சனி, 5 ஏப்ரல், 2014

சாட்டர்டே போஸ்ட். ராஜி கிருஷ் அக்காவும் பேரறிஞர் அண்ணாவும்.

என் அன்பு ராஜி கிருஷ் அக்காவை நான் அறிமுகப்படுத்தவே  வேண்டாம். அனைவருக்குமே தெரிந்திருக்கும் அவர் அன்பின் பேரொளி என்று. தினம் தினம் எங்களுக்கு வாழ்த்துச் சொல்வதோடு மட்டுமல்ல அவர் விளிக்கும் செல்வங்களே என்ற வார்த்தைக்கும் நாங்கள் அன்பின் அடிமைகள்.

அவரிடம் நம் வலைத்தளத்தின் சாட்டர்டே போஸ்டுக்காகக் கேட்டபோது அறிஞர் அண்ணாவுடன் ஏற்பட்ட சிறுவயது அறிமுகத்தைப் பற்றிக் கூறினார். அது உங்களுக்காக இங்கே.

சிங்கப்பூரில் வசிக்கும் நீங்கள் தமிழ் அரசியல் பிரபலம் ஒருவரைப் பற்றி முகநூலில் முன்பு கூறி இருந்தீர்கள். அதுபற்றி இங்கு கூற முடியுமா..


 ///பேரறிஞர் அண்ணாவுடன் நான்..!!

 எனக்கும் என் தந்தைக்கும் பிடித்த தலைவர்களில் அறிஞர் அண்ணாவும் ஒருவர்... அந்த காலத்தில் என் தந்தை * மலேயன் இந்தியன் காங்கிரஸ் தலைவராக இருந்த சமயம்... (மலேசியாவில்.. குளுவாங் பாலோ என்ற இடத்தில்)அந்த காலத்தில் தமிழர்கள் தமிழர் திருநாளை வெகு விமரிசையாக கொண்டாடுவார்கள்..அந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக அறிஞர் அண்ணாவை அழைத்து இருந்தார்கள் ஏற்பாட்டு குழுவினர்...

அப்பொழுது எனக்கு சிறு வயது நானும் என் தந்தையுடன் சென்றேன்.. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பும் எனக்கு கிட்டியது... தமிழர் திருநாள் தொடக்க நிகழ்ச்சியில் என்னை அந்த மேடையில் தமிழ் வாழ்த்து பாடல் நான் பாட சக மாணவர்கள் பின்னணீயில் பாட எங்கள் ஆசிரியர் எங்களை பயிற்சி செய்து வைத்திருந்திருந்தார்..

மேடையில் நான் பாடிய முதல் பாட்டும் கூட.. ஒரு பக்கம் பயம் வேறு.....இருந்தாலும் தைரியத்துடன், நான் பாடிய தமிழ் வாழ்த்து பாடல்..

 ** வாழ்க நிரந்தரம்.. வாழ்க தமிழ் மொழி வாழிய வாழிய வாழியவே...
எங்கள் தமிழ் மொழி எங்கும் தமிழ் மொழி என்றென்றும் வாழிய வாழியவே... ஏழ் கடல் இருப்பினும் தன் மணம் வீசும் எழில் கொண்ட வாழிய வாழியவே... எங்கள் தமிழ் மொழி எங்கும் தமிழ் மொழி என்றென்றும் வாழிய வாழியவே..**

தமிழ் அன்னையின் எழுச்சி மிக்க பாடல் உணர்வோடு பாடி முடித்தோம்..

பலத்த கைதட்டல்...

மேடையில் அமர்ந்திருந்த அறிஞர் அண்ணா அப்பொழுதே எழுந்து வந்து, என் கரம் குலுக்கி, வாழ்த்தி கன்னத்தில் தட்டி விட்டார்...

அவரின் பெருமை எனக்கு அந்த வயதில் அறியாமல் போனது...ஆனால் இப்பொழுது நினைத்தால் எனக்கு பெருமையாக இருக்கிறது... யாராவது வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு போட்டு மென்று தின்றால் வருமே அந்த மணமும், தமிழர் திருநாள் வந்தாலும் எனக்கு அறிஞர் அண்ணாவின் நினைவு தான் வரும்... அவர் இருந்த புகழுக்கு, பதவிக்கும்... இப்பொழுது நினைத்து பார்த்தால் நான் உண்மையிலேயே ஒரு அதிர்ஷ்டசாலி தான்...

சித்திரை மாதம் பிறந்தாலே.. இன்றும் சிங்கப்பூரில் ஒரு மாதத்திற்கு தமிழ் மொழி பண்பாட்டு வாரம் தமிழர் நிகழ்ச்சிகளுக்கு பஞ்சமே இருக்காது.. அதுவும் தமிழர்களின் பல தரப் பட்ட தமிழ் கலை நிகழ்ச்சிகளை பல வித கோணங்களில் ஏற்பாட்டு குழுவினர்கள் நிகழ்ச்சிகளை படைப்பார்கள்..

தமிழை பேசுவோம்... தமிழை நேசிப்போம்.. உங்களிடம் என் இனிய பழைய இனிமையான நினைவுகளை பகிர்ந்தமைக்கு நன்றி...

 ப்ரியமுடன்... ராஜிகிருஷ்... அன்பு செல்வங்களே..!!///


6 கருத்துகள்:

  1. திருமதி ராஜி கிருஷ் அவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலி... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  2. அருமையான பகிர்விற்கு தேனம்மை அவர்களுக்கு நன்றி. . வெளிநாட்டில் இருந்தாலும் மொழி மறக்காமல், தமிழை பேசுவோம்..தமிழை நேசிப்போம் என்ற தமிழ் உணர்விற்கு ராஜிகிருஷ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  3. அருமையான பகிர்விற்கு தேனம்மை அவர்களுக்கு நன்றி. . வெளிநாட்டில் இருந்தாலும் மொழி மறக்காமல், தமிழை பேசுவோம்..தமிழை நேசிப்போம் என்ற தமிழ் உணர்விற்கு ராஜிகிருஷ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  4. கிருஷ் அவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலி... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  5. சி. லட்சுமி நாராயணன்....நெய்வேலி...6 ஏப்ரல், 2014 அன்று 12:22 PM

    அருமையான பகிர்விற்கு தேனம்மை அவர்களுக்கு நன்றி. . வெளிநாட்டில் இருந்தாலும் மொழி மறக்காமல், தமிழை பேசுவோம்..தமிழை நேசிப்போம் என்ற தமிழ் உணர்விற்கு ராஜிகிருஷ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  6. நன்றி தனபாலன் சகோ

    நன்றி இளங்கோ

    நன்றி ஆதித்யா

    நன்றி லட்சுமி நாராயணன்.

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)