புதன், 14 நவம்பர், 2012

குழந்தைகள் தினத்தில் பெற்றோரைப் போற்றுவோம்.

இந்தக் குழந்தைகள் தினத்தன்று என்னைக் கவர்ந்த மூன்று பெற்றோரைப் பற்றிச் சொல்லலாம் என்று நினைக்கிறேன். நான் முகநூலில் சந்தித்தவர்கள் இவர்கள். இவர்கள் தங்கள் குழந்தைகளுக்காக, அவர்கள் ஈடுபடும், ஆர்வம் கொள்ளும் துறையில் ஊக்கம் கொடுப்பவர்கள். விடாமுயற்சியோடு செய்யும் கலையை இவர்கள் இவர்களின் பெற்றோரிடமிருந்தே கற்றுக் கொண்டிருக்க வேண்டும். எனவே என்னுடைய ராயல் சல்யூட்  இந்த மூன்று பெற்றோருக்கும்.


முதலில் அர்ச்சனா அச்சுதனின் அம்மா. இவரைப் பற்றி நிறைய சொல்லலாம். ஆனால் அர்ச்சனா அச்சுதன் ( உடற்குறையுள்ள  மக்களுக்காக சம்பூர்ண் என்ற அமைப்பை உருவாக்கி வெற்றிகரமாக நடத்தி வருபவர் ) என்ற சமூக சேவையில் அக்கறை கொண்ட அழகுக் குழந்தையை உருவாக்கியவர் மற்றும் தன்னுடைய , தனக்குக் கிடைத்த, தனக்குக் கடவுள் அளித்த ஒரு குழந்தையை மிகச் சிறப்பாக பேர் சொல்லும் பிள்ளையாக்கியவர் எனவே அவருக்கு முதல் சல்யூட்.

இரண்டாவதாக ஆர்த்தி மங்களா சுப்ரமணியனின் தந்தை முரளி சுப்ரமணியன்.  சின்ன வயதில் ஆர்த்தியின் மாஜிக் ஆர்வத்தைப் பார்த்து அவருக்குப் பயிற்சி கிடைக்க ஏற்பாடு செய்து இன்று இளம் பெண் மாஜிஷியனாக மிளிரக் காரணமானவர். இன்னும் திரை, இசை எல்லாவற்றிலும் மேலும் கல்லூரிகளில் சிறப்பு உரையாற்றவும், துணிச்சலான மாஜிக் ஷோக்கள் நிகழ்த்தவும், சிறப்பான கட்டுரைகள் எழுதவும்.புத்தகம் வெளியிடவும், பக்கபலமாக இருப்பவர். இவருக்கு என் இரண்டாவது சல்யூட்.


மூன்றாவது செஸ் அர்ஜுனின் அம்மா லதா வைரவன்.  ஐந்து வயதில் அர்ஜுனின் செஸ் ஆர்வத்தைக் கண்ட அவர் அதை ஊக்குவித்து இன்று பல போட்டிகளில் அர்ஜுன் வென்று வருவதற்குக் காரணமானவர். பையன் பெங்களூருவில் தங்கிப் படிக்க ஒவ்வொரு டோர்னமெண்டுக்கும் அம்மா சிங்கப்பூரில் இருந்து வந்து பையனின் எல்லா மாட்சுகளுக்கும் அழைத்துச்சென்று பங்குபெற வைத்து ஊக்கமளிப்பவர். அவருக்கு என் மூன்றாவது சல்யூட்.

குழந்தைகள் தினம் என்றால் குழந்தைகளை மட்டும்தான் வாழ்த்தணுமா என்ன. அவர்களை இவ்வளவு சிறப்பாக உருவாக்கிய பெற்றோரையும் வாழ்த்தலாம்தானே. உங்கள் அக்கம் பக்கத்திலும் யாரும் இருந்தால் நீங்களும் உங்கள் வாழ்த்தைத் தெரிவியுங்கள்.

எவ்வளவு சாதனை செய்தாலும் அம்மா அப்பாவின் தியாகங்கள் வெளியே தெரிவதில்லை. அடுத்து வரும் மனைவியோ, கணவனோதான் வெற்றி பெற்றவர்களின் பக்கம் இருந்து போஸ் கொடுப்பார்கள். எனவே நாம்  இந்தக் குழந்தைகள் தினத்தில் பெற்றோரைப் போற்றுவோம்.



8 கருத்துகள்:

  1. போற்றுங்கள் போற்றப்படுவீர்கள். பழகுங்கள் பழகப்படுவீர்கள் பேசுங்கள் பேசப்படுவீர்கள்

    பதிலளிநீக்கு
  2. குழந்தைகள் தினத்தில் குழந்தைகளின் பெற்றோரையும் சிறப்பாக விவரித்து வாழ்த்திய உங்களின் எழுத்துக்கு ஒரு சல்யூட்க்கா. இனிய குழந்தைகள் தின வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  3. Nalla Pathivu. Unamiyahaga nalla kuzhanthaigalai uruvakkiya petrorkalaithan muthalil paratta vendum. Avargal nalla vazhiyil uruvakkiyathai paratta vendiyathu than.

    பதிலளிநீக்கு
  4. மூவரைப் பற்றியும் சிறப்பாக அறிமுகம் செய்து வைத்தமைக்கு நன்றி...

    குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  5. குழந்தைகள் தினம் என்றால் குழந்தைகளை மட்டும்தான் வாழ்த்தணுமா என்ன. அவர்களை இவ்வளவு சிறப்பாக உருவாக்கிய பெற்றோரையும் வாழ்த்தலாம் ..

    சிறப்பான சிந்தனை .!

    குதூகல குழந்தைகள் தின வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  6. சிறப்பான அறிமுகம்

    குழந்தைகள் தினத்தில் பெற்றோரைப் போற்றுவோம்.

    குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  7. நன்றி லெக்மண் ராஜா சார்

    நன்றி கணேஷ்

    நன்றி மணவாளன்

    நன்றி தனபாலன்

    நன்றி ராஜி

    நன்றி சரவணன்

    பதிலளிநீக்கு
  8. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)