ஞாயிறு, 31 மார்ச், 2019

அமேஸான் கிண்டிலில் என் மின்னூல்கள் ( 11 - 15 ) AMAZON KINDLE E BOOKS 11 - 15.

அமேஸானில் என் பதினொன்றாவது மின்னூல் “ காதல் வனம் “ நாவல் வெளியாகி உள்ளது. ( இங்கே அறிவிக்காமலே சில பிரதிகள் விற்றும் உள்ளது  ! 

விலை ரூ. 70/-. $ 0.99 

செல்ஃபோனில் கூட டவுன்லோட் செய்து படிக்கலாம். 

இந்த இணைப்பில் சென்று வாங்கலாம்.https://www.amazon.in/dp/B07P7XV232

சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்திலும் “ காதல் வனம் “ கிடைக்கிறது.

சனி, 30 மார்ச், 2019

சாட்டர்டே போஸ்ட். திரு விவிஎஸ் சார் கூறும் கூட்டாக ஒரு சேமிப்பு.

இந்த வாரமும் திரு விவி எஸ் சார் உங்களுக்காக சேமிப்பு பற்றிக் கூறுகிறார்கள். 

போவோமா ஊர்கோலம் !

”வாங்க, அந்த வீட்டுக்குள்ள போய்ப் பார்க்கலாம்.  அதுவும் நம்ம வீடு மாதிரிதாங்க.  அங்க பாருங்க,  ஹால்ல லைட் போட்டே இருக்கு.   காலைல 7 மணிக்கே அணைச்சிருக்கலாம்.  இப்ப மணி 9.  ரெண்டு மணி நேரமா வேஸ்ட்டா எரிஞ்சிருக்கு.”

அதோ அங்க டைனிங் டேபிள்ல ஒரு bowl நெறைய ஃபுரூட்ஸ் இருக்கு.  ஆனா வாடிப் போய் இருக்கு.  ஒண்ணு நேத்தைக்கே யூஸ் பண்ணி இருக்கணும்.  இல்லேன்னா மக்கும் குப்பைய என்ன செய்யணும்மோ அதச் செய்யணும்.

இது மார்ச் மாசம்.  அடுத்த மாசம் ஸ்கூல் லீவ் உட்டுடுவாங்க.  பசங்களோட இந்த வருஷ புக்ஸ்-ஸ என்ன செய்யப் போறாங்க-ன்னு கேட்டுப் பாருங்க.  பழைய புக்ஸ் கடைல போடணும்ன்னு வெச்சிருக்கோம்ன்னு சொல்வாங்க.  ஆனா கடைக்குப் போகத்தான் நேரம் இருக்காது. 

இது எல்லா வீட்லேயும் நடக்கறதுதான்.  குறிப்பா வாய்ப்பகுதி பிய்ந்து போன பிளாஸ்டிக் குடங்கள்.  ஒரு வீட்டுக்கு இரண்டு அல்லது மூன்றாவது இருக்கும்.  அதற்குக் காரணம் மொத்த குடமும் ஒரே அடர்த்தி கொண்ட பிளாஸ்டிக்கால் செய்யப்பட்டது.  வாய்ப்பகுதியைப் பிடித்தோ அல்லது அழுத்தியோ குடத்தைத் தூக்கும் போது அது பிய்ந்து கொள்கிறது.

வெள்ளி, 29 மார்ச், 2019

தேசாபும் தேமோரும்.

2121. தேசாப் என்றொரு படம் என் இரத்தநாளங்களைக் கொதிப்படையச் செய்தது. அதேபோல் சண்டைக்கோழி, டங்கல்.இதே போல் ஒரு பத்ரிக்கையின் வீடியோ பத்துநாட்களாக கோபம் உண்டாக்கிக் கொண்டே இருக்கிறது.  அந்தப் பெண்ணின் குரலும் அந்தப் பையனின் அம்மாவின் புலம்பலும் கூட இம்சிக்கின்றன.

