும் பாசிட்டிவாக எடுத்துக் கொள்ளும் நங்கை. அவரிடம் அவரது குழந்தைப்பருவம், குடும்பம், பணி பற்றிக் கேட்டபோது அவர் கூறியதைத் தொகுத்திருக்கிறேன்.


 


”என் அம்மாவிற்கு தமிழ் இலக்கியம் இதிகாசங்கள் புராணங்கள் இவற்றின் மேல் தீராக் காதல். நான் அம்மாவின் வயிற்றில் நிறைமாதமாக இருந்தபோது காரைக்குடி கம்பன் விழாவுக்குச் சென்ற அம்மாவை அனைவரும் இப்படி நிறை மாதத்தில் வரலாமா எனக் கேட்க என் மகள் விழா முடிந்ததும்தான் பிறப்பாள் எனக் கூறினார்கள். அதுபோல் விழா முடிந்ததும் திருவாதிரை நட்சத்திரத்தில் நான் பிறந்தேன். ஆதிரை கையால் அமுத சுரபியில் அன்னம் பெற்றுப் பாரகம் அடங்கலும் பசிப்பிணி அறுத்த மணிமேகலையின் பெயரை எனக்கு வைத்தனர்.

திங்கள், 20 நவம்பர், 2023

மகர்மச் யா மஹாதேவ்

மகர்மச் யா மஹாதேவ்

சாதுர்யம் பேசாதேடி என் சலங்கைக்குப் பதில் சொல்லடி.. ” பாடிக்கொண்டிருந்தது அந்த மஹேந்திராதாரில் மாட்டி இருந்த பென் ட்ரைவ். 

 

”இன்னொருத்தி நிகராகுமோ எனக்கின்னொருத்தி நிகராகுமோ.. ” இப்பவெல்லாம் என்ன என்னவோ பாட்டைக் கேட்டுக் குட்டிச்சுவராகிப் போய்க்கொண்டிருக்கிறாள் தேவி. நல்ல வேளை சீரியல் எல்லாம் பார்க்காமல் இருக்காளே. நினைத்துப் பெருமூச்சு விட்டான் சாம்.

 

மெர்க்கராவின் எஸ்டேட். கொண்டை ஊசி வளைவுகளில் மடிக்கேரி என்று கன்னட எழுத்துக்கள் மின்னின. காஃபி எஸ்டேட்டின் வனப்புக்குள் புகுந்து புகுந்து சென்றது அந்த ஜீப்.

 

இன்ஸ்டண்ட் காஃபி பவுடர் தயாரிக்கும் கம்பெனியிலிருந்து காஃபியின் தவிர்க்கமுடியாத அரோமா எழும்பிக்கொண்டிருந்தது. பாசம் பிடித்த மண்ணில் பச்சையமிட்டிருந்தன ஏலச்செடிகளும் மிளகுக் கொடிகளும்.

யூ ட்யூபில் 2231 - 2240 வீடியோக்கள்.

2231.ஸ்ரீ சனைச்வர அஷ்டோத்திர சத நாமாவளி l தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=4WMh4aGapfE


#ஸ்ரீசனைச்வரஅஷ்டோத்திரசதநாமாவளி, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#SRISANISHWARAN, #ASHTOTHRAM, #THENAMMAILAKSHMANAN,



2232.பிரதோஷ வழிபாட்டுக்குரிய மந்திரங்கள் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=9Gw5S-E2q6A


#பிரதோஷவழிபாட்டுக்குரியமந்திரங்கள், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#PRADHOSHAM, #THENAMMAILAKSHMANAN,

சனி, 18 நவம்பர், 2023

ஆராவமுதனும் அதித்யாவும் ஆராதனாவும் ஆத்திச்சூடிக் கதைகளும் :– 10.

 ஆராவமுதனும் அதித்யாவும் ஆராதனாவும் ஆத்திச்சூடிக் கதைகளும் :– 10.

