சனி, 30 ஜூன், 2018

தாய் சொல்லைத் தட்டாதவன். தினமலர். சிறுவர்மலர் - 24.


தாய் சொல்லைத் தட்டாதவன்.

ரவின் சில்வண்டுப் பூச்சிகள் கத்திக்கொண்டிருக்கின்றன. சில்லென்று மலையமாருதம் வீசுகிறது. எங்கெங்கோ கானக மிருகங்கள் உறுமும் சத்தம். விருட்சங்களின் கொடிகள் கால்களில் சிக்குகின்றன. அரவமா, ஆலமா என்று தெரியாத இருட்டு. மேடும் பள்ளமுமான பாதை, சதுப்பாய் நீர் தேங்கியிருக்கும் குட்டை. ஆனால் எதற்கும் கலங்காமல் ஒரு சிறுவன் கையில் வில் அம்பு ஏந்தித் தன்னந்தனியனாய் அந்தக் கானகத்துக்குள் கொடிகளை விலக்கிக் கொண்டு முன்னேறிச் செல்கிறான்.

வனராஜன் போல் கம்பீரமாகச் செல்லும் அவனுக்கு எந்த பயமுமில்லை. நாடாளும் தகுதி படைத்த இளவரசன் அவன். அவன் ஏன் கானகத்துள் செல்கிறான். எதைத் தேடிச் செல்கிறான் ? எல்லாம் அவன் தாய் பந்தளநாட்டு ராணிக்காகத்தான். அவளுக்கு ஏற்பட்ட தலைவலியை நீக்க புலிப்பால் கொணர புலியைத் தேடி அவன் காட்டுக்குள் செல்கிறான்.

வெள்ளி, 29 ஜூன், 2018

செவ்வாய், 26 ஜூன், 2018

சிரத்தைக்கு எடுத்துக்காட்டு சிரவணகுமாரன். தினமலர் சிறுவர்மலர் - 23.


சிரத்தைக்கு எடுத்துக்காட்டு சிரவணகுமாரன்.

வித்தைகளைக் கற்றுக் கொள்வதில் சிரத்தை உள்ளவர்களைப் பார்த்திருக்கிறோம். விளையாட்டில் கூட சிரத்தை எடுத்து விளையாடி வெற்றிக் கோப்பைகளைக் கைப்பற்றுபவர்களைப் பார்த்திருக்கிறோம். படிப்பில் சிரத்தை எடுத்து சூரப்புலி என்று பட்டம் பெற்றவர்களைப் பார்த்திருக்கிறோம். ஆனால் பெற்றவர்களின் மேல் பக்திசிரத்தை எடுத்து சேவை செய்த ஒருவனைப் பற்றிக் கூற வேண்டுமானால் அதில் சிரவணகுமாரன்தான் முதலிடம் வகிப்பான். யார் அந்த சிரவணன். அப்படி அவன் என்ன செய்தான்?

யோத்தி மாநகரின் கானகம் அது. அங்கே உலவிய துஷ்ட மிருகங்கள் நகருக்குள்ளும் புகுந்த மக்களைத் தொல்லைப்படுத்தின. முற்றி விளைந்த பயிர்களை யானைகள் கபளீகரம் செய்தன. கால்நடைகளை புலிகள் , சிங்கங்கள் வேட்டையாடின. மக்கள் மன்னனிடம் முறையிட்டனர், அந்தத் தொல்லைகளில் இருந்து விடுவிக்கும்படி.

கானக மிருகங்களை வேட்டையாடப் புறப்பட்டார் தயரத சக்கரவர்த்தி. எதிர்நோக்கப் போகும் இன்னலைப் புரியாமல் அவரது குதிரையோ படை பட்டாளங்களை விட்டு இருண்ட கானகத்தின் உள்பகுதிகளுக்குப் பாதை மாறிப் பிரிந்து வெகுதூரம் சென்றுவிட்டது. நடை தளர்ந்த குதிரையை விட்டுக் கீழே இறங்கினார் சக்கரவர்த்தி, எங்கோ ஒரு யானை நீரருந்தும் சத்தம் குபுக் குபுக் எனக் கேட்டது. அச்சத்தம் வந்த இடம் நோக்கி தயரதரின் அம்பு பாய்ந்தது.

