திங்கள், 12 ஜூன், 2017

நேற்றைய மீனும் ஞாபகக் கொக்கும்.

1441. வழக்கப்படி சுளைகளை உண்டு விதைகளையாவது தோட்டத்தில் வீசுங்கள். ஆம்பியும் அழுகியும் சுழண்டும் கிடக்கும் நிலத்தின் கருணை அவற்றை உயிர்ப்பிக்கக்கூடும்.

1442. சத்தம் வழக்கமானதுதான். அது எப்போதுமே ஆட்டின் கூக்குரலில் ஆரம்பித்து ஓநாயின் கும்மாளத்தில்  முடிவது.

1443. கலங்கரை விளக்கங்கள் மனிதர்களுக்கானவை. கால்பாவாத கப்பல்களுக்கு கடல்தான் தாய்மடி.

1444. பிணவறைக் காவலாளி போல் இருக்கிறது குளிரூட்டப்பட்ட வாழ்க்கை.

1445. குருதிக்கறைகள் போராட்டத்தின் வெளிப்பாடு மட்டுமல்ல. மௌனம் கிழித்த உள்ளத்தின் சாயமாகவும் இருக்கலாம்.

1446. மல்லிகைக் கிழமைகள் மென்காதலர்களுக்கானவை. ராஜகம்பீரத்துடன் முட்களைப் பொதித்துக் காத்திருக்கின்றன சில வலிய காதல்கள்.

1447. பெருநோயாய்ப் பீடித்திருக்கிறது உன் மௌனம் என்னுள்.

1448. Anbirkuriyavargal ambup padukkaiyil..

1449. கட்டிடம், பலாப்பழம், ஓவியம், டால்ஃபின்னு உருவம் மாறினாலும் ஃப்ரெண்ட் ரெக்வெஸ்ட் வருதுப்பா.. ஹாஹா யார்னு தெரிஞ்சு கொடுக்குகிறாங்களா .. இல்ல தெரியாம கொடுக்குறாங்களா.. :)

1450. உன்னை விட்டு ஓடிப் போக முடியுமா முகநூலே சண்டேன்னாலும் சண்டைன்னாலும்.. ஹிஹி ..

1451. இப்பவெல்லாம் சினிமாவை பார்லேயே ஷூட் பண்றாங்களோ.. முழுப்படமும் பார்லேயே உக்கார்ந்து பார்க்கிறமாதிரி.. ஒரே பீர்மயம்..

1452. தட்டிவிட்டுத் தட்டிவிட்டுச் சென்றுவிடுகிறது பறவை.
ஜன்னல் கதவாய் ஆடிக் கொண்டிருக்கிறது மனம்
நீரில் ஊறிக் கொண்டிருக்கிறது எச்சத்துடன் தானியம்.

1453. கவிதை அவள் பாஷை.
கண்ணிழந்து மொழியறியா அவன்
தொட்டுணர்கிறான் தனது கவிதையை.

1454. தேங்கிக்கிடக்கும் தண்ணீர்
நேற்றையமீனின் வீச்சத்துடன் கிடக்கிறது
அலசிப் பார்க்கிறது ஒற்றைக்காலில் ஞாபகக் கொக்கு.

1455. ஈர மண்ணிலிருந்து புறப்படுகிறது
விதையின் வாசம்.
மனமெங்கும் பெருவிருட்சம் விரியத் துவங்குகிறது.

1456. மொழி புரிகிறது
பேசவும் வருகிறது
பேசத்தான் ஆளில்லை.

1457. தனக்குத்தானே உரையாடினால் பிச்சி
தனக்குள்தானே எழுதிக்கொண்டால் கவிதைக்காரி.

1458. எல்லாம் பேசத்தெரிந்தாலும்
எல்லாமும் பேசமுடிவதில்லை எப்போதும்.
தடுப்பணை அற்ற பேச்சும் ஒரு கலைதான்.

1459. விக்கல்கள் உன் கோபமாக
புரையேறுதல் உன் ஞாபகமாக
அடையாளப்படுத்தப்படும்போது
தும்மல்கள் மட்டும் உன் ஆசிக்காகக் காத்திருக்கின்றன.

1460. 987 பேர் நட்பில். நானும் 30 பேருக்கு மேல் லைக் போட்டதில்லை. எனக்கும் 30 லைக் ( யதேஷ்டம் ) க்குக்குமேல் வந்ததில்லை. எதற்கு 987. எண்ணிக்கைக்கா. தேவைப்பட்டால் பக்கம் வரலாம், பார்க்கலாம் படிக்கலாம். ஏனெனில் என் போஸ்ட் எல்லாமே பப்ளிக் ஆப்ஷனில்தான் வெளியிடுகிறேன். . அதுவரை நட்பில் இருந்து விடுதலையாகலாமே நட்புகளே.

