பத்துக்கும் மேற்பட்ட தொகுப்பு நூல்களுக்கும் பங்களிப்புச் செய்துள்ளேன். அவை பற்றி இங்கே.
6.”தண்ணீர் நீரலைகளும் நினைவலைகளும்” தொகுப்பில் என் கட்டுரை.
"தண்ணீர் நீரலைகளும் நினைவலைகளும் " 59 பிரபல எழுத்தாளுமைகளுடன் நீர் பற்றிய எனது நினைவலைகளும் இடம் பெற்றுள்ளது இந்நூலில்.
இம்மாபெரும் தொகுப்பைத் தொகுத்து அளித்துள்ள அன்புத்தோழி, கவிஞர் மதுமிதாவுக்கு நன்றி.
ஸ்நேகா பதிப்பக வெளியீடு. விலை ரூ. 550/
7.செட்டிநாடும் செந்தமிழும். தேனார் மாணிக்கனார் இயம்பும் அகத்திணையின் அகம் :-
9. 4. 2017 அன்று கோட்டையூரில் நடைபெற்ற உலத்தமிழ் நான்காம் கருத்தரங்கத்தில் வெ.தெ. மாணிக்கனார் பற்றி நான் வாசித்தளித்த ஆய்வுக் கட்டுரை.
கட்டுரையின் ஒரு பகுதி இங்கே
////மொழி வளம்:-
என்னை வியக்க வைத்தது சிறப்பான மொழி வளத்தோடும் ஒப்பு நோக்குதலோடும் ஆங்கிலத்தில் இருக்கும் இந்நூலின் சில வார்த்தைகளுக்கீடாக கூகுளில் கூட சரியான தமிழ் மொழிபெயர்ப்புக் கிடைக்கவில்லை. அருஞ்சொற்கள் அயரவைக்கின்றன.
SULKING, LASCIVIOUS BEHAVIOUR, CAJOLINGLY,LOVE BICKERING,ORGY, LANGUOR, BOUDERIE, WARRING, ABJECT, ADMONISHING, LUCRE, FEIGNED, FATHOM, ALLUREMENT, PROFLIGACY, DEVOID, CHASTITY, DEBAUCHERY, KINSHIP, DALLIANCE, MOLLIFYING, CLANDESTINE, MOCK, TAUNT, VANQUISHED, NEFARIOUS, SCORN, SERMONIZINGS, VANQUISH, ONEROUS, DOE EYED, COITION, PARAMOUR, ELOQUENCE, SMOULDERING, DECOY, PERSEVERENCE.
அதே போல் ஓரம்போகியார், மருதநிலநாகனார், கணிமேதாவியார், பரணர், மூவடியார், புல்லங்காடனார், கண்ணன் சேந்தனார், மாறன் பொறையனார்,ஆலங்குடிவங்கனார், இளங்கடுங்கோ, கம்பர் ஆகியோரோடு ஔவை துரைச்சாமி, ஆர்.சாரங்கபாணி, பேராசிரியர் மு. இராகவையங்கார், வெள்ளைவாரணார் ஆகியோரையும் ஆங்கிலக் கவிஞர்கள் NORMAN HURST, JOHN BUNYAN, MR.KENNETH WALKER,( PHYSIOLOGY OF SEX) ஆகியோரையும் சுட்டி இருப்பது சிறப்பு.
இந்த நூலுக்கு அணிந்துரை திரு வ. சுப மாணிக்கனார் அவர்கள். ஆங்கிலத்தில் இருக்கும் இந்நூலில் இடம் பெற்றிருக்கும் தமிழ்ச் சொற்களுக்கு ஈடான ஆங்கில வடிவமைப்புகளையும் உச்சரிப்புகளையும் ப்ரயோகப்படுத்தி இருப்பது வெகு சிறப்பு. ஆசாரக் கோவையிலிருந்து யசோதரா காவியம் வரை கிட்டத்தட்ட 130 நூல்களை ஆய்வு செய்து இந்நூலைப் படைத்திருக்கிறார்கள்.
மருதத்திணை, ஊடல், நிலவியல், உள்ளுறை உவமை,தலைவியின் பங்கு, தலைவனின் பங்கு, தோழியின் பங்கு, தேவதாசிகளின் அழகியல் பண்புகள், சமூகத்தில் அவர்களின் பங்கு ஆகியவற்றை சிறப்பாகச் சொல்லிச் சென்றுள்ளார்கள். மிகச் சிறந்த இந்நூல் தமிழாக்கம் பெறுவதோடு அவரால் தொகுக்கப்பட்ட மற்ற நூல்களும் ஆக்கம் பெற்றால் தமிழ் கூறும் நல்லுலகும் தமிழ்ச் சமூகமும் பெருமைபெறும்.
மாணிக்கனாரின் எண்ணரும் தமிழ்ச்சேவை பற்றி. :-
8.அகம்
பெருவெளியில் தனிஒருவள்தொகுப்பு: மதுமிதா
35 பெண்கள் படைத்திருக்கும் கட்டுரைகளின் தொகுப்பு நூல்.
35 படைப்பாளிகள் தங்கள் அகத்தின் உணர்வுகளை ஆத்மார்த்தமாகப் பகிர்ந்துள்ளனர்.
தங்கள் நேரத்தை ஒதுக்கி கட்டுரைகளை அளித்த அன்புத் தோழிகளுக்கும் நண்பர் Vallidasan Jm Her Stories பதிப்பகத்தினருக்கும், எப்போதும் வாழ்த்தி ஆதரவளிக்கும் அன்பு நட்பூக்கள் உங்களுக்கும்
மனம் நிறைந்த அன்பும் நன்றியும்

மார்ச் 18 ஆம் நாள் மாலை 5.30 மணிக்கு சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் புத்தக வெளியீடு. வருகை புரிந்து வாழ்த்துங்கள் அன்புள்ளங்களே
--- மதுமிதா.
இதில் "வீடென்று எதனைச் சொல்வீர் " என்ற என்னுடைய கட்டுரையும் இடம்பெற்றுள்ளது. நன்றி மது, ஹெர் ஸ்டோரீஸ்.
9.புதுவயல் கைலாஸ விநாயகர் கோயில் கும்பாபிஷேக மலர் வெளியிடப்பட்டது. மலருக்கு பாடல் ஒன்று எழுதிக் கேட்டிருந்தார்கள். மலருக்குக் கட்டுரை பாடல் எழுதியவர்களுக்கு மேடையில் சிறப்பு செய்தார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)