சனி, 28 பிப்ரவரி, 2015
வியாழன், 26 பிப்ரவரி, 2015
நான் படித்த புத்தகங்கள் - பாகம் இரண்டு.
1. லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்.- கேபிள் சங்கர்.
2. டைரிக்குறிப்பும் காதல் மறுப்பும். - பரிசல்காரன்
3. A SLUM NO MORE ( இனி இது சேரி இல்லை) - எஸ் பைரவன், சாருகேசி.
4. ப்ளீஸ் இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க. - கோபிநாத்.
5. ரவி குல தி்லகன் .- கல்கி கி இராஜேந்திரன்.
6. திரைச்சீலை - ஓவியர் ஜீவா.
7. வீழ்தலின் நிழல் - ரிஷான் ஷெரிஃப்
8. ருக்மணி அம்மாவின் புத்தகங்கள் - ருக்மணி சேஷசாயி
9. ஆதலினால் காதல் செய்வோம்.- பொ. ம. ராசமணி

திங்கள், 23 பிப்ரவரி, 2015
காரைக்குடி திருக்குறட் கழகத்தின் 61 ஆம் ஆண்டு விழாவில் தவத்திரு.பொன்னம்பல அடிகளாரின் உரை.
61 ஆண்டுகளுக்கு முன் , எனது பெரிய மாமாவு( திரு . வ. சுப்பையா அவர்களுக்கு ) க்கு 20 வயது. இன்றைக்கு நடிகர் நடிகையருக்கு ரசிகர் மன்றம் ஆரம்பிக்கும் அந்த வயதில் அவர்கள் திருக்குறட் கழகத்தை (குறள் ) இலக்குவன் போன்ற நண்பர்களுடன் இணைந்து ஆரம்பித்தார்கள். அந்தக் கழகத்தின் 61 ஆம் ஆண்டு விழாவை எனது மூன்றாவது மாமா லயன் வெங்கடாசலம் அவர்கள் பொருளாளராக இருந்து சிறப்புற , களிப்புற, உவப்புற நிறைவேற்றினார்கள். அவ்விழாவினைக் காணும் பாக்கியம் எனக்கும் கிட்டியது. அங்கே கிடைத்த சில திருக்குறளின் பொன் துளிகளை இங்கே பகிர்வதில் மகிழ்கிறேன்.
நவயுகப் புத்தகாலயம் திரு மெய்யப்பன், திரு முத்துப் பழனியப்பன், திருமதி கற்பகம் இளங்கோ, திரு சுபவீரபாண்டியன், திரு அய்க்கண் ஆகியோர் பங்குபெற்ற இவ்விழாவினை ( மாலை நிகழ்ச்சி ) திருமதி தேவி நாச்சியப்பன் தொகுத்து வழங்கினார்.
திரு பொன்னம்பல அடிகளின் உரை மிகச் சிறப்பாக அமைந்திருந்தது. அதில் இருந்து நான் குறிப்பெடுத்தவற்றை இங்கே பகிர்கிறேன். (திருக்குறளில் சொல்லப்பட்டுள்ள துறவறத்தின் சிறப்பு பற்றியும் உரையாற்றினார். )
கல்வியின் சிறப்பு பற்றி , இறைவனைப் பற்றி, வான்மழை சிறப்பு பற்றி, துறவறத்தின், துறவிகளின், தவத்தின் சிறப்பு பற்றி, தன்னலம் இல்லாத தொண்டுகள் பற்றி, இயற்கையைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் பற்றி, இல்வாழ்க்கையின் பயன் பற்றி, வாழ்க்கைத் துணையின் நலன் பற்றி, நன் மக்கட்பேறு பற்றி, கற்காலம் தொட்டு கணினிக் காலம் வரை இளைய தலைமுறைக்குத் திருக்குறள் வழிகாட்டுவது பற்றி சிறப்பாகப் பேசினார்.
