வெள்ளி, 1 மே, 2020

ஷ்லாஸ்பர்க் ஸோலிங்கன் கேஸில் & எங்கள்பர்ட் 2 .மை க்ளிக்ஸ். SCHLOSS BURG SOLINGEN CASTLE & ENGELBERT 2.MY CLICKS.

ஸோலிங்கன் ஷ்லாஸ்பர்க் கேஸில் எனப்படும் கோட்டை ஜெர்மனியின் வடக்கு ரைன் வெஸ்ட்பேலியா மாநிலத்தில் வூபர் என்னும் நகரில் அமைந்துள்ளது. டுசில்டார்ஃபிலிருந்து 3 மணி நேரப் பயணத்தில் இதை அடையலாம். 

ஒரு இளமழை நாளில் நாங்கள் கௌசியின் வீட்டுக்குச் சென்றோம். அங்கே விருந்துக்குப் பின் அவர் கணவர் சிவபாலன் எங்களை இங்கே அழைத்துச் சென்றார். இது பன்னிரெண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. மன்னராட்சியில் அதன்பின் பல்வேறு கை மாறி இப்போது வேறு ரூபம் எடுத்துள்ளது.  1185 இல் இருந்து 1225 வரை ஆண்ட எங்கள்பர்ட் - 2 என்னும் ராஜா கம்பீரமா கோட்டையின் தலைவாயிலில் குதிரையில் ஆரோகணித்து வரவேற்கிறார். அவரைக்கடைசியாப் பார்ப்போம். 





இந்த சிலிண்டிரிக்கல் பகுதிக்குப் பக்கவாட்டில்தான் கோட்டையின் கார்பார்க்கிங் பகுதி. இதோ தூரத்தே குதிரையில் அமர்ந்து பார்க்கிறாரே  எங்கள்பர்ட் - 2 ராஜா


கி பி 1133 இல் அடால்ஃப் 111 என்ற மன்னர்தான் இதைக்கட்டினார். மலையிலிருந்து வூபரின் நதியை ( ரைன் ) பார்த்து ரசிக்க ஏற்ற வண்ணம் இக்கோட்டை கட்டப்பட்டது.  இதைக் கட்டியபின் ஆல்டன்பர்க் அருகிலுள்ள ஓடாந்தலில் கட்டப்பட்ட பழைய பெர்ஜ் கோட்டையை விட்டுவிட்டு இங்கேயே குடிபுகுந்தார்.  



முதலில் இதன் பெயரை நியூன்பர்க் என்று வைத்தார். நியூ மவுண்டன்/ புதிய மலை என்று அர்த்தம். 15 ஆம் நூற்றாண்டு வரை இது வேட்டைக் கோட்டையாகத்தான் இருந்தது. 





அதன் பின்னர் சிறிது சிறிதாக இந்தக் கோட்டை பெரிதாக்கப்பட்டு அரண்மனை என்ற அந்தஸ்து பெற்றது. 


ஆங்காங்கே மணிக்கூண்டு போல பெல் டவர்கள் இங்கே அதிகம். உப்பரிகைகளைப் பாருங்கள் படு பக்கா. மதில் சுவர்களே இல்லாமல் கோட்டை. மேலேயிருந்து நேரடியாக ஈட்டிகள் ,வில் அம்புகள் ஆயுதங்கள்தான். 



பெல் டவர். வீரர்கள் காவல் காக்கும் மதில். ஷ்லோஸ்பர்க் கேஸில்னா அரண்மனைக் கோட்டைன்னு சொல்றாங்க. 


இங்கே போரிட்டு மடிந்தவர்களாய் இருக்குமோ. கத்தி மியூசியத்துக்கும் சேர்லிஃப்ட்க்கும் போகும் வழியில் இவர்கள் காட்சி அளித்தார்கள். 


