சென்னை சாஸ்த்ரி பவனில் 2011 மகளிர் தினத்தன்று சிறப்புப் பேச்சாளராகப் பேச அழைத்திருந்தார்கள். என்னுடன் சிறப்பு விருந்தினராக டாக்டர் கமலா செல்வராஜ் அவர்களும் கலந்து கொண்டார்கள். அப்போது எனக்கு டாக்டர் கமலா செல்வராஜ் பொன்னாடை போர்த்தி செண்ட்ரல் கவர்ன்மெண் விமன்ஸ் எம்ப்ளாயீஸ்வெல்ஃபேர் அசோசியேஷன் சார்பாக விமன் எம்பவர்மெண்ட் அவார்டு ( PATHWAY TO DECENT WORK FOR WOMEN -- BY DFP -- DIRECTORATE OF FIELD OF PUBLICITY ) என்ற இந்த நினைவுப் பரிசினைத் தந்தார்கள். நன்றி சாஸ்த்ரி பவன் பெண் ஊழியர்கள் நலச்சங்கம் மற்றும் தலித் பெண்கள் நலச்சங்கம்.
செவ்வாய், 30 ஏப்ரல், 2013
திங்கள், 29 ஏப்ரல், 2013
ஞாயிறு, 28 ஏப்ரல், 2013
டிக்கெட்.. டிக்கெட்..
டெல்லியில் ரயில்வே டிக்கெட் புக்கிங் பத்தி டிவில சொன்னாங்க. இது டெல்லியில் மட்டுமில்ல எல்லா ஊர்லயும்தான். அதுவும் சனி ஞாயிறுன்னா ஃப்ளைட் டிக்கெட் கூட கிடைக்கும். ட்ரெயின் டிக்கெட் கிடைக்காது. பல்க்கா புக் பண்ணிடுறாங்களோ என்னவோ.. அப்ப நம்ம அடுத்த சாய்ஸ் பஸ்.
தட்கால்ல புக் பண்ண டிக்கெட் வெயிட்டிங் லிஸ்ட்..சரின்னு பஸ்ல புக் பண்ணிட்டு வந்தா ஆர் ஏ சின்னு ஸ்டேடஸ் காட்டும். திடீர்னு மத்யானம் கன்ஃப்ர்ம் ஆயிடும். எனவே பஸ், ட்ரெயின் ரெண்டிலயும் டிக்கெட் எடுத்து ஏதும் ஒண்ணுலயாச்சும் புக்கிங் சார்ஜ் அல்லது கான்சலேஷன் சார்ஜ்னு மினிமம் லாஸ் ஆகத்தான் செய்யுது.

சனி, 27 ஏப்ரல், 2013
சேட்டை.
வீட்டில் வேலைக்குச் செல்லும் சகோதரர்களும், கல்லூரியில் படிக்கும் பிள்ளைகளும் இருந்தால் சேட்டையை நிச்சயம் ரசிக்கலாம். குப்பை மேடு போல படுக்கை, கரப்பான் ஊறும் சாப்பிட்டுக் காய்ந்த தட்டு, காலியான தண்ணீர் பக்கெட்டுக்கள் என பாச்சிலர்ஸ் ரூமின் அட்டகாசங்களோடு ஆர்யா, சந்தானம், ப்ரேம்ஜி இவர்களும், ஹன்சிகா என்று மெழுகுச் சிலையும், அஞ்சலி என்ற ரப்பர் பெண்ணும் நடிச்சிருக்காங்க.
கடிதப் போட்டியும் பரிசும்.
முகநூல் நண்பர் தாய் சுரேஷின் நிலைத்தகவலைப் பகிர்ந்துள்ளேன்.
///கடிதப்போட்டி
அன்பு முக நூல் நட்புக்களே,
எத்தனையோ சொல்ல முடியாத
ஏக்கம்,அழுகை,ஆதங்கம்,
பிரிவு,நட்பு,வன்மம்,அன்பு,காதல்,இப்படி எல்லாவற்றையும்
நாம் என்னதான் நம் நட்புக்களிடம்
பகிர்ந்தாலும் ஒரு கடிதமாய்
எழுதி அதை காற்றிலோ,அல்லது முகவரி இல்லா கடிதமாகவோ வைத்துக்கொள்வோம்..அப்படி வைக்கப்பட்ட
கடிதம் நிச்சயம் நம்
நினைவுகளை என்றோ ஒரு தினம் மீள்
வாசிப்பு செய்யத்தூண்டும்..

