வெள்ளி, 24 ஜூன், 2016

VVV - V3 vimarsanam. வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்.



Vvv vimarsanam. :) வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்.

அநியாயமா சம்பாதிச்ச ஐநூறு கோடி ரூபாயை வைத்திருக்கும் இடத்தை அமைச்சர் (தன் மனைவிக்கு) ஜாக்கெட் (தைக்கும்) ஜானகிராமனிடம் ரகசியமாச் சொல்லி அதை நல்ல விஷயங்களுக்குப் பயன்படுத்தச் சொல்லிட்டுப் போயிடுறார். இதுல ஜாக்கெட் அமைச்சரிடம் ஆஸ்பத்ரியில் ஜாக்கெட் போடுவதைப் போல அபிநயித்து வந்திருக்கேன் எனச் சொல்லுமிடத்தில் ஆரம்பிக்கிறது முதல் குபீர்ச் சிரிப்பு.

ஜிங்குச்சா ஜிங்குச்சான்னு ஒரு காஸ்ட்யூம்ல கையில மடக்குன விவாகரத்துப் பத்திரத்தோட ஒரு படம் முழுக்கக் கலக்கி இருக்காரு புஷ்பா புருஷன். அட அவர்தாங்க ்வாசிரத்ுல பரோட்டா சூரி. :) சட்டை மட்டுமல்ல அதோட பட்டி கூட ஜிங்குச்சாங்க. அதோட பாண்ட் கலரும் ஜோடி ஜிங்குச்சா. பாத்தோடனே காட்சிக்கு காட்சி அந்தக் காஸ்ட்யூம் டிசைனர் யாருப்பான்னு யோசிக்க வைச்சிட்டாரு. :)


கதாநாயகன் விஷ்ணு சரியான தேர்வு. இளமைத் துள்ளல், அழகா சிரிக்கிறார். அளவா நடிக்கிறார். ஆட்டம் போட்டுத் தீர்க்கிறார். அவரும் ஹீரோயினும் சூரியும் ரோபோ சங்கரும் மட்டுமல்ல பூதம் ரவி மரியாவும், ஆடுகளம் நரேனும் கூட குறும்புப் பட்டாளம்தான். நிக்கி கல்ராணி போலீஸ் உடையில் அமர்க்களம். ஆனால் அளவுக்கதிகமா மெலிவா இருக்கார். கன்னம் கூட மெலிஞ்சிருக்கு. தமிழ்மகன்களுக்கு இவ்ளோ மெல்லிய பெண்களைப் பிடிக்குமாங்கிறது கொஞ்சம் சந்தேகம்தான். ஆனா கண்கள் இரண்டால் அவர் பேசும் பொற்சித்திரம்.

ரவி மரியாவும் நரேனும் ரோபோ சங்கரும் செம கூட்டணி. அதிலும் ரோபோ சங்கர் டபிள் தமாக்கா. கோமாவிலிருந்து எழுந்து பத்து வயசில் ஒரு அமர்க்களம் என்றால் சொல்ல ஆரம்பிச்சதை ஆரம்பத்திலேருந்து திரும்பத் திரும்ப அலுக்காமல் சொல்லியிருப்பது சிரிப்பூ. அதில் ஒவ்வொரு தரமும் காட்சியமைப்புகளும் சிறப்பு.

லாஜிக் இல்லாத மேஜிக் இந்தப் படம். சிரிங்க சிரிங்க சிரிச்சிக்கிட்டே இருங்கன்னு சொல்லலாம். காரைக்குடியில சத்யம் தியேட்டர்ல ஃபுல் ஏசில இந்தப் படத்தப் பார்த்தோம். அது அருணசலாவா இருந்து ஆனந்தா மாறி இப்போ சத்யமா ஆகி இருக்கு. போய் ரொம்ப நாளானதால சென்னை தியேட்டர்கள் மாதிரி அசரடிச்சிருச்சு ஆச்சர்யத்துல.டிக்கெட் விலை 100 ரூபாய் !.

இதோட டபுள் டிலைட்டா இந்தப் படம் வேற. உறவினர்கள் வெளிநாட்டுலேருந்து வந்திருந்ததால குட்டீஸ் எல்லாம் படம் போலாம்னு நச்சரிப்பு. தியேட்டர் போயே நெம்ப நாளாயிட்டா. ஆனா இதப் பார்த்ததும் இன்னொரு தபா பாக்கணும் போல ஆயிட்டு.

நாங்களே படத்தப் பார்த்துக் கன்னா பின்னான்னு சிரிச்சிட்டு இருந்தோம்னா எங்க பின் சீட்டுல ஒரு அம்மாவும் பொண்ணும் ஒரே கிண்கிணி எஃபக்ட்ல சிரிச்சிட்டு இருந்தாங்க. நடுவுல ஒருபக்கத்தக் காணோம் படத்தைப் பார்த்து எப்பிடிக் கண்ணில் நீர் வரச் சிரிச்சமோ அப்பிடி ஒரு சிரிப்பு.