  முழுப்பரிட்சை லீவ் விட்டாச்சு. லீவுக்கு எங்கேயெல்லாம் போகலாம்னு ஆராதனாவுக்கும் ஆதித்யாவுக்கும் ஏகப்பட்ட ஆலோசனை. தாத்தாவிடம் ஓடி வந்து கட்டிப்பிடித்துக் கொண்டார்கள். ”தாத்தா, இங்கே ஒரே ஹாட். நாம குளுகுளுன்னு எங்காவது போலாம். ஷிம்லா, டார்ஜிலிங் மாதிரி”.

  ”இல்ல கண்ணுங்களா, நாம இந்தவாட்டி என்னோட பால்யகால நண்பன் மகாதேவன் இருக்குற பெங்களூருக்குப் போகப்போறோம். பெங்களூர்ல லால்பாக், கப்பன்பார்க், விதான்சௌதா, மியூசியம் எல்லாம் பார்த்துட்டு மைசூர் போய் அரண்மனையும் பார்த்துட்டு வரப்போறோம் “

  “ஹையா” எனக் குதித்தார்கள் இருவரும் கைகோர்த்து. இதை அவர்கள் நண்பர்களிடம் கைபேசியில் தெரிவிக்க ஓடினார்கள். ” என்ன சத்தம் “ என்றபடி வந்த ரம்யா, “வீடியோ கேம்ஸெல்லாம் விளையாடக் கூடாது “ என செல்ஃபோனைப் பறித்தாள். ”இல்லம்மா ஃப்ரெண்டுக்கு ஃபோன் “ என்று கொஞ்சிவிட்டு இரண்டும் மாறி மாறி தங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டன.

வியாழன், 16 நவம்பர், 2023

அமேஸானில் என்னுடைய 57, 58 ஆவது நூல்கள்.

**என்னுடைய 57 ஆவது மின்னூல்  “கடவுள் நாமம் காப்பாற்றும் !” அமேஸானில் விற்பனைக்கு உள்ளது. 

விலை ரூ. 200//- மட்டுமே.


கடவுள் நாமம் காப்பாற்றும்

https://www.amazon.in/dp/B0C66NN5WC

பதின்பருவத்தினரும் நம் புராண இதிகாச காப்பியங்களைப் புரிந்து கொள்ளும் வண்ணம் சிறுகதைகளாகக் கொடுத்துள்ளேன். 

யூ ட்யூபில் 2221 - 2230 வீடியோக்கள்.

2221.அன்பே தகளியாய் l பூதத்தாழ்வார் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=6z0Phr_hV74


#அன்பேதகளியாய், #பூதத்தாழ்வார், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#ANBETHAGALIYAY, #BHOOTHATHAZHWAR, #THENAMMAILAKSHMANAN, 



2222.லிங்கப் பாடல் l தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=gvw85NPU5TQ


#லிங்கப்பாடல், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#LINGAPADAL, #THENAMMAILAKSHMANAN, 

புதன், 15 நவம்பர், 2023

குஹன் பிக்சர்ஸும் ரைன் தமிழ்ச்சங்கத்தில் எனது நூல் வெளியீடும்.

 176.


3501.ஜெர்மனி ரைன் தமிழ்ச்சங்கத்தின் இன்றைய ஒன்று கூடலில் எனது 25 ஆவது நூல், " செட்டிநாட்டுப் பெண்களின் கதைகள் " வெளியிடப்பட்டது. 

திருமதி தனலெக்ஷ்மி அவர்கள் வெளியிட திருமதி கீதா அவர்களும்  செயலாளர் திரு மணி அவர்களின் மனைவி திருமதி காவ்யா மணி அவர்களும் பெற்றுக் கொண்டார்கள்.



செவ்வாய், 14 நவம்பர், 2023

கதை கேளு.. கதை கேளு…

கதை கேளு.. கதை கேளு…

தை கேளு கதை கேளு சுகமான கதை கேளு..மைக்கேல் மதன காம ராஜன் கதையை நல்லா கேளு “ என்று பாடிக் கொண்டிருந்தது காரின் 106.4. எஃப் எம்.

 

சவுண்டைக் குறைத்த ஸாம் இன்னிசைத்த ஃபோனை டாஷ்போர்டிலிருந்து எடுத்தான். அவரது பிஸினஸ் பார்ட்னரும் நண்பருமான குமாரிடமிருந்துதான் ஃபோன் .

