வெள்ளி, 11 ஏப்ரல், 2014

தேன் பாடல்கள். காற்றும் காதலும்.




61. ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு

கண்ணதாசன் பாடிய பாடல். ரொம்ப ரிதமிக்கா இருக்கும். உமர்கய்யாமை நினைவுபடுத்துவது போன்ற பாடல் வரிகள். ”நான் நிரந்தமானவன் அழிவதில்லை. எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை “ என்ற வரிகள் ஹைலைட்.

62. மன்றம் வந்த தென்றலுக்கு

ரேவதியும் மோகனும் நடித்த படம். மெல்ல மெல்ல காதலனை மறந்து கணவன் வயப்படும் காதல் காட்சி அழகு. 

63 . தண்ணிலவு தேனிறைக்க..

படித்தால் மட்டும் போதுமாவில் சாவித்ரி பாடும் பாடல். பாலாஜி பின்னே வர தண்ணீர்க் குடம் சுமந்து துளசி சுற்றுவது ஒரு கால கட்டத்தினுடைய பெண்களின் டெஃபனிஷன் போல இருக்கும்.


64. சந்திப்போமா.. இன்று சந்திப்போமா..

1966 இல் வந்த படம். விஜயநிர்மலாவும் முத்துராமனும் பாடும் பாடல். ஆக்சுவலா இது பி பி ஸ்ரீனிவாசும் எல் ஆர் ஈஸ்வரியும் பாடும் பாடல். எனக்கு ஸ்ரீனிவாசின் குரலுக்காகவே பிடிக்கும். எம் எஸ் வி யின் இசையும் இதுக்கு ஹைலைட்.

65. காற்றினிலே வரும் கீதம்.

எம் எஸ் பாடும் இந்தப் பாடல் நம்மைக் காற்றினிலே உலா அழைத்துச் செல்லும். மிக மென்மையான அழகான பாடல்.

66. நீயே நீயே

எம் குமரன் சன் ஆஃப் மகாலெக்ஷ்மியில் வரும் பாடல் இது. ஜெயம் ரவியும் நதியாவும் பிள்ளையும் அம்மாவுமாக வரும் பாடல். அம்மாவுக்கு தோசை ஊற்றிக் கொடுப்பார் ரவி . அம்மா உடனே கேட்க தோசைக் கல்லோடு கிட்டே கொண்டு செல்லும் காட்சி செம குறும்பு. மிக ரசிக்க வைத்த பாடல். 

67.பூங்காற்று உன் பேர் சொல்ல

இளையராஜாவின் இசையில் மனதை வருடும் மென்மையான பாடல். கமலும், அமலாவும் ரொம்ப இனிமையாகக் காட்சி அழகைக் கூட்டுவார்கள்.

68. நான் பார்த்ததிலே இவள் ஒருத்தியைத்தான்

மறக்க முடியுமா அன்பே வாவில் சரோஜா தேவியையும் எம்ஜியாரையும். நம் மனம் கவர்ந்த பாடலில் ஒன்றாக கட்டாயம் இது இருக்கும். சின்னக் குடை போல் விரியும் இமையும் விழியும் பார்த்தால் ஆசை விளையும் என்ற வரிகளும் தொப்பியை எம் ஜியார் கரெக்டாக சரோஜாதேவியின் தலையில் பொருந்துமாறு தூக்கி வீசுவதும் அழகு.

69. நீயேதான் எனக்கு மணவாட்டி

ஜெயாம்மாவும் எம்ஜியாரும் பாடும் பாடல். அம்மாவின் ஆளுமையான அழகிற்கு நான் எப்பவுமே அடிமை. குடியிருந்த கோயிலிலிருந்து நம் மனம் புகுந்த பாடல்.

70. ஹாப்பி இன்று முதல் ஹாப்பி.

எப்ப கேட்டாலும் உற்சாகமூட்டும் பாடல். சிவாஜியும் கே ஆர் விஜயாம்மாவும் ஊட்டி வரை உறவில் பாடுவது. ஊட்டியின் எழில் மிகு தோற்றமும் கே ஆர் விஜயாம்மா, சிவாஜியின் கெமிஸ்ட்ரியும் வண்ணமிகு உடைகளும் காட்சியமைப்பும் மெல்லிய நடனமும் அற்புதம்.

  டிஸ்கி:- இவற்றையும் கேளுங்க. :)

1. தேன் பாடல்கள் .. அழகும் அழகும்.  

2. தேன் பாடல்கள். எனக்காகவும் உனக்காகவும்.

3. தேன் பாடல்கள். தனிமையும் காதலும்.

