சனி, 1 ஜூலை, 2017

பிக் பாஸும் சாட்சி பூதமும்.

1481. பிக் பாஸ்.. நம்ம கமல் தலையோட கலக்கல் அட்டகாசம். எவ்ளோ நாளாச்சு இவர் சினிமா பார்த்து.. ஹ்ம்ம். பாஸ் பாதி வரை பரவாயில்லை. மீதியப் பார்க்கமுடியாம ஆஃப் செஞ்சுட்டார் நம்ம பிக் பாஸ். :(

1482. பாஸ் வீடியோஸ், பாஸ் ஸ்டூடியோஸா கடைவீதில பாஸ்ன்ற பேரைப்பாத்தாலே ஐயோ பாஸான்னு ஓடத்தோணுது.

#பிக்_பாஸ்_அட்ராசிட்டீஸ்.

1483. யாரை எதிர்க்கிறோம் என்பதில் தெளிவும், யாரைப் பகைக்கிறோம் என்பதில் துணிவும் வேண்டும்.

#எதிராளியின்_வலிமை.

1484. தண்டவாளத்தில் ஒரு பட்டாம்பூச்சி
அசையும் ரயிலோடு கூடவே ஓடி
அதன் கூவலைச் சுமந்து திரும்புகிறது.

1485. பெற்றோர்களே பெண்பிள்ளைகளை வைத்துக்கொள்ளமுடியவில்லை என்கிறார்களே. மாமியார் எப்படி வைத்துக்கொள்வார்.

1486. நேர்மறைச் சிந்தனைகளை விட எதிர்மறைச் சிந்தனை கொண்ட எழுத்துக்களே அதிகம் வாசிக்கப்படுகின்றன.

1487. சில விஷயங்களில் சாட்சி பூதத்தை நாம் அழைக்காததுதான் நம் துன்பத்தின் வேரோ. ( சாட்சி பூதம் கண்ணன்.. ஹிஹி என் ஹப்பிய சொல்லல )

1488. சில விஷயங்கள் சாண்ட்விச் மாதிரி, மனசுக்குத்தான் அசல் ருசி புரிபடும்.


1489. vampire bat venom may be used for stroke treatments & high blood pressure.--news.

# can get enormous amt of bats from..south indian temples ..

1490. வாதிலும் சூதிலும் வெல்லும் எதுவும் நிலைத்து இருப்பதில்லை.

1491. தனிமைப்படுத்தப்பட்ட மனதின் எண்ணங்கள் கவிதையாகவும் கதையாகவும் மாறுவது துரதிர்ஷ்டவசமானது.

1492. மனம் வெறுமையுற்றிருக்கும்போது மௌனமே சிறந்தது.

1493. ஒற்றறியாது விலகிய மனது.

1494.கோபங்கள் அர்த்தமில்லாதவை. காமமும் காதலும் கூட அர்த்தமிழந்தவைதான்.

1495.நிலையில்லாத ஒன்றை எப்படி நிலை என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

சில நாட்களாக எழும் கேள்வி.

#நிலையற்ற_மனிதர்கள்.

1496. மௌனத்தின் கோப்பையை
இப்போதுதான் கைவசப்படுத்தியிருக்கிறேன்.
வார்த்தைச் சாரத்தை ஊற்றாதே.
மூழ்கவிடு என்னை தனிமைப் போதைக்குள்.

1497. இரும்புக் கிராதிகளைக் கடக்கும் தும்பி
நீர்ப்பூக்களுக்குள் முடங்கிப் போகிறது

1498. வெய்யிலை அசைத்து அசைத்துப் பறக்கிறது தட்டான்
துள்ளிவிழும் வெய்யிலும் வால்பிடித்துப் பறக்கிறது

1499. மீன் பாடு நன்கறிவார்
மான் பாடு புலியறியும்
தேன் பாடு அறிவரோ
நான் பாடு கவலுகிறேன்.

1500. வெய்யிலை வழியவிட்டுப் பறக்கிறது தட்டாரப்பூச்சி
கதகதப்பாய் அருந்திக்கொண்டிருக்கிறேன் நான்

டிஸ்கி :-

இவற்றையும் பாருங்க.


1. ஞானம் பிறந்த கதை. 

2. ஸ்வரமும் அபஸ்வரமும். 

3. அழகும் அறிவும் அன்பும் குழந்தைகளும்.

4. கணவன் அமைவதெல்லாம்..

5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..

6. அன்பெனும் பேராயுதம்.

7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.

8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும். 

