எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
HYMNS IN DARKNESS லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
HYMNS IN DARKNESS லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 29 செப்டம்பர், 2014

நிஸிம் இசக்கியேல். இருளின் கீதங்கள். NISSIM EZEKIEL. HYMNS IN DARKNESS.

நிஸிம் இசக்கியேல். இந்திய ஆங்கில இலக்கிய வரலாற்றில் மிக முக்கியமான படைப்பாளி. இவரின் Hymns in darkness என்ற புத்தகக் கவிதைகளைக் கல்லூரிக் காலத்தில் படித்திருக்கிறேன்.

தன்னுடைய லேட்டர் டே சாம்ஸ் என்ற கவிதை நூலுக்காக 1983 இல் சாகித அகாதமி விருது பெற்றவர். சாகித்ய அகாடமி விருது என்றால் உடனே லைப்ரரியில் அவர் சம்பந்தமான புத்தகங்களைத் தேடுவோமே. அப்படித் தேடியதில் கிடைத்த இந்தப் புத்தகத்தை வாசித்துக் குறிப்புகள் எடுத்திருந்தேன்.

மும்பையில் 1924 இல் பிறந்த நிஸிம் இசக்கியேல் மும்பையிலும் பின் லண்டனிலும் கல்வி கற்றுள்ளார்.  காலனித்துவத்துவக் கோட்பாடுகளுக்குப் பின்னான இந்திய ஆங்கில இலக்கிய வரலாற்றில் அசைக்கமுடியாத இடத்தைப் பெற்றிருந்தார்.தனது 65 ஆவது வயது வரை பத்ரிக்கைப் பணிகளிலும் ஈடுபட்டிருந்தார். இவருடைய ஓரிரு கவிதைகள் என் சி ஈ ஆர் டியிலும் ஐ சி எஸ் சி யிலும் பாடத்திட்டமாக உயர்நிலை வகுப்புகளில் அமல்படுத்தப் பட்டிருந்தன. கிட்டத்தட்ட 10 கவிதை நூல்கள் வெளியிட்டிருக்கிறார். தனது 80 ஆவது வயதில் 2004 இல் மறைந்தார். 

1976 இல் வெளிவந்த ஹிம்ஸ் இன் டார்க்னெஸ் ( HYMNS IN DARKNESS ) என்ற இந்தக் கவிதைத் தொகுதியில் எனது கருத்துகளோடு அவரது கவிதைகள் சிலவும் பகிர்ந்துள்ளேன்.

மரபைச் சார்ந்தும் மரபை மீறியும் உள்ள கருத்துக்களை வலிமையாகப் பதிவு செய்கிறார். எல்லாவற்றிலும் இவரின் எள்ளல் தன்மை வெளிப்படுகிறது. காதல் , காமம், பெண் உடல் , திருமண உறவு, பந்தம், அதன் நீட்சி போன்றவற்றினைப் பற்றிப் பேசும் கவிதைகளே இத்தொகுதியில் பெரிதும் இடம் பெறுகின்றன.

வயது வந்தோருக்கான கவிதைகள் என்றும் கூறலாம். குட் பை பார்ட்டி ஃபார் மிஸ் புஷ்பா டி.எஸ் என்ற கவிதை தன் தாய்மொழி வேறாகக் கொண்டவர்கள் ஆங்கிலத்தை உச்சரிக்கும் முறையில் எழுத்தப்பட்ட ஒரு நையாண்டிக் கவிதையாகும். 

THE COUPLE, THE RAILWAY CLERK, THE TRUTH ABOUT THE FOODS, ON BELLASIS ROAD ( ABOUT A WOMAN ) , GOOD BYE PARTY FOR MISS PUSHPA T.S. , ADVICE TO A PAINTER.

எல்லாமே அடலசண்ட் கவிதைகள் தான். ஓன்லி பெரியவங்களுக்கு மட்டும்.

1. PASSION POEMS:-

1. SUMMER :-

TOO WARM
FOR LOVE MAKING
NOT TO WARM
FOR CARESSING.
WE ARE COOL AFTER BATHING
TOGETHER.

(வேனில் காலம்:-

காதல் செய்வதற்கு ஆகாத
வெக்கையான பொழுது.
மிருதுவாய்த் தடவ ஆகாததல்ல
இணைந்து குளித்தோம்
குளிர்ந்தோம். )

Related Posts Plugin for WordPress, Blogger...