வெள்ளி, 25 ஏப்ரல், 2014

அகநாழிகையில் அன்ன பட்சி அறிமுக நிகழ்வு:-

அகநாழிகையின் அன்ன பட்சி அறிமுக நிகழ்வு வரும் ஞாயிறு மாலை 5. 30 மணிக்கு சைதாப்பேட்டையில் உள்ள அகநாழிகை புத்தக நிலையத்தில் நடைபெறுகிறது. சென்னை மக்களும் பதிவர்களும் கட்டாயம் வாங்க. இந்த சமயத்தில் வெளியூரில் இருந்து சென்னை வந்திருக்கும் நண்பர்களும் பதிவர்களும் உறவினர்களும் வாங்க.

பொன்மாலைப் பொழுதில் விமர்சனத்தைக் கூட ஆராய்ச்சிக் கட்டுரைபோல் அழகாய் வடித்து அமிழ்தினும் இனிய மொழி பேசும் தோழி, பல்துறை வித்தகி, தமிழச்சி தங்கபாண்டியன்,

வியாழன், 24 ஏப்ரல், 2014

அன்ன பட்சிக்கு காவிரி மைந்தனின் வாழ்த்து.

எண்ணத்தை எடுத்துச் சொல்லும் திறமையதும்..
என்றைக்கும் வற்றாத சொல் வளமும்..
எழுத்தின்மேல் உமக்கிருக்கும் ஆர்வமும்
இன்றைக்கு வடிவம்பெரும் அழகுதான்..
அன்னபட்சி எனும் நூல் வெளியீடு - அறிந்து
அகம் மகிழ வாழ்த்துக்களை வழங்குகின்றேன்!!
உங்களது இலக்கியப் பயணம் வெல்லட்டும்..
எதிர்காலம் உங்கள் பெயர் சொல்லட்டும்...
அன்புடன்
காவிரிமைந்தன்

புதன், 23 ஏப்ரல், 2014

அன்ன பட்சிக்கு இரா சம்பந்தன் அவர்களின் வாழ்த்து.

அன்ன பட்சி!

நீர்கலந்த பால்பிரித்துச் சுவைக்கும் அன்னம்

நிலநடக்கும் அழகைநள வெண்பா பேசும்
ஊர்கலந்த பிணக்குகளைத் துயரை இன்ப
ஊற்றுக்களை அன்னமெனப் பிரித்துப் பேசிச்
சீர்கலந்த சமுதாய நெறியைக் காணச்
சிறகடிக்கும் தேனம்மை கவிதை காணில்
கார்கலந்த வான்முகிலைக் கண்டு ஆடும்
கலாபமயில் ஆகிடுமே படிப்போர் நெஞ்சம்!
ஏர்கலந்த சொல்லுழவுத் தங்கை சொன்ன
எத்தனையோ கவிதைகளில் அன்னப் பட்சி
வேர்கலந்து பெரும்புகழை ஈட்டும்! புள்ளின்
வேறுபட்ட மென்நடையால் அன்றோ! ஆமாம்!

இரா.சம்பந்தன்


செவ்வாய், 22 ஏப்ரல், 2014

எனது கவிதை கன்னட மொழிபெயர்ப்பில். ( ஒரு வெறுத்தலின் முடிவில் )

