செவ்வாய், 9 மே, 2017

பாடாவதி பஸ் ஸ்டாண்டுகளும் லவுட் ஸ்பீக்கர் டீலக்ஸ் பஸ்களும்.

1381. Gangaruvum kuttiyum = blogger with camera.. ithupola match sollungka.

1382. கண்களுக்கு வயதாவதில்லை :)

1383. பெண்களை மண்டைக்கனம் பிடித்தவர்களாகவும்., வாயாடிகளாகவும் மட்டுமல்ல.. தன் குலப்பெண்களையே கேவலமாக சித்தரித்த பெருமை உண்டு பால்கே அவார்டு பெற்ற டைரக்டருக்கு.. அவர் வயதுக்காக கொடுக்கப்பட்டது என சிலர்  சொல்வதால் நாமும் வாழ்த்துவோம்..

1384. ஏர் ஹாரன், விசில், லௌட் ஸ்பீக்கர் குத்துப் பாட்டு மூணையும் உச்சஸ்தாயியில் வைத்து வெய்யிலில் மண்டை இடியுடன் நம்மை பயணம் செய்ய வைக்கும் டீலக்ஸ் பஸ்காரர்களுக்கு உங்களோட அட்வைஸ் ப்ளீஸ்.

1385.the worst bus stand award in the world no. 1.goes to pudukkottai and no. 2 goes to kumbakonam

1386. 5 வயதுக் குழந்தை, 80 வயது மூதாட்டி.. மனிதம் மரித்துக் கொண்டே போகிறது.. எப்படியாவது நீதி நிலைநிறுத்தப்பட்டே ஆகவேண்டும். இரண்டு நாட்களாக மனதைப் பிழிந்த செய்தி இதுதான். ( அந்த ஆள் கிடைச்சா அடிச்சே கொன்னுடலாமான்னு கோவமா இருக்கு.. )

1387. என்னைப் போல் பதுங்கி இருக்கிறது இருள். மெல்ல மெல்ல சூரியவாளின் கீறலில் தப்பித்துத் தினம் ஆசுவாசப் பெருமூச்சு விடுகிறது. இரவின் கருமையைக் கெடுக்காமல் மனிதர்கள் உறங்குவது அழகு,

1388. என் நிறமும் இரவின் நிறமும் ஒன்றாகும்போது இருவரும் ஒருவருக்கொருவர் உறுதுணையாகிறோம். தீய்ந்த ரொட்டியும் கருப்பட்டிப்பாகும்போல. இதை எல்லாம் உவமை ஆக்கமாட்டார்கள் கவிஞர்கள்.

- இரவின் நெறிப்பில் அவர்கள் கண்கள் கட்டப்பட்டுவிடுகின்றன. ஒளியைக் காண இரவும் இருளும் தேவை என்ற நெறி உணராதவர்கள்.

1389. விதையொன்று போடச் சுரை ஒன்று முளைக்குதுதான்.

1390. கஷ்டமாக இருந்தாலும் சிலவற்றை விட்டுவிட்டு இருப்பது நீண்டகால நிம்மதிக்கு நல்லது.

1391. நான் யாரு. எனக்கேதும் தெரியலையே. :D

1392. எத்தனைமுறை பட்டாலும் தெரிவதில்லை. தெரியாமல் கைபட்டு நட்பழைப்பில் சேர்த்துவிடுவது.

1393. தொட்டுவிடத் தொட்டுவிடத் தொடரும். விட்டு விட விட்டுவிடவும் தொடருதே. :(

1394. சினிமா விமர்சனத்தையும் சிலர் இலக்கியமாக எழுதுகிறார்கள். பத்ரிக்கைகளில் எழுதுபவர்கள் அதையே தம்முடைய இலக்கியமாக நினைத்துப் பெருமையுறுகிறார்கள்.

1395. வீட்டை மறைக்கும் அளவு காம்பவுண்டை உயர்த்துகிறாய், செடிகொடிகளின் கிளைகளை வெட்டுகிறாய், கால்வாய்களை மடைதிருப்புகிறாய், போக்குவரத்துப் பாதையை மாற்றிக் கொண்டாய், காற்றை மட்டும் திசை மாற்ற முடியவில்லையா.. பக்குவமான உன் பிரியம் கசிந்து வெளியாகிக் கொண்டிருக்கிறது. கோபத்தில் என் மூச்சை நிறுத்திவிடாமல் உன் மனதையும் வார்த்தைகளையும் அரணுக்குள் ஒளித்துவை. 


1396. உறவுகளை ஃபேஸ்புக்கில் சேர்ப்பது சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்வது போல என்று என் தோழி சொன்னார்.. சில வலைப்பதிவ நண்பர்களையும் சேர்ப்பதும் அதில் அடங்கும்

1397. தன்னை மீறி தன்னலம் மீறி சிந்திப்பதெப்போதோ.. பொதுநலம் கருதி பொறுப்பான செயல் செய்ய சாத்யப்படுவதெப்போதோ.. அலைகள் ஓய்ந்திடுமா..

