வியாழன், 12 பிப்ரவரி, 2015

நிழல்கள் உலவும் தெரு:- ( சொல்வனத்தில் )



நிழல்கள் உலவும் தெரு:-

மரத்தின் கிளைகளிலிருந்து
நிலவுச்சுடர் தெறிக்கச் சிதறிவிழுந்தது
ஒரு வாதாங்கொட்டை.

வாலைமடித்துக் கூர்கண்கள் ஜொலிக்கக்
குப்பைத்தொட்டியினருகே
காத்திருந்தது ஒரு நாய்.

பாடல்கள் இறைத்துப் புகைவரைந்து
சக்கரங்களைச் செதுக்கிச் சிற்பமாய்ச்சென்றது
ஒரு இளவேகவண்டி.

பொம்மைகளையும் போர்வைகளையும் சுமந்து
நம்பிக்கை ஒளிர அடுத்தபுகலிடம்
விரைந்து கொண்டிருந்தார்கள் அவர்கள்.

நகரும் நிலவொளியில்
நிச்சலனமற்றிருந்தது
நிழல்கள் உலவும் தெரு.

டிஸ்கி:- இந்தக் கவிதை சொல்வனத்தில் 29.12.2014 வெளியாகி உள்ளது.


7 கருத்துகள்:

  1. // இந்தக் கவிதை சொல்வனத்தில் 29.12.2014 வெளியாகி உள்ளது. //

    பாராட்டுக்கள். வாழ்த்துகள். மேலே காட்டியுள்ள படம் மிக அழகாகவும் பொருத்தமாகவும் உள்ளது.

    வாதாங்கொட்டை முதல் நாய் வரை ஒன்று விடாமல் யதார்த்தமாகச் சொல்லி அசத்தியுள்ளது மிகவும் ரசிக்க வைத்தது.

    பகிர்வுக்கு நன்றிகள்.

    அன்புடன் VGK

    பதிலளிநீக்கு
  2. தேனக்காவின் கவிதைக்குக் கேக்கணுமா என்ன? அழகு சொட்டுது :-)

    சொல்வனத்தில் வெளியானதற்குப் பாராட்டுகள்..

    பதிலளிநீக்கு
  3. நன்றி கோபு சார்

    நன்றி தனபாலன் சகோ

    நன்றி குமார் சகோ

    நன்றி சாந்தி :)

    பதிலளிநீக்கு
  4. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  5. அழகான படம். படத்திற்கேற்ற நல்ல கவிதை.

    பகிர்ந்து கொண்டதற்கு நன்றி....

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)