சனி, 17 ஆகஸ்ட், 2019

ஹெச் ப்ளஸ் ஹோட்டல்ஸ் & ஸ்பா - எங்கள்பர்க், H+HOTELS & SPA, ENGELBERG.

முதல் நாள் இரவு இல்க்ரிச் 7 ஹோட்டல்ஸில் தங்கல். மறுநாள் ப்ளாக் ஃபாரஸ்ட்ஸ், மதியம் இன்கேங்க், இந்தியன் பாலஸில் சாப்பாடு, ரெய்ன் ஃபால்ஸ்,  மாலை லூசன்லேக்கில் அன்னங்கள் நீந்தும் ஏரிக்காட்சி, லயன் மான்யுமெண்ட் பார்த்துவிட்டு  ஸ்விட்ஜர்லாந்தின் எங்கள்பர்க் ஹெச் ப்ளஸ் ஹோட்டலில் இரவு தங்கல்.

இது வரவேற்பறை.


மிக நீண்ட காரிடார்கள். எங்கெங்கும் ஒளிவெள்ளம். மரத்தால் ஆன தரை.



இரட்டை லிஃப்டுகள்

இங்கே ஓவியங்கள் எல்லாமே இயற்கைக் காட்சிகள்தான். அதேபோல் ஊர்த்திசைகாட்டும் ஓவியங்கள்.

அறைக்குள் தனித்தனியாக ஹால், படுக்கை அறைகள். ஹாலிலேயே ஒருவர் படுக்கலாம். தரையெங்கும் மெரூன் கார்ப்பெட். ரூம் மரச்சுவர்கள் கொண்டது. இங்கே எல்லாம் மின் விசிறியே பொருத்த மாட்டார்கள். சாதாரணமாகவே அந்த ஏசியைக் குறைத்து வைங்க என்று சொல்லுமளவு குளிர்.

இங்கே உள்ள ஏசியை எல்லாம் ரூம் டெம்ப்ரேச்சருக்கு அட்ஜ்ஸ்ட் செய்து கொள்ளலாம். ( குளிர அல்ல, வெதுவெதுப்பாக வைக்க )

இரவு மது அருந்த தனி டேபிள், லைட்டிங் அரேஞ்மெண்ட்ஸ்,. பால்கனியில் அமர்ந்து கொள்ள தனி லெதர் ஃபர்னிச்சர்கள், டிவி பார்க்க தனி குஷன் பர்னிச்சர்கள் என்று அசத்தி இருந்தார்கள்.

பாத்ரூம்ஸ் எல்லாம் இங்கே க்ளாமரூம்ஸ் மாதிரித்தான்.கண்ணாடியாக ஜொலித்தன. ஆளுக்கு இரண்டு டவல்கள். மூவருக்கு 6. டர்க்கி டவல் மூன்றும் முகம் துடைக்கும் துவாலைகள் மூன்றும்.


இயற்கைக் காட்சிகள் கொண்ட போஸ்டருடன் குளிரக் குளிர நமது பெட்ரூம். இரண்டு அடிக்கு அமுங்கும் மெத்தைகள் கொண்ட கட்டில். கதகதப்பாக வைக்க ரஜாய்கள்.


ஹாலில் மகனாருக்குப் படுக்கை. இதுவே பகலில் சோஃபா. ! பின்புறம் சீனரி.

பால்கனியில் அமர்ந்து மலை அழகை ரசிக்கலாம்.


40 இஞ்ச் டிவி. அதை யார் பார்த்தா ? சென்றவுடன் சாப்பிடுவதும் மறுநாளுக்கு எடுத்து வைத்துவிட்டு உறங்கவுமே பொழுது சரியாக இருந்தது. !


இங்கேயும் டபிள் ஸ்க்ரீன்கள்.


இண்டர்காம் உண்டு. டெய்லி ஹோட்டலில் இருந்து அலார்ம் கால் செய்து எழுப்பி விடுவார்கள். எல்லாம் 6 , 7, 8 மணிக்குத்தான் !. குளிரில் நம்மால்தான் எழுந்திருக்கவே முடியாது.

டைனிங் ஹாலுக்கு லேட்டாப் போனோம்னா எல்லாமே இருக்கும் ஆனா கடைசி ஆகி விடும். !

துணிகள், ஸ்வெட்டர்கள் மாட்டி வைக்க ஹேங்கர்கள் ஸ்டாண்ட் உண்டு. மிகப்பெரும் அலமாரிகள் இரண்டு வேறு !.

ஷூபோடவும் ரூம் வாசல்பக்கம் தனியாக லெதர் சீட் போட்ட சேர் போட்டு இருந்தார்கள்.


இங்கே பாத்ரூமில் டப் இல்லை. தனியாக கண்ணாடி போட்டுத் தடுத்து ரூமாக இருந்தது. ஹாண்ட் ஷவர்  உண்டு.