9. என் வீடு என் சொர்க்கம்.

10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும். 

11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும். 

12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.

13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி‬.

14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி

15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும் 

16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)

17. முகமூடிகளும் மனப்பூக்களும். 

18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !. 

19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும். 

20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.

21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.  

22. இன்ஃபாக்‌ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!

23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும். 

24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.

25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும். 

26. தோற்றவர்களும் துணிந்தவர்களும்.

27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும். 

28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும்.

29.  நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.

30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.  


31.வெள்ளத் தீயும் தேரை இதயமும். 

32. காதல் கவுஜைகளும் முகநூல் காதலும். 

33. பேதை மனுஷியும் மாமியார் சிண்ட்ரோமும்.

34. டிவிஎஸ் 50 யும் ஸ்வீட் நத்திங்ஸும். :)

35. நோக்கர்களும் நந்தா விளக்கு விருதும். 

36. போதையும் போதிமரமும்.

37. மாயக் குடுவையும் மனமீனும்.

38. அஸ்வத்தாமன் அஸ்திரமும் யூதாஸ் நாவும். 

39. ஆணியன் ரோஸ்டும் அலாவுதீன் பூதமும். 

40. 99 ம் இல்ல 21 ம் இல்ல, ஒருநாள் சபதம்தான்.

41. சாண்ட்விச்சும் ஊறுகாயும்.

42. நெபுலாவும் ப்ரத்யங்கிராவும். 

43. 2065 ம் ஆறு லட்சமும். !!! 

44. மழைப்புரவியும் பஜ்ரங்பலியின் வாலும். 

45. கறுப்புப் பட்டாம் பூச்சியும் குட்டிக் குளவியும். 

46. எடிட்டர் பாப்பும் அர்பன் விவசாயியும்.

47. கும்பகர்ணியும் எல்லைச்சாமியும்.

48. கவனிப்பும் அவதானிப்பும். 

49. பெங் குவின்களும் வால்ரஸ்களும். 

50. சிவப்புப் பட்டுக் கயிறும் நெல்லை உலகம்மையும் 

51. கோல்டன் ஃபேஷியலும் போஸ்ட் புல்லட்டினும். 

52. அப்பிராணிகளும் அசட்டுத் தித்திப்பும். 

53. SUMO வும் சவாரியும்.

54. அரசனும் ஆண்டியும். 

55. கோயமுத்தூரும் கர்நாடகாவும். 

56.  பாபநாசமும் கருத்து கந்தசாமியும்

57. தர்மதரிசனமும் தாய்க்கிழவியும். 

58. ஹைபர்நேஷனும் சாஃபக்லீஸும். 

59. தெய்வமகள், வம்சம் - இம்சைகள். 

60. தல ஃபேன்ஸும் கலகலப்பும். 

61. பைரவாவும் புத்தகக் கண்காட்சியும்.

62. தமிழ்மணமும் அக்கினிக்குஞ்சு இணையத்தில் அரங்கன் கணக்கும்.

63. தேசப்பற்றும் தேசப்பித்தும். 

64.  தலைகீழ் வேதைகளும் விஸ்வரூபங்களும்.

65. சாந்திலெட்சுமணன் படைத்த கம்ப ரசமும், புக்ஃபேர் பாப்கார்னும். 

66. மத ஒற்றுமையும் மன ஒற்றுமையும்.  

67. ஜியோவுக்கு முன்னும் பின்னும். ஜீயோ மேரே லால். 

68. முயலும் மானும் மயிலும் பூக்களும் . 

69. டாகிங்கும் ஹாக்கிங்கும்.

70. பாடாவதி பஸ் ஸ்டாண்டுகளும் லவுட் ஸ்பீக்கர் டீலக்ஸ் பஸ்களும்.

71. பிரிவின் வெறுமையும்காலிக்குடங்களும்

72. சனி லைக்கோ முனி லைக்கோ ... விடாது கருப்பு

73.  நேற்றைய மீனும் ஞாபகக் கொக்கும்.


74. கொப்பித்தட்டும் சிதம்பர விலாஸும்.

75. பிக் பாஸும் சாட்சி பூதமும்.

2 கருத்துகள்:

  1. பிக் பாஸில் காணப்படும் இலச்சினை உலக சதிகாரர்கள் என்று நம்பப்படும் இல்லுமினாட்டிகளின் இலச்சினை அல்லவோ

    பதிலளிநீக்கு
  2. APPIDIYAA BALASIR ?!


    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)