எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 22 நவம்பர், 2018

20 ஆம் நூற்றாண்டுக் கவிஞர்கள் இருவர் கவித்திறன். :-


20 ஆம் நூற்றாண்டுக் கவிஞர்கள் இருவர் கவித்திறன். :-

20 ஆம் நூற்றாண்டுக் கவிஞர்கள் என்று கூறப் போந்தால் அதில் சிறப்பாகப் பலர் இருக்கின்றார்கள். குறிப்பாகக் கூறப் போந்தால் கண்ணதாசன் அவர்களையும் மு. மேத்தா அவர்களையும் குறிப்பிடலாம். இவர்கள் இருவரும் முன்பு இலக்கணப்படி கவிதைகள் ( மரபுக்கவிதைகள் ) எழுதி விட்டுப் பின்பு புதுக்கவிதையை எழுதியவர்கள்.

கவிஞர் கண்ணதாசன் :- ( முன்னாள் அரசவைக் கவிஞர் )

1.விரக்தி :-

“போனால் போகட்டும் போடா :- இந்த
பூமியில் நிலையாய் வாழ்பவர் யாரடா “

“வாழ்க்கை என்பது வியாபாரம், அதில்
ஜனனம் என்பது வரவாகும் – வரும்
மரணம் என்பது செலவாகும். “


தத்துவம் :-

“ பானையிலே சோறிருந்தா பூனைகளும் சொந்தமடா
பாசத்தையே பங்கு வைச்சா சொந்தமில்லை பந்தமில்லை “

சிலேடை :- தனிமொழிச் சிலேடையும் செம்மொழிச் சிலேடையும் வருகின்றன.

“பார்த்தேன் சிரித்தேன் பாடலில் “ மலைத்தேன் இவளென மலைத்தேன் .”  அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே “ பாடலில் உள்ளமெல்லாம் மிளகாயோ ( இளகாயோ
ஒவ்வொரு பேச் சுரைக்காரையோ ( உரைக்காயோ )
“அவரைக்காய் வெண்ணிலவே ( அவரைக் காய் )

உவமை :-

”வெள்ளரிக்காய் பிளந்ததுபோல் வெண்ணிலவே சிரித்தாயோ “

கவிதையில் :-

“ பாலூறும் பருவமென்னும் பட்டினத்தில் குடிபுகுந்தேன்.
காதலூர் காட்டியவள் கடலூரில் விட்டு விட்டாள்
கன்னியூர் மறந்தவுடன் கடலூரில் விழுந்துவிட்டேன்.”

மு. மேத்தா :-

வரதட்சணைக் கொடுமை :-
“ பூக்களிலே நானுமொரு பூவாய்த்தான் பிறப்பெடுத்தேன்.
பூவாய் நான் பிறந்தாலும் பொன் விரல்கள் தீண்டலையே “
பொன் விரல்கள் தீண்டலையே நான் பூமாலை ஆகலையே “ என்றும்

புதுமைப் பெண் :-

இவள் எல்லா ஆபரணங்களையும்
எறிந்துவிட்டு அடம்பிடித்தாள்
புன்னகைதான் என்
ஆபரணமென்று .

வாழ்க்கை ஏக்கங்கள் :-

விழிகள் நட்சத்திரங்களை வருடினாலும்
விரல்கள் என்னவோ
ஜன்னல் கம்பிகளோடுதான்.

டிஸ்கி:- இது கல்லூரிக்காலப் பகிர்வு. 

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...