வலப்புறம் திருப்பினால் குளிர்நீர், இடப்புறம் திருப்பினால் வெந்நீர். அதே அதே.

பாத்ரூமில் எலக்ட்ரிக் ஷேவிங் மெஷினும் உண்டு.

டாய்லெட் போனால் துடைக்க டிஷ்யூக்களுக்குக் குறைவில்லை. ஆனால் நமக்கு பக்கெட்டாக சுத்தமாக இருந்த டஸ்ட்பின்னை உபயோகித்தோம்.

இதுதான் பால்கனியிலிருந்து எங்கள்பர்க் நகரின் கண்கொள்ளாக் காட்சி ! எதிரிலும் ஹோட்டல். அதன் பக்கமாக ஆட்டுக்குட்டிகள் நிற்கும் அழகுச் சிலையும் இருந்தது.


ஹோட்டலில் சேஃப்டி லாக்கரும் இருந்தது. ( நம்பர் லாக் )



ஹோட்டலின் முகப்பில் வரவேற்கும் ஸ்விஸ் பசு. கௌபாய் தொப்பிகள், பெல்டுகள் பைகள், வார்ப்பட்டி தொங்க ஹெச் ஹோட்டல்ஸ் சின்னம் தாங்கி முரட்டுப் பார்வை பார்க்கிறது !.



முதல் நாள் இரவு அருந்திய உணவு. நார்த் இந்தியன் வகை. சாதம் ( பாசுமதி ) மட்டர் பனீர், ரொட்டி, அப்பளம், காலி தால் மாக்னி, தஹி, கச்சோரி, சிக்கன், சாலட்ஸ், கடி , சாஸ் வகையறா ஆகியன இருந்தன.

ஹோட்டலின் டைனிங் ஹால் சிறிது தள்ளி இருந்தது. எங்களுடன் வந்தவர்களில் சிலரும் அமர்ந்து உணவருந்திக் கொண்டிருக்கிறார்கள்.


அதே ஹோட்டலில் மறுநாள் காலை உணவு

ரவை வெஜ் உப்புமா, ப்ரெட், சீஸ், ஜாம் , பழச்சாறு, அவித்த முட்டை, பழத்துண்டுகள், ஆலு டிக்கி, மினி நான்வெஜ் சாசேஜ், சாஸ், வெண்ணெய், காஃபி சாப்பிட்டோம். சில சமயம் டீ எடுத்துக் கொள்வோம்.



ஹெச் ஹோட்டலின் எழில்மிகு தோற்றம். !


நன்றி ஹெச் ஹோட்டல். அருமையான ஹாஸ்பிட்டாலிட்டி. 

இதன் அட்ரஸ் :-

H+HOTEL & SPA - ENGELBERG,
DORFSTRASSE 33,
6390, ENGELBERG,
TEL: +41 41 6395858.

இந்த ஹோட்டலுக்கு என்னோட ரேட்டிங் நாலரை ஸ்டார். *****. 

டிஸ்கி :-

இவற்றையும் பாருங்க.

1. சுவாமிமலை ஸ்டெர்லிங்கில் ஒரு இரவு. 

2. மணிப்பால், நந்தினி, மடிவாலா.. பெங்களூரா.. 

3. பாரடைஸ் ரெஸார்ட். 

4. ரிவர்ஸைட் ரெஸார்ட். ( மயூரி) 

5. ரைஸ் & ஸ்பைஸும் தாஜ் சமுத்ராவும்.

6. கேரளா சோழா & ஹைலாண்ட். 

7. கொச்சுவெளி கடற்கரையும் மிதக்கும் உணவகமும். KOCHUVELI BEACH & FLOATING RESTAURANT :- 

8. பார்பக்யூ நேஷன் 

9. மை ப்ளேஸ்.

10. குல்பர்கா கோட்டையில் ஜும்மா மசூதி :- 

11. பிகேஆரும் இண்டர்காமும். :- 

12. ஸ்ரீ சாய் வாசவி கெஸ்ட் ஹவுஸின் பதினைந்து கட்டளைகள்.

13. ராஜ் கோபால் ரெசிடென்சியில் ஒரு விடியல்.

14. கோவை ஆர்வீயின் அசத்தலான உணவுகள். ( SRI AARVEE HOTELS) 

15. சென்னை மெட்ரோவும் ரத்னாகஃபே இட்லி சாம்பாரும்.

16. வஸந்தபவனில் ஒரு பிறந்தநாள் விருந்து. 

17. கேஆர் பேக்ஸ் சாண்ட்விச் , சரஸ்வதி கேஃப் தயிர்வடை & அர்ச்சனா பேல்பூரி & பானிபூரி . 

18. கற்பகம் இண்டர்நேஷனலில் ஒரு பாதுகாப்புப் பெட்டகம்.

