திங்கள், 21 ஆகஸ்ட், 2017

கொம்புத்தேனும் குணத்தேளும்

1541.செப்டம்பர் வந்திருச்சா. :)

#ஹைபர்நேஷன்லேருந்து சீக்கிரம் முழிச்சிட்டனா :)

1542. கையைத் தொட்டுத் தொட்டுப் பொட்டு வைத்துக் கொண்டிருக்கிறது  மழை.

1543. SARVESHU KALESHU MAMANUSMAR.. ( சதா சர்வ காலமும் நாமஜெபம்..)

1544. ஸ்டேடசை லைக் பண்றத விட ஃபோட்டோவை லைக் பண்றது சிக்கல் இல்லாத வேலையா இருக்கு :)

1545. குடிக்காதே

குடிக்காதேன்னு சொன்னாலும்

கேக்க மாட்டேங்குது

சாப்பிடும்போது தண்ணி குடிக்காதேன்னா

ரெண்டு வாய் சாப்பிட்டதுமே.  விக்குறமாதிரி இருக்கே. :)

#செல்ஃப்_அட்வைஸ். :)

1546. அடிக்கடி சிஸ்டத்துல காணாம போயிடுறமே.. வீட்டுல இருக்கவங்க நம்மள கண்டுபிடிச்சு ரியல் வேர்ல்டுக்குக் கொண்டு வர வேண்டியிருக்கே.. இது.. INCEPTION AA SPY KIDS AA.. :) : )


1547. நான் பெற்ற கடன் எத்தனையோ பூமியில் பிறந்து அடைபட்ட கடன் எதுவுமில்லை .. ஆயிரம் இருந்தும்..
..
.
இம்புட்டு லைக்ஸ் கடனையும் எத்தனை ஜென்மம் எடுத்துத் தீர்க்கணுமோ.. என்டே குருவாயூரப்பா..

1548. வருமானம் அதிகம்தான் .. பதில் மொய்தான் கொஞ்சமா வைக்கிறேன்..
.
.அட நான் லைக்கை சொன்னேன்பா..

1549. முன்ன ப்லாக் காணாம போயிட்டா எனக்கு ஏதும் ஆயிடும்னு தோணும்.. இப்பவெல்லாம்.. ஃபேஸ்புக்..

#feeling சொந்த செலவுல சூன்யம்.. :).

1550. நான்வெஜ் போஸ்ட் எல்லாம் போட்டதுதான் மிச்சம் ... சே இந்த வருஷம் ரம்ஜானும் அதுவுமா பிரியாணியே கிடைக்கலையே.. ஆடி வெள்ளின்னு வீட்லயும் செய்யல.. சமையல் குறிப்பெல்லாம் பழைய போட்டோஸ்... பிரியாணியையே நினைச்சு சோறு எறங்க மாட்டேங்குது.. தூக்கம் வரமாட்டேங்குது..

1551. கொம்புத் தேனாய் இருக்க ஆசை, குணத்தேளின் கொடுக்கை எவ்விதம் மறைக்க ?

1552. ப்லாக்ல ஃபோட்டோஸ் அப்லோட் பண்ணமுடில. 5,000 போஸ்ட்ஸ் வந்தாச்சு போல. என் ஒரே பொழுதுபோக்கு ப்லாக்தான் என்ன பண்ணலாம். :( நிறைய ஃபோட்டோஸ், இடங்கள், உணவுகள் இருக்கு. எழுதணும். :(

.வேற ஜிமெயில் ஐடி ஓபன் செய்து புரவின்னு புது ப்லாகும் ஆரம்பிச்சேன். ஆனா அதிலும் ஃபோட்டோஸ் அப்லோட் ஆகாம டபிள் க்ராஸ் வருது. :( :’(

1553. மனசென்ன தரிசக்காட்டு தாவரமா மழையாய் நீ நினைக்கும்போதெல்லாம் பெய்து உயிர்க்க.