திங்கள், 25 ஜூன், 2018

என் மாடித் தோட்டத்தில் ஏகப்பட்ட அறுவடை.

பூத்ததைப் பார்த்தோம் , காய்ச்சதைப் பார்த்துவிட கனிஞ்சதையும் முத்தினதையும் பழுத்ததையும் பார்த்தோம். ஏன்னா நாங்க இருக்கும் வீட்டில் இருந்து மாடித்தோட்டம் போட்ட வீடு தூஊஊரம். சோ வாரம் ஒருமுறைதான் போக முடியும்.

30 லேருந்து 40 வெல் க்ரோ பைகள், அதுல செடியோடவே கொண்டாந்துட்டாங்க. சிலதை மட்டும் அப்ப வந்து தூவுனாங்க.கீரை விதை மாதிரி. ஒவ்வொரு பேகையும் நாலு கல்லு வைச்சு அது மேல வைச்சாங்க. அந்த ஸ்பெஷல் கல்லு ரெண்டு டப்பா வந்தது. அப்புறம் கழி கொண்டு வந்து ஊன்றி அதுல இந்த க்ரீன் நெட்டைப் போட்டு நல்லா கட்டுனாங்க. ஒரு நாள் வேலை. இதெல்லாம் ஒரு வேன்ல வந்துது.

தோட்டம் போட்டவுடன் தோட்டம் போட்டுக் கொடுத்த மனுஷன்  அப்பவே சொன்னாரு, பதினைஞ்சாயிரம் கொடுத்துப் போட்டா எல்லாரும் மூணு மாசத்துல 15,000 ரூபாய்க்கு காய் அறுவடை பண்ணனும்னு நினைப்பாங்க. நீங்க அப்பிடி இல்லையே என்றார். இல்லை என்று இடம் வலமாக பலமாகத் தலையாட்டினோம். ஆனா மூணு மாசத்துல முக்கா கிலோ தக்காளி எடுத்திருப்போம். அரைகிலோ கத்திரி, அரை கிலோ வெண்டை ஒரு கொத்து பச்சை மிளகாய். 300 ரூபாய்க்குக் காய் எடுத்திருப்பமா தெரியல. ஆனா நம்ம தோட்டத்துக்காய்னு நினைக்கும்போது விலையாவது ஒண்ணாவது..  உரம், பூச்சி மருந்து, மரபணு காய் என்ற பயமில்லாமல் இருந்ததே அதுவே ஐஸ்வர்யம். ( நாம அதுக்குள்ள இடம் விட்டு இடம் மாத்தி திரும்ப க்ரீன் கொட்டகை லேபர் கூலி, வேன் கூலி எல்லாம் சேர்த்து அது 20,000/- ஆ எகிறிருச்சு )

ஆனால் வாராவாரம் செல்வதால் வெண்டைக்காய் முக்காலே மூணுவீசம் முத்திடும். விடுவமா சூப் வைச்சு சாப்பிட்டோம். லெமன் கிராஸை எதுல போடலாம்னு தெரியல.. :(

பாவக்காய் பழமாய்ப் போயிடும். அதத்தான் ஜூஸ் அடிச்சுக் குடிக்க முடியல :)

தோட்டம் போட்டுக்குடுத்தவர் மீன் கரைசல் & இன்னோரு வெல்லக் கரைசல் கொடுத்தாரு. அதை குடியிருப்பவர்களிடம் கொடுத்து தண்ணீரில் கரைத்துப் பூவாளியில் தெளிக்கும்படி சொல்லி வந்தோம்.  அவர்களுக்கும் விளைச்சலில் பங்கு உண்டு. :)

கீழே தோட்டத்தில் முருங்கை, பலா, வாழை எல்லாம் உண்டு. அது எல்லாம் அவர்களுக்கே. இந்த வல்லாரை,முருங்கைக்கீரை, பசலைக்கீரை இதெல்லாம் நமக்கு :)


மெஹ்திப்பட்டிணம் பல்லேடியம் ஹாலில் கோரேஸ் இல்ல விருந்து.