.......ಮತ್ತೆ ಕೂಡುವ ಬಯಕೆ

ಪಟ್ಟಿ ಮಾಡಿ ನೋಡುತ್ತೇನೆ
ನಿನ್ನ ಅಲಕ್ಷ್ಯವನ್ನು
ಅಹಂಕಾರವನ್ನು , ಅಸೂಯೆಯನ್ನು
ನಿಂದನೆಗಳನ್ನು, ಕೋಪವನ್ನು
ಬಯಸಿಯೋ, ಬಯಸದಲೋ
ಭೂತಗನ್ನಡಿ ಹಿಡಿದು
ದ್ವೇಷಿಸಲು ಬೇಕಾಗುವ
ಸಾಕಷ್ಟು ಕಾರಣಗಳನ್ನು ಹುಡುಕುತ್ತೇನೆ
ನೀನು ಗಾಸಿಗೊಳಿಸಿದ್ದೇನೋ ಒಮ್ಮೆ ಮಾತ್ರ
ಅದನ್ನು ನಾನು ವಾಸಿ ಆಗಬಿಡದಂತೆ ಕೆರೆದು
ಉಲ್ಬಣಗೊಳಿಸಿ ನೋಯಿಸಿಕೊಂಡದ್ದೋ ನೂರು ಸಲ
ಯಕ್ಷಿಣಿಯಾಗಿ ನಾನೂ ,ರಾಕ್ಷಸನಾಗಿ ನೀನೂ
ಒಬ್ಬರನೊಬ್ಬರು ಕಬಳಿಸಿದನಂತರವೂ, ಸ್ವಲ್ಪ ಉಳಿದೇ ಇದ್ದೇವೆ
ನೀನು ಬಿಟ್ಟು ಹೋದ ನಾರಿನಿಂದ ನಾನು ಹೂಕಟ್ಟಿ
ತೊಡಿಸ ಬಂದಾಗ ಮುಖ ತಿರುಗಿಸಿಕೊಂಡೆ
ವಲಸೆ ಬರುವ ಪಕ್ಷಿಗಳು ಗೂಡು ಕಿತ್ತು ಹೋದಾಗಲು
ಧಾಮ ಮರೆವುದೇ ಅವುಗಳ ರೆಕ್ಕೆ ಬಡಿತದ ನಾದವ ,ಚಿಲಿಪಿಲಿ ರಾಗವ
ನೆನಪಲಿನ್ನು ತೇಲುತಿದೆ ಸ್ವಲ್ಪ ನಿನ್ನ ಮಂದಹಾಸ
ಹಂಚಿಕೊಂಡ ನವಿರು ನವಿರಾದ ಸಂತಸ
ಮೂಡಿಸುತಿದೆ ಮತ್ತೆ ಕೂಡಬಹುದೇ ಎಂಬ ಆಸೆಯ !

-ತೇನಮ್ಮೈ ಲಕ್ಷ್ಮಣನ್

ஒரு வெறுத்தலின் முடிவில்
--------------------------------------------
பட்டியலிட்டுப் பார்க்கிறேன்
உன் அலட்சியத்தை
அகங்காரத்தை ஆணவத்தை
எள்ளலை கோபத்தை
தேவையோ தேவையற்றோ
பூதக்கண்ணாடி கொண்டு விரித்து
வெறுப்பதற்கான எல்லைகளை
வரையறுத்துக் கொள்கிறேன்

சனி, 19 ஏப்ரல், 2014

சாட்டர்டே ஜாலி கார்னர். படமெடுத்த பாம்பும் படமெடுத்த மலரும்.


என் முகநூல் தோழி மலர்விழி ரமேஷ். அவர் மலர்ஸ் கிளிக் என்று அருமையான புகைப்படங்களைப் பகிர்வார். சமையலிலும். சமையல் ஃபோட்டோகிராஃபியிலும்  சமீபகாலமாக அசத்திக் கொண்டிருக்கிறார்.

காய்கறிகள், கீரைகள், அவற்றின் மருத்துவப் பயன்கள், பொதுவான மருத்துவ ஆலோசனைகள் ஆகியவற்றைப் பகிர்வார். ஒரு ஃபோட்டோ காண்டெஸ்டில் பாம்பு இருக்கும் ( தலை நீட்டியபடி ) படத்தைப் போட்டு முதல் பரிசு என்று நினைக்கிறேன். வாங்கி இருந்தார். அந்தப் படமெடுத்த பாம்பைப் படமெடுத்த விஷயம் பற்றி நம் வலைத்தளத்துக்காகக் கேட்டேன்.

///மலர் பார்த்தா பயந்தமாதிரி இருக்கும் நீங்க படமெடுத்த பாம்பை எப்பிடி தகிரியமாக எப்பிடிப் படம் பிடிச்சீங்க?///

புதன், 16 ஏப்ரல், 2014

அன்ன பட்சி - அணிந்துரையில் கனிந்துரைத்த சுசீலாம்மா.

நன்றி அதீதம் சிறப்பான முன்மொழிதலுக்கு. :-





 மிக்க நன்றி சுசீலாம்மா..


////எம்.ஏ.சுசீலா
[எழுத்தாளர்,மொழிபெயர்ப்பாளர்,தமிழ்ப்பேராசிரியர்-பணி ஓய்வு(பாத்திமாக்கல்லூரி)]
:

அன்னப்பட்சியை நீவியபடி…..

