புதன், 17 ஏப்ரல், 2013

அவளும் நானும்

அவளும் நானும்:-
*************************

சின்னக்குழந்தையிலேயே
அவள் என் தோழி..
நான் பள்ளி செல்ல
அவள் வீட்டிலிருப்பாள்.
வந்தபின் நாள்முழுவதும்
விளையாடிக் கொண்டேயிருப்போம்.
நிலவு இரவுகளில்
என் கதைக்காய் உறங்காமல்
காத்திருப்பாள்.

நான் வளர வளர
அவள் வளரவேயில்லை..
என் திருமணத்தை
ஆசீர்வதித்தாள்..
அவளை விட்டுப்பிரிய
பிழியபிழிய அழுதேன்.
இன்று என் குழந்தைக்கும்
தோழி அந்த பார்பி..
அன்று போலவே இன்றும்
படுக்கவைத்தால் கண்மூடுகிறாள்.
அமர வைத்தால்
விழித்துக் கொள்கிறாள்..
ஏக்கமாய் இருக்கிறது.,
அவள் வளரவில்லையே
என்ற துக்கத்தைவிட
நான் வளர்ந்துவிட்டேனே
என்ற துக்கம் பெருகி..

டிஸ்கி:- இந்தக் கவிதை ஜனவரி 15 - 31, 2013 அதீதத்தில் வெளிவந்தது. 


4 கருத்துகள்:

  1. அவள் வளரவில்லையே
    என்ற துக்கத்தைவிட
    நான் வளர்ந்துவிட்டேனே
    ///
    அழகான வார்த்தைகள்
    நாடி கவிதை

    பதிலளிநீக்கு
  2. பால்யத்தின் இழப்பை எண்ணி ஏங்கும் வரிகளில் மீண்டும் பால்யம் துளிர்க்கிறது. பாராட்டுகள் தோழி.

    பதிலளிநீக்கு
  3. பள்ளிக்கூடம் போகும் என் பொண்ணு இதையே சில சமயம் சொல்வார்கள்... (சின்னக் குழந்தையாகவே இருக்கக் கூடாதா என்று....!)

    இன்றைய பள்ளிப் பாடங்கள் அப்படி சொல்ல வைக்கிறது...! ...ம்...

    பதிலளிநீக்கு
  4. நன்றி கவிதை நாடன்

    நன்றி கீதமஞ்சரி

    நன்றி தனபால் .. ஆம்..:)

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)