அழகிகள் அணிவகுத்து வழங்கிய ரோஜாப்பூ மில்க்‌ஷேக் போன்ற வெல்கம் ட்ரிங்ஸுடன் சங்கராபரணம் குழைந்து கொண்டிருக்க ஒரு பக்கம் சாலட் தட்டுகளும் முளைகட்டிய பயறுவகைகளும் சூழ அமர்ந்திருக்கும் கல் விநாயகர்.

இன்னொரு புறம் தஹி குஸியா, பெல்பெப்பர் கட்லெட், பானி பூரி, சௌமின், அமெரிக்கன் வெஜ் சாப்சூயி, பாவ்பாஜி, ப்ராகோலி ஷோர்பா, தம் ஆலு, ஆலு டிக்கி,  மட்டர் பனீர், பஞ்சாபி ஷாஹி பனீர் க்ரேவி , பட்டர் நான், மிர்ச்சி பகோரா , நவ்ரத்னபுலாவ் என களை கட்டிக் கொண்டிருக்க.

மூன்றாவது இடத்தில் விதம் விதமான ஐஸ்க்ரீம் டெஸர்ட்டுகளுடன் பதினைந்து வகைப்பழங்கள். எதை எடுக்க எதை விட. கிவி, லிட்சி, பைனாப்பிள், ஆப்பிள், ஸ்ட்ராபெர்ரி, சப்போட்டா, மாம்பழம், மாதுளை, சீட்லெஸ் கறுப்பு திராட்சை, பச்சை திராட்சை, பப்பாளி, தர்ப்பூசணி, மலை வாழைப்பழம், செர்ரி, கிர்ணி என கலந்து கட்டி மணம் வீசிக்கொண்டிருந்தது.

இதெல்லாம் மெஹ்திப்பட்டிணத்தில் பல்லேடியம் ஹாலில் ஒரு கல்யாண ரிசப்ஷனுக்குக் கலந்து கொள்ளச் சென்றபோது எடுத்தது, உண்டது , கண்டது.

ஞாயிறு, 24 ஜூன், 2018

பணக்கொத்தும் குபேரர்களும் தேவதைகளும்.

ஒரு திருமண சீர் மிகுந்த சீரும் சிறப்புமாக இருந்தது. ஊஞ்சலில் ஏகாந்தமாகக் காற்று வாங்கும் பிள்ளையார்.
பயறு கார்ட் & பார்பி டால்.

வியாழன், 21 ஜூன், 2018

புதன், 20 ஜூன், 2018

80 வயதில் உலக கின்னஸ் சாதனை படைத்த கனகலெக்ஷ்மி ஆச்சி.

கைவினை வேலைப்பாடுகளில் கின்னஸ் சாதனை படைத்திருக்கும் கனகலெக்ஷ்மி ஆச்சிக்கு 83 வயது என்றால் நம்பமுடிகிறதா. திரைத்துறையிலும் அரசியலிலும் மிகப் ப்ரபலமானவர்கள் இவரது இரு சகோதரர்கள். அவர்களைப் பற்றிக் கட்டுரையின் கடைசியில் குறிப்பிட்டிருக்கிறேன். 

