திங்கள், 12 ஆகஸ்ட், 2019

7 ஹோட்டல்ஸ் & ஃபிட்னெஸ். 7 HOTELS & FITNESS.

யூரோப் டூர் செல்வதென முடிவான பின் பல்வேறு டூர்ஸ் & ட்ராவல்ஸை செக் செய்து ஸ்டார் டூர்ஸில் போவதென முடிவாயிற்று. ஆனால் அது லண்டனில் இருந்து புறப்பட்டு ஃபெரி வழியாக கடலைக் கடந்து பெல்ஜியம் வந்து அதன் பின் எல்லா தேசமும் சுற்றி வரும். ஆனால் பெல்ஜியத்தில் ஏறிக் கொண்டாலும் லண்டனில் இருந்து புறப்பட்டு லண்டனுக்குத் திரும்பச் செல்லும் பயணப்படியைச் செலுத்தியே ஆக வேண்டும்.

நாம் ஜெர்மனியில் இருந்து புறப்படுவதால் ப்ரெஸில்ஸில் இருந்து பிக் அப் பாயிண்ட் குறித்து அனுப்பிப் புறப்பட்டோம். டூர் அனுபவங்கள் தனியாக எழுதுவேன் இந்தத் தொடரில் ஸ்டார் டூர்ஸ் & ட்ராவல்ஸ் எங்களைத் தங்க வைத்த ஹோட்டல் பற்றிய அனுபவங்களைத் தொடர்கிறேன்.

நாங்கள் சென்ற மெர்ஸிடிஸ் பென்ஸை கோச் என்று குறிப்பிடுகிறார்கள். ( டூர் முழுக்க அழைத்துச் செல்பவர் டூர் மேனேஜர் - இவர் பெயர் சந்தோஷ் ராகவன், கோச்சை ஓட்டிச் செல்லும் ட்ரைவரை கேப்டன் என்று அழைக்கிறார்கள். இவர் பெயர் கிறிஸ்டியன். )

இந்த கோச்சுகளில் முழுக்க முழுக்க ஏசி வசதியும் பாத்ரூம் டாய்லெட்டும் கூட உண்டு. டிவிடி பார்க்கலாம். விசிறி மடிப்பு திரைச்சீலைகள், செமி ஸ்லீப்பர் ஸீட்டுகள், ஸீட் பெல்ட் கட்டாயம் போடணும். ( 100 கிமீ வேகத்துக்கு மேல இஞ்ச் கூட அதிகமா போக மாட்டாங்க இருந்தும் :)

ஃப்ளைட் போல லக்கேஜுகளை ( ஒரு ஆளுக்கு 20 கிலோ அலவ்ட் ) பேக் பேக் 5 கிலோ இருக்கலாம்.  நெக் பில்லோ, கையுறை, காலுறை, இரண்டு ஸ்வெட்டர்கள், கோட் இதெல்லாமே மூன்று நான்கு கிலோ வந்துவிடும். டாப்லெட் ( சாம்சங் ) ஒரு கால் கிலோ இருக்கலாம். நொறுக்குத்தீனிகள், வாட்டர் பாட்டில், ஒவ்வொரு சீட்டுக்கும் குப்பை போட பைகள்.இத்யாதி.

சரி வாங்க நாம ப்ரெஸில்ஸில் அட்டாமியம், மினி யூரோப் பார்த்துட்டு இரவு தங்க 7 ஹோட்டல்ஸுக்கு போவோம். இது இல்க்ரிச், ஸ்ட்ராஸ்பர்க், ஃப்ரான்சில் இருக்கு.

பத்து மணிக்கு உள்ளே நுழைந்தோம். மர்லின் மன்றோ வரவேற்குறாங்க நம்மை. ( எப்பவுமே ஹோட்டல்களுக்கு இரவு விசிட்தான் பகல் பூரா நகர்வலம் ). இந்தியன் வகை உணவு சுடச் சுடத் தயாரா இருந்தது. போய் வெட்டுமுன்னாடி ரூமை ஒரு க்ளிக்.