”தமிழ் வளர்க்கும் இடம், தமிழை சிந்திக்கும் இடம் காரைக்குடி. ஆதியில் இலக்கியங்கள் அரண்மனை வாசத்தில் செழிப்புற்றன. அதன் பின் கோயில்களில் பக்தி இலக்கியமாக உருப்பெற்று சிறந்து விளங்கின. 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில்தான் நாட்டு விடுதலையைக் குறித்து வெள்ளையருக்கு எதிரான ஆயுத எழுத்தாக இலக்கியம் மாறியது. பாமரருக்கும் எட்டும்படி இலக்கியம் என்னும் வினாக்குறியை வியப்புக்குறி ஆக்கியது தேச விடுதலைப் பாடல்கள்தான்.

ஞாயிறு, 22 பிப்ரவரி, 2015
'விழுதல் என்பது எழுகையே' ( அறிமுகம் )
ஐரோப்பா
அவுஸ்திரேலியா கனடா ஆகிய நாடுகளின் எழுத்தாளர்கள் ஒருங்கிணைந்து எழுதும்
'விழுதல் என்பது எழுகையே'என்ற நெடுந்தொடர் தமிழகம்,இலங்கை ஆகிய நாடுகளைச்
சேர்ந்த எழுத்தாளர்களையும் இணைத்துக் கொண்டு தனது பயணத்தைத் தொடர்கிறது.
சென்னையை வதிவிடமாகக் கொண்டவரும் தற்போது ஹைதராபாத்தில் வசிப்பவருமாகிய இளங்கலை வேதியல் பட்டதாரியும்,அரசியல் விஞ்ஞானத்தில் முதுநிலை பட்டதாரியுமான திருமதி.தேனம்மை லகஸ்மணன் அவர்களும் இந்நெடுந்தொடரில் இணைந்து எழுதுகிறார் என்பதை மகிழ்வுடன் பதிவு செய்கிறோம்.
திருமதி.தேனம்மை லக்ஸ்மணன் அவர்களைப்பற்றிய கல்வியியல்,கலை,இலக்கிய செயல்பாடுகள் பற்றிய விபரத்தை வெகுவரைவில் வெளியிடுவோம் என்பதை அறியத்தருகிறோம்.

வெள்ளி, 20 பிப்ரவரி, 2015
குங்குமம் தோழியில் ஸ்டார் தோழியாக.
குங்குமம் தோழியின் பொங்கல் சிறப்பிதழில் ( 14.1. 2015 இதழ் ) ஸ்டார் தோழியாக அறிமுகம் செய்திருக்கிறார்கள். நன்றி குங்குமம் தோழிக்கு. இதழில் இரண்டு பக்கங்களில் வந்துள்ளது. ஆனால் இணைய இணைப்பில் முழுமையாகப் படிக்கலாம். :) நன்றி குங்குமம் தோழி பொங்கல் சிறப்பிதழில் சிறப்பிடம் கொடுத்தமைக்கு. :)
கேள்விகள்:
1. நான் ஒரு மனுஷியாக . தாயாக . தோழியாக [ எல்லம் ஒரே பத்தி ]
கேள்விகள்:
1. நான் ஒரு மனுஷியாக . தாயாக . தோழியாக [ எல்லம் ஒரே பத்தி ]
நான் தேனம்மைலெக்ஷ்மணன்.
ரொம்ப பர்ஃபெக்ட் என்று நினைத்துக் கொள்ளும் சாதாரண மனுஷி. வெற்றியைக் கொண்டாடுகிறேனோ
இல்லையோ தோல்வியைக் கொண்டாடி விடுவேன். எல்லா உயிர்களிடத்தும் அன்பு செய்யும் அனுசூயையாகவோ,
அமிர்தானந்தமயியாகவோ, க்ரேக்க தேவதை ஹீராவாகவோ ( HERA) நினைத்துக் கொள்வதுண்டு.என் தந்தை தாய்க்கும் என்
கணவருக்கும் குழந்தைகளுக்கும் தோழி. அப்புறம் முகநூல் நட்பு வட்டத்தில் அனைவருக்கும்
பாசக்கார அக்கா.& மதிப்பிற்குரிய தோழி.