இவர் தன் கைவேலைப்பாடுகளில் தேர்ந்தெடுத்திருக்கும் நிறங்களின் கலவை என்னை அசத்துகிறது. அதேபோல் பர்ஃபெக்ட் வொர்க்கும் கூட. 
க்ரோஷா வேலைப்பாடு, தஞ்சாவூர் பெயிண்டிங், பென்சில் ட்ராயிங், எம்பிராய்டரி , பூக்கள் தயாரிப்பு, ஆயில் மற்றும் கான்வாஸ் பெயிண்டிங் என்று அனைத்துத் துறையிலும் தனது கைவினைப் பொருட்களைச் செய்துள்ளார். 

டிவியில் தினம் மூன்று – ஏழெட்டு மணி நேரம் தகாத உறவுகளையும் உறவு உணர்வுச் சண்டைகளையும் வன்முறை எண்ணங்களையும் கிளப்பும் சீரியல்களை இன்றைய பெரியோர்கள் பார்த்து உறவுகளிடம் குதர்க்கமாக நடந்து கொண்டிருக்க இவரோ இந்த வயதிலும் தன்னம்பிக்கையோடும் மலர்ச்சியோடும் தான் கைக்கொண்ட கைவினை வேலைப்பாடுகளில் மனதைச் செலுத்தி விதம் விதமான பொருட்களைப் படைத்துக் கொண்டிருக்கிறார். 

இன்றைய பெரியவர்களில் விதிவிலக்காக இருக்கும் இவருக்கு முதலில் ஒரு சிரம் தாழ்ந்த வணக்கம். இனி இவர்பற்றிய விவரங்கள். 

செவ்வாய், 19 ஜூன், 2018

துணையெழுத்து - ஒரு பார்வை.

துணையெழுத்து.



இந்த விமர்சனம் அமேஸானில் ”25 நூல்கள் - ஒரு பார்வை ( இரண்டாம் தொகுப்பு )” என்ற தலைப்பில் புத்தகமாக்கம் பெற்றுள்ளது. அங்கே படிக்கலாம். நன்றி மக்காஸ். 

சனி, 16 ஜூன், 2018

ஆசியான் கவிஞர்கள் சந்திப்பின் அழகிய தருணங்கள்.

ஆசியான் கவிஞர்கள் சந்திப்பில் கலந்துகொள்ள வந்த கவிஞர்கள் முதலில் வள்ளல் அழகப்பர் மியூசியம் சென்று வந்தார்கள்.
தோழிகள் வாட்ஸப்பில் அனுப்பிய புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளேன்.

வெள்ளி, 15 ஜூன், 2018

செட்டிநாட்டின் பாரம்பர்ய வீடுகளைப் பாதுகாப்போம்.

மேன்மாடங்களையும் நிலாமுற்றங்களையும் இயற்கைவண்ண ஓவியங்களையும் சலவைக்கல் தளங்களையும்   கோட்டைகள் போன்று இரும்புக்குமிழ் பொருத்திய நுழைவாயில்களையும் அரசர்கள் ஆளும் கோட்டைகளில் மட்டுமல்ல. நகரத்தார்கள் வாழும் நாட்டுக்கோட்டையிலும் காணலாம்.மியான்மரின் ஷ்வேனந்தா மடாலயத்தின் தேக்குமரச்சிற்பக் கலைபோன்ற தொகுப்புச் சிற்ப வேலைப்பாடுகளை ஒவ்வொரு இல்லத்தின் நிலைக்கதவிலும் நாம் கண்டு களிக்க முடியும்.   

செட்டிநாட்டு இல்லங்கள் திராவிடக் கட்டிடக்கலை பாணியில் அமைந்திருந்தாலும்  இந்தோ இஸ்லாமிய வேலைப்பாடுகளாலும் அழகு பொலிபவை.   வீடுகளின் நுழைவாயில்களில் காப்பாய் கடவுளர்களின் சிலை வைக்கப்பட்டிருப்பதும் நிலைவாயில்களிலும் அவர்கள் சிற்பமாய் அரசோச்சுவதும் காட்சிக்கு விருந்தாகும். இப்படியாகப்பட்ட கோட்டைபோன்ற வீடுகளின் இன்றைய நிலை என்ன ?