 

பயணத்தின்போது சைலண்டில் போட்டு டாஷ்போர்டில் போடவேண்டுமென்பது தேவியின் கட்டளை. ப்ளூ டூத்தும் உபயோகிக்கக் கூடாது. அன்று சைலண்ட் மோடில் போட மறந்துவிட்டான். காரின் வைப்பர்கள் சர் சர் என அசைந்து கொண்டிருந்தன.

திங்கள், 13 நவம்பர், 2023

திருமணத் தடை நீக்கும் புரவி எடுப்பு

திருமணத் தடை நீக்கும் புரவி எடுப்பு

ஸ்ரீ நரியங்குடி கருங்குளம் பூரண புஷ்கல சமேத ஸ்ரீ ஆதினமிளகி அய்யனார் காட்டுக் கருப்பர் கோயில்

காடுகளையும் கழனிகளையும் காக்கும் ஊர்க்காவல் தெய்வங்கள்தான் அய்யனாரும், கருப்பரும். கம்மாய்க் கரையோரம் அமைந்த இவ்வகைக்கோவில்கள். சிவகங்கைப் பகுதியில் அதிகம். இவை பல்வேறு இனத்தாருக்கும் குலதெய்வக் கோயில்களாகத் துலங்குகின்றன. அவற்றில் ஒன்று நரியங்குடியில் உள்ள பூரண புஷ்கல சமேத ஸ்ரீ ஆதினமிளகி அய்யனார் காட்டுக்கருப்பர் கோவில்.

யூ ட்யூபில் 2211 - 2220 வீடியோக்கள்.

2211.பெருமாள் திருமொழி l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=QQ4f9NTanEg


#பெருமாள்திருமொழி, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#PERUMALTHIRUMOZHI, #THENAMMAILAKSHMANAN, 



2212.சாய்ந்தாடு முருகா சாய்ந்தாடு l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=ASj1IpL9dbM


#சாய்ந்தாடுமுருகாசாய்ந்தாடு, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#SAYNTHADUMURUGA #THENAMMAILAKSHMANAN,

ஞாயிறு, 12 நவம்பர், 2023

மூங்கில் குருத்துக்கள்

மூங்கில் குருத்துக்கள் 

“மூங்கில் இலைக் காடுகளே.. முத்து மழை மேகங்களே..பூங்குருவிக் கூட்டங்களே கேளுங்கள். மாலையிட்ட மங்கையர்க்கு தற்கொலைதான் சொர்க்கம் என்றால் மேளம் என்ன தாலி என்ன கூறுங்கள்.. “

 

“என்ன பாட்டு இதுன்னு கேட்டுட்டு இருக்கே.” குளித்துவிட்டு ஈரத்தலையை சரியாகத் துவட்டாமல் சிலிப்பியபடி படுக்கையறைக்குள் நுழைந்த ஸாம் அங்கே இருந்த ரிமோட்டை எடுத்து படக்கென்று டிவியை அணைத்தான்.

 

சோஃபாவில் கால் மடித்து ஒரு பக்கம் சாய்ந்தமர்ந்திருந்த தேவியின் கண்களில் கண்ணீர் வடிந்த தடம். முகம் ஊதிப்போய்க் கிடந்தது. இரவு பூரா தூங்காமல் கண்கள் உப்பி வீங்கி இருந்தன.

யூ ட்யூபில் 2201 - 2210 வீடியோக்கள்.

2201.ஸ்ரீ ஐயப்பன் நமஸ்கார ஸ்லோகங்கள் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=NidxBqNlBbE


#ஸ்ரீஐயப்பன், #நமஸ்காரஸ்லோகங்கள், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#SRIAYYAPPAN, #THENAMMAILAKSHMANAN,



2202.ராஜராஜேஸ்வரி l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=7xZMD59ceJI


#ராஜராஜேஸ்வரி, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#RAJARAJESHWARI, #THENAMMAILAKSHMANAN,