2. பள்ளியும் ஆசிரியர்களும் . பள்ளி போதித்தது
2. பள்ளியும் ஆசிரியர்களும் . பள்ளி போதித்தது
வியாழன், 19 பிப்ரவரி, 2015
புதன், 18 பிப்ரவரி, 2015
திங்கள், 16 பிப்ரவரி, 2015
ஞாயிறு, 15 பிப்ரவரி, 2015
இன்னும் கொஞ்சம் நிஸிம் இசக்கியேல்.
நிஸிம் இசக்கியேல் கவிதைகள் சிலவற்றைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளேன். அவை இங்கே. நிஸிம் இசக்கியேல். இருளின் கீதங்கள்.
இன்னும் சில :-
இன்னும் சில :-
HYMNS
IN DARKNESS :-
1.TONE:-
DONT
MAKE
A
FOOL OF ME
I
AM ONE ALREADY
YOU
WRITE LONG MAD LETTERS
CELEBRATING
OUR CREEDLESS
ECCENTRICITIES.
சனி, 14 பிப்ரவரி, 2015
வெள்ளி, 13 பிப்ரவரி, 2015
தேன் பாடல்கள்.பாசமும் பிரிவும் ( ரொமான்ஸ் வெள்ளி :)
221. மானூத்து மந்தையிலே மான்குட்டி பெற்ற மயிலே.
கிழக்குச் சீமையிலே அண்ணன் விஜயகுமார் தங்கை ராதிகாவுக்குப் பெண் குழந்தை பிறந்த செய்தி கேட்டு சீர் கொண்டு வரும் பாடல் காட்சி. ஒவ்வொரு வரியும் வைரம். ( பாடல் வைரமுத்து )
222. மலர்ந்தும் மலராத பாதி மலர் போல
பாசமலரில் சிவாஜியும் சாவித்ரியும் அண்ணன் தங்கை. தனக்குக் குழந்தை பிறந்ததும் மாமன் சீர் கொண்டு வருவார் என்று பாடுவார். தனக்கும் அண்ணனுக்கும் இடையே உள்ள பாசப்பிணைப்பை ஒவ்வொரு வரியும் உணர்த்தும்.
223. பெண்ணே அழகிய தீயே
ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் வந்த பெரும்பாலான பாடல்கள் எனக்குப் பிடிக்கும். அதில் இது ஏ க்ளாஸ் பாட்டு. மின்னலேயில் மாதவனும் ரீமாசென்னும்கூட செம க்யூட்.
224. வெண்மதி வெண்மதியே நில்லு.
இதுவும் மின்னலேதான். பிரிவைப் பாடும் பாடல். பாத்ருமில் உக்கார்ந்து அழும் காட்சியில் ரீமா செமயாக நடித்திருப்பார். மாதவனும் சோகத்தைப் பிழிந்திருப்பார். // அவள் அழகைப் பாட ஒரு மொழியில்லையே. அளந்து பார்க்க பல வழி இல்லையே// என்ற வரிகள் பிடிக்கும்.

வியாழன், 12 பிப்ரவரி, 2015
செவ்வாய், 10 பிப்ரவரி, 2015
திங்கள், 9 பிப்ரவரி, 2015
விரல்கள்.:-
விரல்கள்.:-
================
================
பிரம்மிப்பு ஏற்பட்டது மனதில் அந்த ஓவியத்தைப் பார்த்ததும்.
எப்படி வரைய முடிந்தது இப்படி மனசை இழுத்துக் கட்டிக் கொள்கிறார்போல். இத்தனைக்கும்
வெறும் பென்சிலால் ஷேட் மட்டும் கொடுத்து வரையப்பட்ட படம் அது. ஒரு ஆங்கிலோ இந்தியப்
பெண் இதழ் பிரிக்காமல் சிரிப்பது போல் இருந்தது.
அந்த இதழின் ஓரத்தில் லேசாய் ஒரு மடிப்பு. அதுதான் சிரிப்புக்கு
ஆதாரம்.அந்தப் படத்தில் அந்தப் பெண்ணின் கைகள், விரல்கள், சீராய் சமப்படுத்தப்பட்ட
நகநுனிகள், கவுன் சுருக்கம், சுருள் முடி, பம்மினாற்போன்று அந்தக் கன்னம், பளபளத்த
தோள்பட்டை எல்லாமே சேர்ந்து சிரிப்பதாகப் பிரமை அளித்தது. கொஞ்சநேரம் எதைப்பறியும்
சிந்திக்க முடியவில்லை.