முகநூல் & வாட்ஸப்புக்கும் தணிக்கை தேவை.

2122. மௌனியை நினைத்துக் கொண்டேன் :)

நாம் சாயைகள் தானா? எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம். இங்கே ஒளிவீசிச் சுடரும் நட்சத்திரங்களாக. திகிலூட்டிய வால் நட்சத்திரங்களும் தோன்றுகின்றன. ஒன்றைத் தொட்டு ஒன்று என நினைவும் எழுத்தும்.. :)

வியாழன், 28 மார்ச், 2019

காரைக்குடிச் சொல்வழக்கு :- கித்தானும் நடையனும்.

1161. பூச்சிபொட்டு - பூச்சிகள், சிறு வண்டுகள், பாம்பு, ஊர்வன.

1162. முட்டைச்சுவர் - சுவர் அமைக்கும்போது காரையுடன் முட்டையின் வெள்ளைக்கருவையும்  கருப்பட்டியையும் சேர்த்து அரைத்துப் பூசுவார்கள். அதனால் அவை பாலீஷ் போட்டதுபோல் இருக்கும் . வெள்ளை ( சுண்ணாம்பு ) அடிக்க வேண்டிய அவசியம் இருக்காது.

1163. அப்பைக்கி அப்ப - அப்போதைக்கு அப்போதே.

1164. சேயகொள்ள - திருமணம் செய்யக் கொள்ள, ஒருவேலையைச் செய்வது குறித்து மற்றும் உறவுகளுக்குள் பந்தம் கொள்வது.

1165. பொய்த்தாரேன், போயாறேன், வந்தாரோம் - பொய்த்தாரேன் - போய் வருகிறேன் , போயாறேன் - இதுவும் போய் வருகிறேன் என்று சொல்வதுதான். வந்தாரோம் - வந்துவிடுகிறோம் என உறுதி அளிப்பது.

1166. ஒருதடியா - ஒரு வழியாக, ஒரே தரமாக,

1167.சத்த - கொஞ்ச நேரம்.

1168. கடுசு - கடுமை கொண்டவரைக் குறிப்பிடுவது.  பொல்லாதவர்.

புதன், 27 மார்ச், 2019

அகம்பாவம் தந்த அவமானம். தினமலர் சிறுவர்மலர் - 10.

அகம்பாவம் தந்த அவமானம்
மக்குக் கிடைக்கும் எந்த நன்மைக்கும் நாம் நன்றி உடையவர்களாக இருக்கவேண்டும். அதை விடுத்து நாம் பெரிய ஆள் அதனால்தான் எல்லாம் நடக்கிறது., எல்லாரும் பணிகிறார்கள், சேவகம் செய்கிறார்கள் என்று அகந்தையோடு நினைக்க கூடாது. அப்படி அகந்தையோடு நினைத்தான் ஒருவன் அதனால் அவனுக்கு அவமானம் மட்டுமல்ல உயிர் பயமும் நேர்ந்தது. அவன் யார் என்ன தவறு செய்தான் எனப் பார்ப்போம் குழந்தைகளே.
ஞ்சபாண்டவருள் ஒருவன் அர்ஜுனன். இவன் குந்தியின் மகன். இவனுக்குத் தருமன் என்ற அண்ணனும், பீமன், நகுலன், சகாதேவன் ஆகிய தம்பிமாரும் உண்டு. அஸ்தினாபுர அரண்மனையின் ஆட்சி உரிமைப் போட்டியில் குருஷேத்திர யுத்தம் கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் நடைபெற்றது.
இருவருமே பெரியப்பா சித்தப்பா மக்கள்தான் என்றபோதும் கௌரவர்களுக்கு நாட்டின் இம்மி இடத்தைக் கூட பாண்டவர்களுக்கு விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை இல்லாததால் யுத்தம் வந்தது. அப்போது கௌரவர்கள் பாண்டவர்கள் இருவருமே கண்ணனின் துணை நாடிச் சென்றார்கள். துரியோதனன் கண்ணனின் படை பலம் முழுவதையும் தனக்காகப் போரிடுமாறு கேட்க அர்ஜுனனோ கண்ணன் மட்டும் தங்கள் பக்கம் இருந்து போரிட்டால் போதுமெனக் கேட்கிறான்.
இதற்கு ஒத்துக் கொண்ட கண்ணன் குருஷேத்திர யுத்தத்தின்போது அர்ஜுனனுக்கு தேரின் சாரதியாகி கீதா உபதேசம் செய்கிறான். முடிவில் பாண்டவர்கள் ஜெயிக்கிறார்கள். இதனால் அர்ஜுனனுக்கு அகந்தை வந்தது. ’தெய்வமே எப்போதும் என் கூடவே இருக்கிறது ஆகையால் நன்றி என்று நினைத்தான் இல்லை “ “தெய்வமே எனக்குத் தேரோட்டியதே அப்படியானால் இந்த உலகிலேயே நான்தான் மிகச் சிறந்த பக்திமான். என்னைவிட கண்ணனுக்கு சிறந்த பக்திமான் யாருமே இருக்க முடியாது” என்று அகம்பாவமாக நினைத்தான்.

