திங்கள், 25 ஜூன், 2018

மெஹ்திப்பட்டிணம் பல்லேடியம் ஹாலில் கோரேஸ் இல்ல விருந்து.

அழகிகள் அணிவகுத்து வழங்கிய ரோஜாப்பூ மில்க்‌ஷேக் போன்ற வெல்கம் ட்ரிங்ஸுடன் சங்கராபரணம் குழைந்து கொண்டிருக்க ஒரு பக்கம் சாலட் தட்டுகளும் முளைகட்டிய பயறுவகைகளும் சூழ அமர்ந்திருக்கும் கல் விநாயகர்.

இன்னொரு புறம் தஹி குஸியா, பெல்பெப்பர் கட்லெட், பானி பூரி, சௌமின், அமெரிக்கன் வெஜ் சாப்சூயி, பாவ்பாஜி, ப்ராகோலி ஷோர்பா, தம் ஆலு, ஆலு டிக்கி,  மட்டர் பனீர், பஞ்சாபி ஷாஹி பனீர் க்ரேவி , பட்டர் நான், மிர்ச்சி பகோரா , நவ்ரத்னபுலாவ் என களை கட்டிக் கொண்டிருக்க.

மூன்றாவது இடத்தில் விதம் விதமான ஐஸ்க்ரீம் டெஸர்ட்டுகளுடன் பதினைந்து வகைப்பழங்கள். எதை எடுக்க எதை விட. கிவி, லிட்சி, பைனாப்பிள், ஆப்பிள், ஸ்ட்ராபெர்ரி, சப்போட்டா, மாம்பழம், மாதுளை, சீட்லெஸ் கறுப்பு திராட்சை, பச்சை திராட்சை, பப்பாளி, தர்ப்பூசணி, மலை வாழைப்பழம், செர்ரி, கிர்ணி என கலந்து கட்டி மணம் வீசிக்கொண்டிருந்தது.

இதெல்லாம் மெஹ்திப்பட்டிணத்தில் பல்லேடியம் ஹாலில் ஒரு கல்யாண ரிசப்ஷனுக்குக் கலந்து கொள்ளச் சென்றபோது எடுத்தது, உண்டது , கண்டது.


ஹைதையில் மேரேஜ் ஹால்களுக்கென்று சுமார் 3 லட்சத்திலிருந்து செலவழித்து புக் செய்கிறார்கள். அதன் பின் அந்த ஹாலுக்கான எல்லா அரேஞ்மெண்ட்ஸும் உரியவர்களைச் சேர்ந்தது. அதுவும் சுமார் 3 இலிருந்து பல லகரங்கள் செலவு கொண்டதாக அமைகிறது.

கல்யாண வீட்டுக்காரர்கள் வரும்முன்பே சென்றதால் நாம் கிட்டத்தட்ட இரண்டுமணி நேரம் காக்க நேர்ந்தது. லேட் நைட்டில்தான் விருந்து தொடங்குகிறது. நமக்கோ இங்கே ஒன்பது மணிக்கெல்லாம் வீடு என்னும் கூடடைந்து பழக்கம். நம்மூர் விசேஷமெல்லாம் அநேகமாக எட்டு ஒன்பதுக்குள் முடிந்துவிடும்.

காத்திருந்தோம் காத்திருந்தோம்.  இந்த வண்ண விளக்குகளால் மேடை ஒளிபெறுவதைப் பார்த்திருந்தோம்.

நம்ம மாதாப்பூர் கொண்டாப்பூரிலிருந்தே நாம் சீக்கிரம் வந்து விட்டிருக்க கல்யாணக்காரர்களோ இன்னும் மேக்கப்பிலிருந்து வரவேயில்லை.

நாம் ஆறு மணிக்குப்போனால் அவர்கள் எட்டு மணிக்கு வந்தார்கள். ! அதற்குள் அங்கேயே இருங்க வந்துடுறோம் என்று அநேக ஃபோன்கள். நாமும் சிலரும் தேவுடு காத்திருந்தோம்.


நமக்குத் துணையாய் இந்த கல் விநாயகரும் சாலட் முளைகட்டிய பயறு வகைகளுடன் விருந்துக்கு தயாராய்க் காத்திருந்தார்.

வெள்ளை சாட்டின் உறைகள் கறுப்பு ரிப்பன் அணிந்து யூனிஃபார்ம் அணிந்த சிறுவர்களாய் அட்டென்ஷனில் காத்திருக்கின்றன.

வெல்கம் ட்ரிங் வழங்கும் வனிதையர்.

சங்கரா என்று நமக்குத் தெரிந்த தெலுங்குப் பாடல்கள் சிலவும் இடம் பெற்றிருந்தன. !

விருந்தினர் வருகைக்குப் பின் களைகட்டிவிட்டது கல்யாணக்கூடம்.

விருந்தும் ஆரம்பமாகிவிட்டது. தூரத்தே பழத்தட்டுகளும் ஐஸ்க்ரீமும் சுபாரிகளும்.

ஸ்டால்களில் கூட்டம்.

பானி பூரி, மசாலா பூரி, பேல் பூரி எதுவேணுமோ கிடைக்கும்.