அதன் மேல் வைத்த கண்ணை வேரோடு பிடுங்கித்தான் எடுக்கவேண்டும்
போலிருந்தது. மனசு வரிவரியாய் அந்த ஓவியத்தைப் பார்த்துப் புலம்பிக் கொண்டிருந்தது.
ஓவியத்தின் இடது கை மூலையில் கீழ்ப்பக்கம் இராஜன் என்று போட்டிருந்தது.
ஞாயிறு, 8 பிப்ரவரி, 2015
சனி, 7 பிப்ரவரி, 2015
சாட்டர்டே ஜாலி கார்னர். கல்யாணி சங்கர் - ஐம்பெரும் பதிவர்களும் ஆதிபதிவர் நா(ன் அ)னானியும் .!
கல்யாணி மேம் வலையுலக ப்ரபலம். நானானி என்ற பெயரில் கமெண்டுகள் அட்டகாசமா இருக்கும் . ஜாலி கேலி கிண்டல் எல்லாம் கலந்த இவர் நம் ஜாலி கார்னருக்குப் பொருத்தமாக இருப்பார் என்று ஜூலை 7 , 2014 அன்னிக்கு இவங்ககிட்ட இப்பிடி ஒரு கேள்வியைக் கேட்டேன் மக்காஸ். ஆனா பாருங்க நெம்ப சீக்கிரமா டிசம்பர்லேருந்து பார்ட் பார்ட்டா அனுப்பினாங்க.
நானும் ராஜபார்ட் ரங்கதுரை மாதிரி ” அம்மம்மா பதில் தருவீங்கன்னு நம்பி இவள் உங்ககிட்ட வந்துட்டா “ என்று பாடாத குறையாகவும். (ஹிஹி ) "வூட்டாண்டே வந்து வாங்கிக்கிடவா" என்று சாம பேத தான தண்டமில்லாமல் கூவியும் ( ஹிஹி ) பதில் வாங்கிட்டேன். "வூட்டுக்கே வர்ரதுன்னாலும் சர்ர்த்தாம்மே..'வா வாத்யாரே வூட்டாண்ட' “ என்று பதில் கொடுத்த ஜாலி பட்டாசு இவர் . :)
யுரேகா என்று கூவாத குறை. -- ஹலோ சுரேகா(சுந்தர்) உங்களைக் கூப்பிடல.. :P :P :P இங்கேயே 5 பதிவர்கள் இருக்காங்க. ஒரு வழியா எனக்கு பதில் கிடைச்சிருச்சுன்னு சொன்னேன். :)
இப்பிடி ஒரு கேள்வியை நான் கேக்கவே சீனா சார் மனைவி செல்வி சங்கர் அவங்களுக்கு நான் கேட்டகேள்விதான் காரணம். ( அதுவும் சாட்டர்டே ஜாலிகார்னர்தான் - செல்வி சங்கரின் எண்ணச்சிறகுகள் முளைத்த கதை.) ஒரே வீட்டில் இருவர் பதிவரா இருப்பது பற்றிக் கேட்டிருந்தேன். அதை முகநூலில் பகிர்ந்தபோது எங்க வீட்டில் 5 பேர் பதிவரா இருக்கோம்னு கல்யாணி மேம் சொன்னாங்க. அட அப்பிடியா யார் யாரெல்லாம் அவங்க. அது பத்தியும் சொல்லுங்கன்னு கேட்டிருந்தேன்.