வெள்ளி, 26 ஏப்ரல், 2013
புத்தரின் கதை ஓவியங்கள் கடியாபட்டியில்..
புத்தர் வாழ்வியல் கதை கடியாபட்டியில் ஒரு திருமணத்துக்குச் சென்றிருந்தபோது ஃப்ரேம் செய்த ஃபோட்டோ ஓவியங்களாக காண நேர்ந்தது.
2500 வருடங்களுக்கு முற்பட்ட கதை இது. கபிலவஸ்துவை அரசாண்ட சாக்ய வம்சத்தின் ராஜா சுத்தோதனர் , மகா மாயா தம்பதிக்கு குழந்தை பாக்கியம் இல்லாமலிருந்தது. வெகு நாள் கழித்து சூலுற்ற மகாமாயா தன் தாய் தந்தையரைக் காணச் சென்ற போது வழியிலேயே குழந்தை பிறந்து விடுகிறது.

வியாழன், 25 ஏப்ரல், 2013
புதன், 24 ஏப்ரல், 2013
செவ்வாய், 23 ஏப்ரல், 2013
திங்கள், 22 ஏப்ரல், 2013
மனிதம் இருக்கிறதா..
///5 வயதுக் குழந்தை, 80 வயது மூதாட்டி.. நேற்று 13 வயதுக் குழந்தை..மனிதம் மரித்துக் கொண்டே போகிறது.. எப்படியாவது நீதி நிலைநிறுத்தப்பட்டே ஆகவேண்டும். இரண்டு நாட்களாக மனதைப் பிழிந்த செய்தி இதுதான். ( அந்த ஆள் கிடைச்சா அடிச்சே கொன்னுடலாமான்னு கோவமா இருக்கு.. )//
இது என்னுடைய நிலைத்தகவல். ஒரு மாதிரி நிம்மதி இல்லாத மனநிலை நிலவுகிறது. பெண்குழந்தைகளை மற்றும் பொதுவாகக் குழந்தைகளை எல்லாம் மையப்படுத்தி வரும் பாலியல் வன்புணர்வுச் சீரழிவுகள் ஒரு பயங்கரமான சமூக அவலத்தை எடுத்துக்காட்டுகின்றன. பெண்களுக்கான பாலியல் கொடுமைகளில் இருந்து குழந்தைகளுக்கான பாலியல் கொடுமைகளுக்கும் சேர்த்துப் போராட வேண்டியவர்களாக இருக்கிறோம். குழந்தைகள் வாழ வழியற்றதாகிக் கொண்டிருக்கிறதா வடநாடு. ?
வியாழன், 18 ஏப்ரல், 2013
புதன், 17 ஏப்ரல், 2013
அவளும் நானும்
அவளும் நானும்:-
*************************
சின்னக்குழந்தையிலேயே
அவள் என் தோழி..
நான் பள்ளி செல்ல
அவள் வீட்டிலிருப்பாள்.
வந்தபின் நாள்முழுவதும்
விளையாடிக் கொண்டேயிருப்போம்.
நிலவு இரவுகளில்
என் கதைக்காய் உறங்காமல்
காத்திருப்பாள்.
*************************
சின்னக்குழந்தையிலேயே
அவள் என் தோழி..
நான் பள்ளி செல்ல
அவள் வீட்டிலிருப்பாள்.
வந்தபின் நாள்முழுவதும்
விளையாடிக் கொண்டேயிருப்போம்.
நிலவு இரவுகளில்
என் கதைக்காய் உறங்காமல்
காத்திருப்பாள்.
செவ்வாய், 16 ஏப்ரல், 2013
வாசகர் கடிதங்கள்...!!! - பாகம் 1
மெல்லினம் ஆஸ்த்ரேலியாவிலிருந்து வரும் தமிழ் மாத இதழ். சித்திரை, வைகாசி என்று தமிழ் மாதத் தொடக்கத்திலேயே இந்த இதழ் வெளியிடப்படுகிறது. இரண்டாண்டுகளாக வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருக்கும் மெல்லினம் இதழில் என்னுடைய பெண்மொழிக் கட்டுரைகளுக்கு மிகுந்த வரவேற்பு இருப்பதாக சகோ . திரு மணிமாறன் கூறினார். அதில் என் கட்டுரை பற்றி வெளிவந்த ஒரு வாசகியின் கடிதம் இங்கே. மிக்க நன்றி ஜெயலெட்சுமி, சிட்னி.