புதன், 8 நவம்பர், 2023

சூதாட்டத்தைத் தடுக்காத சாட்சி பூதம்

 சூதாட்டத்தைத் தடுக்காத சாட்சி பூதம்


சூதாட்டத்தில் லாபமும் வரும், நட்டமும், கேடும் கூட வரும். ஒருவர் இதை எல்லாம் அறிந்து அதிலிருந்து விலகி இருக்கவேண்டும். ஆனால் பஞ்சபாண்டவர்கள் கௌரவர்களுடன் சூதாடித் தம் நாடு, படை, பட்டாளம், சேனை, செல்வம் அனைத்தையும் இழந்தார்கள். அவர்கள் உடனே இருந்த கிருஷ்ணர் சூதாடினால் கேடு வரும் என அறிந்திருந்தும் ஏன் அவர்களைத் தடுக்கவில்லை என்ற எண்ணம் ஒருவர் மனதில் பல்லாண்டுகாலமாய் ஓடிக் கொண்டிருந்தது. அவர் ஒருகணத்தில் அதை கிருஷ்ணரிடமே கேட்டுவிட்டார். அதற்கு கிருஷ்ணர் அளித்த பதில்களைத் தெரிந்து கொள்ள ஆவலாயிருக்கிறதுதானே குழந்தைகளே.

கிருஷ்ணரின் தந்தை வசுதேவரின் சகோதரர் தேவபகாரியின் மகன் உத்தவர். அவர் இளம்பருவத்தில் கிருஷ்ணனுக்குத் தேரோட்டியவர். கிருஷ்ணர் குருக்ஷேத்திர யுத்தம் முடிந்து தன் அவதாரப் பணியும் முடியும் தருவாயில் உத்தவரிடம் ”உங்களுக்கு என்ன வேண்டுமோ கேளுங்கள் நான் அதைத் தரச் சித்தமாய் இருக்கிறேன்.” என்கிறார்.

யூ ட்யூபில் 2191 - 2200 வீடியோக்கள். புத்தக மதிப்புரைகள்.

2191.சொல் எனும் வெண்புறா l தேன்மொழி ராஜகோபால் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=mW8cZHQ_gGA


#சொல்எனும்வெண்புறா, #தேன்மொழிராஜகோபால், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#SOLENUMVENPURA, #THENMOZHIRAJAGOPAL, #THENAMMAILAKSHMANAN,



2192.361° வெளியீடு l நரன் & நிலா ரசிகன் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=N2haBEKNB-s


#361°வெளியீடு, #நரன்நிலாரசிகன், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#361VELIYEEDU, #NARANNILARASIGAN, #THENAMMAILAKSHMANAN,

திங்கள், 6 நவம்பர், 2023

அழகியை மீட்ட அழகி

 அழகியை மீட்ட அழகி

காதல் என்பது எதுவரை.. கல்யாண காலம் வரும்வரை”  என்று ஜெமினியும் சந்திரபாபுவும் பாடி ஆடிக்கொண்டிருந்தார்கள். யானைகள் செயின்போலக் கோர்த்தும் வரிசையாகவும் தும்பிக்கை பிடித்தும் அசைந்தாடி வந்துகொண்டிருந்தன. அழகியின் தந்தை செந்தில்நாதன் முகமலர்ச்சியோடும் சிறிது கவலையோடும் அமர்ந்திருந்தார்.

 

அவர் கையசைக்கவும் ஹாலில் இருந்த டிவியை ரிமோட் கொண்டு அணைத்துவிட்டுச் சென்றான் பணியாள். அவரது மனைவியும் மகனும் கூட அமர்ந்திருந்தார்கள். அழகி தெளிவில்லாத முகத்தோடு நீரில் நனைந்து கசங்கிய ஒரு பூங்கொத்துப் போல அமர்ந்திருந்தாள். இன்னும் கூட ஹார்மோன்களை இசைபாடத் தூண்டும் அவளது அழகு ஸாமுக்குப் பிரமிப்பூட்டியது. 

 

கல்யாணகாலம் வரும்வரைதானா காதல்.. என யோசித்தபடி செந்தில்நாதன் அருகில் அமர்ந்திருந்தான் ஸாம். அவனுக்கும் மிகுந்த மகிழ்ச்சியாகவும் சிறிது குழப்பமாகவும் இருந்தது. அழகியுடனான காதல் வாழ்வு.. எத்தனை நாள் ஏக்கம். நாள்கடந்து கிடைத்த வரம். அவனை வெறுமையாக்கியதோடு சிறிது அயர்வையும் தந்தது.

