சனி, 19 ஏப்ரல், 2014

சாட்டர்டே ஜாலி கார்னர். படமெடுத்த பாம்பும் படமெடுத்த மலரும்.


என் முகநூல் தோழி மலர்விழி ரமேஷ். அவர் மலர்ஸ் கிளிக் என்று அருமையான புகைப்படங்களைப் பகிர்வார். சமையலிலும். சமையல் ஃபோட்டோகிராஃபியிலும்  சமீபகாலமாக அசத்திக் கொண்டிருக்கிறார்.

காய்கறிகள், கீரைகள், அவற்றின் மருத்துவப் பயன்கள், பொதுவான மருத்துவ ஆலோசனைகள் ஆகியவற்றைப் பகிர்வார். ஒரு ஃபோட்டோ காண்டெஸ்டில் பாம்பு இருக்கும் ( தலை நீட்டியபடி ) படத்தைப் போட்டு முதல் பரிசு என்று நினைக்கிறேன். வாங்கி இருந்தார். அந்தப் படமெடுத்த பாம்பைப் படமெடுத்த விஷயம் பற்றி நம் வலைத்தளத்துக்காகக் கேட்டேன்.

///மலர் பார்த்தா பயந்தமாதிரி இருக்கும் நீங்க படமெடுத்த பாம்பை எப்பிடி தகிரியமாக எப்பிடிப் படம் பிடிச்சீங்க?///



பாம்பென்றால் படையும் நடுங்கும் ...நான் மட்டும் விதி விலக்கா என்ன..?? நம்ம பய லிஸ்ட் பாத்தீங்கனா கொஞ்சம் பெருசாவே இருக்கும்...அதில் முதலிடம் எப்பவும் நாகுவுக்கு தான். சின்ன வயசுலேர்ந்தே பாம்பு நடித்த படங்கள் பார்க்க விரும்ப மாட்டேன்.. ரொம்பவும் பயம்...ஒரு முறை அம்மா வெள்ளிகிழமை விரதம் என்ற படம் அழைத்து போனார்கள்..பாத்துட்டு வந்து ஒரு வாரம் இரவு தூக்கம் தொலைத்தேன். டிவி யில் டிஸ்கவரி சானலில் பாம்பை கண்ட மாத்திரத்தில் வேறு சேனல் மாற்றி விடும் பயந்தாங்கொள்ளி தான் நானும்..

ஆனால் பாருங்க ...எங்கள் வீட்டு தோட்டத்தில், மற்றும் நான் வசிக்கும் நகரிலும் பாம்பு நடமாட்டம் மிக அதிகம். சாலையோரம் நடந்து போகும் போதே நம் முன் ஒரு பாம்பு ‘ வாம்மா ..மின்னல்’ கணக்கா விர்ருனு கடந்து போகும்..கொஞ்சம் அசந்தால் காலில் மிதிபடும் அப்படி பட்ட தருணங்களில் நடுங்கியபடியே மீண்டும் ஏதாவது பாம்பு வந்து விடுமோ என்று இங்கும் அங்கும் பார்த்த வண்ணம் ஓட்டமும், நடையுமாக தெறித்து ஓடி வந்ததுண்டு....(நோ நோ....சிரிச்சா நேக்கு கோவம் வரும்....ஆமா...)

சரி ...இப்டி பட்ட தொடை நடுங்கி எப்படி இந்த படம் புடிச்சானு உங்க மனசுக்குள்ள நீங்க கேக்குறது என் காதில் விழுது.