19. காஃபிடேயும் க்ரீமி இன்னும் ஆவின் ஜங்க்‌ஷனும். 

20. பெஸ்ட் ஃபில்டர் காஃபி.

21. எங்கும் பாரதி எதிலும் பாரதி.

22. உணவுப் பயணங்கள் . நியூ தில்லி. 

23. கோவளம் மீன்களும் கேரளக் கறி மீனும்.

24. அரஃபிக் ஷவர்மாவும், குப்பூஸும், ஃபிலாஃபிலும், 

25. ழ வில் வலைப்பூ வடை...

26. அரியலூர் மாருதியும் மதுரை ட்யூக்கும்.  

27. ஜெய்னிகா & கார்மெட். 

28. சாந்தியில் ஒரு சாத்வீக சாப்பாடு. 

29. சமணர் படுகையும் சாந்தி இன்னும்.

30. பயண உணவுகள். பால் ஜலேபி.

31. பெருந்துறை ராயல் பார்க்கில் இரு நாட்கள். 

32. திருப்பூரில் ஒரு இல்லம். TIRUPUR - THE HOME !

33. லீலா பேலஸில் ஒரு ரிசப்ஷனும் தேன் பூ செடியும்.

34. நிவேதாஸ் இன்னும் நவம்பர் எட்டும்.  

35. தர்மபுரி அதியமான் அரண்மனையில் புத்தர் !

36. பழனியில் சிவா. 

37. ராயல் பார்க்கில் கவர்ந்த சில ஓவியங்கள். 





41. ஹொடெல் ஸ்ரீ சாந்த் ஆ, ஸ்ரி சாந்த, ஷ்ரீ ஸாந்தா. ?! 

42. ஸ்ரீ ஷாந்த். காலை உணவும் கண்கவர் ஓவியமும். 

43.ராதா ப்ரஸாத்தின் லிஜோ ஸ்கைபூல் ரெஸ்டாரெண்டில் சில காலைகள். 


44. திருப்பூர் விநாயகாவில் ஒரு நாள்.  
  




50. குவாலியர் ஸுரபியில் சுவையான ஷாஹி பனீரும், பால் ஜலேபியும் 

51. போபால் ஜி ஷையில் செம்பு விநாயகர். BHOPAL GS G-SHY. 

52. பெல்ஸ் ரோட் ஹோட்டல் நியூ பார்க் & தி பெவிலியன். NEW PARK & THE PAVILION.

53. கோகுல் கிராண்ட் & ஷண்முகா .HOTEL GOKUL GRANDE & SHANMUGA

54. டபிள் ரோட் ஆக்டேவில் இரு நாட்கள். ( OCTAVE )

55. கானாடுகாத்தானில் ஒரு சர்வீஸ் அபார்ட்மெண்ட்.

56. கலைப்பொருட்களைக் காட்சிப்படுத்தியிருக்கும் எம் வி வி ரெஸிடென்ஸி.

57. திருவண்ணாமலை எஸ் டி டி ரெஸிடென்ஸி.

58. ஸீக்வீன் ரெஸிடென்ஸியும் டெல்மாவின் ரோகன்ஜோஷும் ஷவர்மாவும்.

59. திருக்கடையூரில் சதாபிஷேகம்.

60. திருவானைக்காவலில் டெம்பிள் இன்ன்.

61.பாண்டி எம் ஜி ஆர் ரீஜன்ஸியில் அழகோவியங்கள்.

62. திருத்தணி அருள்முருகன் ரெஸிடென்ஸி.

63. சரவணபவனில் ஒரு சூப்பர் டின்னர்.

64. தாப்பா கார்டனில் ஒரு மதிய உணவு

65. தென்காசி சௌந்தர்யாவில் மேக்னெடிக் கீ கார்ட்.

66. விஷ்ணுப்பிரியாவில் தீபிகா படுகோனே. !

67. இராமேசுவரம் நகரவிடுதி.



70. விஜெய் ஹோட்டல்ஸ். VIJEY HOTELS. !

71. ஹோட்டல் சென்னை கேட், எக்மோர்.

72. 7 ஹோட்டல்ஸ் & ஃபிட்னெஸ். 7 HOTELS & FITNESS.

73. ஹெச் ப்ளஸ் ஹோட்டல்ஸ் & ஸ்பா - எங்கள்பர்க், H+HOTELS & SPA, ENGELBERG.

74. ஃபோர் பாயிண்ட்ஸ் பை ஷெரடன் படோவா. FOUR POINTS BY SHERATON PADOVA.

2 கருத்துகள்:

  1. அழகான தங்குமிடம். நல்ல வசதிகள் இந்த ஹோட்டலில் இருக்கின்றன. இந்தியாவின் பல ஹோட்டல்கள் இன்னும் வசதிகள் தர வேண்டும் எனத் தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
  2. நன்றி வெங்கட் சகோ ஆம் சரியா சொன்னீங்க.

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)