செவ்வாய், 15 ஏப்ரல், 2014

சி. சு. செல்லப்பா கதைத் தொகுதி 1 & 2 ..

சி. சு. செல்லப்பாவின் கதைத் தொகுதிகள் ஒன்று மற்றும் இரண்டையும் கல்லூரிக் காலத்தில் படித்திருக்கிறேன். அதைப் பற்றிய குறிப்புக்களும் எடுத்து வைத்திருக்கிறேன். ரொம்ப யதார்த்தமான வரிகளில் பதிவு செய்யப்பட்டிருக்கும் கதைகள் அவை.எளிமையும் அழகியலும் நிறைந்த கதைகள். தீர்வை நம்மிடமே விட்டுவிடும் கதைகள்.

அவை பற்றிய சிறு குறிப்பு :-

தொகுதி ஒன்றில் 12  கதைகள் இருக்கின்றன.

1. ஸரசாவின் பொம்மை :- அத்தானும் பொம்மை.

2. குருவிக் குஞ்சு - விடுதலை.

3. பாத்யதை - தங்கையின் மணம் முடிந்தபின் ரயிலில்


4. கனவின் எதிரொலி - சிலம்பில் பாண்டியன் மனைவி.

5. புதியவள் - மணம் முடித்த பெண்

6. ஆறுதல் - குழந்தை தூங்கியபின் முத்தமிடல்

7. நொண்டிக் குழந்தை - நொண்டியின் பரபரப்பு

8. ஞாபகம் - தங்கை புருஷனுக்கு மறுமணம். குழந்தை-  ராதா.

9. வந்தே மாதரம் -  போலீஸ்காரன்.

10. கொண்டுவந்த சீர் - குழந்தை.

11. தீர்மானம் - மூன்றாம் தாரம் பெண் பார்க்கப் போக முடியாது எனத் தீர்மானம்

12. வேண்டாத விடுதலை. - கிளி - கூண்டுக் கிளிக்குக் கூண்டே உலகம்.


தொகுதி இரண்டில்  9 கதைகள் இருக்கின்றன.

1. வாழ்க்கை :- மயானக்காரன் கூட செத்துப் போன உயிரைப் பற்றிப் பொறுப்பற்று பிணத்தைக் கிளறுதலும் பாட்டுப்பாடுதலுமான கதை.

2. ஒரு சந்தர்ப்பத்தில் :- கணவன் மனைவி சண்டை. மனைவி கொழுந்தன் ஊர் போன பின் அலங்கரித்துக் கொள்ளல் .

3. மூடி இருந்தது. :- சிறைக்கைதிக்கு உயிர் போன பின்பு உலகக் கதவு மூடி இருந்தது. ( அது ஒரு தூக்கு தண்டனைக்கைதி பற்றிய கதை என்று ஞாபகம். )

4. என்ன சம்பந்தம் :- மனைவியும் எதிர்வீட்டுத் தாசியும் ஒரே நேரத்தில் கனகாம்பரம் வாங்குவதைக் கணவன் எதிர்த்தல்.

5. அர்த்தமற்ற கோபம். :- பட்டிக்காட்டு மனைவி மேல் கோபம். அவள் அலங்காரம் கண்டு வியப்பு. ( டாலி பொம்மை )

6. சட்டத்துக்கு மிஞ்சி :- சிறையில் வேறொருவர் இறந்து போதல். அவருக்கு ஏ க்ளாசுக்கு மாற்ற உத்தரவு.

7. அறுபது :- அறுபது வயதாகியும் தாத்தா ஆகாமை. முடிவில் தாத்தா ஆகப் போகும் பெருமை.

8. வெள்ளை - நாய்.. எஜமானன் வீட்டு நாயைக் காப்பாற்றுவது.

9. இருவிதம் :- டாமி அலட்சியமாய்ப் பணம் எறிதல். பிச்சைக்காரனிடம் ( ஏழைச் சிறுவனிடம் ) போலீஸ்காரன் தட்டிப் பறித்தல்.


டிஸ்கி :- மிகப் பல வருடங்களுக்கு முன்பு படித்ததால் சரியாக ஞாபகமில்லை. ஆனால் ரசித்த கதைகளைச் சிறு வார்த்தையில் குறிப்பெடுப்பது, பிடித்த வரிகளை அடிக்கோடு இடுவது என்பது  அப்போதெல்லாம் ஒரு வழக்கமாக இருந்தது. இவை என் தமிழன்னை கொடுத்த புத்தகம் என்பதால் இப்போது என்னிடம் இல்லை. ஆனால் இவற்றின் படிவுகள் மனதில் எங்கோ உறைந்திருக்கின்றன.

4 கருத்துகள்:

  1. நான் கடந்த புத்தகக் கண்காட்சியில் திரு சி சு செல்லப்பாவின் சிறுகதைத் தொகுப்புகள் வாங்கியிருக்கிறேன். காவ்யா வெளியீடு. 97 சிறுகதைகள் உள்ளன. 500 ரூபாய்.

    பதிலளிநீக்கு
  2. நன்றி குமார்.

    படிச்சீங்களா ஸ்ரீராம். எப்படி இருக்கின்றன. ரொம்ப நாள் ஆச்சு நான் படிச்சு. :)

    பதிலளிநீக்கு
  3. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)