இதுதான் அந்த சேர் லிஃப்ட்.சுற்றிலும் காடாக இருப்பதால் கீழே இருக்கும் உண்டர்பர்க்கிலிருந்து கோட்டைக்கு இந்த ஸீல்பேஹன் என்ற சேர்லிஃப்ட் இணைக்கிறது. கீழே இருக்கும் உண்டர்பர்க்கில் டோநட்ஸ் மாதிரி பர்கர் ப்ரெஸெல் என்ற லோகல் உணவு சமாச்சாரம் ரொம்ப ருசியா இருக்குமாம். 

இதோ அந்த சேர் லிஃப்ட். கீழே பார்த்தபடி பின்னோக்கி மேலேறலாம் என்பது இதன் த்ரில். 

அதேபோல் மேலேயிருந்து கீழே இறங்கும்போதும் கீழே பார்த்தபடியே இறங்கலாம். கால்கள்தான் அந்தரத்தில் பறப்பது போல் கூசுகின்றன. 




இந்த சேர் லிஃப்ட் போக பக்கவாட்டில் உள்ள அலுவலகத்திற்குச் சென்று டிக்கெட் வாங்கணும். கோட்டையைப் பார்க்கவும். டிக்கெட் தனியா வாங்கணும். ஒரு ஆளுக்கு ஆறு யூரோவோ என்னவோ. 




நிறையப்பேர் த்ரில்லோட  சர்க்கஸ் எல்லாம் செஞ்சிட்டு வந்தாங்க. 




இந்தக் கோட்டை டூரிஸ்ட் அட்ராக்‌ஷன் என்பதால்  சில ஆண்டுகளாக  இந்த சேர் லிஃப்டையும் சேர்த்திருக்காங்க. 



சொய்ங்க் சொய்ங்க் என்று அடாத மழையிலும் குடைபிடித்தபடி மக்கள் போய் வந்து கொண்டிருக்க நாமும் கோட்டைப் பக்கம் பார்வையைத் திருப்பினோம். 




இந்த வேட்டைக் கோட்டை தற்போது திருமணங்கள் நடத்த உதவும் ஹாலாகவும் பயன்படுது.




 இந்தக் கோட்டையைச் சுற்றிப் பெரிய அரசியல் கதைகள் எல்லாம் இருக்கு. அடால்ஃபின் பேரன் கவுண்ட் அடால்ஃப் V! ஐந்தாவது சிலுவைப்போரில் பங்கேற்று 1218 இல் எகிப்தில் இறந்துவிட்டார். 


அவருக்கு அப்புறம் அரசாட்சி செய்ய ஆண் வாரிசு இல்லாததால அவரின் தம்பியும் கோலோனின் பேராயருமான  எங்கள்பர்ட் - 1ஆட்சியைப் பிடித்தார். 




ஆட்சியைக்  காப்பாத்திக்க லிம்பர்க்கின் வலேரன் 111 என்ற மன்னனோட எல்லாம் இருமுறை போரிட வேண்டியிருந்தது. 

எப்பிடி இருக்கு பாருங்க கோட்டைச் சுவரு. படு உயரமா படு ஸ்ட்ராங்கா.இந்தக் கோட்டையை எங்கள்பர்ட் 2 தான் 1218  - 1225 வரையான ஏழு ஆண்டு காலகட்டத்தில் கட்டினார். 


இவர் வெறும் பேராயர் மட்டுமில்ல. ரொம்ப சாதாரணமா எடை போடாதீங்க. ரோமானியப் பேரரசர் இரண்டாம் பிரடரிக் மன்னருக்கே இவர் ஆலோசகராவும் தலைமை நிர்வாகியாகவும் திகழ்ந்தவர். ஜெர்மனியின் பிற்கால மன்னர் ஹென்றி V!!  இன் பாதுகாவலரும் ஆசிரியருமா இருந்தார். அதுனால நிறைய எதிரிகளையும் உருவாக்கிக்கிட்டாரு. 



