சனி, 23 மே, 2020

மாங்க்ஸ்டன் ரயில்வே பாலம் - நூறாண்டுகால இரும்பின் சா(ஆ)ட்சி.

5000 டன் எஃகு இரும்பில் அமைக்கப்பட்டு கிட்டத்தட்ட 123 ஆண்டுகளுக்கும் மேலாக புழக்கத்தில் உள்ள ஒரு ரயில்வே பாலத்தை ஜெர்மனியில் தோழி கௌசி கூட்டிச் சென்று காட்டினார். நதியின் போக்கில் ஒரு பில்லர் கூட வராமல், நதியின் ஓட்டத்தைத் தடுக்காமல் மாசுபடாமல் நதியின் இரு கரையிலும் ட்ரஸ் ஆர்ச் ஃபார்மில் கட்டப்பட்ட வித்யாசமான  பாலம் இது.

ஜெர்மனியில் மிக உயரமான ரயில் பாலம் இந்த மங்கஸ்டன் பாலம். கிட்டத்தட்ட 351 அடி உயரத்தில் அமைந்துள்ள இது ஒன்றரை கிலோமீட்டர் தூரத்துக்கு நதியின் மேலே சென்று  பூமியின் இரு உயர்ந்தபகுதிகளை இணைக்குது .  வூப்பர்டால், ஓபர்பார்மேன், ஸோலிங்கன் ஆகிய ரயில்வேக்களின் ஒரு பகுதியாக இது அமைக்கப்பட்டுள்ளது.  ரெம்ஷெய்ட் நகரையும் ஸோலிங்கன் நகரையும் இணைக்கும் இது ஸோலிங்கனில் வூப்பர் நதியின் மேல் அமைக்கப்பட்டுள்ளது.


ரைன் - ரூர் - எஸ்பான் எஸ் 7 என்ற தடத்தில் ஓடும் ரயில்கள் ப்ரத்யேகமாக இதில் செல்கின்றன.

1897 இல் கட்டப்பட்ட பாலமான இது சில மராமத்துப் பணிகளுக்காக 2013 இல் மூடப்பட்டு அதன்பின் 2015 இல் பல்வேறு வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்டுத் திறக்கப்பட்டுள்ளது.  2018  இல் ஒரு தரமும் இது மூடப்பட்டுள்ளது. அப்போதெல்லாம் மிக ஷார்ட் கட்டில் ரெம்ஷெய்ட் சென்றுகொண்டிருந்த மக்களுக்கு பேருந்தில் சுற்றிச் செல்வதுதான் ஒரே வழி.



முதலில் இந்தப் பாலத்திற்கு சக்கரவர்த்தி வில்ஹெல்மின் பேரைச் சூட்டி இருக்கிறார்கள். அதன்பின் மாங்க்ஸ்டன் என்ற பேர் மாற்றப்பட்டுள்ளது.

முடியாட்சி முடிந்தவுடன் இது இடத்தின் பெயராக நீடிக்கிறது.

ரெம்ஷெய்ட் , ஸோலிங்கனை இணைக்க இந்த ரயில்வே பாலம் கட்டலாம் என்று 1889 இலேயே முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஆனால் 1893 இல் தொடங்கப்பட்டு 1897 இல் தான் கட்டி முடிக்கப்பட்டது.


யூ வா வளைஞ்ச ஆர்ச்சுக்கு நடுவுல பார்த்தீங்கன்னா ஆறு சப்போர்ட்டிங் அமைப்பைப் பார்க்கலாம். இவைதான் ரயில் விசையோட கடக்கும்போது அந்தப் பாலத்தோட அழுத்தத்தைத் தாங்கிக் கொடுக்கின்றன. கிட்டத்தட்ட 950,000 ரிவெட்டுகள் இந்தப் பாலத்தைத் தாங்குகின்றனவாம்.


இப்பாலத்தை வடிவமைச்ச ஆண்டன் வான் ரைப்பல் என்ற ஒரு பொறியாளர்தான் இதை பல்லாண்டுகள் ( 1926 வரை) பொறுப்பாக நிர்வகித்து வந்தாராம்.


