செவ்வாய், 22 ஏப்ரல், 2014

எனது கவிதை கன்னட மொழிபெயர்ப்பில். ( ஒரு வெறுத்தலின் முடிவில் )

.......ಮತ್ತೆ ಕೂಡುವ ಬಯಕೆ

ಪಟ್ಟಿ ಮಾಡಿ ನೋಡುತ್ತೇನೆ
ನಿನ್ನ ಅಲಕ್ಷ್ಯವನ್ನು
ಅಹಂಕಾರವನ್ನು , ಅಸೂಯೆಯನ್ನು
ನಿಂದನೆಗಳನ್ನು, ಕೋಪವನ್ನು
ಬಯಸಿಯೋ, ಬಯಸದಲೋ
ಭೂತಗನ್ನಡಿ ಹಿಡಿದು
ದ್ವೇಷಿಸಲು ಬೇಕಾಗುವ
ಸಾಕಷ್ಟು ಕಾರಣಗಳನ್ನು ಹುಡುಕುತ್ತೇನೆ
ನೀನು ಗಾಸಿಗೊಳಿಸಿದ್ದೇನೋ ಒಮ್ಮೆ ಮಾತ್ರ
ಅದನ್ನು ನಾನು ವಾಸಿ ಆಗಬಿಡದಂತೆ ಕೆರೆದು
ಉಲ್ಬಣಗೊಳಿಸಿ ನೋಯಿಸಿಕೊಂಡದ್ದೋ ನೂರು ಸಲ
ಯಕ್ಷಿಣಿಯಾಗಿ ನಾನೂ ,ರಾಕ್ಷಸನಾಗಿ ನೀನೂ
ಒಬ್ಬರನೊಬ್ಬರು ಕಬಳಿಸಿದನಂತರವೂ, ಸ್ವಲ್ಪ ಉಳಿದೇ ಇದ್ದೇವೆ
ನೀನು ಬಿಟ್ಟು ಹೋದ ನಾರಿನಿಂದ ನಾನು ಹೂಕಟ್ಟಿ
ತೊಡಿಸ ಬಂದಾಗ ಮುಖ ತಿರುಗಿಸಿಕೊಂಡೆ
ವಲಸೆ ಬರುವ ಪಕ್ಷಿಗಳು ಗೂಡು ಕಿತ್ತು ಹೋದಾಗಲು
ಧಾಮ ಮರೆವುದೇ ಅವುಗಳ ರೆಕ್ಕೆ ಬಡಿತದ ನಾದವ ,ಚಿಲಿಪಿಲಿ ರಾಗವ
ನೆನಪಲಿನ್ನು ತೇಲುತಿದೆ ಸ್ವಲ್ಪ ನಿನ್ನ ಮಂದಹಾಸ
ಹಂಚಿಕೊಂಡ ನವಿರು ನವಿರಾದ ಸಂತಸ
ಮೂಡಿಸುತಿದೆ ಮತ್ತೆ ಕೂಡಬಹುದೇ ಎಂಬ ಆಸೆಯ !

-ತೇನಮ್ಮೈ ಲಕ್ಷ್ಮಣನ್

ஒரு வெறுத்தலின் முடிவில்
--------------------------------------------
பட்டியலிட்டுப் பார்க்கிறேன்
உன் அலட்சியத்தை
அகங்காரத்தை ஆணவத்தை
எள்ளலை கோபத்தை
தேவையோ தேவையற்றோ
பூதக்கண்ணாடி கொண்டு விரித்து
வெறுப்பதற்கான எல்லைகளை
வரையறுத்துக் கொள்கிறேன்


நீ கீறியது ஒரு முறை
நான் கிளறிக் கொண்டது பலமுறை
யட்சினியாய் நான் இருக்க
ராட்சனாய்ன் நீயும்
விழுங்கிய பின்னும் மீதம் இருக்கிறோம்
விழுங்காப் படுவதற்காய்
நீ விட்டுச் சென்ற சரங்கள்
பாதியிலேயே தொங்கிக் கொண்டிருக்க
நான் சூட்டும் மாலைகளையும்
நீ ஏற்காமல்
எங்கிருந்தோ வந்து
இரை தேடிக் கூடடையும்
பருவக்காலப் பறவையாய்
பறந்து சென்ற பின்னும்
மிச்சமிருக்கிறது உன் புன்னகையும்
சில பகிர்வுகளும்
எல்‌லா சாத்தியக் கூறுகளையும்
கூறாக்கி விடாமல்
////

 
முகநூல் நண்பர் திரு காளிமுத்து நல்ல தம்பி அவர்கள் என்னுடைய கவிதை ஒன்றை கன்னடத்தில் மொழி பெயர்த்துள்ளார்கள். இது இரண்டாவது. முதல்கவிதை நீரின் பயணம்.

நன்றி சார் மிக அழகான மொழிபெயர்ப்புக்கு.இந்தக் கவிதை எனது அன்னபட்சி கவிதைத் தொகுதியில் இடம் பெற்றுள்ளது.

என் நூல்கள் கிடைக்குமிடம். :- 
Aganazhigai book store.
390, Anna Salai,
KTS valagam, 1 st floor,
saidapet ,
Chennai – 15.

By post aganazhigai@gmail.com
டிஸ்கவரி புக்பேலஸ் , சென்னை
விஜயா பதிப்பகம் கோவை
மீனாக்ஷி புக் ஸ்டால் , மதுரை
அபிநயா புக் சென்டர், சேத்தியா தோப்பு
வம்சி புத்தக நிலையம்  , திருவண்ணாமலை
அகநாழிகை புக் சென்டர் , சென்னை. 


3 கருத்துகள்:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)