வெள்ளி, 17 நவம்பர், 2017

பனிப்பொட்டும் சூரியக் கண்ணாடியும்.

1641. சமவயது உடையவர்கள் மட்டுமே ஒருவரை ஒருவர் அதிகம் புரிந்துகொள்ள முடிகிறது.

1642. வெளிச்செல்லவும் உள்வரவும் முடியாமல் முன்னோர்கள் வளர்த்த வேலி முள்ளால் காயப்படுத்திக் கொண்டிருக்கிறது.

1643. ஏன் எதற்கு எப்படி எதனால் - தேவையா இதெல்லாம் என்ற கேள்விகள் சில விஷயங்களில் அடிக்கடி எழுந்தால் அதிலிருந்து விலகி இருப்பது நல்லது.

1644. திருமண விஷயத்தில் முடிவெடுப்பதுதான் இன்றைய காலகட்டத்தில் மிகப்பெரும் சவாலாக இருக்கிறது.

# மகன் அல்லது மகள் என்று சேர்த்துக் கொள்ளவும்.

1645. பத்ரிக்கையில் மாடல்களின் விளம்பரப் புகைப்படங்களைப் பார்க்கும்போது இப்போதெல்லாம் சாதாரணமாகத் தோன்றுகிறது... ஃபேஸ்புக்கில எத்தனை அற்புதமா ப்ரொஃபைல் பிக்சர் போடுறாங்க.. கொஞ்சம் கத்துக்குங்க ஃபோட்டோகிராஃபர்ஸ்.



1646. பூக்கள் மலரும்போது
விரியும் கண்கள்
காய்கனிகளுக்காக்
காத்து நிற்கின்றன
பனியில் வாடி உதிரும்போது
தினம் நோக்கும் கண்களுக்குள்
அருவமாய்ப் புகுந்து ரேகையாய்
உறைந்துவிடுகிறது மரணக்களை.
பூக்கள் வரலாம் போகலாம்
மடங்கி விழும் செடியை எங்கு போட.

1647. ஒரு காஸ் சிலிண்டர் விலை 830 . /- டெலிவரிமேன் 794 க்கு 830 கேக்குறார். டெலிவரிக்கும் வரியா . ஓ மை கடவுளே.

1648. ரொம்ப தொந்தரவா இருந்துச்சுன்னா ஸ்டாப் நோட்டிஃபிகேஷன் போட வேண்டியதுதானே.. என் ப்லாக் போஸ்ட் எல்லாம் துரத்துதுன்னு ஃப்ரெண்ட்ஷிப்பை விட்டே ஓடுறதா. இது என்ன பழக்கம். . ஹூ இஸ் தட். அதுயார் யார் யார் ? ஒரு நட்பு கொறையுதே. :P

1649 pachai milagay poo,

1650. Bp nnu admitt aana discharge aagumpothu ivlo glouse koduthurukkanka. Oru velai blood vessels ai track panni pathirupangaloo🤔🤔🤔🤔🤔😉

1651. ஆடுகள் வெட்டப்பட்டுக்கொண்டிருக்கின்றன.
நாம் மீன்கள் என்று மகிழ்கிறோம்
வகிரப்படும்வரை.

1652. ஒரு பூ போதவிழ்கிறது
முகிழ்க்கிறது
விரிகிறது
மணம் பரப்புகிறது
இதழ்கள் இறக்கைகளாகின்றன
பறக்கத்துவங்கும் அதைப்
பட்டாம் பூச்சி என்கிறாய்
மனம் என்றுணர்கிறேன்

1653. குளிர்வாதை
கணப்பூ
மழை இம்சை
மாறி மாறித் துரத்துகிறது
உன் நினைப்பு.

சொட்டுச் சொட்டாய்
சத்தமில்லாமல்
இறங்குகிறது
ஞாபகம்

வளையங்களாய் விரிந்து விரிந்து
காணாமல் போகிறது
பின்னொரு மாலையும்.

1654. வளைந்து நெளிந்து
ஓடிக்கொண்டிருக்கிறது
அம்மாயநதி

அதன் எதிர்பாரா திருப்பங்களின்
கவர்ச்சியில் சிக்கிச் சுழன்று செல்கிறது
ஒரு சிறு படகு

சாக்கடைகளும்
சங்கமங்களும்
முக்கூடல்களும்
புதிதல்ல நதிக்கு
படகுக்குப் புதிது.

நீர்ப்பறவைகளாய்
கொத்திய மீன்களுடன்
கனத்துக் கடக்கிறது படகு.

மணலோ வெள்ளமோ
மடைமாற்றாத வரைபடமாய்
அங்கேயே கிடக்கிறது நதி.

1655. விடிவதற்காய்க்
காத்திருக்கின்றன பூக்கள்.
பனிப்பொட்டு வைத்து
சூரியக் கண்ணாடியில்
நறுமுகம் காட்டி முறுவலிக்கின்றன

1656. Are We Robots ?
Are We 'Robots'.
Are we Robots !

1657. கருணையைத் தனக்காய்
வைத்துக் கொள்ளும்
தென்னை மனிதர்கள்

அழகைக் காண்பித்து
அலையும் நிலா
உள்ளே அழுக்கும்
கற்களும் மணல்களும்

விரல் நுனிகளில்
குற்றத்தைச் சுமந்துகொண்டு
திரியும் மனிதர்கள்.

1658. சிறகுகள்
என்னிடத்தே
வண்ண வண்ணமாய்ச்
சிறகுகள்.
அணிந்து கொண்டு
பறக்கும்
உரிமையற்ற
உரிமைக்காரி.

1659. என்
கிடங்குகள்
நிறைய்ய்ய
ஆட்டுரோமம்
நூற்கத் தெரியாமல்
நான்.