கடைசீல நவம்பர் 7 1225 இல் தன் மருமகன் பிரடரிக் வான் இஸன்பர்க் என்பவரால் கொலை செய்யப்பட்டார். துரோகிகள் எங்கேயும் இருக்காங்கதானே. இன்னும் இந்தக் கோட்டை பத்தி அடுத்த இடுகைகளில் பார்ப்போம்.

டிஸ்கி:- இவற்றையும் பாருங்க. 

1.மை க்ளிக்ஸ்ஸ்ஸ் :) முள்ளும் மலரும். MY CLICKS. 

2.மை க்ளிக்ஸ் நொறுக்ஸ். MY CLICKS. 

3. மை க்ளிக்ஸ். இருளும் ஒளியும். - 2 தண்ணீர் தீபம். MY CLICKS.

4. மை க்ளிக்ஸ். -3 விதம் விதமான கட்டிடங்கள். - MY CLICKS. ARCHITECTURE.

5. மை க்ளிக்ஸ் - 4. இருளும் ஒளியும். குகையும் கடலும் MY CLICKS. 

6. மை க்ளிக்ஸ் . பத்து ரூபாய் நோட்டும் நடைப்பயிற்சியும்.MY CLICKS.

7.மை க்ளிக்ஸ். ஏர் உழவும் பொங்கலும்.MY CLICKS.  

8. மை க்ளிக்ஸ். இருளும் ஒளியும். நியான் சூரியனும் ஒளியின் இசையும். MY CLICKS. 

9. மை க்ளிக்ஸ். இயற்கையும் செயற்கையும் நாடோடிகளும். MY CLICKS. 

10. புகைப்படப் பிரியனில் சில புகைப்படங்கள். 

11. ஃபோட்டோஸ்ட்ரோபியில் பூவும் பழமும் பறவைகளும்..

12. கொஞ்சம் ஆன்மீகம் ஃபோட்டோஸ்ட்ராஃபியில்.

13. கொஞ்(ச)சும் கேரளா. ஃபோட்டோஸ்ட்ராஃபியில். ( PHOTOSTROPHE)

14. ஃபோட்டோஸ்ட்ராஃபியில் துபாய். (PHOTOSTROPHE)

15. புகைப்பட தின ஸ்பெஷல் 2016. காரைக்குடி வீடுகள். - KARAIKUDI HOUSES FOR CAMERA DAY SPECIAL. 

16. நிஷ்டைச் சிவன்களும் சிவலிங்கமும். - WORLD PHOTOGRAPHY DAY. 

17. உலக புகைப்பட தினம் ஸ்பெஷல் - மசூதிகளின் நகரம்.(WORLD PHOTOGRAPHY DAY-- CITY OF MASJITS ) 

18. புகைப்பட தின ஸ்பெஷல். ( CAMERA DAY SPECIAL) கட்டிடடக்கலை. ( ARCHITECTURE). 

19. மை க்ளிக்ஸ். கோலமயிலும் நீல மயிலும்.MY CLICKS. 

20.  மை க்ளிக்ஸ். ஹெல்தி ஸ்நாக்ஸ். HEALTHY SNACKS. MY CLICKS.

21. மை க்ளிக்ஸ். சாலையோர வியாபாரிகளும் உணவுகளும். STREET VENDORS, MY CLICKS.

22. மை க்ளிக்ஸ். துளசியும் ஊஞ்சலும். MY CLICKS. TULSI & SWING.

23. சும்மா சில க்ளிக்ஸ். CHUMMA. MY CLICKS.

24. ஜல்லிக்கட்டும் பச்சைக் குளமும். மை க்ளிக்ஸ். MY CLICKS. 

25.  மை க்ளிக்ஸ். பிரசாதம். PRASADHAMS. MY CLICKS. 

26. மை க்ளிக்ஸ். கத்திரிக்காயும் கண்ணாடியும். MY CLICKS.

27. மை க்ளிக்ஸ் - தெக்கூரிலிருந்து துபாய் வரை.  MY CLICKS

28. மை க்ளிக்ஸ் - ஆண்டவர்கள். MY CLICKS.