அன்று காலை 8 மணி இருக்கும்...வீட்டில் நான் மட்டும் ..தோட்டத்து வீட்டில் வாட்ச்மேன் இருந்தார். கணவரை பணிக்கு அனுப்பியதும் வீட்டு வராண்டாவில் ஒரு கிரானைட் பெஞ்ச் இருக்கும். அங்கே அமர்ந்து டீ அருந்தியபடி அன்றைய பேப்பர் படித்து கொண்டு இருந்தேன். எனக்கு இடது பக்கம் இரும்பு கம்பி தடுப்பு..அதற்கு அப்பால் தோட்டம்.அந்த இடத்தில கருங்கல் ஸ்லாப் போட்டுள்ளோம்...ஓரங்களில் பூஞ்செடிகள் ..அந்த ஸ்லாப்களின் இடையில் ஒரு ஸ்லாப் மட்டும் எர்த் வயர் உள்ளே இறக்கியுள்ளோம்.அதனால் அந்த இடத்தில மட்டும் ஒரு சிறு இடை வெளி உண்டு.பேப்பர் படித்து கொண்டே சற்று வெளியில் மரங்களில் அமரும் குருவிகளை வேடிக்கை பார்த்தேன் அப்போது எதேச்சையாக இந்த பாம்பை பார்த்தேன்..லேசாக தலை மட்டும் நீட்டிய வண்ணம்...முதலில் பாம்பு என்று நினைக்கவில்லை நான்...ரொம்ப மெதுவாக எட்டி பார்த்த வண்ணம் இருந்ததும் ஓணான் என நினைத்து மறுபடியும் பேப்பர் படிக்க ஆரம்பிக்க சட்டேன்று ஒரு சந்தேகம்..பாம்பாஆஆஆ இருக்குமோ .....??????? உற்று பார்த்தேன் ..நாக்கு வெளியே வந்து வந்து எட்டி பார்க்கவும் ....அத்தோட போச்சு ... மூச்சு நின்னு போச்சு…!!!!!!!

அடுத்த நொடி ஒரே ஓட்டம் தான்...உள்ளே வந்து ஹால் கதவை மூடிட்டு சற்று ஆசுவாச படுத்தி கொண்டேன்..ஒரே படபடப்பு...ஹார்ட் பீட் எகிறுடுச்சு...நமக்கு தான் சும்மா இருக்க முடியாதே. அதே வேகத்தில் மறுபடியும் கதவை திறந்து எட்டி பார்த்தேன்.அந்த பாம்பு ஸ்டைலிலேயே ....அது போகலை...அதே போஸ் அங்கேயே இருந்துச்சு.மறுபடியும் கதவு க்ளோஸ்...இது எல்லாம் அமைதியா சத்தம் குடுக்காம நடந்துச்சு..அதனால் அந்த பாம்பு இப்போ இன்னும் கொஞ்சம் லேசா வெளியே வந்தது..திடீரென சத்தம் ஏதும் கேட்டால் தலையை உள்ளே கொஞ்சம் இழுத்து கொண்டது.. வெளியில் வந்தால் எவ்வளவு பெரிய பாம்போ என செம்ம நடுக்கம் எனக்கு...அந்த பக்கம் போகாம நம்ம பக்கம் வந்துட்டா...இப்டி எல்லாம் யோசிச்சப்பவே இன்னொன்னும் தோனுச்சு
...போட்டோ எடுத்தா என்னனு ...ஆனா அதுக்குள்ள போயிடுமோனு நினைச்சுட்டு வேகமா போய் கேமரா கொண்டு வந்து அந்த கிரானைட் ஸ்லாபில் அமர்ந்து கொண்டேன். திகில் ஒரு பக்கம் இருந்தது ..ஆனா அது அதே இடத்தில நாக்கை நீட்டிய படி நெடு நேரம் போஸ் கொடுத்த வண்ணம் இருந்தது....எனக்கு தான் படம் எடுக்கவே வரலை..20 படங்களுக்கு மேல் எடுத்திருப்பேன்....ஒன்றும் சரி வரலை...ஏன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன் ......?????


அட…. கை தான் கிடு கிடுன்னு பயத்துல நடுங்குதே...எப்படி படம் புடிக்க முடியும்...பெரும் போராட்டத்துக்கு பிறகு கடைசியில் சில படங்கள் சரியாக வந்துச்சு..ஆனால் அது நாக்கை நீட்டிய நேரத்தில் ஒன்று கூட எடுக்க முடியவில்லை. இந்த படத்தை பார்த்து விட்டு நிறைய பேர் கேட்டாங்க...இப்டி பாம்பு வந்துட்டு இருக்கு..எப்படி இருக்கீங்க என்று....அது சரி...அதுவா வருது இங்கே...நாம்மள அது குடியிருந்த இடங்களை அழித்துவிட்டு வீட்டை கட்டிட்டு வந்துட்டோம்..அது எங்கே போகும்...அதான் ..இங்கேயே சுத்திக்கிட்டு இருக்கு...என்னா ,,,கொஞ்சமே கொஞ்சம் பயந்துல வருது…. நமக்கு…....

