சனி, 14 பிப்ரவரி, 2015

கெட்ரெடி ஸ்டார்ட் .. கோடு போடு.. கட் பண்ணு .. காதல் சொல்லு. :- ( VALENTINE'S DAY SPECIAL )



ரெடி ஸ்டார்ட் .. கோடு போடு.. கட் பண்ணு .. காதல் சொல்லு. :-

ஒருபடத்தில் பரோட்டா சூரி பரோட்டா கடையில் ஒரு போட்டிக்காக  50 பரோட்டா சாப்பிடும்போது சுவற்றில் கரியால் போடப்படும் அடையாளக்கோடுகள்தான் இந்த விளையாட்டிலும் அடிப்படை.


அதில் எண்ணிக்கொண்டே போடுவார்கள். நடுவில் அவர் போட்டியில் ஜெயிக்கக்கூடாது என்பதற்காக போட்ட கோட்டின் மேலேயே கோடு போடுவார்கள். ஆனால் அவர் போட்டியில் 50 பரோட்டா சாப்பிடவில்லை என்று கடைக்காரர் சொன்னதும் எல்லா கோட்டையும் அழிங்க மொதல்லேர்ந்து சாப்பிடுறேன்னு சொல்லி அதிர வைப்பார்.

சரி நாம இப்போ இந்த விளையாட்டை விளையாடுவோமா.. பரோட்டாவுக்காக இல்லை. உங்க மனசுக்குப் பிடிச்சவங்க என்ன நினைக்கிறாங்களோன்னு நீங்க சமயத்துல மண்டையைப் பிச்சுக்குவீங்க. அப்ப இந்தக் கோடுகள் போட்டுப் பார்த்தா அது அவங்க என்ன நினைக்கிறாங்க அப்பிடீங்கிற ரகசியத்தைச் சொல்லும். இதென்ன ஜோசியக் கட்டமா. அதெல்லாம் சொல்லன்னு கேட்டீங்கன்னா அதெல்லாம் எனக்குத் தெரியாது. இந்த வாஸ்துப்படித்தான் நாங்க எல்லாம் தெரிஞ்சுக்கிட்டோம் இஷ்டமின்னா நீங்களும் தெரிஞ்சுக்குங்க. J

ஃபேஸ்புக்கு வாட்ஸப்புன்னு எல்லாம் பெருகிட்டாலும் இந்தக் காலத்துலயும் ஒருத்தர் மனசுல இருக்கத கண்டுபிடிக்க ஸ்கேனிங்க் மிஷின் வரல. சோ இதுதான் இப்பவும் ஒரே வழி..  என்னது மூடத்தனமா.. ஹல்ல்லோ நாங்க அப்பிடித்தான். இருந்துட்டுப் போகட்டும். எங்களுக்கு யூகமாவது தெரிஞ்சே ஆகணும்

என்ன ..எல்லாரும் ரெடியாயிட்டீங்களா. எங்க ஒரு பேப்பரும் பேனாவும் அல்லது பென்சிலும் எடுத்துக்குங்க.

உங்களுக்குப் பிடிச்சவங்களை நினைச்சு ஒண்ணு ஒண்ணு ஒண்ணா இப்பிடி

11111111111111111111111111111111111
1111111111111111111111111111111111111
11111111111111111111111111111111

கைக்கு வந்தபடி கை வலிக்கிறவரை 3 வரிசைக்குக் கோடு போட்டுக்குங்க.

இப்ப இதுல முதல் வரிசையிலிருந்து கடைசி வரிசை வரைக்கும் மூணு மூணா பிடிச்சு அடிச்சுட்டே வந்து மிச்சத்தைப் பாருங்க.

முதல் வரிசையில் 35 இரண்டாவது வரிசையில் 37, மூன்றாவது வரிசையில் 32

111 111 111 111 111 111 111 111 111 111 111 11 = 2

111 111 111 111 111 111 111 111 111 111 111 111 1 = 1

111 111 111 111 111 111 111 111 111 111 11 = 2

212  இதுக்கு என்னன்னா = DESIRES TO SEE AND MEET YOU.

அது சரி இது யாரைப்பத்தி நினைச்சுப் போட்டீங்கன்னா கேக்குறீங்க. அஸ்கு புஸ்கு சொல்லமாட்டேன். ( இப்பப் போயி யாரை நினைக்க. பிள்ளைங்க படிச்சிட்டு விழுந்து விழுந்து சிரிக்கப் போறாங்க. J J சும்மா கைக்கு வந்ததப் போட்டேன். J J J ) போய் நீங்களும் உங்களுக்குப் பிடிச்சவங்களை நினைச்சுப் போட்டுப் பாருங்க.. போங்க.. எனக்கு சொல்ல வேண்டாம்.