திங்கள், 25 மார்ச், 2019

நல்லவனுக்கு நேர்ந்த சோதனைகள். தினமலர் சிறுவர்மலர் - 9.

நல்லவனுக்கு நேர்ந்த சோதனைகள்.
ருவன் எவ்வளவு நல்லவனாக இருக்கிறானோ அவ்வளவுக்கு சோதனைகளை அனுபவிக்க நேரும். ஆனாலும் சோதனைகளைத் தாங்கிக் கொண்டும் தீய வழியில் செல்லாமல் நல்லவழியிலேயே வாழ்ந்த இராஜா ஒருவரின் கதையைக் கூறுகிறேன் கேளுங்கள் குழந்தைகளே.
குந்தள ராஜ்ஜியம் என்றொரு தேசம் இருந்தது. அந்த நாட்டில் அப்போது யுத்தம் நடந்துகொண்டிருந்தது. பட்டத்து ராணியோ கர்ப்பமான வயிற்றோடு பிரசவ வலியில் தவித்துக் கொண்டிருக்கிறாள். மன்னனோ பகைவர்களோடு சண்டையிட்டுக் கொண்டிருக்கிறான்.
பிரசவ நேரம் நெருங்குகிறது. மன்னனோ யுத்தத்தில் மாண்டுவிட்டான், ராணியோ ஒரு ஆண் குழந்தையைப் பெற்றுவிட்டு அவளும் மரித்து விடுகிறாள். பகை மன்னன் நாட்டை ஆக்கிரமிக்கிறான். பாவம் அந்தக் குழந்தை. தந்தையும் தாயும் மரிக்க நாடும் பறிபோகிறது. நம்பிக்கையான பணிப்பெண் ஒருத்தி அக்குழந்தையை அயல்தேசத்துக்கு எடுத்துக் கொண்டு போய் வளர்க்கிறாள்.
ஐயகோ என்ன துர்ப்பாக்கியம் அந்தத் தாதியும் சில நாட்களில் இறந்து விடுகிறாள். அக்குழந்தையை அங்கேயிருந்த மக்களே வளர்க்கத் தொடங்குகிறார்கள். நதியில் குளித்து கரையில் விளையாடி அம்மக்கள் கொடுத்த உணவை உண்டு வளர்கிறது அக்குழந்தை.

வெள்ளி, 22 மார்ச், 2019

சீதை என்றொரு – ஒரு பார்வை.


சீதை என்றொரு – ஒரு பார்வை.

சீதை என்றொரு காப்பிய நாயகி என்ற பார்வையில் படிக்க ஆரம்பித்து சீதை என்றொரு பெண்மையின் குறியீடு என ஆசிரியர் நிறுவதைப் படித்து வியந்தேன்.