நல்லா உத்துப்பார்த்தீங்கன்னா தெரியும் இது இரட்டைப் போக்குவரத்து அமைக்கப்பட்ட பாலம்னு.

முதலில் ஒற்றைப் போக்குவரத்துப் பாலமா அமைக்க முடிவு செய்து அப்புறம் இரட்டைப் போக்குவரத்துப் பாலமா மாத்தி இருக்காங்க. ஸோலிங்கனில் இருந்து ரெய்ம்ஷெட் 42 கிலோமீட்டர். ஆனா இந்த ரயில்வே பாலம் மூலமா போனா வெறும் 8கிமீ தான். ! எவ்வளவு எரிபொருள் மிச்சம். !



1890லேயே பிரஷியன் பாராளுமன்றம் இந்தப் பாலம் கட்ட சுமார் 5 மில்லியன் அளவு பணம் செலவு செய்ய ஒப்புதல் கொடுத்தது.

1894 இல் முதன் முதலா இப்பாலத்தை அமைக்க பூமியை வெடி வைச்சுத் தகர்த்தாங்களாம். ( பூமி பூஜை :)  இதுக்கு கிட்டத்தட்ட 1400 கிலோ டைனமைட்டும், 1600 கிலோ கருப்புத் தூளும் கட்டுமானத்துக்குத் தேவைப்பட்டதாம்.


சொல்லப்போனா 1897 ஜூலை 15 இல் நடந்த இதன் அதிகாரபூர்வ திறப்புவிழாவில் அப்போது சக்கரவர்த்தியாயிருந்த இரண்டாம் வில்ஹெல்ம் கலந்து கொள்ளவே இல்லை. ஏனெனில் இந்தப் பாலம் வில்ஹெல்ம் 1 என்ற அவரது முன்னோர் பெயரில் அமைக்கப்பட்டுவிட்டது என்ற அதிருப்திதான் காரணம்.

அந்தவிழாவில் இரண்டாம் வில்ஹெல்முக்கு பதிலா ப்ரஷியாவின் மன்னரான ப்ரெடெரிக் லியோபோல்ட்தான் கலந்து கொண்டிருக்கிறார்.

அதுக்கப்புறம் இரண்டாம் வில்ஹெல்ம் மன்னர் இரண்டாண்டுகள் கழித்து ஆகஸ்ட் 12, 1899 இல் தான் தன் கோபம் தணிந்து இந்தப் பாலத்தைப் பார்வையிட்டாராம்.


விக்டோரியன் ஈராவின் மாஸ்டர் பீஸ் என இந்தப் பாலத்தைப் புகழ்கிறார்கள்.

இந்தக் காலத்திலேயே இது மற்ற நாடுகளுடன் ஒப்பு நோக்கும்போது நவீன கட்டமைப்புத்தான் என்றால் அந்தக்காலத்தில் இதன் பெருமையைக் கேட்கவா வேண்டும்.








இவ்வளவு சிறப்பான பாலம் அதீதப் புனைவுகளிலும் பொய்க் கதைகளிலும் சிக்காம இருக்குமா.  சிக்கிருச்சே :)

இந்தப் பாலத்தின் கடைசியாக இணைக்கப்பட்ட ரிவெட் தூய தங்கத்தால் ஆனதுன்னு ஒரு பொய்க்கதை நிலவுச்சு. 

இதைக் கட்டிய கட்டிடக் கலைஞரான ரைப்பல் தன்னொட தவறுக்காக ( இருபக்கமும் ஒரே மாதிரி கட்டப்பட்ட இந்த இரும்புப் பாலம் பொருத்தப்படும் சமயம் சில மேத்தமாட்டிகல் எரர்ஸ் காரணமா பொருந்தலை என்றும் அதனால ) அவர் தோல்வியால் மனம் நொந்து இந்தப் பாலத்தின் உச்சியிலிருந்து கீழே வூப்பர் நதியில் குதித்துத் தற்கொலை செய்துகொண்டார் என்றும் யூகங்கள் நிலவுது. இதெல்லாம் உண்மை இல்லை. அவர் இது கட்டமைக்கப்பட்டு 29 வருடங்கள் இதை அவ்வப்போது இன்ஸ்பெக்ட் செய்து  மெயிண்டெயின் செய்திருக்கிறார்.