1660. சுமை தூக்கி..
யாருக்காகவோ,
எவரிடமிருந்தோ,
எவருக்கோ,
எவரோடோ
ஏனென்று ,
தெரியாமல்
நீ..
முட்டாள் சுமைதூக்கி.

டிஸ்கி :-

இவற்றையும் பாருங்க.


1. ஞானம் பிறந்த கதை. 

2. ஸ்வரமும் அபஸ்வரமும். 

3. அழகும் அறிவும் அன்பும் குழந்தைகளும்.

4. கணவன் அமைவதெல்லாம்..

5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..

6. அன்பெனும் பேராயுதம்.

7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.

8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும். 

9. என் வீடு என் சொர்க்கம்.

10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும். 

11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும். 

12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.

13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி‬.

14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி

15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும் 

16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)

17. முகமூடிகளும் மனப்பூக்களும். 

18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !. 

19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும். 

20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.

21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.  

22. இன்ஃபாக்‌ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!

23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும். 

24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.

25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும். 

26. தோற்றவர்களும் துணிந்தவர்களும். 

27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும். 

28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும். 

29.  நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.

30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.  


31.வெள்ளத் தீயும் தேரை இதயமும். 

32. காதல் கவுஜைகளும் முகநூல் காதலும். 

33. பேதை மனுஷியும் மாமியார் சிண்ட்ரோமும்.

34. டிவிஎஸ் 50 யும் ஸ்வீட் நத்திங்ஸும். :) 

35. நோக்கர்களும் நந்தா விளக்கு விருதும். 

36. போதையும் போதிமரமும்.

37. மாயக் குடுவையும் மனமீனும்.

38. அஸ்வத்தாமன் அஸ்திரமும் யூதாஸ் நாவும். 

39. ஆணியன் ரோஸ்டும் அலாவுதீன் பூதமும். 

40. 99 ம் இல்ல 21 ம் இல்ல, ஒருநாள் சபதம்தான். 

41. சாண்ட்விச்சும் ஊறுகாயும்.

42. நெபுலாவும் ப்ரத்யங்கிராவும். 

43. 2065 ம் ஆறு லட்சமும். !!! 

44. மழைப்புரவியும் பஜ்ரங்பலியின் வாலும். 

45. கறுப்புப் பட்டாம் பூச்சியும் குட்டிக் குளவியும். 

46. எடிட்டர் பாப்பும் அர்பன் விவசாயியும்.

47. கும்பகர்ணியும் எல்லைச்சாமியும். 

48. கவனிப்பும் அவதானிப்பும். 

49. பெங் குவின்களும் வால்ரஸ்களும். 

50. சிவப்புப் பட்டுக் கயிறும் நெல்லை உலகம்மையும் 

51. கோல்டன் ஃபேஷியலும் போஸ்ட் புல்லட்டினும். 

52. அப்பிராணிகளும் அசட்டுத் தித்திப்பும். 

53. SUMO வும் சவாரியும்.

54. அரசனும் ஆண்டியும். 

55. கோயமுத்தூரும் கர்நாடகாவும். 

56.  பாபநாசமும் கருத்து கந்தசாமியும்

57. தர்மதரிசனமும் தாய்க்கிழவியும். 

58. ஹைபர்நேஷனும் சாஃபக்லீஸும். 

59. தெய்வமகள், வம்சம் - இம்சைகள். 

60. தல ஃபேன்ஸும் கலகலப்பும். 

61. பைரவாவும் புத்தகக் கண்காட்சியும். 

62. தமிழ்மணமும் அக்கினிக்குஞ்சு இணையத்தில் அரங்கன் கணக்கும். 

63. தேசப்பற்றும் தேசப்பித்தும். 

64.  தலைகீழ் வேதைகளும் விஸ்வரூபங்களும்.

65. சாந்திலெட்சுமணன் படைத்த கம்ப ரசமும், புக்ஃபேர் பாப்கார்னும். 

66. மத ஒற்றுமையும் மன ஒற்றுமையும்.  

67. ஜியோவுக்கு முன்னும் பின்னும். ஜீயோ மேரே லால். 

68. முயலும் மானும் மயிலும் பூக்களும் . 

69. டாகிங்கும் ஹாக்கிங்கும். 

70. பாடாவதி பஸ் ஸ்டாண்டுகளும் லவுட் ஸ்பீக்கர் டீலக்ஸ் பஸ்களும்.

71. பிரிவின் வெறுமையும்காலிக்குடங்களும் 

72. சனி லைக்கோ முனி லைக்கோ ... விடாது கருப்பு

73.  நேற்றைய மீனும் ஞாபகக் கொக்கும்.

74. கொப்பித்தட்டும் சிதம்பர விலாஸும்.

75. பிக் பாஸும் சாட்சி பூதமும்.

76. இழிவரலும் வீரமரணமும்.  

77.பிக்பாஸ் கண்டெக்டர்ஸும் கூகுள் ஸ்மார்ட் காரும்


82. மெர்சலும் துப்புக்காரர்களும்.

83. பனிப்பொட்டும் சூரியக் கண்ணாடியும் . 

4 கருத்துகள்:

  1. முட்டாள் சுமைதூக்கி. ரசித்தேன், சற்றே வேதனையோடு.

    பதிலளிநீக்கு
  2. எல்லாமே நல்லாருக்கு! துரத்தும் ப்ளாக் போஸ்ட்ஸ் ஹாஹாஹா...
    கடைசி முட்டாள் சுமைதுக்கி வேதனை!!!

    பதிலளிநீக்கு
  3. நன்றி ஜெயக்குமார் சகோ

    நன்றி ஜம்பு சார்

    நன்றி துளசி சகோ & கீத்ஸ்.

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)