29. மை க்ளிக்ஸ் -  கூல் கூல் கூல் . MY CLICKS.

30. நிலவும் நீயே நெருப்பும் நீயே. மை க்ளிக்ஸ். MY CLICKS.

31. ஜில் ஜில் ஜில். மை க்ளிக்ஸ், MY CLICKS.

32. பழம் நல்லது. - 1. மை க்ளிக்ஸ். MY CLICKS

33. பழம் நல்லது. - 2. மை க்ளிக்ஸ். MY CLICKS

34. பறவைகள் பலவிதம், மை க்ளிக்ஸ், MY CLICKS

35. எண்ணெயில் குளிக்க இத்தனை வகைகளா. மை க்ளிக்ஸ் , MY CLICKS 

36.மாலையில் கொஞ்சம் கர்க் முர்க். மை க்ளிக்ஸ். MY CLICKS

37. குழந்தைகளுக்கு ஏற்ற சத்தான உணவுகள். மை க்ளிக்ஸ், MY CLICKS

38. சரஸ்வதியில் இருந்து சரஸ்வதி வரை , மை க்ளிக்ஸ், MY CLICKS.

39. கோவிந்தபுரம் & பூம்புகார் மை க்ளிக்ஸ். MY CLICKS.

40. சிங்கப்பூர் மை க்ளிக்ஸ். MY CLICKS.

41. மலேஷியா. மை க்ளிக்ஸ் MY CLICKS.

42. கும்பகோணம் – மை க்ளிக்ஸ் MY CLICKS

43. புகார், தரங்கம்பாடி. ஆக்ரோஷ அலைகள். மை க்ளிக்ஸ் MY CLICKS.

44. மலைகள் - மை க்ளிக்ஸ். MY CLICKS. 

45. தாராசுரம் மை க்ளிக்ஸ் . MY CLICKS.

46. குமரகம், ஆலப்புழா மை க்ளிக்ஸ் MY CLICKS. 

47. கெம்பேகவுடா ஏர்போர்ட், பெங்களூரு. மை க்ளிக்ஸ் MY CLICKS.

48. சுதேசி ( ஐட்டம்ஸ் )உணவு. மை க்ளிக்ஸ்,MY CLICKS. 

49. துபாய், ஷார்ஜா, அபுதாபி, மை கிளிக்ஸ். MY CLICKS.

50. எங்கே செல்லும் இந்தப் பாதை.. மை க்ளிக்ஸ். ROADS . MY CLICKS

51. கொள்ளை கொள்ளும் கேரளா மை க்ளிக்ஸ். KERALA. MY CLICKS.

 52. சிங்கப்பூர் ஆர்கிட் பார்க், மை க்ளிக்ஸ். ORCHID PARK. MY CLICKS 

53.  சிங்கப்பூர் ஆழ்கடல் அதிசயங்கள். மை க்ளிக்ஸ். UNDERWATER WORLD, MY CLICKS. 

54. சிங்கை மலேயா சில உதிரி புகைப்படங்கள், மை க்ளிக்ஸ், MY CLICKS.

55. மலேஷியா சிங்கை, பெங்களூரு .. பூக்கள். மை க்ளிக்ஸ். FLOWERS, MYCLICKS. 

56.  கொஞ்சம் மதிய விருந்து. மை க்ளிக்ஸ். MY CLICKS. 

57.  காய்கனி பூ பழம் மை க்ளிக்ஸ். MY CLICKS.

58. பூக்கள். மை க்ளிக்ஸ். FLOWERS, MYCLICKS.

59. பறவைகள் மை க்ளிக்ஸ். MY CLICKS. 

60. சுடச்சுட கொஞ்சம் சூப்ஸ் & ரசம். மை க்ளிக்ஸ். SOUPS & RASAM, MY CLICKS.


61. கொச்சுவேலி,கோவளம்,பாலோடு,பொன்முடி,கொச்சின் மை க்ளிக்ஸ்,KOCHUVELI,KOVALAM,PALODE,PONMUDI,KOCHIN, MY CLICKS. 