*கொப்பளித்துப் பெருகும் உற்சாகமும் மலர்ச்சியும் கொண்ட பதின்பருவத்துப் பெண்ணாக, வேதியல் மாணவியானாலும் சமகாலப்படைப்புக்களின்பால் தணியாத தாகம் கொண்ட வாசகியாக, தினம் ஒரு கவிதையை எழுதிப் பார்த்தபடி மலர்ந்து கொண்டிருக்கும் துடிப்பான படைப்பாளியாக….இப்படிப் பல பரிமாணங்களில் ‘80களில் எனக்கு அறிமுகமாகியிருந்த என் அன்பு மகளும் மாணவியுமான தேனம்மை லட்சுமணனின் இன்றைய வளர்ச்சிக்கு உரைகல்லாகக் கைகளில் தவழும் ’அன்னப்பட்சி’யைப் பரிவோடு நீவித் தந்தபடி இந்த அணிந்துரை……

செவ்வாய், 15 ஏப்ரல், 2014

சி. சு. செல்லப்பா கதைத் தொகுதி 1 & 2 ..

சி. சு. செல்லப்பாவின் கதைத் தொகுதிகள் ஒன்று மற்றும் இரண்டையும் கல்லூரிக் காலத்தில் படித்திருக்கிறேன். அதைப் பற்றிய குறிப்புக்களும் எடுத்து வைத்திருக்கிறேன். ரொம்ப யதார்த்தமான வரிகளில் பதிவு செய்யப்பட்டிருக்கும் கதைகள் அவை.எளிமையும் அழகியலும் நிறைந்த கதைகள். தீர்வை நம்மிடமே விட்டுவிடும் கதைகள்.

அவை பற்றிய சிறு குறிப்பு :-

தொகுதி ஒன்றில் 12  கதைகள் இருக்கின்றன.

1. ஸரசாவின் பொம்மை :- அத்தானும் பொம்மை.

2. குருவிக் குஞ்சு - விடுதலை.

3. பாத்யதை - தங்கையின் மணம் முடிந்தபின் ரயிலில்

திங்கள், 14 ஏப்ரல், 2014

அனைவருக்கும் கல்வி. ( RIGHT TO EDUCATION ):-

அனைவருக்கும் கல்வி. ( RIGHT TO EDUCATION ):-

குழந்தைகளைப் படிக்க வைப்பதற்காகக் காசு கொடுக்கிறார்கள். எங்கே என்றா கேட்கிறீர்கள். அமெரிக்காவில்தான். ரோலண்ட் ஃப்ரேயர் ஜூனியர் என்ற பொருளாதார நிபுணர்தான் இந்த வித்யாசமான கல்விப் பரிசோதனையில் ஈடுபட்டிருக்கிறாராம்.

வகுப்பில் நன்கு படிக்கும் மாணவர்களை ”ஏ” என்றும் கொஞ்சம் சுமாராகப் படிக்கும் மாணவர்களை “பி ”என்றும் இருபிரிவாகப் பிரித்து  சுமாராகப் படிக்கும் மாணவர்கள் நன்கு படித்தால் ஊக்கத்தொகை வழங்கிப் பார்த்தார்கள். ஆனால் ரிசல்ட் என்ன வென்றால் ஆரம்பத்தில் சூப்பராகப் படித்த அந்தப் பிள்ளைகள் நாளடைவில் பழையபடிதான் படித்தார்கள்.

இதிலிருந்து காசு கொடுத்துக்  கல்வியை வாங்க முடியாது என்று தெரிகிறது.இயல்பாகப் படிப்பின் மீது தானாக ஆர்வம் வந்தால் ஒழியப் படிக்க வைக்க முடியாது என்பது நிரூபணமாகி இருக்கிறது.

தமிழகத்தில் சமச்சீர் கல்வி, செயல்முறைக் கற்றல் கல்வி என்று முயன்று பார்க்கிறோம். இது நன்கு பரவலாக செயல்பட்டாலே போதும். அனைவர்க்கும் ஒரே மாதிரியான கல்வி கிடைக்கும். அதே சமயம் ஒரே மாதிரியான கல்வித் தரமும் கிடைக்கச் செய்ய வேண்டும்.