தமிழ்நாட்டின் மேம்பட்ட நகர்ப்புறக் கட்டிடக்கலைக்கு சாட்சியமாய் எஞ்சி இருப்பது செட்டிநாட்டின் பாரம்பர்ய இல்லங்களே. மற்ற மாவட்டங்களில் உள்ள பாரம்பர்ய இல்லங்கள் பொருளாதாரக் காரணங்களால் நலிவுற்றும் நில விற்பனைக்கு இரையாகியும் வருகின்றன. சொல்லப்போனால் எழுபது ஆண்டுகளுக்கு முன், மியான்மர் மற்றும் மலேயாவின் விடுதலைக்குப் பிறகு ஏற்பட்ட பொருளாதாரச் சிக்கல்களைக் கொண்டுவிக்கச் சென்ற செட்டிநாட்டினரும் சந்திக்க நேரிட்டது.

வியாழன், 14 ஜூன், 2018

புளுகுப்பெட்டிகளும் உளறுவாயர்களும்.

1801. தன் வாயால் கெடும்.,
..

தவளைகள் பலவிதம்

1802. ஒரு ஸ்டேட்மெண்ட் விட்டுட்டு ஸ்டேட் விட்டு ஸ்டேட் போற ஆள் தன் ஸ்டேசஸ் தப்புன்னு ஒப்புக்காதவரை என்ன பண்ண முடியும். கொத்தில்லா ..

- உளறுவாயர்கள்.

1803. "ஙஞணநமன ங்கிற எதிர்ப்பெல்லாம் செல்லாதோ. அரிவாள்தான் பேசும்னு நினைக்கிறேன். தேங்காயைக்கூட பத்து தரம் உருட்டி சுத்தி வெட்ற வீரத்தமிழச்சி நானு. ஒரு மன்னாப்பூக்கூட கேக்க வைக்க முடியாம அருவாள கீழே போடுறேன். கோவத்த விட வெயிட்டா இருக்கு ருத்திரம். தெய்வம் நின்னு கொல்லும். விட்டுத் தள்ளு.

1804. Kalyana oonjal JilJil  <3 p="">

1805. பேப்பர் நியூஸெல்லாம் பார்த்தா ... புளுகுறதுக்கு ஒரு அளவே இல்லையா. 3:)

1806. தங்கள் மெனுவைத் தாங்களே எழுதிக் கொடுத்து வாங்கி சாப்பிட அது என்ன ஹாஸ்பிட்டலா இல்லை ஹோட்டலா 3:)

புதன், 13 ஜூன், 2018

சாம்பலில் உயிர்த்த அங்கம்பூம்பாவை. தினமலர் சிறுவர்மலர் - 22.


சாம்பலில் உயிர்த்த அங்கம்பூம்பாவை.

ளுடையபிள்ளை வரப்போகிறாராம். திருமயிலையில் ஒரே பரபரப்பாயிருந்தது. திருவொற்றியூரில் இருக்கும் அவரை சிவநேசர் அழைத்துவருகிறாராம். பாதையெல்லாம் பூக்கள். எப்போதும் ஓயாத அலைகளால் நனைந்திருக்கும் அந்த நெய்தல் நிலம் அன்று அந்த சாலையில் தூவியிருந்த மலர்களில் இருந்து சிந்திய தேன் துளிகளால் நனைந்திருந்தது. மெத்தை விரித்ததுபோல் அவ்வளவு பூக்கள்.