”எனக்காக சிரமப்பட்டு டைம் ஒதுக்கி ( ஒன்றரை ) மாசமா அனுப்பினதுக்கு தாங்க்ஸ் . உம்மா ”என்று நான் இன்பாக்ஸில் எழுதி வைக்க அதுக்கு இவர் பதில் “இதில் எனக்கும் சந்தோஷமே! வெறும் உம்மாதானே இருக்கி அணைச்சு இல்லையா? ஹி..ஹி..” என பதிலளிக்க அட.. நமக்கு மேல ஜாலிவாலாவா இருப்பாங்க போலிருக்கேன்னு ரசிச்சேன். சரி வாங்க இவங்க கொடுத்த சுவாரசியமான பதில படிக்கப் போகலாம்.
/// கல்யாணி மேம் ,உங்கள் குடும்பத்தில் உள்ள 5 பதிவர்கள் பற்றியும் பதிவுலகம் உங்களுக்கு எப்படி அறிமுகமாச்சு என்பது பற்றியும் கூறுங்களேன்//
வியாழன், 5 பிப்ரவரி, 2015
கரையோர அகதியாய்
பசித்துப்
பரந்து கிடக்கின்றன.
குளத்தோரப்
பாசியாய்
கப்பல்கள்
சென்றுவிட்டன
கரையோர
அகதியாய்
வானம்
வெறிக்கும் நான்
தன்னாராய்ச்சி
அலைகளுக்கு
ஓய்வே கிடையாது
இந்த
விரல்கள்
அழுதுகொண்டேதான்
அசைகின்றன.
என்னுடைய
கொலுசுகள்
கண்ணாடிக்கூண்டுக்குள்ளே
சிறைப்பட்டுப்
பாதம்
பார்த்துப்
பரிதவிக்கும்.
இருட்டு
வானம் மெல்லவந்து
குளிர்க்காசைச்
சுண்டிப் போடும்.
திங்கள், 2 பிப்ரவரி, 2015
உணவுப் பயணங்கள் . நியூ தில்லி.
உணவுப் பயணங்கள்.:- நியூ தில்லி
தில்லியின் அனலடிக்கும் கனல் கத்திரி வெய்யிலில் நடந்தால்
நாமே கத்திரி வற்றலாகிவிடுவோம். அங்கே சாலைகளில் விற்கும் ஜல்ஜீரா, குல்ஃபி, சேமியா
கலந்த பலூடா, கலர் குச்சி ஐஸ் , பானி பூரி இதெல்லாம் சாப்பிட்டா கோடையைச் சமாளிக்கலாம்.
தில்லியின் கரோல்பாக் சப்ஜி மண்டியருகில் நாங்கள் இருந்தோம்.
தினம் பகலில் இந்த ஜல்ஜீரா வண்டி வரும் . ஒரு க்ளாஸ் 2 ரூபாய் இருக்கும். கொத்துமல்லி
புதினா மிளகாய் போட்டு அரைத்த தண்ணீரில் எலுமிச்சை பிழிந்து இந்துப்பு கலந்தது போல்
ஒரு ருசி. நாக்கின் சுவைமொட்டுக்கள் சொட்டாங்கி போட்டு குடிக்கலாம். தாகமும் அடங்கும்.
அதே மதியத்தில் ஐஸ்வண்டி வரும். அதில் விதம் விதமான சிரப்புகள்
இருக்கும். நாம் ஐஸ் கேட்டால் நன்கு சீய்த்த வழுவழுவென்ற மரக்குச்சிகளை எடுத்து ஒரு டம்ளரின் நடுவில் வைப்பார். ஐஸ்பாக்ஸ் உள்ளேயிருந்து ஒரு ஐஸ் பாரை எடுத்து காய்
சீவுவது போன்ற ஒரு சீவியில் சீய்த்து அந்தக் குச்சி வைத்த டம்ளரில் போடுவார். ஐஸ்காரர்.
அதில் திராக்ஷை, மாங்கோ, பைனாப்பிள் இன்னபிற
கலர் சேர்த்த எசன்சுகளை லேயர் லேயராக ஊற்றி உருட்டிச் சேர்த்துக் கொடுப்பார். மேல்வீட்டு,
கீழ்வீட்டு எங்கவீட்டுப் பிள்ளைகளுடன் சேர்ந்து டம்ளர் சைஸ் குச்சி ஐஸ் தின்றது விநோதமான
அனுபவம்.