இதுக்கு கிங் பெட்னு பேரு. இதுக்கு எதிர்த்தாற்போல் ஒரு பெட் . மூன்று பேர் தங்கினால் இதில் படுத்துக் கொள்ளலாம். இது இரவில் பெட் பகலில் இதை மடித்தால்  சோஃபா.




எல்லா பெட்டிலும் டவல்ஸ்.  இரு திரைச்சீலைகள் எல்லா ஹோட்டலிலும் உண்டு.

பகலில் மித வெளிச்சத்துக்கு ஒன்று. அதே சமயம் அறையை இருட்டாக ஆக்கி உறங்க அடர் நிறத்தில் இன்னொன்று.

அறை 400 சொச்சம் சதுர அடி இருக்கும். ட்ரெஸ்ஸிங் டேபிள், கண்ணாடி, ஃப்ரீ வைஃபை, ஃப்ரீ கார் பார்க்கிங், காம்ப்ளிமெண்ட்ரி ப்ரேக்ஃபாஸ்ட் எல்லாம் உண்டு.

ரூம் ரெண்ட்தான் தெரியல. மூவருக்கு 50 இல் இருந்து 100 யூரோவுக்குள் இருக்கலாம்.


எல்லா டாய்லெட்டிலும் விதம் விதமா டிஷ்யூ பேப்பர்கள் உண்டு. பக்கெட்டும் மக்கும்தான் கிடையாது.


ஜக்கூஸி டைப் பாத் டப். உள்ளே க்ரிப்புக்காக கறுப்பு குமிழ்கள், பக்கவாட்டில் கைப்பிடி. ஹாண்ட் ஷவர் உண்டு. யூரோப்பில் எல்லா பைப்புகளையும் வலப்புறம் திருப்பினால் குளிர்ந்த நீரும், இடப்புறம் திருப்பினால் வெந்நீரும் வரும். மாஜிக் மாஜிக் :)



முடையில்லாமல் ஆளுக்கு இரண்டு டவல்களும் பாத் அஸ்ஸசரிஸும் உண்டு.


இரண்டு குப்பைத் தொட்டிகள் . ஒன்றை பக்கெட்டாக உபயோகித்தோம் !


சரி உணவருந்தப் போவோம் வாங்க நீள காரிடார்.

வழியெங்கும் நடிகர் நடிகையர் படங்கள். ரூம் மரத்தால் ஆன தரை. நடைபாதை எல்லாம் கார்ப்பெட்.


ரூமுக்குள் பாத்ரூம் எதிரில் ஹாங்கர்களும் ( கோட், ஸ்வெட்டர், சட்டைகள் மாட்டி வைக்க ) , அயர்ன் செய்ய அயர்ன் டேபிளும் அயர்ன் பாக்ஸும் கூட உண்டு.


இங்குள்ள ஜன்னல்களுக்குக் கம்பி இல்லை.

அவற்றின் கைப்பிடியை படுக்க வசமாக வைத்தால் கதவைத் திறக்கலாம். மேலே திருப்பினால் பாதியாக மேல்பக்கம் திறக்கலாம். முழுதாக கீழ்ப்பக்கம் கைப்பிடியைத் திருப்பி வைத்தால் லாக்.


இரவில் படுக்கையாக இருந்தது இப்போது காலையில் சோஃபா !


ரூமில் வெந்நீர் வைக்க எலக்ட்ரிக் கெட்டில் உண்டு. எனவே பால்பவுடர், ஜீனி, இன்ஸ்டண்ட் காஃபி பவுடர் கொண்டு காஃபி தயாரித்துக் குடித்துக் குளித்துக் கிளம்பினோம்.


இது முதல்நாள் இரவு உணவு. இரவு உணவும் பகல் உணவும் நார்த் இந்தியன்மெனு. தக்காளி சூப், வெள்ளரிக்காய், வெங்காயம் தக்காளித் துண்டுகள், சோயா சாஸில் நூடுல்ஸ், சோயா ஸாசில் வெஜிடபிள்ஸ், ஃப்ரைட் ரைஸ், ப்ளெயின் ரைஸ், தால், அச்சார்,தயிர், சாலட், ஸ்வீட் ஒன்று இருந்தன.