4. தேன் பாடல்கள் . ரோஜாவும் தேனும்

5. தேன் பாடல்கள். உள்ளமும் விழிகளும்

6. தேன் பாடல்கள். நிலவும் மயிலும். 

7. தேன் பாடல்கள். காற்றும் காதலும்.  

8. தேன் பாடல்கள். ஆசையும் ஆட்டமும்.    

9. தேன் பாடல்கள். தீர்த்தக் கரையும் ஆற்றங்கரை மரமும்.

10. தேன் பாடல்கள் தலைவர்களும் தலைவியும் கெமிஸ்ட்ரியும்.

11. தேன் பாடல்கள். மழையும் பூச்சரமும்.  

12. தேன் பாடல்கள். தேடலும் துடிப்பும்.  

13. தேன் பாடல்கள். கண்ணழகும் கண்ணனும்.

14. தேன் பாடல்கள். சலங்கையும் சங்கீதமும்.  

15. தேன் பாடல்கள். யமுனையும் ஓடமும்.  

16. தேன் பாடல்கள். மாயனும் முருகனும்.

17. தேன் பாடல்கள். ஆயர்பாடியும் ஆலய மணியும். 

18. தேன் பாடல்கள். மார்கழியும் மல்லிகையும். 

19. தேன் பாடல்கள். அன்பும் அழகனும்.    

20.  தேன் பாடல்கள். காதலும் மயக்கமும்.

21. தேன் பாடல்கள். மாலையும் மலரும்.

22. தேன் பாடல்கள். நாணமும் தவிப்பும்.

23. தேன் பாடல்கள். பாசமும் பிரிவும். ( ரொமான்ஸ் வெள்ளி )

24. தேனே உனை நான் தேடியலைந்தேனே.

25. தேன் பாடல்கள். பொன்வீதியில் மானும் முயலும் மயிலும்.


9 கருத்துகள்:

  1. எல்லா பாடல்களும் அசத்தல் என்றாலும்

    ஹாப்பி பாடல் எனக்கு வாழ்வில் மறக்க முடியாதது.

    ஊட்டி போக முடியவில்லை என்பதால்,

    ஊட்டி வரை உறவு படத்திற்கு போனோம்.
    படம் முடிந்து திரும்பும் போதும் எல்லாமே ஹாப்பி ஆகத்தான் இருந்தது.

    ஆனால்,

    அடுத்த நாள் எனது தந்தை நாங்கள் எதிர்பாராத வகையில் திடீரென இறந்துவிட்டார்.

    வீடு வரை உறவு , காடு வரை பிள்ளை, கடைசி வரை யாரோ
    என்ற வரிகள் அடுத்த நாளே மனதில் வந்தன.

    அதெல்லாம் பழைய கதை.

    உங்களுக்குப் பிடிக்கும் சில பாடல்கள் இங்கே இருக்கின்றன.
    www.sachboloyaar.blogspot.com
    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு

  2. வணக்கம்!

    சிந்தை புகுந்தொலிரும் செந்தமிழை இங்களித்து
    விந்தை புாிந்தீா்! வியக்கின்றேன்! - எந்நாளும்
    சந்தக் கவிபாடும் பாரதிநான் சாற்றுகிறேன்!
    மொந்தை மதுவுன் மொழி!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    பதிலளிநீக்கு
  3. எந்தப் பாடல் மிகவும் பிடிக்கும் என்று யோசனை செய்து கொண்டு இருக்கிறேன் சகோதரி...

    பதிலளிநீக்கு
  4. pbs தான் எனக்கும் பிடித்த பாடகர்.இன்பம் பொங்கும் வெண்ணிலா ,காற்றுவெளியிடை கண்ணம்மா எப்படி.

    பதிலளிநீக்கு
  5. நன்றி சுப்பு சார்

    நன்றி கவிஞர் கி. பாரதிதாசன்.

    எந்தப் பாடல் என்று முடிவு செய்துவிட்டீர்களா தனபாலன் சகோ

    ஆம் விஜயன் . அவர் குரலுக்கு மாற்று ஏது..:)

    பதிலளிநீக்கு
  6. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  7. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

    அறிமுகப்படுத்தியவர் : செல்வி காளிமுத்து அவர்கள்

    அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : என் மன வானில்

    வலைச்சர தள இணைப்பு : வெள்ளியின் விடியல்கள்

    பதிலளிநீக்கு
  8. வலைச்சரம் மூலமாக தங்களின் வலைப்பூவைப் பற்றி அறிந்தேன். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  9. நன்றி டிடி சகோ

    நன்றி ஜம்புலிங்கம் சார்

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)