சனி, 12 ஏப்ரல், 2014

செட்டிநாட்டுச் சொல்வழக்கு. “ அப்பச்சியும் ஆத்தாவும் “

செட்டிநாடு என்றவுடன் காரைக்குடியைச் சேர்ந்த ஊர்கள் நினைவுக்கு வரும். கிட்டத்தட்ட 96 ஊர்களில் வாழ்ந்திருந்த நகரத்தார் மக்கள் இப்போது 72 ஊர்களில் மட்டும்  வசிப்பதாகக் கூறப்படுகிறது. உலகெங்கும் வசித்து வரும் இவர்கள் மொத்தமாக ஒரு லட்சம் மக்கள் தொகையே உள்ளார்கள்.

நான் இந்தக் கட்டுரைகளில் இவர்கள் ஆதியில் இருந்தது இன்று இருப்பது பற்றி எல்லாம் சொல்லப் போவதில்லை. ( காஞ்சி, பூம்புகார், சிதம்பரம்,  அதன்பின் இளையாற்றங்குடியில் வந்து 9 கோயில்களாகப் பிரிந்து இந்த 96 ஊர்களில் வசிக்கத் தொடங்கியது எல்லாம்  ஏற்கனவே நகரத்தார் வரலாறு என்னும் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது. ). நகரத்தார் திருமண நடைமுறை என்ற புத்தகமும் வந்துள்ளது.

வெள்ளி, 11 ஏப்ரல், 2014

தேன் பாடல்கள். காற்றும் காதலும்.




61. ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு

கண்ணதாசன் பாடிய பாடல். ரொம்ப ரிதமிக்கா இருக்கும். உமர்கய்யாமை நினைவுபடுத்துவது போன்ற பாடல் வரிகள். ”நான் நிரந்தமானவன் அழிவதில்லை. எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை “ என்ற வரிகள் ஹைலைட்.

62. மன்றம் வந்த தென்றலுக்கு

ரேவதியும் மோகனும் நடித்த படம். மெல்ல மெல்ல காதலனை மறந்து கணவன் வயப்படும் காதல் காட்சி அழகு. 

63 . தண்ணிலவு தேனிறைக்க..

படித்தால் மட்டும் போதுமாவில் சாவித்ரி பாடும் பாடல். பாலாஜி பின்னே வர தண்ணீர்க் குடம் சுமந்து துளசி சுற்றுவது ஒரு கால கட்டத்தினுடைய பெண்களின் டெஃபனிஷன் போல இருக்கும்.

புதன், 9 ஏப்ரல், 2014

காதலா.. காதலா..

1. தனிமைப்பனி மூடிப்
படுத்திருக்கிறேன் பூவாய்.
சூரியனாய் வந்து
துயிலெழுப்பிக்
கதகதப்பாய் அணைக்கிறாய்.

2. எத்தனை முறை
தழுவினாலும் போதவில்லை.
திரும்ப திரும்பத்
தழுவச் சொல்கிறது
ஏறு தழுவுதலாய்..

3. காற்றிசைச் சிணுங்கியாய்
காத்துக் கிடக்கிறேன்.
நீ  காற்றாய்த் தழுவி
சரசரவென முத்தமிட
கலகலத்துச் சிரிக்கிறேன்.

செவ்வாய், 8 ஏப்ரல், 2014

அன்ன பட்சி பற்றி பத்மா & இளங்கோ.

எதிர்பார்க்கவே இல்லை இளங்கோ இவ்வளவு அருமையான சொல்லாட்சிகளுடன் கூடிய விமர்சனத்தை. என் கவிதை வார்த்தைகளைக் கையாண்ட விதம் அழகு. இதற்கு நன்றி என்ற ஒற்றைச் சொல் போதுமா.. நீங்கள் இருவரும் விமர்சிப்பீர்கள் எனத் தெரியும்.. ஆனால் இவ்ளோ அழகா இருக்கும்னு எதிர்பார்க்கலை. மேலும் சூலும் சூலமும் , பிரம்ம கபாலம் பத்தி ஒரு கண்டனக் குரல் கொடுப்பீங்களோன்னு பயந்துகிட்டே இருந்தேன். மொத்தத்தில் இத்தனை நாள் நான் காத்திருந்தது வீண் போகவில்லை.. நன்றியும் அன்பும் வாழ்த்துக்களும் நெகிழ்வும் உங்களுக்கும் பத்மாவுக்கும்.

