வியாழன், 8 நவம்பர், 2012

அவரோகணம்.

பழக்கப்பட்ட உடல்களைப்
போலிருந்தன அவை
செய்கையும் செய்நேர்த்தியும்
எத்தனை சிற்பியோ..
விரிந்தும் குறுகியும்
அகண்டும் பருத்தும்
ஆதிமூர்க்கங்களின் விலாசங்கள்
அறிகுறிகளின் கையெழுத்தோடு.

நிராசையோ.,
நிரந்தரச் சுவையோ.,
நேர் நேர் தேமாவென
ஒற்றைச் சாளரம் வழி
வழிந்து பெருகியது காற்றில்
ஓரிதழ் தாமரையென.
ஒன்றிணைந்து மிதந்து
கொண்டிருந்தன..
நிறை நேர் புளிமாவிலிருந்து
முற்றிலும் ஒதுங்கி.

டிஸ்கி :- இந்தக் கவிதை 10, அக்டோபர் , 2011 திண்ணையில் வெளியானது


4 கருத்துகள்:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)