காலை உணவு காண்டினெண்டல் ப்ரேக்ஃபாஸ்ட். ( க்யூஸைன். )

( சொல்ல மறந்துட்டேன் . இங்கே மட்டும் காலை உணவில் இட்லி ( சீனி போட்டது போல் இனித்தது ,)  தேங்காய் சட்னி, டொமேடோ சாஸ் சட்னி ! கொடுத்தார்கள் !!! :)



பேகட்டி, பாஸ்தா, வேஃபில்ஸ், ஸ்டீக், சாஸேஜ், ஹாட் டாக், சாண்ட்விச், ப்ரெட்டோஸ்ட், க்ரைசான்,சாலட்ஸ், ஸ்கிராம்பில்ட் எக் , பழ வகைகள், பழச்சாறுகள், தேன், பிஸ்கட்டுகள்,கேக் ஆகியனவே கிடைக்கும். பர்கர், பிஸா, நூடுல்ஸ் எல்லாம் கிடைக்காது !



 இந்தியன் உணவுதான் பரவாயில்லாம இருந்தது. ஆஹா ஓஹோன்னு இல்லை.  தாங்க்ஸ் 7 ஹோட்டல்ஸ். நிம்மதியான உறக்கம், இருப்பிடம் கொடுத்தமைக்கு நன்றி !

இதன் அட்ரஸ் :-

7 HOTEL & FITNESS,
BOULEVARD SEBASTIEN BRANDT PARC D'INNOVATION,
ILLKIRCH, 67400, FRANCE,
TEL : +33 3 88408484.

எனி ஹௌ மிக அருமையான இந்த FOUR STAR  ஹோட்டலுக்கு என்னோட ரேட்டிங் நாலரை ஸ்டார். *****

டிஸ்கி :-

இவற்றையும் பாருங்க.

1. சுவாமிமலை ஸ்டெர்லிங்கில் ஒரு இரவு. 

2. மணிப்பால், நந்தினி, மடிவாலா.. பெங்களூரா.. 

3. பாரடைஸ் ரெஸார்ட். 

4. ரிவர்ஸைட் ரெஸார்ட். ( மயூரி) 

5. ரைஸ் & ஸ்பைஸும் தாஜ் சமுத்ராவும்.

6. கேரளா சோழா & ஹைலாண்ட். 

7. கொச்சுவெளி கடற்கரையும் மிதக்கும் உணவகமும். KOCHUVELI BEACH & FLOATING RESTAURANT :- 

8. பார்பக்யூ நேஷன் 

9. மை ப்ளேஸ்.

10. குல்பர்கா கோட்டையில் ஜும்மா மசூதி :- 

11. பிகேஆரும் இண்டர்காமும். :- 

12. ஸ்ரீ சாய் வாசவி கெஸ்ட் ஹவுஸின் பதினைந்து கட்டளைகள்.

13. ராஜ் கோபால் ரெசிடென்சியில் ஒரு விடியல்.

14. கோவை ஆர்வீயின் அசத்தலான உணவுகள். ( SRI AARVEE HOTELS) 

15. சென்னை மெட்ரோவும் ரத்னாகஃபே இட்லி சாம்பாரும்.

16. வஸந்தபவனில் ஒரு பிறந்தநாள் விருந்து. 

17. கேஆர் பேக்ஸ் சாண்ட்விச் , சரஸ்வதி கேஃப் தயிர்வடை & அர்ச்சனா பேல்பூரி & பானிபூரி . 

18. கற்பகம் இண்டர்நேஷனலில் ஒரு பாதுகாப்புப் பெட்டகம்.

19. காஃபிடேயும் க்ரீமி இன்னும் ஆவின் ஜங்க்‌ஷனும். 

20. பெஸ்ட் ஃபில்டர் காஃபி.

21. எங்கும் பாரதி எதிலும் பாரதி.

22. உணவுப் பயணங்கள் . நியூ தில்லி. 

23. கோவளம் மீன்களும் கேரளக் கறி மீனும்.

24. அரஃபிக் ஷவர்மாவும், குப்பூஸும், ஃபிலாஃபிலும், 

25. ழ வில் வலைப்பூ வடை...

26. அரியலூர் மாருதியும் மதுரை ட்யூக்கும்.  