கம்பன் அடிசூடி திரு பழ பழநியப்பன் அவர்கள் பெண்ணினத்தின் பிரதிநிதியாக, பெண்ணினத்தின் வளர்ச்சியாக, பெண்ணியத்தின் வளர்ச்சியாகச் சீதையைக் கூறுகிறார்கள்.

மானிடப் பெண் செய்யத்தக்கன செய்யதகாதன என்பதை அவள் வாழ்க்கையில் இருந்தே எடுத்துக்காட்டுகிறார். சீதை கணவனுடன் பேசிய சொற்கள் இல்லறநெறியையும், அதிக முக்கியத்துவம் கொடுத்த சொற்கள் தனிமனித ஒழுக்கத்தையும் பிரதிபலிக்கின்றன.

வியாழன், 21 மார்ச், 2019

என் மின்னூல்கள் ( 5 - 10 )

என் முதல் ஐந்து மின்னூல்களும் அடுத்து வரும் ஐந்து மின்னூல்களும் பின்வரும் ஈ புக் ஸ்டோர்ஸில் கிடைக்கின்றன.


என் ஆறாவது மின் நூல் “ சிவப்புப் பட்டுக் கயிறு “ இந்த ஆன்லைன் / ஈ புக் ஸ்டோர்களில் கிடைக்கிறது.

புஸ்தகா டிஜிட்டல் மீடியா
விலை. ரூ. 75/-/ $1.99
ISBN: 9789352857173
Print Length: 126 Pages.
http://www.pustaka.co.in/home/ebook/tamil/sivappu-pattu-kayiru

அமேஸான் கிண்டில் எடிஷன்
விலை $1.06
https://www.amazon.com/Sivappu-Pattu-Kayiru-Thenammai-Lakshmanan-ebook/dp/B072JN4WV4/ref=sr_1_1?keywords=sivappu+pattu+kayiru&qid=1552838375&s=digital-text&sr=1-1-spell

SCRIBD
147 PAGES.
https://www.scribd.com/book/374949737/Sivappu-Pattu-Kayiru

GOOGLE BOOKS . RS. 75/-
https://books.google.co.in/books?id=bJtQDwAAQBAJ&pg=PA1&dq=SIVAPPU+PATTU+KAYIRU&hl=ta&sa=X&ved=0ahUKEwiimLfzxonhAhUn73MBHYHED9UQ6wEIKjAA#v=onepage&q=SIVAPPU%20PATTU%20KAYIRU&f=false

OVERDRIVE
https://www.overdrive.com/media/3980640/sivappu-pattu-kayiru

என் முதல் ஐந்து மின்னூல்கள்.

என் முதல் ஐந்து மின்னூல்கள் புஸ்தகாவிலும் மேலும் இந்த ஆன்லைன்/ ஈ புக் ஸ்டோர்களிலும் கிடைக்கின்றன.

வாங்கி வாசித்துக் கருத்துக் கூற வேண்டுகிறேன்.
என் முதல் நூல் ”சாதனை அரசிகள்” இந்த ஆன்லைன் ஈ புக் ஸ்டோர்ஸில் கிடைக்கிறது. 

http://www.pustaka.co.in/home/ebook/Tamil/saathanai-arasigal

புஸ்தகா டிஜிட்டல் மீடியா.
பக்கம் - 111
விலை :- ரூ 63/-

https://www.amazon.com/Saathanai-Arasigal-Tamil-Thenammai-Lakshmanan-ebook/dp/B074CT4WTW/ref=sr_1_fkmr0_1?keywords=sathanai+arasigal&qid=1552461495&s=digital-text&sr=1-1-fkmr0

அமேசான் கிண்டில் $99

SCRIBD - 63/-Rs
https://www.scribd.com/book/355012633/Saathanai-Arasigal

https://www.kobo.com/us/en/ebook/saathanai-arasigal
KOBO - 1.99 USD

GOOGLE - 50/- Rs
https://books.google.co.in/books/about/சாதனை_அரசிகள்.html?id=Wbh4MwEACAAJ&redir_esc=y

OVERDRIVE
https://www.overdrive.com/media/3980630/saathanai-arasigal

புதன், 20 மார்ச், 2019

மகளிர் தினத்தில் அழகப்பா பல்கலையும் அமேஸான் புத்தக வெளியீடும்.