---- ஹாஹாஹா அட நீங்க தகிரியமா படம் பிடிச்சிட்டீங்கன்னு நினைச்சேன். தெனாலி சோமனுக்குத் தங்கச்சின்னு நிரூபிச்சிட்டீங்க. நாங்க மாரியப்பா நகர்ல இருந்தபோதும் இந்த பய எஃபக்ட் எங்கள அடிக்கடி தாக்கும். அப்புறம் கடைசியா ஒரு பஞ்ச் வச்சீங்க பாருங்க அது எனக்கு ரொம்பப் பிடிச்சு இருந்துச்சு. .அது குடியிருந்த இடங்கள அழிச்சிட்டு வீட்டைக் கட்டிட்டு வந்துட்டோம். அது எங்கே போகும் அதான் இங்கேயே சுத்திக்கிட்டு இருக்கு.  உண்மைதான். அது இடத்துல நாம் இருக்கோம். பேச வாய் இருந்தா அது நம்ம கிட்ட என்ன பயமுறுத்தாம இடத்த காலி பண்ணுன்னு சொல்லி இருக்கும். :)


12 கருத்துகள்:

  1. Neenga 20 padam yeduthum sariya varala, ana ore padam than yeduthuiruku ,athu correct a vanthuduchu :o)).
    Thenakka, nammalam pambuku bayapadave koodathu. Lakshmi colony-la namma pamboda thana valanthom.. nan kalaila thoongi yenthirikum pothu.. yethana thadavai ottulenthu pambu thongum..
    Well , ok, oru kutty tips : pamba neenga veetukulla patheenganna, atha suthi kal uppda nalla parapi vittudunga. Pambu kal uppumela poga bayapadum. Yenna athuku mela yeriya arambikum. Ungaluku help vara varaikum pamba vera room kulla oda vidama vaikalam.
    No2 : Neengale pamba adikanumnu mudivuku vanthu teenganna, thalaila adinga.. oru adila pambu surundudum. Especially nalla pamba adikanumba , oru periya kuchila karupu thuniya katti, neenga irukura desaiku yethir purama neeti attunga.. pambu athaye pakkum.... appo thalaila adinga(balama)..
    Maranthutu neenga dance adineenganna..appuram ungaluku munnadi yaravathu dance adura mathiri ayidum. My friend in Belgium has around 100 pet snakes in his house..you can keep it in your hands.. all very tiny snakes and very colorful.

    பதிலளிநீக்கு
  2. அடுத்த முறை நாக்கு வெளியே இருக்கும் போது புகைப்படம் எடுக்க வாழ்த்துக்கள் ...

    பதிலளிநீக்கு
  3. Even in my childhood I was brought up in a village which is a habitat of a variety of snakes. V learnt to distinguish between the poisonous n non poisonous snakes. V always use to beat the former n play with the latter. But never thought of taking a photograph. Hats off to Malarvizhi for such a timely creative thinking even at the moment of fear. .

    பதிலளிநீக்கு
  4. ஹா.... ஹா.... எப்படியோ படம் எடுக்கும் பாம்பை படம் எடுத்துட்டீங்க...
    இருவருக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  5. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி, தோழமைகளே.

    பதிலளிநீக்கு
  6. சும்மா நு சொல்லிட்டு அமர்களமா இருக்கே படமும்,தொகுப்பும்.....தேனம்மை மேம் க்கும் உங்களுக்கும் என் வாழ்த்துக்கள் மனமார

    பதிலளிநீக்கு
  7. ஹா ஹா. மனசில இவ்வளவு பயத்தை வச்சிக்கிட்டு எப்படித்தான் படம் எடுத்தீங்களோ! படம் எடுத்ததும் எப்படி தலை தெறிக்க ஓடினீங்க?

    பதிலளிநீக்கு
  8. ஆ ராஜ் சுந்தர் டிப்ஸ் எல்லாம் அருமை.. பாம்பு முன்னாடி டான்ஸ் ஆடினா நம்ம முன்னாடி டான்ஸா.. என்ன ஒரு வில்லத்தனம். :) பெட் அனிமல்னாலும் பாம்பு பாம்புதான ..

    பதிலளிநீக்கு
  9. கட்டாயம் சொல்றேன் xxx :)

    நன்றி கமல் தயாளன்

    நன்றி தனபாலன் சகோ

    நன்றி மலர் :)

    நன்றி பனிமலர்

    நன்றி ஸ்கூல்பையன்.

    பதிலளிநீக்கு
  10. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)