வெள்ளி, 23 ஆகஸ்ட், 2019

ஹோட்டல் நோவோட்டல் ரோமா எஸ்ட். HOTEL NOVOTEL ROMA EST.

யூரோப் டூரின் நான்காம் நாள் வியாழனன்று இரவு இத்தாலியில் இருக்கும் நோவோட்டல் ரோமா எஸ்ட் என்ற ஹோட்டலில் தங்கினோம். ரூம் சாவியோடு வைஃபைக்கான பாஸ்வேர்டும் கொடுப்பார்கள். அது ரொம்ப சுவாரஸியமானதாக இருக்கும். சில சமயம் ஹோட்டல் பேர்தான் யூஸர் நேம். நம் ரூம் நம்பர்தான் பாஸ்வேர்ட் !!!

மிக அருமையான காம்பாக்டான ரூம்.  வசதியான படுக்கைகள், ரீடிங் டேபிள், லாம்ப், தொலைக்காட்சி, அறையைக் கதகதப்பாக்கும் வசதி, மினி ஃப்ரிட்ஜ், இண்டர்காம், பாத்ரூம் அஸ்ஸசரீஸுடன் மூன்று செட் சிறிய பெரிய டர்க்கி டவல்களும் தந்தார்கள். 





பாத்ரூமில் வாஷ்பேஸினுக்குப் பக்கவாட்டில் இரு குழல் போன்ற டியூப் லைட்டுகள். வாஷ்பேஸினின் எதிர்ப்புறம் டாய்லெட். இதுவும் இரு சீட்டுகள் கொண்டது. 




பக்கவாட்டில் ஜக்கூஸி டைப் பாத்டப். இதன் ஸ்பெஷாலிட்டி என்னன்னா கால் வைத்து நின்று குளிக்கவும் முடியும். நிற்கும் இடங்களில் வழுக்காமலிருக்க அங்கங்கே க்ரிப்புக்காக குமிழ்கள் பொருத்தப்பட்டிருக்கும். வேர்ல்பூல் ப்ராண்ட். 1300 யூரோ .கிட்டத்தட்ட இதன் விலை ஒரு லட்சம். ! வழக்கம்போல் திரைப் போட்டுக் குளிக்க வேண்டியதுதான். தண்ணீர் பாத்ரூமிலோ, ரூமிலோ ( மரத்தரை & கார்ப்பெட் ) சிந்தினால் ஆயிரக்கணக்கான யூரோ தண்டம் கட்ட வேண்டிவரும். ஜாக்கிரதை மக்களே. இதை ரூல்ஸாகவும் எழுதிப் போட்டு இருக்காங்க ! 




பாத்ரூம் போக ஒரு கக்கூஸ், கழுவிக்கொள்ள ஒன்று. இதில் தண்ணீர் வரும். யூரோப் முழுவதிலும் தண்ணீர் உபயோகிக்காத கக்கூஸ்கள்தான் என்பதை நினைவில் கொள்க. ரொம்பக் கஷ்டம்டா சாமி அது. இந்த இத்தாலி நொவோட்டல்காரங்க பரவாயில்லை. :) இந்தியர்களோட பழக்க வழக்கம் புரிஞ்சவங்க. 




மூன்று பேருக்கு படுக்கை வசதி. 


மினி ஃப்ரிட்ஜ், பக்கவாட்டில் உள்ள அலமாரியில்  ட்ரெஸ்ஸிங் டேபிள் கண்ணாடி.

அந்த அலமாரியில் ஷூ போட இடம், ஹேங்கர்கள், எக்ஸ்ட்ரா தலையணைகள், போர்வைகள், லாக்கர், சேஃப், எல்லாம் உண்டு. டபுள் ஸ்க்ரீன்ஸ். ஆனால் ஜன்னல்கள்தான் உயரத்தில். 




ஃப்ரிட்ஜின் மேல் எலக்ட்ரிக் கெட்டிலும் உண்டு. காஃபி, டீ தயாரித்துக் கொள்ள சீனி, பால், டீத்தூள், இன்ஸ்டண்ட் காஃபி பவுடர் சாஷேக்கள் உண்டு.

ஃப்ரிட்ஜில் இருந்து பால் தண்ணீர் எடுத்துக்கலாம். அது மட்டும் ஃப்ரீ. மத்ததெல்லாம் எடுத்தால் ( கூல் ட்ரிங்ஸ், ஹாட் ட்ரிங்ஸ் ) காசு.




இங்கே அறையில் ஸ்மோக் டிடெக்டர் உண்டு என்பதால் புகை வரும் எந்தச் செயலும் செய்ய முடியாது !. வத்தக் குழம்பு வைப்பது, எலக்ட்ரிக்  குக்கரில் சோறாக்குவது எல்லாம் :) 



முதல் நாள் இரவு வட இந்திய உணவு. சப்பாத்தி, ரஸ்மலாய் போல் ஒரு ஸ்வீட், சாதம், சிக்கன் க்ரேவி, தம் ஆலு, தால் மாக்னி, சன்னாதால், கடி, சாலட்ஸ், ஊறுகாய், தஹி, ஏதோ ஒரு ஃப்ரை. 