2101. மகளிர் தினம் 2019.

இந்த நாள் இனிய நாள். அழகப்பா பல்கலையிலும், கார்த்திகேயன் பள்ளியிலும் மிக இனிமையான பொழுதுகளோடு இயைந்த நாள்.

மகளிர் இயல் துறையின் தலைவி மணிமேகலை மேம்  மற்றும் தமிழ்த்துறைத்தலைவி செந்தமிழ்ப்பாவை அம்மா அவர்களுடன்.

 துணைவேந்தர் என் நூல்களைத் திரும்ப வெளியிட்டார்.

செவ்வாய், 19 மார்ச், 2019

தினமலர் சிறுவர்மலரில் அரும்புகள் கடிதம். பாகம். - 3.

தினமலர் சிறுவர்மலரில் வெளிவந்த வாசகர் கடிதங்களை அந்த அந்த இடுகைகளிலேயே போட்டிருந்தாலும் இவை அதற்குப் பின் வந்தவைகள். நன்றி வாசகர்களுக்கு. மனமார்ந்த நன்றி தினமலருக்கும் ஆசிரியர் தேவராஜன் ஷண்முகம் சார் அவர்களுக்கும்.



சாவித்ரியின் கதையைப் பாராட்டிய கங்களாஞ்சேரி வாசகி மு. இனியா அவர்களுக்கு நன்றி.

தினமலர் சிறுவர்மலரில் அரும்புகள் கடிதம். பாகம். - 2.

தினமலர் சிறுவர்மலரில் வெளிவந்த வாசகர் கடிதங்களை அந்த அந்த இடுகைகளிலேயே போட்டிருந்தாலும் இவை அதற்குப் பின் வந்தவைகள். நன்றி வாசகர்களுக்கு. மனமார்ந்த நன்றி தினமலருக்கும் ஆசிரியர் தேவராஜன் ஷண்முகம் சார் அவர்களுக்கும்.


பகீரதனின் விடாமுயற்சிக் கதையைப் பாராட்டிய காரைக்கால் வாசகி. ஆர். மீனா அவர்களுக்கு நன்றி.

திங்கள், 18 மார்ச், 2019

தினமலர் சிறுவர்மலரில் அரும்புகள் கடிதம். பாகம் - 1.

தினமலர் சிறுவர்மலரில் வெளிவந்த வாசகர் கடிதங்களை அந்த அந்த இடுகைகளிலேயே போட்டிருந்தாலும் இவை அதற்குப் பின் வந்தவைகள். நன்றி வாசகர்களுக்கு. மனமார்ந்த நன்றி தினமலருக்கும் ஆசிரியர் தேவராஜன் ஷண்முகம் சார் அவர்களுக்கும்.




மகன் போதித்த ஞானம் - மருதவாணன் கதையைப் பாராட்டிய வந்தவாசி வாசகர் காசிதாசன் அவர்களுக்கு  நன்றி.

ஞாயிறு, 17 மார்ச், 2019

பூச்சிகளைத் துன்புறுத்தியதால் பெற்ற தண்டனை. தினமலர். சிறுவர்மலர் - 8.