இதுதான் தஹி குஸியா. தயிர் வடைதான். :) கொத்துமல்லி பீட்ரூட் தூவி வெட்டி  தயிர் போட்டு சாட் மசாலா தூவிக் கொடுத்தார்கள் இந்த ப்ரியா கேட்டரர்ஸ்.

குடைமிளகாய் கட்லெட். செம ருசி. எல்லாம் நார்த் இந்தியன் பஃபே.

உருளைக்கிழங்கு டிக்கியும்தான்.

ஜில் ஹில்லுன்னு இன்னொரு தயிர்வடை :)

ஆலு டிக்கியும் பாவ் பாஜியும் பக்கம் பக்கமாய்.

நூடுல்ஸ் மேளா. ஒவ்வொரு உணவுக்கும் அந்த அந்த சிறப்பு தயாரிப்பாளர்கள். சைனீஸ் நூடுல்ஸ் தயாரிக்க சைனீஸ் செஃப்  & சர்வர்கள்.

வாங்க வெட்டலாம்.கொஞ்சம் நவ்ரத்னபுலாவ், சாப்சூயி, நூடுல்ஸ், வெள்ளரி, கேரட் பீட்ரூட், லெமன் ஸ்லைஸஸ். கோபி மஞ்சூரியன்,ஸ்ப்ரௌட்டட் மேத்தி, காலிதால், சன்னா, ஷாஹி பனீர் மசாலா.

மட்டர் பனீர், மிர்ச்சி பகோரா, பட்டர் நான்,மட்டர் பனீர். அதே சாலட்டுகள்.
ஃபினிஷிங் டச் ஐஸ்க்ரீம் & ஃப்ரூட்ஸ்.

பதினைந்து வகைப் பழங்கள்  வித் கிங் கேஸர் .

தொட்டிச் செடிகளும் தோட்டச் செடிகளும் சூழ ஒரு குளு குளு ரிசப்ஷன். மிகமிக அருமை.
அக்கம் பக்கமும் கல்யாண ஹால்களே இடம் பெற்றிருந்தன.

அங்கே நின்றிருந்த மிக்கி க்ரூப் நம்மை கையாட்டி விடை கொடுத்தார்கள்.

நாம் கிளம்பும் போதும் சிலர் கார்களை பார்க் செய்துவிட்டு ஃபங்க்‌ஷனுக்கு வந்து கொண்டிருந்தார்கள்.


மொத்தத்தில் மெஹ்திப்பட்டிணத்தில் பல்லேடியம் ஹாலில் கோரேஸ் இல்லத்தின் விருந்து செம விருந்து. 

5 கருத்துகள்:

  1. கண்கவர் உணவு வகைகள்!

    நம்மூரிலும் ரிஷப்ஷனுக்கு ஏழு, ஏழரைக்கெல்லாம் சென்று ஏமாந்திருக்கிறேன். மேக்கப் முடிந்து ஜோடி மேடைக்கு வர எட்ட மணி ஆகி, பொறுமையைச் சோதிக்கும்!

    பதிலளிநீக்கு
  2. ரிஷப்ஷனுக்குச் சென்று அத்தனை உணவு வகைகளையும் பார்த்த உணர்வு... வர்ணனை புகைப்படங்கள் எல்லாம் பார்த்துப் பிரமிப்புடன் உணர்ந்தேன்.

    பதிலளிநீக்கு
  3. ஆஹா!!! பல உணவு வகைகளின் பெயர்களே தெரியவில்லை. இப்படியான உணவெல்லாம் உண்டதில்லை. இதுவரை கேரளம் தாண்டி கல்யாணம் அட்டென்ட் பண்ணியதில்லை என்பதால் இருக்கலாம்.

    கீதா: கண் கவர் உணவு. நாவூறல் செம க்ரான்ட் ரிசப்ஷன் போல!!! இங்கும் ரிசப்ஷன் பொறுமை சோதிக்கும் ஒன்று. அதனால பெரும்பாலும் முகூர்த்தம் சென்று வந்துவிடுவது...ரிசப்ஷன் மொய் வைக்க க்யூ இதெல்லாம் போர். அதனால் நான் பொதுவாகக் க்யூவில் நின்று ஃபோட்டோ தவிர்ப்பது என் வழக்கம். நெருங்கிய உறவினர் மட்டும் வேறு வழி இல்லையே...பெண்ணின் பெற்றோரை தனியாகச் சந்தித்துமொய்யை கொடுத்துட்டு சாப்பாடு போய்டு மின்னல் வேகத்துல வீடு வந்துருவேன் ஹா ஹா ஹா

    பதிலளிநீக்கு
  4. ஆம் ஸ்ரீராம் நன்றி :)

    நன்றி டிடி சகோ

    நன்றி முத்துசாமி சகோ

    அட சூப்பர் கீத்ஸ். :) ஆனா அங்கே 3 வித பாயாசம் கொடுப்பாங்களே டேஸ்டா இருக்குமே. பழப்பிரதமன், அடைப்பிரதமன், சக்கைப் பிரதமன், அவல் பாயாசம் & பால் பாயாசம் மாதிரி கூட :)

    பதிலளிநீக்கு
  5. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)