தண்ணீர் பாட்டில்தான் இப்பிடி இருக்கு ஷாம்பெயின் பாட்டிலாட்டம் :)




மறுநாள் காலை உணவு. 

பதப்படுத்தப்பட்ட ஆப்ரிகாட், சாக்லேட் கேக், பேகட்டீஸ், கார்ன்ஃப்ளேக்ஸ் வித் மில்க், கார்லிக் ப்ரெட், இரண்டு வித சீஸ்கள், ஒன்று பிங்க் கலர் வேறு ( ஸ்விஸ் சீஸாம் ! ) ( இங்கே பலவகையான சீஸ்கள் உண்கிறார்கள் ) வாழைப்பழம். பழச்சாறு. கிடைத்ததை கிடைத்த நேரத்தில் உண்டு காலையில் சீக்கிரம் வெளியே ஊர் சுற்றக் கிளம்புவோம் :) 


அடுத்து காஃபி அல்லது டீ.இங்கே ரஸ்க் அது போக பல்வேறு பிஸ்கட்டுகளும் இருந்தன. நான்வெஜ் மினி சாஸேஜ் ஒன்றும் எடுத்துக் கொண்டேன். 




இரு நாட்கள் தங்கினோம். 

இது மறுநாள் இரவு & காலை உணவு.






இங்கே நீச்சல் குளம் இருந்ததால் முதல் நாள் மாலையில் குட்டீஸ் சென்று நீச்சல்குளத்தின் தண்ணீரில் நீச்சலடித்தார்கள். பெரியவர்கள் ட்ரிங்க்ஸில் நீச்சல் அடித்தார்கள் :) 

மொத்தத்தில் அருமையான உணவு. & தங்குமிடம் கொடுத்த நோவோட்டல் ரோமா எஸ்டுக்கு நன்றி. 

இந்த ஹோட்டலுக்கு என்னுடைய ரேட்டிங் நாலரை ஸ்டார். *****

இதன் முகவரி :-

HOTEL NOVOTEL ROMA EST,
VIA ANDREA NOALE 291,
00155, ROMA, ITALY,
TEL: +39 06 227661. 

டிஸ்கி :-

இவற்றையும் பாருங்க.

1. சுவாமிமலை ஸ்டெர்லிங்கில் ஒரு இரவு. 

2. மணிப்பால், நந்தினி, மடிவாலா.. பெங்களூரா.. 

3. பாரடைஸ் ரெஸார்ட். 

4. ரிவர்ஸைட் ரெஸார்ட். ( மயூரி) 

5. ரைஸ் & ஸ்பைஸும் தாஜ் சமுத்ராவும்.

6. கேரளா சோழா & ஹைலாண்ட். 

7. கொச்சுவெளி கடற்கரையும் மிதக்கும் உணவகமும். KOCHUVELI BEACH & FLOATING RESTAURANT :- 

8. பார்பக்யூ நேஷன் 

9. மை ப்ளேஸ்.

10. குல்பர்கா கோட்டையில் ஜும்மா மசூதி :- 

11. பிகேஆரும் இண்டர்காமும். :- 

12. ஸ்ரீ சாய் வாசவி கெஸ்ட் ஹவுஸின் பதினைந்து கட்டளைகள்.

13. ராஜ் கோபால் ரெசிடென்சியில் ஒரு விடியல்.

14. கோவை ஆர்வீயின் அசத்தலான உணவுகள். ( SRI AARVEE HOTELS) 

15. சென்னை மெட்ரோவும் ரத்னாகஃபே இட்லி சாம்பாரும்.

16. வஸந்தபவனில் ஒரு பிறந்தநாள் விருந்து. 

17. கேஆர் பேக்ஸ் சாண்ட்விச் , சரஸ்வதி கேஃப் தயிர்வடை & அர்ச்சனா பேல்பூரி & பானிபூரி . 

18. கற்பகம் இண்டர்நேஷனலில் ஒரு பாதுகாப்புப் பெட்டகம்.

19. காஃபிடேயும் க்ரீமி இன்னும் ஆவின் ஜங்க்‌ஷனும். 

20. பெஸ்ட் ஃபில்டர் காஃபி.

21. எங்கும் பாரதி எதிலும் பாரதி.

22. உணவுப் பயணங்கள் . நியூ தில்லி. 

23. கோவளம் மீன்களும் கேரளக் கறி மீனும்.