இவ்ளோ பெரிய பாலம் கட்டுறதுக்கு இன்றைக்கெல்லாம் கணினி மூலம் கணக்கீடு செய்யலாம். ஆனால் அது எதுவுமே சாத்யமில்லாத அந்தக் காலத்திலும் ரைப்பல் தனது மனக்கணக்கின் மூலமாகவே இதை சாத்யமாக்கினார். 

நூற்றுக்கணக்கான மக்களை ஈர்த்துள்ள இப்பாலம் மிக அதிக அளவிலான தற்கொலைகளையும் சந்தித்துள்ளது என்பது இதன் நூற்றாண்டுக்கால சரித்திரத்தில் தவிர்க்க முடியாத ஒரு அங்கம்.  

டிஸ்கி:- இவற்றையும் பாருங்க. 

1.மை க்ளிக்ஸ்ஸ்ஸ் :) முள்ளும் மலரும். MY CLICKS. 

2.மை க்ளிக்ஸ் நொறுக்ஸ். MY CLICKS. 

3. மை க்ளிக்ஸ். இருளும் ஒளியும். - 2 தண்ணீர் தீபம். MY CLICKS.

4. மை க்ளிக்ஸ். -3 விதம் விதமான கட்டிடங்கள். - MY CLICKS. ARCHITECTURE.

5. மை க்ளிக்ஸ் - 4. இருளும் ஒளியும். குகையும் கடலும் MY CLICKS. 

6. மை க்ளிக்ஸ் . பத்து ரூபாய் நோட்டும் நடைப்பயிற்சியும்.MY CLICKS.

7.மை க்ளிக்ஸ். ஏர் உழவும் பொங்கலும்.MY CLICKS.  

8. மை க்ளிக்ஸ். இருளும் ஒளியும். நியான் சூரியனும் ஒளியின் இசையும். MY CLICKS. 

9. மை க்ளிக்ஸ். இயற்கையும் செயற்கையும் நாடோடிகளும். MY CLICKS. 

10. புகைப்படப் பிரியனில் சில புகைப்படங்கள். 

11. ஃபோட்டோஸ்ட்ரோபியில் பூவும் பழமும் பறவைகளும்..

12. கொஞ்சம் ஆன்மீகம் ஃபோட்டோஸ்ட்ராஃபியில்.

13. கொஞ்(ச)சும் கேரளா. ஃபோட்டோஸ்ட்ராஃபியில். ( PHOTOSTROPHE)

14. ஃபோட்டோஸ்ட்ராஃபியில் துபாய். (PHOTOSTROPHE)

15. புகைப்பட தின ஸ்பெஷல் 2016. காரைக்குடி வீடுகள். - KARAIKUDI HOUSES FOR CAMERA DAY SPECIAL. 

16. நிஷ்டைச் சிவன்களும் சிவலிங்கமும். - WORLD PHOTOGRAPHY DAY. 

17. உலக புகைப்பட தினம் ஸ்பெஷல் - மசூதிகளின் நகரம்.(WORLD PHOTOGRAPHY DAY-- CITY OF MASJITS ) 

18. புகைப்பட தின ஸ்பெஷல். ( CAMERA DAY SPECIAL) கட்டிடடக்கலை. ( ARCHITECTURE). 

19. மை க்ளிக்ஸ். கோலமயிலும் நீல மயிலும்.MY CLICKS. 

20.  மை க்ளிக்ஸ். ஹெல்தி ஸ்நாக்ஸ். HEALTHY SNACKS. MY CLICKS.

21. மை க்ளிக்ஸ். சாலையோர வியாபாரிகளும் உணவுகளும். STREET VENDORS, MY CLICKS.

22. மை க்ளிக்ஸ். துளசியும் ஊஞ்சலும். MY CLICKS. TULSI & SWING.

23. சும்மா சில க்ளிக்ஸ். CHUMMA. MY CLICKS.

24. ஜல்லிக்கட்டும் பச்சைக் குளமும். மை க்ளிக்ஸ். MY CLICKS. 