பூச்சிகளைத் துன்புறுத்தியதால் பெற்ற தண்டனை. :-

சும்மா பறக்கும் தட்டாரப் பூச்சியைப் பிடித்து வாலில் நூல் கட்டிப் பறக்கவிட்டு மகிழ்வார்கள் சிலர். அதே போல் பொன்வண்டைப் பிடித்துத் தீப்பெட்டிக்குள் அடைத்து வைப்பார்கள். ஓரமாக தேமே என்று போகும் எறும்பைக் கண்டால் கூட காலால் நசுக்குவதும் தண்ணீரில் பிடித்துப் போட்டுச் சித்திரவதை செய்வதுமாக இருப்பார்கள் சிலர். அந்தப் பூச்சிகளுக்கு எல்லாம் அது எவ்வளவு கொடுமையாக இருக்கும் என்பதை உணரவே மாட்டார்கள். அப்படி சிறுவயதில் செய்த முனிவர் ஒருவர் பெற்ற தண்டனையை இப்போ உங்களுக்குச் சொல்லப் போகிறேன் குழந்தைகளே.

து ஒரு அழகான ஆரண்யம். அங்கே கிளைவிரித்துப் பரந்திருக்கிறது மாபெரும் ஆலமரம். அதனருகே ஒரு எழில் மிகு பர்ணசாலை அமைக்கப்பட்டிருக்கிறது. அந்த ஆலத்தின் தண்ணென்ற நிழலில் ரிஷி ஒருவர் யோகத்தில் இருக்கிறார். அவர் பெயர் மாண்டவ்யர். பத்மாசனத்தில் அமர்ந்து கைகள் இரண்டையும் மடியில் மேல் நோக்கிப் பார்த்தபடி வைத்து கண்கள் மூடி அமர்ந்திருக்கிறார்.

அந்த ஆரண்யத்தின் அமைதியைக் குலைப்பது போல பலர் தடதடவென ஓடிவரும் சத்தம் கேட்கிறது. முரட்டு உருவத்தோடும் முறுக்கிய மீசையோடும் மிரட்டும் கண்களோடும் வடுக்கள் நிறைந்தமுகத்தோடும் வந்தவர்கள் முனிவரின் பர்ணசாலைக்குள் ஒளிந்து கொள்கிறார்கள். சும்மாவா ஒளிந்திருக்கிறார்கள். ஒவ்வொருவர் கையிலும் மூட்டை மூட்டையாய்ப் பொன்னையும் பொருளையும் அரண்மனையில் இருந்து கொள்ளையடித்துக் கொண்டு வந்தல்லவா ஒளிந்திருக்கிறார்கள். இது எதுவுமே முனிவருக்குத் தெரியாது.

சனி, 16 மார்ச், 2019

மாசறு கற்பினாள் அகலிகை (பல்வேறு கோணங்களில் 19 சான்றோர்களின் கருத்துக்கள்) – ஒரு பார்வை.


மாசறு கற்பினாள் அகலிகை (பல்வேறு கோணங்களில் 19 சான்றோர்களின் கருத்துக்கள்) – ஒரு பார்வை.


அகலிகையைப் பற்றி முன் முடிபுகளோடு அணுகுபவர்கள் அவசியம் படிக்கவேண்டியது இந்நூல். இந்நூலில் 19 சான்றோர்களின் கருத்துக்களை பி எல் முத்தையா அவர்கள் 1988 இலேயே தொகுத்து வழங்க எண்ணி இருக்கிறார்கள. அதை அவர் மகன் முல்லை மு. பழனியப்பன் அவர் மறைவுக்குப் பின் ஏப்ரல் 2013 இல் சாத்யமாக்கி இருக்கிறார்கள்.
வால்மீகி, கம்பன், வெ. ப. சுப்ரமணிய முதலியார், ராஜாஜி, ச. து. சு. யோகியார், புதுமைப்பித்தன், தமிழ் ஒளி, கவிஞர் கம்பதாசன், வ. ரா, வி. திருவேங்கடாச்சாரியார், ஸ்ரீ சங்கரகிருப, பெ. கோ. சுந்தர்ராஜன், எம். வி. வெங்கட்ராம், அரு. ராமநாதன், க. கைலாசபதி,  ஜமதக்னி ஆகியோரின் பார்வையில் இதிகாசம், வெண்பா, கவிதை, கதை, கட்டுரை, நாடகம், சிந்தனைகள் தொகுப்பாகப் படைக்கப்பட்டிருக்கிறது இந்நூல்.