#ஜிந்திங்க_நட்பூக்களே.

டிஸ்கி :-

இவற்றையும் பாருங்க.


1. ஞானம் பிறந்த கதை. 

2. ஸ்வரமும் அபஸ்வரமும். 

3. அழகும் அறிவும் அன்பும் குழந்தைகளும்.

4. கணவன் அமைவதெல்லாம்..

5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..

6. அன்பெனும் பேராயுதம்.

7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.

8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும். 

9. என் வீடு என் சொர்க்கம்.

10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும். 

11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும். 

12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.

13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி‬.

14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி

15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும் 

16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)

17. முகமூடிகளும் மனப்பூக்களும். 

18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !. 

19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும். 

20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.

21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.  

22. இன்ஃபாக்‌ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!

23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும். 

24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.

25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும். 

26. தோற்றவர்களும் துணிந்தவர்களும்.

27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும். 

28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும்.

29.  நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.

30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.  


31.வெள்ளத் தீயும் தேரை இதயமும். 

32. காதல் கவுஜைகளும் முகநூல் காதலும். 

33. பேதை மனுஷியும் மாமியார் சிண்ட்ரோமும்.

34. டிவிஎஸ் 50 யும் ஸ்வீட் நத்திங்ஸும். :)

35. நோக்கர்களும் நந்தா விளக்கு விருதும். 

36. போதையும் போதிமரமும்.

37. மாயக் குடுவையும் மனமீனும்.

38. அஸ்வத்தாமன் அஸ்திரமும் யூதாஸ் நாவும். 

39. ஆணியன் ரோஸ்டும் அலாவுதீன் பூதமும். 

40. 99 ம் இல்ல 21 ம் இல்ல, ஒருநாள் சபதம்தான்.

41. சாண்ட்விச்சும் ஊறுகாயும்.

42. நெபுலாவும் ப்ரத்யங்கிராவும். 

43. 2065 ம் ஆறு லட்சமும். !!! 

44. மழைப்புரவியும் பஜ்ரங்பலியின் வாலும். 

45. கறுப்புப் பட்டாம் பூச்சியும் குட்டிக் குளவியும். 

46. எடிட்டர் பாப்பும் அர்பன் விவசாயியும்.

47. கும்பகர்ணியும் எல்லைச்சாமியும்.

48. கவனிப்பும் அவதானிப்பும். 

49. பெங் குவின்களும் வால்ரஸ்களும். 

50. சிவப்புப் பட்டுக் கயிறும் நெல்லை உலகம்மையும் 

51. கோல்டன் ஃபேஷியலும் போஸ்ட் புல்லட்டினும். 

52. அப்பிராணிகளும் அசட்டுத் தித்திப்பும். 

53. SUMO வும் சவாரியும்.

54. அரசனும் ஆண்டியும். 

55. கோயமுத்தூரும் கர்நாடகாவும். 

56.  பாபநாசமும் கருத்து கந்தசாமியும்

57. தர்மதரிசனமும் தாய்க்கிழவியும். 

58. ஹைபர்நேஷனும் சாஃபக்லீஸும். 

59. தெய்வமகள், வம்சம் - இம்சைகள். 

60. தல ஃபேன்ஸும் கலகலப்பும். 

61. பைரவாவும் புத்தகக் கண்காட்சியும்.

62. தமிழ்மணமும் அக்கினிக்குஞ்சு இணையத்தில் அரங்கன் கணக்கும்.

63. தேசப்பற்றும் தேசப்பித்தும். 

64.  தலைகீழ் வேதைகளும் விஸ்வரூபங்களும்.

65. சாந்திலெட்சுமணன் படைத்த கம்ப ரசமும், புக்ஃபேர் பாப்கார்னும். 

66. மத ஒற்றுமையும் மன ஒற்றுமையும்.  

67. ஜியோவுக்கு முன்னும் பின்னும். ஜீயோ மேரே லால். 

68. முயலும் மானும் மயிலும் பூக்களும் . 

69. டாகிங்கும் ஹாக்கிங்கும்.

70. பாடாவதி பஸ் ஸ்டாண்டுகளும் லவுட் ஸ்பீக்கர் டீலக்ஸ் பஸ்களும்.

71. பிரிவின் வெறுமையும்காலிக்குடங்களும்

72. சனி லைக்கோ முனி லைக்கோ ... விடாது கருப்பு

73.  நேற்றைய மீனும் ஞாபகக் கொக்கும்.


2 கருத்துகள்:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)