உருண்டு புரள்கிறது
மாநகரச் சாலைப்பள்ளத்தில்
மழைநீர்.
குளித்த எருமைகளாய்
அடர்கருப்பில் கார்பார்க்கிங்கில்
கட்டிக்கிடக்கின்றன வண்டிகள்.
சிறிதாய்ப் பெய்த மழையில்
மிதக்கும் நகரம் ஆகிறது
மாநகரம்.
சிறகை விரிப்போம். தென்கச்சி கோ. சுவாமிநாதனின் நூல்
இந்தநாள் இனிய நாள் என்ற உற்சாகக் குரலுக்குச் சொந்தக்காரர் தென்கச்சி கோ. சுவாமிநாதன். எளிமையான வார்த்தைகளில் தினம் ஒரு தகவல் பகிரும் இவரின் புத்தகம் சிறகை விரிப்போம். SIXTH SENSE
PUBLICATIONS. வெளியீடு. விலை ரூ 100.
தினமணியில் (வானொலி, தொலைக்காட்சி, பத்ரிக்கை ஆகியவற்றில்)
வந்த தொடர் இது. சிகரம் தொடக்காத்திருக்கும் வாசகர்களின் சிறகுகளைத் தடவிக் கொடுத்து வானமே எல்லை என அவர்களைத் தயார்ப்படுத்துகிறது நூல். மதச்சார்பற்று எல்லா மதங்களிலும் உள்ள நல்ல கொள்கைகளைக் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்கிறார். தனக்கேயுரிய ஒரு மென்மையான, அழுத்தமான நகைச்சுவை உணர்ச்சியோடு ஒரு நிகழ்ச்சியையும், ஒரு கதையையும் சொல்லி விளக்கும் உத்தி சிறப்பு.
நினைவில் நிற்கும் நேர்காணல்கள்
ஒவ்வொரு முறையும் நேரிலோ., தொலைபேசி மூலமோ ஒருவரை பேட்டி அல்லது நேர்காணல் எடுக்க பலமுறை முயலவேண்டி இருக்கும். முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் என கடைசியில் வாகை சூடலாம். சில முடியாமலும் போகும். ”என் மனைவி” என்ற தலைப்பில் ஒரு மாத இதழுக்கான கட்டுரைக்காக ஒரு நடிகரை தொடர்பு கொண்டேன். அவருடைய மனைவிக்கு பத்ரிக்கையில் வருவது பற்றிய ஆர்வமில்லை என்றார் அவர்.! . இன்னொரு பிரபலத்தை தொடர்பு கொண்டால் அவர் தன் மனைவியைப் பற்றிக் கூறியதை விட அவரின் மனைவி அவரைப்பற்றிக் கூறியதே அதிகம். இன்னும் ஏதேதோ படிக்கும் அவருக்கு மனைவி லஞ்ச் பாக்ஸ் கட்டிக் கொடுத்து குழந்தையைப் போல பார்த்துக் கொள்வதாக கூறினார் !. மூன்றாவதாக ஒரு சினிமா மற்றும் நாடக நடிகர். இவர் நேரில் வராமல் பேட்டி எல்லாம் கிடையாது என்று மறுத்து விட்டார். இப்படியாக அந்த தலைப்பு கைவிடப்பட்டது.
நாடகம் நிகழ்வு அழகியல்
நாடக உலகம் இயல் இசை சேர்ந்த அழகியல் கொண்டது. முத்தமிழும் இணைந்து கிடக்கும் ஒரு பரந்த வெளியை உடையது. பெண்ணிய உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு சிறந்த நாடக ஆசிரியரின் சந்திப்பு நிகழ்ந்தது. நம்மையே நாடகக் கதாபாத்திரங்களாக உணரச் செய்யும் ஒரு வசீகர வாசிப்பு அவருக்கே சொந்தம். உலகமே ஒரு நாடக மேடை. அந்த மேடையில்., எல்லையற்ற வெளியில் ”நாடக வெளி” என்ற நாடகக் குழுவை நடத்திவரும் திரு ரங்கராஜன் அவர்களின் புத்தகம் “ நாடகம் நிகழ்வு அழகியல்”.