சாட்டர்டே போஸ்ட். விவிஎஸ் சார் எச்சரிக்கும் இல்லீகல் அட்வைஸர்ஸ் !

இந்த வாரம் இல்லீகல் அட்வைஸர்ஸ் பற்றிக் கூறி எச்சரிக்கிறார் திரு வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன் சார் அவர்கள். 

இல்லீகல் அட்வைஸர்ஸ் !

”ஹலோ,  மிஸ்டர் ஸ்ரீனிவாசனா ?”

“யெஸ், பிளீஸ்”

“ஸார், எனக்கு ஒரு மெடி-கிளெயிம் பாலிஸி எடுக்கணும்.  இன்னைக்கே உங்கள மீட் பண்ண முடியுமா ?”

ஒரு புதுமுக முகவர் வேண்டுமானால் இந்தக் கோரிக்கையைக் கேட்டுப் பூரிப்பு அடையலாம்.  ஆனால் மேனியெங்கும் அனுபவ வடுக்கள் நிறைந்தவர்கள் சட்டென்று வீழ்வதில்லை.

லாஜிக் ரொம்ப சிம்பிள்.   நட்பு வட்டத்தில் இருப்பவர்களே பாலிஸி எடுக்கத் தாமாக முன்வருவதில்லை.  இந்த நிலையில் என்னை யார் என்றே தெரியாத ஒருவர் ஏன் என்னை அணுக வேண்டும் ?

அடுத்த சில நிமிட உரையாடலே போதும்.  அவருடைய குறிக்கோள் என்னவென்று புரிந்து கொள்ள. 

புதன், 13 மார்ச், 2019

நட்புக்கு மரியாதை தந்த திரு வெங்கடேஷும், திரு. கோபாலகிருஷ்ணனும்.

2081. புதுவை புத்தகத் திருவிழாவில் எனது நாவலுடன் நண்பர் திரு. கோபாலகிருஷ்ணன் அவர்கள். சென்னைக்காரரான இவர் புதுகைக்குச் சென்ற இன்று புக் ஃபேர் சென்று புக் வாங்கி ஃபோட்டோவுடன் அனுப்பியதை நினைத்தால் ஆனந்த மகிழ்ச்சி ஏற்படுகிறது. :) (y). நட்புக்கு மரியாதை. நன்றி சகோ

2082. புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் எனது நூல்களை வாங்கி வாசித்து வரும் அன்பு சகோ வெங்கடேஷ் வெங்கி அவர்களுக்கு நன்றியும் அன்பும்.

செவ்வாய், 12 மார்ச், 2019

தினமலரில் காதல் வனம் நாவல் பற்றிய நூல்முகம். :-

தினமலரில் காதல் வனம் விமர்சனம்.

நன்றி தினமலர் & தேவராஜன் ஷண்முகம் சார்.  

தங்கள் நாவல் கிடைத்தது. 70 நிமிடங்களில் படித்து முடித்தேன்.

ஒரு சாயுங்கால நேரத்து குட்டித்தூக்கத்தில் இருபதின் இளமையில் நிகழ்ந்திட்ட ஒருகனவு கண்டு விழித்ததுபோல ஒருசுக அனுபவத்தை மனதில் சேர்த்தது காதல்வனம் கதை.
குடும்பம் தாம்பத்தியம் என்ற சிறையில் அடைப்படாமல் இருந்திருந்தால் சாமின் மூன்றுகாதலையும் கொண்டாடியிருக்கலாம். அந்தக் கொண்டாட்ட மனநிலையை தேவி வந்து தடுத்துவிடுகிறாள்.

புதன், 6 மார்ச், 2019

சமூகவலைத்தளங்களும் பெண்களும்.