/////Kt Ilango 'அன்னப் பறவை'யைக் கையில் எடுக்கும் போது, இரண்டு நாட்களில் படித்து முடித்து விடலாம் என்று நினைத்து, தேனம்மையுடன் சேர்ந்து 'தேடலில்' ஆரம்பித்தோம். ஆனால் தேடலில் தொடங்கி, 'ஆக்கிரமிப்பில்' மூழ்கி, 'முத்துச் சிப்பிகளைக்' கண்டெடுத்து, 'வார்த்தைச் சிறகு'களில் எங்கள் பயணம் முற்றுப் பெற்ற போது, நாட்கள் வாரங்களாகி இருந்தன.

திங்கள், 7 ஏப்ரல், 2014

நிழல்களை எரித்த நிஜங்கள்.



நிழல்களை எரித்த நிஜங்கள்:-
===============================

சந்தானம். சந்தானம். ஹூம் இந்தப் பெயரை எங்கேயோ கேள்விப்பட்டிருக்கின்றேன். நல்ல பரிச்சயம் கூட. எங்கே எங்கே .. என்று பாலகுமாரனின் ”மௌனமே காதலாயில்” வந்த  கதாநாயகன் பெயரைப் படித்துவிட்டு மனதினுள் தேடினாள் சுசீ.

“ஹாங்.. வந்துவிட்டது. கோ எஜுகேஷனில் எட்டாப்பூப் படிக்கும்போது எதுக்கெடுத்தாலும் என்னோட போட்டி போடுற சந்தான ராமன். வெள்ளையாய்ச் சிரித்துக் கொண்டு, வெள்ளையாய் அணிந்து கொண்டு, வெள்ளையாய்க் காண்பித்துக் கொண்டு எதுக்கெடுத்தாலும் படிப்பு, டிராமா, விளையாட்டுப் போட்டி அத்தனையிலும் போட்டி போடும் சந்தானம். தினம் அழகாய் உடையணிந்து கொண்டு நெற்றியில் கீற்றுப் பிறையாய் சந்தனத்துடன் வரும் சந்தானம்..

சனி, 5 ஏப்ரல், 2014

சாட்டர்டே போஸ்ட். ராஜி கிருஷ் அக்காவும் பேரறிஞர் அண்ணாவும்.

என் அன்பு ராஜி கிருஷ் அக்காவை நான் அறிமுகப்படுத்தவே  வேண்டாம். அனைவருக்குமே தெரிந்திருக்கும் அவர் அன்பின் பேரொளி என்று. தினம் தினம் எங்களுக்கு வாழ்த்துச் சொல்வதோடு மட்டுமல்ல அவர் விளிக்கும் செல்வங்களே என்ற வார்த்தைக்கும் நாங்கள் அன்பின் அடிமைகள்.

அவரிடம் நம் வலைத்தளத்தின் சாட்டர்டே போஸ்டுக்காகக் கேட்டபோது அறிஞர் அண்ணாவுடன் ஏற்பட்ட சிறுவயது அறிமுகத்தைப் பற்றிக் கூறினார். அது உங்களுக்காக இங்கே.

சிங்கப்பூரில் வசிக்கும் நீங்கள் தமிழ் அரசியல் பிரபலம் ஒருவரைப் பற்றி முகநூலில் முன்பு கூறி இருந்தீர்கள். அதுபற்றி இங்கு கூற முடியுமா..

வெள்ளி, 4 ஏப்ரல், 2014

தேன் பாடல்கள்.. நிலவும் மயிலும்.



51. வான் நிலா நிலா அல்ல

பட்டினப் பிரவேசம் படத்தில் சிவச்சந்திரன் பாடும் இந்தப் பாடல் ரொம்ப அருமையா ரிதமிக்கா இருக்கும். மரவீட்டில் மாடிப் படிகளில் பின்னோக்கி ஏறியபடியே கிடார் வாசித்தபடி பாடும் இந்தப் பாடல் என் ஃபேவரைட் .

52. பூ மலர்ந்திட நடமிடும் பொன் மயிலே.