1554. உயிரைக் கொடுத்து ஒருவன்
காத்துக் கொண்டிருந்தான்.
எல்லை தெரியாமல் ஒருவன்
சுடப்பட்டிருந்தான்.
கூறு போடாதீர்களென ஒருத்தி
கதறிக் கொண்டிருந்தாள்.
பள்ளி வண்டிகளில் குழந்தைகள்
கடத்தப்பட்டிருந்தார்கள்.
உணவு உண்டபடி நானோ
தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தேன்.

1555. பொன்னம்மா மல்லமடா நரேந்திரா -- இந்திய பெண்கள் ஜூனியர் ஹாக்கி டீமின் அங்கமாக விளையாடி ஜெர்மனியில் வெண்கலம் வெல்லக் காரணமானவர். இவர் மெடிகேரி -- மெர்க்காரா என்ற எஸ்டேட்டுக்கள் அடங்கிய மைசூர் மலைப்பகுதியைச் சார்ந்தவர்.. இது போன்ற பெண்களைத் தொலைக்காட்சிகள் கொண்டாடுவதில்லை. இவர்களை அறிமுகப்படுத்த பெருமைப்படுத்த இவர்களுக்கென்று நிகழ்ச்சிகள் இல்லை.. பாடலும் ஆடலும் உழைப்புக்குப் பின் களைப்பை நீக்கும் கலைகள்.. ஆனால் பாடுவதும் ஆடுவதுமே (IDOL) சானல்களில் இடம் பெற்றுத் தரும்..

1556. இருளும் மழையும் ஒன்னு சேர்ந்தா மனுஷன் ஒண்ணுமே இல்லை.

#night_drive_adventures!

1557. பறவையைப் போல மெல்ல நகர்கிறது மேகம்.
அதன் இறகைப் போல அசைந்துதிர்கிறது மழைத்துளி.

1558. ஒரு புத்தகத்தை வாசிப்பது இனிமையானது
பக்கங்கள் மடிந்தும் வார்த்தைகள் அழிந்தும்
கடைப்பக்கங்கள் கிழிக்கப்பட்டு இருந்தாலும்
ஒரு புத்தகத்தை வாசிப்பது இனிமையானது
அட்சர சுத்தமாய் முன்பே அதை வாசித்திருந்தால்.

1559. எங்க ஏரியா உள்ளே வராதே

1560. காலக் கொக்கின் ஞாபக அலகில் துள்ளும் மீன் நான்.


டிஸ்கி :-

இவற்றையும் பாருங்க.


1. ஞானம் பிறந்த கதை. 

2. ஸ்வரமும் அபஸ்வரமும். 

3. அழகும் அறிவும் அன்பும் குழந்தைகளும்.

4. கணவன் அமைவதெல்லாம்..

5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..

6. அன்பெனும் பேராயுதம்.

7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.

8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும். 

9. என் வீடு என் சொர்க்கம்.

10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும். 

11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும். 

12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.

13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி‬.

14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி

15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும் 

16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)

17. முகமூடிகளும் மனப்பூக்களும். 

18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !. 

19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும். 

20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.

21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.  

22. இன்ஃபாக்‌ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!

23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும். 

24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.

25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும். 

26. தோற்றவர்களும் துணிந்தவர்களும். 

27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும். 

28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும். 

29.  நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.

30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.  


31.வெள்ளத் தீயும் தேரை இதயமும். 

32. காதல் கவுஜைகளும் முகநூல் காதலும். 

33. பேதை மனுஷியும் மாமியார் சிண்ட்ரோமும்.

34. டிவிஎஸ் 50 யும் ஸ்வீட் நத்திங்ஸும். :) 

35. நோக்கர்களும் நந்தா விளக்கு விருதும். 

36. போதையும் போதிமரமும்.

37. மாயக் குடுவையும் மனமீனும்.

38. அஸ்வத்தாமன் அஸ்திரமும் யூதாஸ் நாவும். 

39. ஆணியன் ரோஸ்டும் அலாவுதீன் பூதமும். 

40. 99 ம் இல்ல 21 ம் இல்ல, ஒருநாள் சபதம்தான். 

41. சாண்ட்விச்சும் ஊறுகாயும்.

