வெள்ளி, 9 நவம்பர், 2012

வியாபாரி..

மிக உன்னதமான
ஒன்றைப் போன்ற
பாவனைகளுடன்
எழுதப்படுகின்றன.
ஒவ்வொரு வார்த்தைகளும்
மிக எளிமையான
ஒன்றைப் பற்றி.

புரிந்து கொள்ளவும்
உணர்ந்து கொள்ளவும்
அயற்சி ஏற்படுத்தும்
ஒவ்வொரு நிமிடங்களும்
அதன் மதிப்பை
அதிகப்படுத்துகின்றன.


அயர வைப்பதுபோல்
தோன்றினாலும்
மலையிலிருந்து ஒரு கல்
மடுவிலிருந்து கொஞ்சம் சேறு
பனியிலிருந்து சிறு பாறை
காட்டிலிருந்து ஒரு சுள்ளி என
பொறுக்கிச் சேர்க்கும் கலவை
பல் நீட்டிக் கொண்டிருக்கிறது.

சரளமற்ற ஒன்றை
சர்வதேசத்தரம் என்ற
சங்கப்பலகை போன்றதான
மிதக்கும் பீடத்தில் சுமப்பவர்கள்
சாதாரணரர்களைக் கேட்கிறார்கள்
சகலமும் தெரியுமா உனக்கு..

வாழ்வியல் இலக்கியம் படைத்தவனும்
மதிப்பீடுகளால் தரவிறக்கம்
செய்யப்படுகிறான்..
எத்தனை இலக்கியம்
தெரியும் உனக்கு என
இலக்கிய வியாபாரிகளால் ..

 டிஸ்கி:- இந்தக்கவிதை 10 அக்டோபர் , 2011 திண்ணையில் வெளியானது.


5 கருத்துகள்:

  1. அருமை.....பகிர்வுக்கு மிக்க நன்றி.....

    நன்றி,
    மலர்
    http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    பதிலளிநீக்கு
  2. கவிதை ரொம்ப அருமையா இருக்கு அக்கா.

    பதிலளிநீக்கு
  3. வியாபாரி என்றால் அப்படித்தான்... வித்தியாசமான வரிகள்...

    பதிலளிநீக்கு
  4. நன்றி மலர்

    நன்றி குமார்

    நன்றி தனபால்

    பதிலளிநீக்கு
  5. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)