யூ ட்யூபில் 2181 - 2190 வீடியோக்கள்.

2181.பெரியநாயகி அம்மன் l  சோலை ராமச்சந்திரன் l தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=mv_u7qhKvkw


#பெரியநாயகிஅம்மன், #சோலைராமச்சந்திரன், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#PERIYANAYAGIAMMAN, #SOLAIRAMACHANDRAN, #THENAMMAILAKSHMANAN, 



2182.நடராஜா l தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=HiJmreA6kFM


#நடராஜா, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#NATARAJA, #THENAMMAILAKSHMANAN,

வெள்ளி, 3 நவம்பர், 2023

வாழ்க்கைக்குப் பொருள் வேண்டும், வாழ்வதிலும் பொருள் வேண்டும் எனக் கூறும் திரு. லயன் வெங்கட்.

வாழ்க்கைக்குப் பொருள் வேண்டும், வாழ்வதிலும் பொருள் வேண்டும் எனக் கூறும் திரு. லயன் வெங்கட்.


 


காரைக்குடியைக் கல்விக்குடியாய் மாற்றியதில் வள்ளல் அழகப்பரின் பங்கு அளப்பரியது. அதேபோல் காரைக்குடியில் 21 ஆண்டுகளாய்ப் புத்தகத் திருவிழா நடத்தி அறிவுச் சுடரேற்றி வருபவர்கள் காரைக்குடிப் புத்தகத் திருவிழாக் குழுவினர். இவர்களுள் லயன் வெங்கட் என்று நண்பர்களால் அழைக்கப்படும் திருமிகு.வெங்கடாசலம் அதன் பொருளாளராய் இருந்து திறம்படத் தொடர்ந்து நடத்தி வருகிறார்கள்.

 

இது மட்டுமல்ல வாழ்வியல் நெறிகளை அழகுறத் தரும் திருக்குறள் கழகம், மெய்யியல் நெறியைப் பரப்பும் இந்து மதாபிமான சங்கம், இசைத்தமிழுக்கென்று உருவான தமிழிசைச் சங்கம், தனவணிகர் மரபுக்கேற்ற காரைக்குடி தொழில் வணிகக் கழகம் எனக் காரைக்குடியின் பாரம்பரியச் சங்கங்கள் பலவற்றுக்கு இவர் அர்ப்பணிப்பு உணர்வோடு சேவையாற்றி உள்ளார். உலகளாவிய அரிமா சங்கத்தின் காரைக்குடி மாவட்ட வட்டாரத் தலைவராகவும் பல்வேறு தொண்டுகள் புரிந்துள்ளார். எப்படி இவ்வளவையும் திறமையாக, சரிவர நிறைவேற்ற முடிகிறதென்று பார்க்கும்கணம் தோறும் என்னை ஆச்சர்யப்பட வைப்பவர் இவர். சுறுசுறுப்பானவர். எப்போதும் பளிச் தோற்றம் கொண்டவர். இவரைப் பார்த்தாலே நம்மையும் உற்சாகம் தொற்றிக் கொள்ளும். இந்த மனம் ஒரு நந்தவனம், சுவாமி சிவானந்தரின் பொன்மொழிகள் போன்ற நேர்மறை எண்ணங்கள் கொண்ட புத்தகங்களை அனைவருக்கும் பரிசாக வழங்கி மகிழ்பவர்.

யூ ட்யூபில் 2171 - 2180 வீடியோக்கள்.

2171.Music Notes played by our friend Vinodh

https://www.youtube.com/shorts/KA1o2i-Akdw


#MusicNotes, #Vinodh,



2172.திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=K1WcW-C7fOw


#திருச்செந்தூர், #பிள்ளைத்தமிழ், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUCHENDUR, #PILLAITAMIL, #THENAMMAILAKSHMANAN, 

புதன், 1 நவம்பர், 2023

பறக்கும் கண்டெயினரும் பட்டணத்தில் பூதம் ஜாடியும்.

 175.

3481.பைசா நகரின் சாய்ந்த கோபுரம்..



3482.கும்பகோணம் பாரடைஸ் ரெஸார்ட் & கரூர் கோயிலின் காமதேனு