25.  மை க்ளிக்ஸ். பிரசாதம். PRASADHAMS. MY CLICKS. 

26. மை க்ளிக்ஸ். கத்திரிக்காயும் கண்ணாடியும். MY CLICKS.

27. மை க்ளிக்ஸ் - தெக்கூரிலிருந்து துபாய் வரை.  MY CLICKS

28. மை க்ளிக்ஸ் - ஆண்டவர்கள். MY CLICKS.

29. மை க்ளிக்ஸ் -  கூல் கூல் கூல் . MY CLICKS.

30. நிலவும் நீயே நெருப்பும் நீயே. மை க்ளிக்ஸ். MY CLICKS.

31. ஜில் ஜில் ஜில். மை க்ளிக்ஸ், MY CLICKS.

32. பழம் நல்லது. - 1. மை க்ளிக்ஸ். MY CLICKS

33. பழம் நல்லது. - 2. மை க்ளிக்ஸ். MY CLICKS

34. பறவைகள் பலவிதம், மை க்ளிக்ஸ், MY CLICKS

35. எண்ணெயில் குளிக்க இத்தனை வகைகளா. மை க்ளிக்ஸ் , MY CLICKS 

36.மாலையில் கொஞ்சம் கர்க் முர்க். மை க்ளிக்ஸ். MY CLICKS

37. குழந்தைகளுக்கு ஏற்ற சத்தான உணவுகள். மை க்ளிக்ஸ், MY CLICKS

38. சரஸ்வதியில் இருந்து சரஸ்வதி வரை , மை க்ளிக்ஸ், MY CLICKS.

39. கோவிந்தபுரம் & பூம்புகார் மை க்ளிக்ஸ். MY CLICKS.

40. சிங்கப்பூர் மை க்ளிக்ஸ். MY CLICKS.

41. மலேஷியா. மை க்ளிக்ஸ் MY CLICKS.

42. கும்பகோணம் – மை க்ளிக்ஸ் MY CLICKS

43. புகார், தரங்கம்பாடி. ஆக்ரோஷ அலைகள். மை க்ளிக்ஸ் MY CLICKS.

44. மலைகள் - மை க்ளிக்ஸ். MY CLICKS. 

45. தாராசுரம் மை க்ளிக்ஸ் . MY CLICKS.

46. குமரகம், ஆலப்புழா மை க்ளிக்ஸ் MY CLICKS. 

47. கெம்பேகவுடா ஏர்போர்ட், பெங்களூரு. மை க்ளிக்ஸ் MY CLICKS.

48. சுதேசி ( ஐட்டம்ஸ் )உணவு. மை க்ளிக்ஸ்,MY CLICKS. 

49. துபாய், ஷார்ஜா, அபுதாபி, மை கிளிக்ஸ். MY CLICKS.

50. எங்கே செல்லும் இந்தப் பாதை.. மை க்ளிக்ஸ். ROADS . MY CLICKS

51. கொள்ளை கொள்ளும் கேரளா மை க்ளிக்ஸ். KERALA. MY CLICKS.

 52. சிங்கப்பூர் ஆர்கிட் பார்க், மை க்ளிக்ஸ். ORCHID PARK. MY CLICKS 

53.  சிங்கப்பூர் ஆழ்கடல் அதிசயங்கள். மை க்ளிக்ஸ். UNDERWATER WORLD, MY CLICKS. 

54. சிங்கை மலேயா சில உதிரி புகைப்படங்கள், மை க்ளிக்ஸ், MY CLICKS.

55. மலேஷியா சிங்கை, பெங்களூரு .. பூக்கள். மை க்ளிக்ஸ். FLOWERS, MYCLICKS. 

56.  கொஞ்சம் மதிய விருந்து. மை க்ளிக்ஸ். MY CLICKS. 

57.  காய்கனி பூ பழம் மை க்ளிக்ஸ். MY CLICKS.

58. பூக்கள். மை க்ளிக்ஸ். FLOWERS, MYCLICKS.

59. பறவைகள் மை க்ளிக்ஸ். MY CLICKS. 

60. சுடச்சுட கொஞ்சம் சூப்ஸ் & ரசம். மை க்ளிக்ஸ். SOUPS & RASAM, MY CLICKS.