லேடீஸ் ஸ்பெஷலில் இருமுறை கவர் போட்டோக்களில் என்னுடைய சாதனைப் பெண்கள் இடம் பெற்றிருக்கிறார்கள். அவர்கள் ஆட்டோ சாந்தியும், இருளர் இன விளக்கு வசந்தியும். என்னுடைய கட்டுரைகளைப் படித்துவிட்டு தன்னுடைய தோழி ஊக்கம் பெற்றதாக ஒரு வலைப்பதிவ நண்பர் கூறினார். அஹமதாபாத்தைச் சேர்ந்த ஒருவர் இந்தப் புத்தகம் பெண்களுக்கு ஊக்கமளிப்பதாகவும் ப்ரேயர் முடிந்தவுடன் தமிழ் பள்ளியில் சில பக்கங்கள் வாசிக்கப்படுவதாகவும் கூறினார். அவர்கள் இருவருக்கும் நன்றிகள்.

திங்கள், 15 ஏப்ரல், 2013
சூசைபுரம் செயிண்ட் ஜோசப் பள்ளியில் மகளிர் தினத்தில்
சூசைபுரத்தில் செயிண்ட் ஜோசப் பள்ளியில் மகளிர் தினத்தன்று சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ள அழைப்பு வந்திருந்தது. என்னுடன் அழைக்கப்பட்டவர்கள் சாஸ்த்ரிபவனில் பெண்கள் சங்கம் மற்றும் தலித் பெண்கள் சங்கத்தின் தலைவியாக இருக்கும் மணிமேகலை அவர்கள் புதிய தலைமுறை டிவியில் ப்ரொடியூசராக இருக்கும் ஜென்னி அவர்கள் மற்றும் பெற்றோர் சங்கத் தலைவர் பழனி அவர்கள்.
லயன்ஸ் கிளப் மூலமாக பல்வேறு சமூகப் பணிகளை இலவசமாகச் செய்து தரும் மணிமேகலை இந்தப் பள்ளிக்கும் மாணவர்க்காக ஒரு கழிவறை கட்டித் தரும் பொறுப்பை ஏற்று அதை தான் சார்ந்துள்ள லயன்ஸ் கிளப் மூலமாக பண உதவி பெற்று வழங்கி இருக்கிறார். வாழ்க அவர் பணி.தனது பல்வேறு பணிக்கிடையிலும் அவர் அங்கு வந்து கலந்து கொண்டு குழந்தைகளுக்கு தன்னுடைய கருத்துக்களைக் கூறினார். எந்தச் சந்தர்ப்பத்திலும் படிப்பை விடாதீர்கள் என்பதே அன்று அவர் மாணவர்களுக்குச் சொன்னது.

வியாழன், 11 ஏப்ரல், 2013
திருச்சி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ஹலோ எஃப் எம்மில் எனது பேட்டி.
முகநூலில் தோழர் தோழிகளாக இருப்பவர்கள் மூலமே நான் பல்வேறு வகைகளில் இனம் காணப்பட்டேன். அதில் வானொலி தொடர்பாக என்னை அணுகியவர்கள் கவிதா சொர்ணவல்லியும், ஜெயகல்யாணியும்.
பொதிகைக்காக திரு ப்ரேம் சாகர் அணுகியிருந்தார். மிக நல்ல தொடக்கங்கள் எல்லாம் எனக்கு முகநூல் மூலம் கிட்டின. அன்புள்ளம் கொண்ட நண்பர்கள் கிடைத்தது நான் செய்த தவம்தான்.
பொதிகைக்காக திரு ப்ரேம் சாகர் அணுகியிருந்தார். மிக நல்ல தொடக்கங்கள் எல்லாம் எனக்கு முகநூல் மூலம் கிட்டின. அன்புள்ளம் கொண்ட நண்பர்கள் கிடைத்தது நான் செய்த தவம்தான்.
புதன், 10 ஏப்ரல், 2013
தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.
போலி.
தியாகராஜர் பொறியியற் கல்லூரியில் 11. 9. 84 அன்று நடந்த கல்லூரிகளுக்கு இடையேயான ( ON THE SPOT -- கவிதை எழுதும் போட்டியில் .) கவிதைப் போட்டியில் இரண்டாம் தகுதி பெற்ற கவிதை.
