புதன், 18 பிப்ரவரி, 2015

கன்னடப் பத்ரிக்கை “ஸகி”யில் எனது கவிதை நீரின் பயணம். ( இரண்டு இதழ்களில் !!! )


இந்தப் புத்தகத்தில் முதன் முதலில் இருப்பதுதான் என்னுடைய கவிதையின் மொழிபெயர்ப்பு. மொழிபெயர்த்த சகோ காளிமுத்து நல்ல தம்பி அவர்கள் புகைப்படமும் ( கூலிங் கிளாஸ் அணிந்திருப்பவர் ) வெளியாகி உள்ளது.

அதே கவிதை திரும்ப இந்த மாதம் சகியில் வெளியாகி உள்ளது. ( டிசம்பர் 1 - 15 ). இன்னும் 5 பேரின் கவிதைகளும் ப்ரசுரமாகி உள்ளன அவர்களுக்கும் வாழ்த்துகள்.  (ஜான்சுந்தர், அருணா, சபிதா, மீரா, வனிதா ஆகியோரின் கவிதைகளும். )


நன்றி ஸகி.

நீரின் பயணம் -- கன்னட மொழிபெயர்ப்பில்

எங்கோ பெய்யும்
பெருமழையின்
ஒரு தூறல் என் மேல் விழுந்து
தெரிவிக்கிறது என் உயிர்ப்பை, இருப்பை.
நானும் ஒரு துளியாய்
துளித் துளியாக்
கரையத் துவங்குகிறேன்.
மலைகளில் இருந்து வீழ்ந்து
மடுவில் அடிபட்டு
உள் குகைக்குள் சென்று
சின்னச் சின்ன உருளல்களோடு
நீளக் கோடுகளாய்க்
கடல் நோக்கிக் நகர்கிறதென் பயணம்.


என் பெருமதிப்பிற்குரிய நண்பர் திரு. Kalimuthu Nalla Tambi அவர்கள் என்னுடைய கவிதை ஒன்றை கன்னடத்தில் மொழிபெயர்த்துள்ளார்கள். நீரின் பயணம் என்ற அந்தக் கவிதை வீணைகளையும் யாழையும் தம்புராவையும் அடுக்கிய வடிவத்தில் இருந்தாலும் , என்னுடைய கவிதையும் இன்னொரு மொழியில் மொழிபெயர்க்கப்பட்டதை நினைத்து சந்தோஷமாக இருக்கிறது. சாத்தியப்படுத்தி மகிழ்வூட்டிய அருமை நண்பருக்கு நன்றி..

ನೀರಿನ ಪಯಣ....

ಎಲ್ಲೋ ಸುರಿವ
ಒಂದು ಜಡಿ ಮಳೆಯ
ಒಂದು ತುಂತುರು ನನ್ನ ಮೇಲೆ ಬಿದ್ದು ತಿಳಿಸುತಿದೆ
ನನ್ನ ಚೇತನವ , ಇರುವಿಕೆಯ
ನಾನು ಒಂದು ಹನಿಯಾಗಿ
ಹನಿ ಹನಿಯಾಗಿ
ಕರಗಿ ಹೋಗುತ್ತೇನೆ
ಬೆಟ್ಟಗಳಿಂದ ಜಾರಿ
ಮಡುವಲ್ಲಿ ಇಳಿದು
ನಿನ್ನ ಗುಹೆಯ ಹೊಕ್ಕಿ
ಸಣ್ಣ ಪುಟ್ಟ ಉರುಳಿನೊಂದಿಗೆ
ನೀಳ ಗೆರೆಗಳಾಗಿ
ಕಡಲಿನೆಡೆಗೆ ಧಾವಿಸುತ್ತಿದೆ ನನ್ನ ಪಯಣ ....

-ತೇನಮ್ಮೈ ಲಕ್ಷ್ಮಣನ್

-- கடைசியாக இருப்பது என்னுடைய பெயர். அதை 30 நாளில் கன்னடம் கற்றுக் கொடுக்கும் புத்தகத்தின் மூலம் பிரித்துப் படிக்கக் கற்றுக் கொண்டேன்.
இந்த இணைப்பிலும் படிக்கலாம்.

 http://honeylaksh.blogspot.in/2014/04/blog-post.html

மிக்க நன்றி காளிமுத்து நல்லதம்பி சகோ. :)

4 கருத்துகள்:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)