மிகப்பெரும் கண்களை உடைய மாதவி ஆடும் பாடல். விழியாலே காதல் கதை பேசுவார் கமல் இதில். ஃபோட்டோகிராஃபராக வரும் கமலைப் பார்த்தபின் எந்த ஃபோட்டோகிராஃபரைப் பார்த்தாலும் ஏதோ கமல் சாயல் அடிப்பது போல் இருக்கும்.

53. இது ஒரு நிலாக்காலம்.

இதுவும் டிக் டிக் டிக் பாடல் . இதில் மாதவியோடு இன்னும் இருவரும் ஆடுவார்கள். வித்யாசமாக தண்ணீரில் மிதந்தபடி பாடும் காட்சி.

வியாழன், 3 ஏப்ரல், 2014

ராகவன் சாம்யேலின் “ சுனை நீர்.”



இந்த விமர்சனம் அமேஸானில் ”25 நூல்கள் - ஒரு பார்வை ( மூன்றாம் தொகுப்பு )” என்ற தலைப்பில் புத்தகமாக்கம் பெற்றுள்ளது. அங்கே படிக்கலாம். நன்றி மக்காஸ். 


புதன், 2 ஏப்ரல், 2014

நீரின் பயணம் -- கன்னட மொழிபெயர்ப்பில்

எங்கோ பெய்யும்
பெருமழையின்
ஒரு தூறல் என் மேல் விழுந்து
தெரிவிக்கிறது என் உயிர்ப்பை, இருப்பை.
நானும் ஒரு துளியாய்
துளித் துளியாக்
கரையத் துவங்குகிறேன்.
மலைகளில் இருந்து வீழ்ந்து
மடுவில் அடிபட்டு
உள் குகைக்குள் சென்று
சின்னச் சின்ன உருளல்களோடு
நீளக் கோடுகளாய்க்
கடல் நோக்கிக் நகர்கிறதென் பயணம்.


என் பெருமதிப்பிற்குரிய நண்பர் திரு. Kalimuthu Nalla Tambi அவர்கள் என்னுடைய கவிதை ஒன்றை கன்னடத்தில் மொழிபெயர்த்துள்ளார்கள். நீரின் பயணம் என்ற அந்தக் கவிதை வீணைகளையும் யாழையும் தம்புராவையும் அடுக்கிய வடிவத்தில் இருந்தாலும் , என்னுடைய கவிதையும் இன்னொரு மொழியில் மொழிபெயர்க்கப்பட்டதை நினைத்து சந்தோஷமாக இருக்கிறது. சாத்தியப்படுத்தி மகிழ்வூட்டிய அருமை நண்பருக்கு நன்றி..

ನೀರಿನ ಪಯಣ....

ಎಲ್ಲೋ ಸುರಿವ
ಒಂದು ಜಡಿ ಮಳೆಯ
ಒಂದು ತುಂತುರು ನನ್ನ ಮೇಲೆ ಬಿದ್ದು ತಿಳಿಸುತಿದೆ
ನನ್ನ ಚೇತನವ , ಇರುವಿಕೆಯ
ನಾನು ಒಂದು ಹನಿಯಾಗಿ
ಹನಿ ಹನಿಯಾಗಿ
ಕರಗಿ ಹೋಗುತ್ತೇನೆ
ಬೆಟ್ಟಗಳಿಂದ ಜಾರಿ
ಮಡುವಲ್ಲಿ ಇಳಿದು
ನಿನ್ನ ಗುಹೆಯ ಹೊಕ್ಕಿ
ಸಣ್ಣ ಪುಟ್ಟ ಉರುಳಿನೊಂದಿಗೆ
ನೀಳ ಗೆರೆಗಳಾಗಿ
ಕಡಲಿನೆಡೆಗೆ ಧಾವಿಸುತ್ತಿದೆ ನನ್ನ ಪಯಣ ....

-ತೇನಮ್ಮೈ ಲಕ್ಷ್ಮಣನ್

செவ்வாய், 1 ஏப்ரல், 2014

வீடு ரேகையும் விதையான சீதையும்.

வீடு ரேகை
கால் சுற்றிக் கிடக்கிறது
பாம்பாய்.
காலடி எடுத்து
வைக்கும் போதெல்லாம்
தடுக்கி விடுகிறது
சுவர்கள் அரண்களாய்
ஆரண்யத்திலும்.