இந்தியாவின்
அசோகச் சக்கரங்கள்
வெள்ளியால் அஸ்திவாரமிடப்பட்டுத்
தங்கத்தால் அமைக்கப்படுகின்றன.
இந்தியனே..! நீ பணக்காரன் !.
ஏன் இன்னும்
இதழின் மடிப்புக்களில்,
சலனமற்ற கண்களில்,
அழுக்கடைந்த உடைகளில்
சோகத்தைப் பொதித்துக் கொண்டிருக்கிறாய்.?

சனி, 6 ஏப்ரல், 2013
வெள்ளி, 5 ஏப்ரல், 2013
வியாழன், 4 ஏப்ரல், 2013
அழைப்பிதழைத் தேடி:
அழைப்பிதழைத் தேடி:-
******************
ஒரு அழைப்பிதழ் வருகிறது.
உங்களை வரும்படி அழைக்கிறது.
உங்கள் மனைவியுடன் கூட
பிள்ளைகுட்டிகளுடனும்
சிலசமயம் இஷ்டமித்ர பந்துக்களுடனும்.
கலந்துகொள்ள வேண்டிய அன்று
தேடத்துவங்குகிறீர்கள்
அந்தக் குறிப்பிட்ட அழைப்பிதழை
எங்கே வைத்தோம் என்று.
******************
ஒரு அழைப்பிதழ் வருகிறது.
உங்களை வரும்படி அழைக்கிறது.
உங்கள் மனைவியுடன் கூட
பிள்ளைகுட்டிகளுடனும்
சிலசமயம் இஷ்டமித்ர பந்துக்களுடனும்.
கலந்துகொள்ள வேண்டிய அன்று
தேடத்துவங்குகிறீர்கள்
அந்தக் குறிப்பிட்ட அழைப்பிதழை
எங்கே வைத்தோம் என்று.
புதன், 3 ஏப்ரல், 2013
ரியாத் தமிழ்ச்சங்கம் - கல்யாண் நினைவுப் போட்டியில் மூன்றாம் பரிசுக்கு நன்றி.
கல்யாண் நினைவு கவிதைப் போட்டியினை என்னுடைய வலைத்தளத்தில் பகிர்ந்திருந்தேன். அதன் முடிவுகள் வெளியாகி விட்டன. அதில் தோழி கீதா முதல் பரிசும், சஹிதா இரண்டாம் பரிசும் , நான் மூன்றாம் பரிசும், தோழி ராமலெக்ஷ்மி ராஜன் சிறப்பு ஆறுதல் பரிசும் பெற்றிருக்கிறோம்.
நன்றி ரியாத் தமிழ்ச் சங்கத்துக்கும், நடுவர்கள் அபுல் கலாம் ஆசாத், ராஜ சுந்தர் ராஜன், மற்றும் நம் அன்பிற்குரிய நண்பர் பாரா என்ற பா ராஜாராம். :)
நன்றி ரியாத் தமிழ்ச் சங்கத்துக்கும், நடுவர்கள் அபுல் கலாம் ஆசாத், ராஜ சுந்தர் ராஜன், மற்றும் நம் அன்பிற்குரிய நண்பர் பாரா என்ற பா ராஜாராம். :)
செவ்வாய், 2 ஏப்ரல், 2013
குழந்தைப் பூக்கள். (ஆராதனாவின் புகைப்படங்களோடு.)
பணம்., பேனா .,வண்டிச் சாவி
என் சட்டைப் பையில்
இருப்பதெல்லாம் வீசியெறிந்து
இன்னும் என்ன தேடுகிறாய் கண்ணே
உன் இதயத்தையா..
அதுதான் உன் ரூபத்திலிருக்கிறதே..
******************************
என் கைகளில் பூத்த
பூவைப் போலிருக்கிறாய் நீ
இதழ் இதழாய் சிதறுகிறது
உன் புன்னகை..
****************************** **************
என் சட்டைப் பையில்
இருப்பதெல்லாம் வீசியெறிந்து
இன்னும் என்ன தேடுகிறாய் கண்ணே
உன் இதயத்தையா..
அதுதான் உன் ரூபத்திலிருக்கிறதே..
******************************
என் கைகளில் பூத்த
பூவைப் போலிருக்கிறாய் நீ
இதழ் இதழாய் சிதறுகிறது
உன் புன்னகை..
******************************