மொட்டை ராஜேந்திரனின் பாடல் காட்சிகள் திகில் ரகம். அதிலும் வான்ஹெல்சிங் படம் போல இதில் கண்ணாடியில் பார்த்தால் மட்டுமே பேய்கள் ஆடுவது தெரிவது வித்யாசம். பூதமும் நரேனும் கூட பேயாக மாறிவிடுவது சிரிப்பு. ரோபோ சங்கர் கோமாவில் விழுவதும் அதைத் தொடர்ந்த காட்சிகளும் பட்டாசு. அதில் பூதமும் சூரியும் மாட்டி விழிப்பது சரவெடிச் சிரிப்பு. காட்சியமைப்புகள் எடிட்டிங் வசனம் அனைத்துமே சிறப்பு.

குத்துப் பாட்டு ஒன்றிரண்டு இருக்கும் . ஆனா இதுல பாட்டுன்னா குத்துப்பாட்டுதான். கலர்ஃபுல்லான சூரியின் ட்ரெஸ் போல பாட்டுப் பூரா கலர் பேப்பர் பறக்குது. ஒரு வேளை அந்த அவக் குத்தாட்டத்த பாக்குறதால நம்ம கண்ணுல பொறி பறக்குதோ என்னவோ :)

புஷ்பா பேரைச் சொன்னாலே அவ்ளோ பேரும் நெகிழ்வதும் அவர் ஃபோன் நம்பரை ஒரு டெய்லர் கடைப் பையன் சொன்னதும் சூரி நெளிவதும் , ஒவ்வொரு இடத்திலும் புஷ்பா பேரைக் கேட்கும்போதெல்லாம் ூரியின் முகபாவமும் நடிப்பும் சூப்பர். ஆனா புஷ்பாவை இப்பிடி தேசிய மலர் ஆக்கிட்டாங்களேன்னு சில இடங்களில் நாமே நெளியிறாப்புல இருக்கு.

எழிச்சூர் அரவிந்தனின் வசனங்கள், ஆனந்த லிங்க குமாரின் எடிட்டிங்க், சக்தியின் காமிரா., எழிலின் இயக்கம், என அனைத்தும் பர்ஃபெக்ட்.  

பேய் பங்களாவில் இருக்கும் பணம் கிட்டுச்சா, அத நல்லதுக்குப் பயன்படுத்துனாங்களா அப்பிடீங்கிறதெல்லாம் எதுக்குங்க நமக்கு. நாம என்ன பணத்த எண்ணிப் பார்க்கவா போனோம். ஜாலியா சிரிச்சிட்டு வரத்தானே. அத வஞ்சகமில்லாம அள்ளிக் கொடுத்த VVV குழுவினருக்கு வாழ்த்துகள்.

ஆமா ஒன்னைக் கோடிோட்டுப் பைனஞ்சோடி அள்ளிட்டங்காமே உண்மையா. ? .இருக்காம். பம் வொர்த்ான் :) !!!

இன்னி வரைக்கும் எந்தப் படத்தையும் ரெண்டாம் முறை பார்த்ததே இல்லை. ஆனா இந்தப் படத்தை இன்னொருவாட்டி பார்த்துச் சிரிக்க விரும்புறேன். எண்டார்ஃபின், செரடோனின் ப்ரொட்யூஸர். :)

டிஸ்கி :-

இவற்றையும் பாருங்க.

1. எந்திரன் .. THE ROBOT.. எனது பார்வையில்.

2. ஸ்மைலியும் க்ளாடியும் கல்கியும்.


 


 

6 கருத்துகள்:

  1. நல்ல விமர்சனம். பார்க்கும் ஆவல் பெருகியது.

    பதிலளிநீக்கு
  2. Thenammai you write film reviews too! So good. Just like getting feedback on a film from our family member. I like the review. Will sure see the film.

    பதிலளிநீக்கு
  3. அருமையான விமர்சனம் அக்கா...
    ரசித்து சிரித்துப் பார்க்க வைத்த லாஜிக் இல்லாத மேஜிக் படம்.
    சூரி, ரோபோ கலக்கிட்டாங்க...

    பதிலளிநீக்கு
  4. நல்ல விமர்சனம். பொதுவாக சினிமா பார்ப்பதில்லை. இந்தப் படத்தின் ஒரு காணொளி பார்த்தேன் - இணையத்தில். பிடித்திருந்தது.

    பதிலளிநீக்கு
  5. நன்றி ஜம்பு சார்

    நன்றி ஜெ ஜெ

    நன்றி குமார் சகோ

    நன்றி வெங்கட் சகோ

    பதிலளிநீக்கு
  6. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)