61. கொச்சுவேலி,கோவளம்,பாலோடு,பொன்முடி,கொச்சின் மை க்ளிக்ஸ்,KOCHUVELI,KOVALAM,PALODE,PONMUDI,KOCHIN, MY CLICKS. 





66. குன்றக்குடியின் சுப்புலெட்சுமி. மை க்ளிக்ஸ். MY CLICKS.  



71. துபாய் டு அபுதாபி. பார்ட் - 2 மை க்ளிக்ஸ் DUBAI TO ABU DHABI PART - 2. MY CLICKS.

72. வெய்யிலுக்குகந்த கீரை உணவுகள். மை க்ளிக்ஸ். DISHES FROM GREENS. MY CLICKS.

73. விராமதியின் இமயமும் மானகிரி ஜோடி நவக்ரஹமும் . மை க்ளிக்ஸ். MY CLICKS.

74. பெஸ்ட் பெங்களூரு பில்டிங்க்ஸ். மை க்ளிக்ஸ். BEST BENGALURU BUILDINGS. MY CLICKS.

75. கொஞ்சம் மலையும் கொஞ்சும் நீரும். மை க்ளிக்ஸ். HOGENAKKAL. MY CLICKS.

76. சென்னை ஏர்ப்போர்ட் . மை க்ளிக்ஸ்.  CHENNAI AIRPORT - MY CLICKS.




















103. கொட்டான்.மை க்ளிக்ஸ் - 1. KOTTAN. MY CLICKS

104. கொட்டான்.மை க்ளிக்ஸ் - 2. KOTTAN. MY CLICKS.

105.குன்றக்குடி. மை க்ளிக்ஸ். KUNDRAKKUDI. MY CLICKS.

106.பாலோடு, மை க்ளிக்ஸ். PALODE. MY CLICKS.

107. தெருவோர வியாபாரிகள். மை க்ளிக்ஸ். STREET VENDORS. MY CLICKS.

108. அனந்தபத்மநாப சுவாமி கோவில். மை க்ளிக்ஸ். ANANDHAPADMANABA SWAMY TEMPLE. MY CLICKS.

109. வெளி பீச்சும், வெங்காயத் தாமரைகளும். மை க்ளிக்ஸ். VELI BEACH & WATER HYACINTH. MY CLICKS.

110. கொல்லம் ( கொய்லோன் ) - குமரகம். மை க்ளிக்ஸ். KOLLAM ( QUILON) TO KUMARAKOM, MY CLICKS.

111. ஆலப்பியில் கெட்டுவல்லப் பயணம். மை க்ளிக்ஸ். ALLEPPEY HOUSE BOAT RIDE, MY CLICKS.

112. தாமரைக் குளம். மை க்ளிக்ஸ். LOTUS POND, MY CLICKS.

113. சுவாமிமலை ஸ்டெர்லிங் கலைப் பொருட்கள், மை க்ளிக்ஸ். SWAMIMALAI STERLING, ANTIQUES, MY CLICKS.

114. சோலாஹ் கம்ப் மாஸ்க் - 16 தூண் மசூதி. மை க்ளிக்ஸ். SOLAH KHAMBH MOSQUE. MY CLICKS.

115. வளையத்துள் புகுந்த வால்ரஸ்கள். மை க்ளிக்ஸ். WALRUS SEALS. MY CLICKS.

116. ஊனையூர் , மை க்ளிக்ஸ். OONAIYUR, MY CLICKS.

117. சிறு தெய்வங்களும் சித்திரக் குள்ளர்களும் சிங்கயாளியும். மை க்ளிக்ஸ். MY CLICKS.

118. திருமயம் கோட்டை,மை க்ளிக்ஸ். THIRUMAYAM FORT, MY CLICKS.

119. டால்ஃபின்களின் பந்தாட்டமும், ஓவியமும். மை க்ளிக்ஸ்.PAINTING BY DOLPHINS,MY CLICKS.

120. குவாலியர் மயில். மை க்ளிக்ஸ். GWALIOR - PEACOCK. MY CLICKS.

1 கருத்து:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)