66. குன்றக்குடியின் சுப்புலெட்சுமி. மை க்ளிக்ஸ். MY CLICKS.  



71. துபாய் டு அபுதாபி. பார்ட் - 2 மை க்ளிக்ஸ் DUBAI TO ABU DHABI PART - 2. MY CLICKS.

72. வெய்யிலுக்குகந்த கீரை உணவுகள். மை க்ளிக்ஸ். DISHES FROM GREENS. MY CLICKS.

73. விராமதியின் இமயமும் மானகிரி ஜோடி நவக்ரஹமும் . மை க்ளிக்ஸ். MY CLICKS.

74. பெஸ்ட் பெங்களூரு பில்டிங்க்ஸ். மை க்ளிக்ஸ். BEST BENGALURU BUILDINGS. MY CLICKS.

75. கொஞ்சம் மலையும் கொஞ்சும் நீரும். மை க்ளிக்ஸ். HOGENAKKAL. MY CLICKS.

76. சென்னை ஏர்ப்போர்ட் . மை க்ளிக்ஸ்.  CHENNAI AIRPORT - MY CLICKS.




















103. கொட்டான்.மை க்ளிக்ஸ் - 1. KOTTAN. MY CLICKS

104. கொட்டான்.மை க்ளிக்ஸ் - 2. KOTTAN. MY CLICKS.

105.குன்றக்குடி. மை க்ளிக்ஸ். KUNDRAKKUDI. MY CLICKS.

106.பாலோடு, மை க்ளிக்ஸ். PALODE. MY CLICKS.

107. தெருவோர வியாபாரிகள். மை க்ளிக்ஸ். STREET VENDORS. MY CLICKS.

108. அனந்தபத்மநாப சுவாமி கோவில். மை க்ளிக்ஸ். ANANDHAPADMANABA SWAMY TEMPLE. MY CLICKS.

109. வெளி பீச்சும், வெங்காயத் தாமரைகளும். மை க்ளிக்ஸ். VELI BEACH & WATER HYACINTH. MY CLICKS.

110. கொல்லம் ( கொய்லோன் ) - குமரகம். மை க்ளிக்ஸ். KOLLAM ( QUILON) TO KUMARAKOM, MY CLICKS.

111. ஆலப்பியில் கெட்டுவல்லப் பயணம். மை க்ளிக்ஸ். ALLEPPEY HOUSE BOAT RIDE, MY CLICKS.

112. தாமரைக் குளம். மை க்ளிக்ஸ். LOTUS POND, MY CLICKS.

113. சுவாமிமலை ஸ்டெர்லிங் கலைப் பொருட்கள், மை க்ளிக்ஸ். SWAMIMALAI STERLING, ANTIQUES, MY CLICKS.

114. சோலாஹ் கம்ப் மாஸ்க் - 16 தூண் மசூதி. மை க்ளிக்ஸ். SOLAH KHAMBH MOSQUE. MY CLICKS.

115. வளையத்துள் புகுந்த வால்ரஸ்கள். மை க்ளிக்ஸ். WALRUS SEALS. MY CLICKS.

116. ஊனையூர் , மை க்ளிக்ஸ். OONAIYUR, MY CLICKS.

117. சிறு தெய்வங்களும் சித்திரக் குள்ளர்களும் சிங்கயாளியும். மை க்ளிக்ஸ். MY CLICKS.

118. திருமயம் கோட்டை,மை க்ளிக்ஸ். THIRUMAYAM FORT, MY CLICKS.

119. டால்ஃபின்களின் பந்தாட்டமும், ஓவியமும். மை க்ளிக்ஸ்.PAINTING BY DOLPHINS,MY CLICKS.

120. குவாலியர் மயில். மை க்ளிக்ஸ். GWALIOR - PEACOCK. MY CLICKS.

2 கருத்துகள்:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு
  2. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)