அதோ வந்துவிட்டது ஆளுடையபிள்ளையின் சிவிகை. பூக்களில் மிதந்த படகு போல் வந்து இறங்கியது பல்லாக்கு. அந்தச் சிவிகையிலிருந்து சிவத்தொண்டாலும் செந்தமிழ்த் தொண்டாலும் கனிந்திருந்த திருஞானசம்பந்தப் பெருமான் இறங்குகிறார். உடலிலும் நெற்றியிலும் சிவச்சின்னங்கள் தரித்து வணக்கத்துக்குரிய சிவனடியாராக சிவநேசரின் வேண்டுகோளை நிறைவேற்ற அங்கே எழுந்தருளியே விட்டார்.

சீர்காழிச் செம்மல் எதற்காக வந்திருக்கிறார் ? அவரை ஏன் சிவநேசச் செல்வர்  அழைத்து வருகிறார் என்றெல்லாம் மக்கள் கேள்வி கேட்டுக் கொண்டார்கள். ஒரு சாரார் சொன்னார்கள்,. எல்லாம் சிவநேசரின் மகள் அங்கம் பூம்பாவையை மணந்துகொள்ளத்தான். ஆனால் ஐயகோ அவள்தான் இப்போது சாம்பலாகிவிட்டாளே. ஒரு குடத்தில் பிடி சாம்பலும் எலும்புமாக மிஞ்சி இருப்பவளைக் காட்டவா அழைத்துவந்தார் என்றார்கள் சிலர்.  

திங்கள், 11 ஜூன், 2018

பசிப்பிணி போக்கிய பெண் துறவி. தினமலர் சிறுவர்மலர் - 21.

பசிப்பிணி போக்கி  (பவத்திறம் அறுத்த) பெண் துறவி.

புத்த விஹாரங்கள் ஸ்தூபிகளோடு உயர்ந்து நிற்கின்றன. காவி உடை உடுத்திய பிக்குகள் வரிசையாக வந்து புத்தம் சரணம் கச்சாமி. தன்மம் சரணம் கச்சாமி எனக் கூறி வழிபட்டுச் செல்கிறார்கள். எங்கெங்கும் புத்த பிக்குகள், பிக்குணிகள் காணப்படுகிறார்கள்.

பவத்திறம் அறுத்தல் என்றால் பிறப்பறுக்க வேண்டுதல். இளமை, யாக்கை, செல்வம் இம்மூன்றும் நிலையில்லாதது என்பதை உணர்ந்த அத்துறவிகளுள் சின்னஞ்சிறு பெண் துறவியும் நடந்து செல்கிறாளே. அவள் முகத்தில் பெரும் அமைதியும் பேரன்பும் பொலிகிறதே. இளம் வயதில் துறவியானாலும் எந்த இடசங்கத்தையும் பொருட்படுத்தாத வீரம் தெரிகிறதே. கம்பீரமான அந்தப் பெண் துறவி யார். ? அவள் இளமைக்கு ஏற்பட்ட இடைஞ்சல்களை எப்படிக் கடந்தாள் எப்படி இச்சிறு வயதிலேயே ஞானப் பெண்ணானாள். ?

ஞாயிறு, 10 ஜூன், 2018

செவ்வாய், 5 ஜூன், 2018

தெலுங்கானா பொம்மலாட்டமும் துள்ளியெழுந்த பாம்பும்.

ஹைதராபாத் ஷில்பாராமத்தில் சோகன்லால் பட் இயக்கிய பொம்மலாட்டத்தில்தான் இத்தனை கலாட்டாவும். இதனை தெலுங்கில் காத்புட்லி ( KATHPUTLI ) என்கிறார்கள்.

தோல்பாவைக் கூத்துகள், பொம்மலாட்டங்கள் ஆகியன இரண்டு மூன்று ( நௌதங்கி சாலை ஓர உணவகமான சைபர் பேர்ள் ( CYBER PEARL ) மற்றும் மாதாப்பூர் ஒலிம்பியா மித்தாய் ஷாப்பிலும்) உணவகங்களிலும் நடப்பதாகக் கூறுகிறார்கள்.

