வியாழன், 15 நவம்பர், 2012

மனித நேயர்

தொழுகைத் தொப்பி
புனிதநூல் பிரதி
பேரரசன் உடுப்பிற்கும்
உணவிற்கும்
நெய்தபடி இருந்தார்.

மலை எலிகளை
விரிந்த நாகங்களை
விக்கிரகங்களை உடைத்து
பள்ளிகளை
எழுப்பினார்.

டாரா ஷிக்கோ
புறச்சமயியானான்,
அவனோடு ஷூஜா, முராட்,
சர்மட்டை சிதைத்தார்
வாழும் புனிதர்.

மதமெனும்
மதுவில் மூழ்கியவர்
வீராபாயையும்
இழந்தார் தந்தையின்
அன்பையும்.


தீன் இலாஹியோடு
கிளைத்திருந்தார்
டாரா ஷிக்கோவின்
வழிகாட்டியாய்
மனித நேயர்.

மனித நேயர் வழிவந்தும்
மத நேயராய்
இறப்பிற்குப் பின்னும்
தன் கொள்கைப் பிடியில்
வாழும் புனிதர். 


 -- நன்றி குஷ்வந்த்சிங்கின் ஔரங்கஷீப் ஆலம்கீர் ஹிந்துஸ்தான் பேரரசர்.

டிஸ்கி:- இந்தக் கவிதை 10, அக்டோபர், 2011 திண்ணையில் வெளிவந்தது.


4 கருத்துகள்:

  1. இது பேரரசர் ஔரங்கசீப் பற்றியும் அவர் வழித்தோன்றலான அக்பர் பற்றியுமான கவிதை பெயரில்லா

    பதிலளிநீக்கு
  2. அக்பரின் வழித்தோன்றல்தானே ஓளரங்கசீப்

    பதிலளிநீக்கு
  3. ஆம் வேல் முருகன்.. சிறிது மாற்றம் செய்துள்ளேன். சட்டென்று எழுதியதால் இந்தப் பிறழ்வு ஏற்பட்டுவிட்டது. திருத்தியமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)