27. ஜெய்னிகா & கார்மெட். 

28. சாந்தியில் ஒரு சாத்வீக சாப்பாடு. 

29. சமணர் படுகையும் சாந்தி இன்னும்.

30. பயண உணவுகள். பால் ஜலேபி.

31. பெருந்துறை ராயல் பார்க்கில் இரு நாட்கள். 

32. திருப்பூரில் ஒரு இல்லம். TIRUPUR - THE HOME !

33. லீலா பேலஸில் ஒரு ரிசப்ஷனும் தேன் பூ செடியும்.

34. நிவேதாஸ் இன்னும் நவம்பர் எட்டும்.  

35. தர்மபுரி அதியமான் அரண்மனையில் புத்தர் !

36. பழனியில் சிவா. 

37. ராயல் பார்க்கில் கவர்ந்த சில ஓவியங்கள். 





41. ஹொடெல் ஸ்ரீ சாந்த் ஆ, ஸ்ரி சாந்த, ஷ்ரீ ஸாந்தா. ?! 

42. ஸ்ரீ ஷாந்த். காலை உணவும் கண்கவர் ஓவியமும். 

43.ராதா ப்ரஸாத்தின் லிஜோ ஸ்கைபூல் ரெஸ்டாரெண்டில் சில காலைகள். 


44. திருப்பூர் விநாயகாவில் ஒரு நாள்.  
  




50. குவாலியர் ஸுரபியில் சுவையான ஷாஹி பனீரும், பால் ஜலேபியும் 

51. போபால் ஜி ஷையில் செம்பு விநாயகர். BHOPAL GS G-SHY. 

52. பெல்ஸ் ரோட் ஹோட்டல் நியூ பார்க் & தி பெவிலியன். NEW PARK & THE PAVILION.

53. கோகுல் கிராண்ட் & ஷண்முகா .HOTEL GOKUL GRANDE & SHANMUGA

54. டபிள் ரோட் ஆக்டேவில் இரு நாட்கள். ( OCTAVE )

55. கானாடுகாத்தானில் ஒரு சர்வீஸ் அபார்ட்மெண்ட்.

56. கலைப்பொருட்களைக் காட்சிப்படுத்தியிருக்கும் எம் வி வி ரெஸிடென்ஸி.

57. திருவண்ணாமலை எஸ் டி டி ரெஸிடென்ஸி.

58. ஸீக்வீன் ரெஸிடென்ஸியும் டெல்மாவின் ரோகன்ஜோஷும் ஷவர்மாவும்.

59. திருக்கடையூரில் சதாபிஷேகம்.

60. திருவானைக்காவலில் டெம்பிள் இன்ன்.

61.பாண்டி எம் ஜி ஆர் ரீஜன்ஸியில் அழகோவியங்கள்.

62. திருத்தணி அருள்முருகன் ரெஸிடென்ஸி.

63. சரவணபவனில் ஒரு சூப்பர் டின்னர்.

64. தாப்பா கார்டனில் ஒரு மதிய உணவு

65. தென்காசி சௌந்தர்யாவில் மேக்னெடிக் கீ கார்ட்.

66. விஷ்ணுப்பிரியாவில் தீபிகா படுகோனே. !

67. இராமேசுவரம் நகரவிடுதி.



70. விஜெய் ஹோட்டல்ஸ். VIJEY HOTELS. !

71. ஹோட்டல் சென்னை கேட், எக்மோர்.

72. 7 ஹோட்டல்ஸ் & ஃபிட்னெஸ். 7 HOTELS & FITNESS.

73. ஹெச் ப்ளஸ் ஹோட்டல்ஸ் & ஸ்பா - எங்கள்பர்க், H+HOTELS & SPA, ENGELBERG.

74. ஃபோர் பாயிண்ட்ஸ் பை ஷெரடன் படோவா. FOUR POINTS BY SHERATON PADOVA.

2 கருத்துகள்:

  1. வெளிநாட்டுப் பயணம் - எஞ்சாய்.

    தங்குமிடங்கள் நன்றாக இருந்தால் பயணம் சுகம்.

    பதிலளிநீக்கு
  2. ஆம் வெங்கட் சகோ

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)