ஹைதையில் பொது நிகழ்வுகள், திருவிழாக்கள், கலாச்சார கிராமத்தின் கோடைத்திருவிழா, மக்கள் கூடுமிடங்கள், சந்தை ஆகியவற்றில் கூட இந்த பொம்மலாட்டங்கள் ( பப்பட் ஷோ ) நிகழ்த்தப்படுகின்றன. ஹைதை மக்கள் மிக விரும்பிப் பார்க்கும் ஷோ இது எனலாம். குழந்தைகளை வெகுவாகக் கவர்ந்த ஷோவும் கூட.

வெள்ளி, 1 ஜூன், 2018

இன்னும் இருபத்தி ஐந்து.


1.எங்கு படித்தீர்கள்? எது சொந்த ஊர்?

ப்ரிகேஜி எல்கேஜி யூகேஜி காரைக்குடியில் உள்ள அழகப்பா மாண்டிசோரியில் படித்தேன். முதலாம் இரண்டாம் வகுப்புகளை ராஜமன்னார்குடியில் உள்ள செயிண்ட் ஜோசப் கான்வெண்டில் படித்தேன். அதன் பின் மூன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்புவரை ராஜமன்னார்குடியில் கணபதி விலாஸில் படித்தேன். ஒன்பதாம் வகுப்பிலிருந்து ப்ளஸ்டூவரை செயிண்ட் ஜோசப் ( தூய வளனார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ) படித்தேன். மதுரை ஃபாத்திமா கல்லூரியில் இளங்கலை வேதியல் படித்தேன். எனது சொந்த ஊர் காரைக்குடி. 

2.இளமையில் புத்தகங்கள் படிக்கும் ஆர்வம் இருந்ததா

இளமையில் புத்தகம் படிக்கும் பேராவலால் தூண்டப்பட்டிருந்தேன். தினமணிக்கதிரில் வெளிவந்த என் பெயர் கமலாதாஸை நான் விரும்பிப் படிக்கும்போது நான் நான்காம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தேன். அதன் பின் பைண்டட் புத்தகங்களாக வாஷிங்டனில் திருமணம் ( சாவி ) இவள் அல்லவோ பெண் ( மணியன் ) ஆகியோரது கதைகளை விரும்பிப் படித்திருக்கிறேன். இந்துமதி, சிவசங்கரி, அனுராதா ரமணன், பாலகுமாரன், சுஜாதா ஆகிய வெகுஜன எழுத்தாளர்கள் என்னைக் கவர்ந்திருக்கிறார்கள். ஜெயகாந்தனை படித்துவிட்டு இவர் ரொம்ப மண்டைக்கனம் பிடித்த ஆள் என நினைத்திருக்கிறேன்.


3.நவீன கவிதைகளை எப்போது படித்தீர்கள்

கல்லூரிப்பருவத்தில் படித்தேன். பெரும்பாலும் மு மேத்தா, வைரமுத்து, அப்துல் ரஹ்மான் ஆகியோரது கவிதைகளைப் படித்திருக்கிறேன். கலாப்ரியா, வண்ணதாசன், ந பிச்சமூர்த்தி, ஆத்மாநாம், பிரமீள், நீல பத்மனாபன், கண்ணதாசன் ஆகியோரது கவிதைகளை வாசித்திருக்கிறேன். ”தற்காலத்தில் பெண்களின் நிலைமை “ என்ற தலைப்பில் எனது தமிழ் ஆசிரியை ( அசடனையும் குற்றமும் தண்டனையையும் மொழிபெயர்த்து முப்பெரும் விருது வாங்கியவர் ) எம் ஏ சுசீலா அவர்கள் ஆராய்ச்சி செய்து வந்தார்கள். அதற்காக வாங்கிய புத்தகங்களை எங்களுக்கு வாசிக்கக் கொடுப்பார்கள். அப்படிப் படித்ததுதான் இந்த நூல்கள்.