24. அரஃபிக் ஷவர்மாவும், குப்பூஸும், ஃபிலாஃபிலும், 

25. ழ வில் வலைப்பூ வடை...

26. அரியலூர் மாருதியும் மதுரை ட்யூக்கும்.  

27. ஜெய்னிகா & கார்மெட். 

28. சாந்தியில் ஒரு சாத்வீக சாப்பாடு. 

29. சமணர் படுகையும் சாந்தி இன்னும்.

30. பயண உணவுகள். பால் ஜலேபி.

31. பெருந்துறை ராயல் பார்க்கில் இரு நாட்கள். 

32. திருப்பூரில் ஒரு இல்லம். TIRUPUR - THE HOME !

33. லீலா பேலஸில் ஒரு ரிசப்ஷனும் தேன் பூ செடியும்.

34. நிவேதாஸ் இன்னும் நவம்பர் எட்டும்.  

35. தர்மபுரி அதியமான் அரண்மனையில் புத்தர் !

36. பழனியில் சிவா. 

37. ராயல் பார்க்கில் கவர்ந்த சில ஓவியங்கள். 





41. ஹொடெல் ஸ்ரீ சாந்த் ஆ, ஸ்ரி சாந்த, ஷ்ரீ ஸாந்தா. ?! 

42. ஸ்ரீ ஷாந்த். காலை உணவும் கண்கவர் ஓவியமும். 

43.ராதா ப்ரஸாத்தின் லிஜோ ஸ்கைபூல் ரெஸ்டாரெண்டில் சில காலைகள். 


44. திருப்பூர் விநாயகாவில் ஒரு நாள்.  
  




50. குவாலியர் ஸுரபியில் சுவையான ஷாஹி பனீரும், பால் ஜலேபியும் 

51. போபால் ஜி ஷையில் செம்பு விநாயகர். BHOPAL GS G-SHY. 

52. பெல்ஸ் ரோட் ஹோட்டல் நியூ பார்க் & தி பெவிலியன். NEW PARK & THE PAVILION.

53. கோகுல் கிராண்ட் & ஷண்முகா .HOTEL GOKUL GRANDE & SHANMUGA

54. டபிள் ரோட் ஆக்டேவில் இரு நாட்கள். ( OCTAVE )

55. கானாடுகாத்தானில் ஒரு சர்வீஸ் அபார்ட்மெண்ட்.

56. கலைப்பொருட்களைக் காட்சிப்படுத்தியிருக்கும் எம் வி வி ரெஸிடென்ஸி.

57. திருவண்ணாமலை எஸ் டி டி ரெஸிடென்ஸி.

58. ஸீக்வீன் ரெஸிடென்ஸியும் டெல்மாவின் ரோகன்ஜோஷும் ஷவர்மாவும்.

59. திருக்கடையூரில் சதாபிஷேகம்.

60. திருவானைக்காவலில் டெம்பிள் இன்ன்.

61.பாண்டி எம் ஜி ஆர் ரீஜன்ஸியில் அழகோவியங்கள்.

62. திருத்தணி அருள்முருகன் ரெஸிடென்ஸி.

63. சரவணபவனில் ஒரு சூப்பர் டின்னர்.

64. தாப்பா கார்டனில் ஒரு மதிய உணவு

65. தென்காசி சௌந்தர்யாவில் மேக்னெடிக் கீ கார்ட்.

66. விஷ்ணுப்பிரியாவில் தீபிகா படுகோனே. !

67. இராமேசுவரம் நகரவிடுதி.



70. விஜெய் ஹோட்டல்ஸ். VIJEY HOTELS. !

71. ஹோட்டல் சென்னை கேட், எக்மோர்.

72. 7 ஹோட்டல்ஸ் & ஃபிட்னெஸ். 7 HOTELS & FITNESS.

73. ஹெச் ப்ளஸ் ஹோட்டல்ஸ் & ஸ்பா - எங்கள்பர்க், H+HOTELS & SPA, ENGELBERG.

74. ஃபோர் பாயிண்ட்ஸ் பை ஷெரடன் படோவா. FOUR POINTS BY SHERATON PADOVA.

75. ஹோட்டல் நோவோட்டல் ரோமா எஸ்ட். HOTEL NOVOTEL ROMA EST.

3 கருத்துகள்:

  1. ஹோட்டல் ரூம் கள் சுத்தமாக இருக்கின்றனவே. படங்கள் எல்லாம் நன்றாக இருக்கின்றன

    துளசிதரன், கீதா

    பதிலளிநீக்கு
  2. அழகான தங்குமிடம். வசதிகள் பிரமிப்பு. இந்தியாவின் தங்குமிடங்கள் இன்னும் நிறையவே முன்னேற வேண்டும்.

    பதிலளிநீக்கு
  3. ஆம் துளசி சகோ & கீத்ஸ்

    ஆம் வெங்கட் சகோ

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)