சரி நீங்க காலேஜுல படிச்சீங்களா இந்த வெட்டி வேலைதான் பார்த்தீங்களான்னா கேக்குறீங்க.. அட போங்க இப்ப சட்டி சுரண்டுற வேலைதானே பார்க்கிறோம். கூடவே கரிக்கோடும் போட்டுப் பழகிக்குவோம்னுதான் இதப் போட்டுப் பார்த்தோம். ஹ்க்க்க்கும்.. J

உங்களுக்காக இங்கே அத திருப்பி டைப் பண்றேன். யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.

001 à STILL LOVING YOU
002 à NEVER THINKS YOU
000 à PURE LOVE.
010 à HE WANTS TO KISS YOU
011 à DOESNOT BOTHER ABOUT YOU
111 à HAS GOT MANY FRIENDS
020 à WANTS TO MARRY YOU
022 à DOESNOT LOVE YOU ANYMORE
222 à WILL ASK YOU FOR LOVE
012 à WILL TELL SOMETHING TO YOU
021 à YOU LIKE HIM BUT DOESNOT WANT TO MARRY YOU
100 à LOVE YOU BUT NOT IN THE POSITION TO TELL YOU
200 à HELPS YOU.
101 à WILL GIVE YOU A PRESENT
102 à YOU BOTH WILL MEET SOON
201 à DEAREST ABOUT YOU
202 à WANTS TO SEE YOU
110 à MAKE YOUR HEART BLACK
112 à LIKE YOUR BEHAVIOUR
121 à SURE THAT YOU ARE HIS LOVE
211 à HAS BROKEN HEART
212 à DESIRES TO SEE AND MEET YOU
210 à MAKE YOU AS LIFE PARTNER
120 à THINKS OF YOU ALL THE TIME.
122 à VERY ANGER WITH YOU
220 à VERY HAPPY TO SEE YOU
221 à ANXIOUS ABOUT YOU.

சரி நீங்க கோடு போட்டு காதல் ரோடு போட வாழ்த்துகள். 002, 011, 022, 110, 211, 122 இதுபோலப் பிடிக்காதது வந்தா கம்பெனி பொறுப்பாகாது. J இப்பமே சொல்லிட்டன்.

சரி. காதல் ரோடு போடுறீங்களோ இல்லையோ என்னைக் கோடு போட்டு கட்பண்ணிடாதீங்க. மீ பாவம். J

அப்பிடியே பிடிக்காதது வந்துச்சுன்னாலும் விட்றாதீங்க குலதெய்வத்தைக் கும்பிட்டுக்கிட்டு நெனைச்சது கிடைக்கிறவரை நோட்புக் பூரா கிறுக்கி அடிச்சுப் பாருங்க.. என்னது போங்காட்டமா.. அடப் போங்க. இதெல்லாம் சின்னப் புள்ளக வாழ்க்கையில சகசம்தான்.. அட நான் என்னச் சொல்லல்லீங்க.. ஒங்களைச் சொன்னேன். 



 சவுத் மும்பையில் எடுத்த ஃபோட்டோ இது. அடாத மழையிலும் விடாத காதல் செய்யும் ஜோடிகள். குடைக்குள் மழை. :) 

அன்பர் தின வாழ்த்துகள். HAPPY VALENTINE'S DAY :) 


9 கருத்துகள்:

  1. விளையாட்டை ரசித்தேன்... வீட்டில் அடி வாங்காமல் தப்பித்தால் போதும்... ஹா... ஹா...

    பதிலளிநீக்கு
  2. இந்த விளையாட்டு எவ்வளவு விளையாடி இருப்போம்!! மறந்தே போச்சு... நீங்க சொன்னப்புறம்தான் மலருது நினைவுகள்!! :-)

    பதிலளிநீக்கு
  3. விளையாட்டு ரசிக்க வைத்தது..
    மழையும் மாலையாகியதோ காதலர்களுக்கு?

    பதிலளிநீக்கு
  4. நன்றி தனபாலன் சகோ. நல்ல வேளை வீட்ல சொல்லலையே. :)

    நன்றி ஹுசைனம்மா. அட சேம் பிஞ்ச் :)

    நன்றி கோபால் சார். :)

    நன்றி குமார் சகோ ஆம் அது கூட அவங்களுக்கு தெரில. :)

    பதிலளிநீக்கு
  5. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  6. அட, புது விளையாட்டா இருக்கே.. இன்றே விளையாடிப் பார்த்திட வேண்டியதுதான். :) இருவரின் பெயர்களை எழுதி பொதுவான எழுத்துகளை அடித்துவிட்டு மிச்சத்தில் love, like, hate, friend சொல்லி விளையாடியிருக்கிறோம் நாங்கள்.

    பதிலளிநீக்கு
  7. விளையாடி பார்த்தீங்களா கீத்ஸ்

    வெங்கட் சகோ :) :) :)

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)