திங்கள், 22 ஏப்ரல், 2013

மனிதம் இருக்கிறதா..

///5 வயதுக் குழந்தை, 80 வயது மூதாட்டி.. நேற்று 13 வயதுக் குழந்தை..மனிதம் மரித்துக் கொண்டே போகிறது.. எப்படியாவது நீதி நிலைநிறுத்தப்பட்டே ஆகவேண்டும். இரண்டு நாட்களாக மனதைப் பிழிந்த செய்தி இதுதான். ( அந்த ஆள் கிடைச்சா அடிச்சே கொன்னுடலாமான்னு கோவமா இருக்கு.. )//
இது என்னுடைய நிலைத்தகவல். ஒரு மாதிரி நிம்மதி இல்லாத மனநிலை நிலவுகிறது. பெண்குழந்தைகளை மற்றும் பொதுவாகக் குழந்தைகளை எல்லாம் மையப்படுத்தி வரும் பாலியல் வன்புணர்வுச் சீரழிவுகள் ஒரு பயங்கரமான சமூக அவலத்தை எடுத்துக்காட்டுகின்றன.  பெண்களுக்கான பாலியல் கொடுமைகளில் இருந்து குழந்தைகளுக்கான பாலியல் கொடுமைகளுக்கும் சேர்த்துப் போராட வேண்டியவர்களாக இருக்கிறோம். குழந்தைகள் வாழ வழியற்றதாகிக் கொண்டிருக்கிறதா வடநாடு. ?
 இது சகோதரர் ஜெயராஜின் நிலைத்தகவல். இந்தக் கொடுமைகளுக்கு எல்லையே இல்லையா..  ///வடமேற்கு டெல்லியில் உள்ள சமைப்பூர் பட்லி எனும் பகுதியில 14 வயது சிறுமியை 2 பேர் கடத்தி கற்பழித்துள்ளனர். அதுபோல வடமேற்கு டெல்லியில் பல்ஸ்வா பகுதியில் 11 வயது சிறுமியை ரிக்சாக்காரர் ஒருவர் கடத்தி கற்பழித்ததாக போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

தென்கிழக்கு டெல்லியில் உள்ள சங்கம்விகாரில் 10-ம் வகுப்பு மாணவியை நன்கு அறிமுகமான ஒரு டிரைவர் கடத்திச் சென்று கற்பழித்த சம்பவம் நடந்துள்ளது.

டெல்லி சமைப்பூர் பட்லி யில் கடத்தப்பட்ட 14 வயது சிறுமி மிகவும் துன்புறுத்தப்பட்டுள்ளார். அவளை கடத்திய 2 பேரும், அவளை கத்தி முனையில் மிரட்டி 4 பாட்டில் பீர் குடிக்க வைத்துள்ளனர். அவள் போதையில் தள்ளாடிய பிறகு///
இது நண்பர் இளங்கோவன் பாலகிருஷ்ணனின் நிலைத்தகவல்.  ///"பழி வாங்கும் மனோபாவம்" என்பது மீடியாவாலும்,அரசியல் சூழலாலும் இங்கு திரும்பத்திரும்ப மூளைச்சலவை செய்யப்பட்டிருக்கிறது. அந்த மூளையால் நாளைய நல்ல காரியத்தை உறுதிப்படுத்தும் சாத்தியம் ஒருபோதும் நிகழ வாய்ப்பில்லை.///

///காமம் என்பது மகிழ்வு கொடுத்து மகிழ்வு எடுக்கும் காரியமே ஒழிய வன்முறைப்புணர்வு அன்று என்ற மிக அடிப்படையான எளிய புரிதலைக்கூட இந்த நாட்டு மக்களுக்கு சொல்லிக் கொடுக்க இயலாதது மாபெரும் சமூகக் குற்றம்.-///


உண்மைதான் சமூகமாகிய நாம்தான் அனைத்துக்கும் மூலகாரணம். எதையும் கற்பிக்க, கற்றுக் கொடுக்க இயலாத இந்தச் சமூக அமைப்புத்தான் காரணம். மாரல் சயின்ஸ் வகுப்பு என்று ஒன்று உண்டு பள்ளிகளில். வால்யூ எஜுகேஷன் என்று சில இடங்களிலும் இருந்தது. ஆனால் பொருளாதார அடிமட்ட சூழ்நிலைகளில் இருக்கும் மக்களுக்கு பள்ளிக்கே செல்ல முடியாத சூழலில் இருப்பவனுக்கு எப்படி நன்னெறிகளைப் போதிப்பது. இது சமூகக் கட்டமைப்பில் விளைந்த தவறே..  அடித்தள ஆணிவேராக இருக்கும் குடும்பங்களே இதைக் கற்பிக்க வேண்டும். அவனவன் அம்மா அப்பாவே இதைக் கற்பிக்க வேண்டும். இதைக் கற்பிக்க மறந்ததால் இதற்கான விளைவுகளை நாம் இன்று அனுபவித்துக் கொண்டிருக்கிறோம் .. குரூரமாக..

அந்தக் கோபத்திலும் ஆத்திரத்திலும்தான் கொன்றுவிடலாமா என்ற வெஞ்சினம் வருகிறது. இது மீடியாவால் அதிகப்படுகிறதா இல்லை நிகழ்வின் அடிப்படையில் சாதுக்களையும் மிரளவைத்து வெறியேற்றுகிறதா எனத் தெரியவில்லை. பிஞ்சுகள் உதிரும் கோபத்தில் எதையும் நிதானமாகச் சிந்திக்க முடியவில்லை என்பதே உண்மை. 

எங்கோ நடப்பது என்றிருக்க முடியாமல் அதற்கான தீர்வாக எதையேனும் செய்து நிறுத்தவேண்டும் என்ற அளவற்ற சிந்தனையே ” இனியும் செய்ய பயப்பட வைக்கும் தண்டனை வேண்டும்” எனச் சொல்ல வைக்கிறது.


5 கருத்துகள்:

  1. பயமாத் தான் இருக்கு... எங்கு சென்று கொண்டிருக்கிறோம் நாம்...:((

    பதிலளிநீக்கு
  2. தலைநகர் தில்லி.... நரகமாக மாறிக் கொண்டிருக்கிறது...

    நாங்களும் இங்கே இருக்கிறோம் என நினைக்கும்போதே அசிங்கமாக இருக்கிறது.....

    பதிலளிநீக்கு
  3. ஆம் தனபால்

    ஆமாம் கோவை 2 தில்லி

    என்ன சொல்வது வெங்கட்.. திருந்த வேண்டியவர்கள் வருந்தவேண்டும். ஹ்ம்ம்

    பதிலளிநீக்கு
  4. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)