சமூகவலைத்தளங்களும் பெண்களும்.
கடந்த இருபது ஆண்டுகளில் சமூக வலைத்தளங்களில் பெண்களின் செயல்பாடு அதிகரித்துள்ளது. கம்ப்யூட்டரில் ஈமெயில் அனுப்புவதே சிரமமாய்ப் பெண்கள் நினைத்தது ஒரு காலம். இன்றோ கைபேசியில் இணையம் வந்தபிறகு முகநூல், வலைத்தளம், வாட்ஸப், ட்விட்டர், ஸ்ம்யூல் ( பாடல் இணையம் ), யூ ட்யூப், டிக்டாக், ப்லாக்ஸ்பாட், தனி வெப்சைட்  எனப் பலவற்றில் பெண்கள் புகுந்து வெளுத்து வாங்குகிறார்கள்.
பேசுவதற்கும் தகவல் அனுப்புவதற்கும் உபயோகப்பட்ட செல்போன் இணையத்தையும் குறைந்த மாதாந்திர தொகையில் வழங்க ஆரம்பித்த பின்பு பெண்களின் உள்ளங்கையில் உலகம் உருள ஆரம்பித்தது. இதனால் ஏற்பட்ட சாதகங்களும் பாதகங்களும் அநேகம்தான்.
முதலில் சாதகங்களைப் பார்ப்போம். முதலில் தனிநபர் & குடும்பப் பயன்பாடு. கையில் செல்ஃபோன் இருப்பதால் வெளியே செல்லும் பெண்கள் தங்கள் இருக்குமிடத்தைச் சொல்ல முடிவதால் பாதுகாப்பு பயம் குறைகிறது. ரூட் தெரியாத இடத்திலும் தானே மேப்பிங் மூலம் வண்டியையோ காரையோ ஓட்டிச் சென்று வர முடிகிறது. குடும்ப மெயில்கள், குடும்பப் புகைப்படங்கள், விழாக்கள், நிகழ்வுகளை அவ்வப்போதே அறிவித்து அனுப்ப முடிகிறது. திருமண, குடிகுபுதல், இன்விடேஷன்கள், வாழ்த்துகளை உடனே பலருக்கும் ஒரு தொடுகையில் அனுப்பலாம். டாகுமெண்ட்களை அஞ்சலில் அனுப்பினால் தொலைய வாய்ப்பிருக்கிறது. அதை செல்ஃபோனில் ஒரு க்ளிக் செய்துஅனுப்பி விடலாம். வயதான பெண்கள் தங்கள் பிள்ளைகளுடன் வாட்ஸப் மூலம் எந்த நாடாக இருந்தாலும் ஒருவர்க்கொருவர் முகம் பார்த்துப் பேசலாம். பணம் பெறவோ செலுத்தவோ வங்கிக்குச் செல்ல வேண்டாம்.

அன்னம் பாலித்த அண்ணன். தினமலர் சிறுவர்மலர் - 7.


அன்னம் பாலித்த அண்ணன். :-

அன்னம் பாலித்த அண்ணன் என்றால் உங்களுக்கு தங்கையின் வேண்டுதலுக்காகத் தடா தடாவாக அக்கார அடிசிலும் வெண்ணையும் சமர்ப்பித்த ராமானுஜரும் ஆண்டாளும் நினைவுக்கு வரலாம். ஆனால் அடர் கானகத்தில் ஏதும் கிட்டாத இடத்தில் ஒரு அண்ணன் தன் தங்கைக்கு ஒரு முனிவர் மூலம் ஏற்பட்ட சோதனையில் இருந்து காக்க அன்னம் பாலித்தார் என்பது தெரியுமா?. அதுவும் எப்படி ? முனிவருக்கும் அவரது ஆயிரக்கணக்கான சீடர்களுக்கும்  அறுசுவை உண்டி சாப்பிட்ட உணர்வை உண்டாக்கி இக்கட்டிலிருந்து நீக்கினார் என்றால் ஆச்சர்யம்தானே. அது என்ன என்று பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.