1398. Naan endral athu avarum naanum...( enge parthalum unga aathikkamthanannu thitatheenga frns..

1399. Muishkin... Idiot aa.. Not at all.. Everyone identify themselves in him..

1400. அருகருகே மலர்ந்த மலர்கள் நாம்.
பூமாலையாகத்தான் வேண்டுமா.
கயிற்றில் கட்டப்பட்டு தலைகீழாய்த்தொங்கி
கூந்தலிலோ கருவறையிலோ
புழுக்கமான பிணவறையிலோ
சேர்ந்திருக்கிறோமென
இம்சித்திருக்கலாகுமா.
தனித்தே இருப்போம் நாம் இனித்தே.

டிஸ்கி :-

இவற்றையும் பாருங்க.


1. ஞானம் பிறந்த கதை. 

2. ஸ்வரமும் அபஸ்வரமும். 

3. அழகும் அறிவும் அன்பும் குழந்தைகளும்.

4. கணவன் அமைவதெல்லாம்..

5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..

6. அன்பெனும் பேராயுதம்.

7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.

8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும். 

9. என் வீடு என் சொர்க்கம்.

10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும். 

11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும். 

12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.

13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி‬.

14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி

15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும் 

16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)

17. முகமூடிகளும் மனப்பூக்களும். 

18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !. 

19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும். 

20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.

21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.  

22. இன்ஃபாக்‌ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!

23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும். 

24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.

25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும். 

26. தோற்றவர்களும் துணிந்தவர்களும்.

27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும். 

28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும்.

29.  நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.

30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.  


31.வெள்ளத் தீயும் தேரை இதயமும். 

32. காதல் கவுஜைகளும் முகநூல் காதலும். 

33. பேதை மனுஷியும் மாமியார் சிண்ட்ரோமும்.

34. டிவிஎஸ் 50 யும் ஸ்வீட் நத்திங்ஸும். :)

35. நோக்கர்களும் நந்தா விளக்கு விருதும். 

36. போதையும் போதிமரமும்.

37. மாயக் குடுவையும் மனமீனும்.

38. அஸ்வத்தாமன் அஸ்திரமும் யூதாஸ் நாவும். 

39. ஆணியன் ரோஸ்டும் அலாவுதீன் பூதமும். 

40. 99 ம் இல்ல 21 ம் இல்ல, ஒருநாள் சபதம்தான்.

41. சாண்ட்விச்சும் ஊறுகாயும்.

42. நெபுலாவும் ப்ரத்யங்கிராவும். 

43. 2065 ம் ஆறு லட்சமும். !!! 

44. மழைப்புரவியும் பஜ்ரங்பலியின் வாலும். 

45. கறுப்புப் பட்டாம் பூச்சியும் குட்டிக் குளவியும். 

46. எடிட்டர் பாப்பும் அர்பன் விவசாயியும்.

47. கும்பகர்ணியும் எல்லைச்சாமியும்.

48. கவனிப்பும் அவதானிப்பும். 

49. பெங் குவின்களும் வால்ரஸ்களும். 

50. சிவப்புப் பட்டுக் கயிறும் நெல்லை உலகம்மையும் 

51. கோல்டன் ஃபேஷியலும் போஸ்ட் புல்லட்டினும். 

52. அப்பிராணிகளும் அசட்டுத் தித்திப்பும். 

53. SUMO வும் சவாரியும்.

54. அரசனும் ஆண்டியும். 

55. கோயமுத்தூரும் கர்நாடகாவும். 

56.  பாபநாசமும் கருத்து கந்தசாமியும்

57. தர்மதரிசனமும் தாய்க்கிழவியும். 

58. ஹைபர்நேஷனும் சாஃபக்லீஸும். 

59. தெய்வமகள், வம்சம் - இம்சைகள். 

60. தல ஃபேன்ஸும் கலகலப்பும். 

61. பைரவாவும் புத்தகக் கண்காட்சியும்.

62. தமிழ்மணமும் அக்கினிக்குஞ்சு இணையத்தில் அரங்கன் கணக்கும்.

63. தேசப்பற்றும் தேசப்பித்தும். 

64.  தலைகீழ் வேதைகளும் விஸ்வரூபங்களும்.

65. சாந்திலெட்சுமணன் படைத்த கம்ப ரசமும், புக்ஃபேர் பாப்கார்னும். 

66. மத ஒற்றுமையும் மன ஒற்றுமையும்.  

67. ஜியோவுக்கு முன்னும் பின்னும். ஜீயோ மேரே லால். 

68. முயலும் மானும் மயிலும் பூக்களும் . 

69. டாகிங்கும் ஹாக்கிங்கும்.
 
70.

2 கருத்துகள்:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)