42. நெபுலாவும் ப்ரத்யங்கிராவும். 

43. 2065 ம் ஆறு லட்சமும். !!! 

44. மழைப்புரவியும் பஜ்ரங்பலியின் வாலும். 

45. கறுப்புப் பட்டாம் பூச்சியும் குட்டிக் குளவியும். 

46. எடிட்டர் பாப்பும் அர்பன் விவசாயியும்.

47. கும்பகர்ணியும் எல்லைச்சாமியும். 

48. கவனிப்பும் அவதானிப்பும். 

49. பெங் குவின்களும் வால்ரஸ்களும். 

50. சிவப்புப் பட்டுக் கயிறும் நெல்லை உலகம்மையும் 

51. கோல்டன் ஃபேஷியலும் போஸ்ட் புல்லட்டினும். 

52. அப்பிராணிகளும் அசட்டுத் தித்திப்பும். 

53. SUMO வும் சவாரியும்.

54. அரசனும் ஆண்டியும். 

55. கோயமுத்தூரும் கர்நாடகாவும். 

56.  பாபநாசமும் கருத்து கந்தசாமியும்

57. தர்மதரிசனமும் தாய்க்கிழவியும். 

58. ஹைபர்நேஷனும் சாஃபக்லீஸும். 

59. தெய்வமகள், வம்சம் - இம்சைகள். 

60. தல ஃபேன்ஸும் கலகலப்பும். 

61. பைரவாவும் புத்தகக் கண்காட்சியும். 

62. தமிழ்மணமும் அக்கினிக்குஞ்சு இணையத்தில் அரங்கன் கணக்கும். 

63. தேசப்பற்றும் தேசப்பித்தும். 

64.  தலைகீழ் வேதைகளும் விஸ்வரூபங்களும்.

65. சாந்திலெட்சுமணன் படைத்த கம்ப ரசமும், புக்ஃபேர் பாப்கார்னும். 

66. மத ஒற்றுமையும் மன ஒற்றுமையும்.  

67. ஜியோவுக்கு முன்னும் பின்னும். ஜீயோ மேரே லால். 

68. முயலும் மானும் மயிலும் பூக்களும் . 

69. டாகிங்கும் ஹாக்கிங்கும். 

70. பாடாவதி பஸ் ஸ்டாண்டுகளும் லவுட் ஸ்பீக்கர் டீலக்ஸ் பஸ்களும்.

71. பிரிவின் வெறுமையும்காலிக்குடங்களும் 

72. சனி லைக்கோ முனி லைக்கோ ... விடாது கருப்பு

73.  நேற்றைய மீனும் ஞாபகக் கொக்கும்.

74. கொப்பித்தட்டும் சிதம்பர விலாஸும்.

75. பிக் பாஸும் சாட்சி பூதமும்.

76. இழிவரலும் வீரமரணமும்.  

77.பிக்பாஸ் கண்டெக்டர்ஸும் கூகுள் ஸ்மார்ட் காரும் 

78. கொம்புத்தேனும் குணத்தேளும்

2 கருத்துகள்:

  1. லைக் கமென்ட்ஸ் எல்லாமே லைக் பண்ணிட்டோம் சகோ/தேனு!!!!

    1554 அருமை!!! யதார்த்தம் வேதனை...ஆதங்கம்...

    கீதா: துளசியின் கருத்தொடு.... பைரவர் படம் அழகு! எப்ப இந்த ட்ரெயின் வரும் ஃப்ரீயா அடுத்த ஸ்டேஷன் போயி கொஞ்சம் ரவுஸு விட்டுட்டு வரலாம்னு பாத்தா....ஹும்....

    இந்த ட்ரெயின நம்பி இருந்தா நம்ம பொழப்பு நடக்காது போல....ஹும்

    அங்க யாருப்பா கூவுறது? ரயில் மட்டும்தாம் இங்க கூவலாம்!!!

    இப்படி எல்லாம் யோசிக்குமோ அது..ஹிஹிஹிஹி

    பதிலளிநீக்கு
  2. hahaha Thanks for the comments Tulsi sago and Geeths.

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)