ஞாயிறு, 28 ஏப்ரல், 2013

டிக்கெட்.. டிக்கெட்..

டெல்லியில் ரயில்வே டிக்கெட் புக்கிங் பத்தி டிவில சொன்னாங்க. இது டெல்லியில் மட்டுமில்ல எல்லா ஊர்லயும்தான். அதுவும்  சனி ஞாயிறுன்னா ஃப்ளைட் டிக்கெட் கூட கிடைக்கும். ட்ரெயின் டிக்கெட் கிடைக்காது. பல்க்கா புக் பண்ணிடுறாங்களோ என்னவோ.. அப்ப நம்ம அடுத்த சாய்ஸ் பஸ்.

தட்கால்ல புக் பண்ண  டிக்கெட் வெயிட்டிங் லிஸ்ட்..சரின்னு பஸ்ல புக் பண்ணிட்டு வந்தா ஆர் ஏ சின்னு ஸ்டேடஸ் காட்டும். திடீர்னு மத்யானம் கன்ஃப்ர்ம் ஆயிடும். எனவே பஸ், ட்ரெயின் ரெண்டிலயும் டிக்கெட் எடுத்து ஏதும் ஒண்ணுலயாச்சும் புக்கிங் சார்ஜ் அல்லது கான்சலேஷன் சார்ஜ்னு மினிமம் லாஸ் ஆகத்தான் செய்யுது.


இப்ப சம்மர் வெகேஷன் டைம்.. இப்ப எங்கயும், டிக்கட் கிடையாது.  ரயில்ல பொதுவாவே 90 நாளைக்கு முன்னாடி புக் பண்ணா கிடைக்க வாய்ப்பு இருக்கு. ஆனா ஒவ்வொரு முறையும் 90 நாளைக்கு முன்னாடியே ப்ளான் பண்ண முடியாது.

வாரா வாரம் புவனேஷ்வர் எக்ஸ்ப்ரஸ் சென்னை வழியா ராமேஸ்வரம் வரைக்கும் வரும். அது திரும்பப் போகும் போது டிக்கெட் கிடைக்கவே கிடைக்காது. சிதம்பரத்துல படிக்கிற ஒரிசா மாணவர்கள் இந்த வெகேஷன் டைம்ல இதுக்கு அடிதடி போட்டியில இருப்பாங்க.

தட்கால் டிக்கெட் ஏசியில கிடைச்சாலும் பரவாயில்லைன்னு சிதம்பரம் ஸ்டேஷனுக்குப் போனா முதல் நாள் சாயாங்கலத்துலேருந்து கும்பலா ஆளுங்க லைன் போட்டு வச்சிருக்காங்க. எனவே இந்த மாணவர்கள் மாயவரம் வந்திருக்காங்க. அங்கேயும் லைன். எனவே கும்பகோணம் வந்திருக்காங்க. ஒவ்வொரு ஊரிலும் தட்கால் ஓபன் பண்ணும்போது முதல் ஆளா இருந்தா கிடைக்க சான்ஸ் இருக்குன்னு இந்த ஓட்டம். !

இங்க கும்பகோணம் வந்தா அங்கேயும் லைன். ஆனா இந்த லைன்ல நின்னு டிக்கெட் வாங்கித் தரதுக்கும் ஆளுங்க இருக்காம். அவங்ககிட்ட 200, 500 இதுபோல தொகையையும் டிக்கெட் ஃபார்மையும், டிக்கெட்டுக்கான பணத்தையும் கொடுத்தா அவங்களே இரவு முழுக்க லைன்ல, ஸ்டேஷன்ல படுத்திருந்து டிக்கெட் வாங்கிக் கொடுப்பாங்களாம்.

சில மாணவர்கள் இந்த ஆளுங்ககிட்ட  பணத்தைக் கொடுக்குறாங்க. சிலர் அவங்களே லைன்ல படுத்து டிக்கெட் வாங்குவாங்களாம். இதெல்லாம் 8 மணிக்கு ஆன்லைன் டிக்கெட் புக்கிங் இருந்தப்ப.. அதுக்குன்னு இப்ப நிலைமை மாறிடிச்சுன்னு சொல்ல முடியாது. டிக்கெட் கிடைக்கிறதே இல்லை இப்பவும். 

வாரா வாரம் கட்டாயம் வீட்டுக்கு அம்மா அப்பாவைப் பார்க்கப் போவோம்னு நினைக்கிறவங்க புக் பண்ணி வைக்கலாம். ஆனால் அலுவலக வேலை நிமித்தம் மாதம் ஒருமுறைதான் வர முடியும். அதுவும் அம்மா கையால வீட்டுச் சாப்பாடை ஒரு பிடி பிடிக்கலாம் என்ற ஆசை கட்டி இழுத்துட்டு வர்றதால.

இந்த நிலைமையில நாம ஆசைப்பட்டுட்டோம்கிறதுக்காக ஊருக்குப் போக நார்மலா எப்பவும் ரயில்ல  சாதாரண டிக்கெட்டே கிடைக்காது.  வெயிட்டிங் லிஸ்ட் 300 ஆர் ஏ சி 40 ந்னு வரும். சரி தத்கல்ல புக் பண்ணலாம்னா காலையில முன்ன 8 - 8 30 மணிக்கு நெட் கிடைக்காது, இப்ப 10 - 11 மணி கிடைக்காது. கிடைச்ச பின்ன பார்த்தா ஃபுல்லா புக் ஆகி வெயிட்டிங் லிஸ்ட் வரும்.

ஒரு ஏரியாவிலேருந்து ஒரு முறைதான் டிக்கெட் புக் பண்ண முடியும்னு நம்ம ஐ பி அட்ரஸ வச்சு சொல்லும். ஒரு ஐடில ஒரு கம்ப்யூட்டர்லேருந்து புக் பண்ண பின்னாடி நாம் கான்சல் பண்ணிட்டு வேற ட்ரெயினுக்கும் புக் பண்ண முடியாது. இந்த நிலைமையில எப்பிடி பல்க்கா புக் பண்றாங்க  அப்பிடிங்கிறது ஹண்ட்ரட் மில்லியன் டாலர் கேள்வி.

பஸ்ஸூலதான் டிக்கெட்டுக்கு காசு கொடுத்து வாங்குவோம். ட்ரெயின்னா ஸ்டேஷன்லேயே டிக்கெட் வாங்குவோம். ஆனா போன ரெண்டு மாதத்துக்கு முன்னாடி எல்லாம் ஆன்லைன்ல டிக்கெட் புக் பண்ணவங்ககிட்ட டி டி ஆர் டிக்கெட் புக் லீஃப்ஸோட வந்து டிக்கெட்டைக் கொடுத்துக் காசு வாங்கினார். ஏன்னா நாம் புக் பண்ணத விட டிக்கெட் விலை அதிகமாயிட்டுது. சோ அந்த அதிகப்படிக் காசை அப்பிடி  கலெக்ட் பண்ணாங்க. டிக்கெட் , டிக்கெட்னு கூவாத குறைதான். டிடி ஆரா., பில் கலெக்டரா  அப்பிடிங்கற மாதிரி பாவமா இருந்தது.

தட்கால் அவதிகள் ஏகத்துக்கு இருந்தாலும் ட்ரெயின்னா நமக்கு தட்கால்ல டிக்கெட் சார்ஜோட கூட 75 ரூபாய்தான் கூட வரும். ஆனா ( ஏசி ) பஸ்னா டிக்கெட் விலையே  750. 900 ம்னு வரும். எனவே எத்தனைதான் அவதிகளைக் கொடுத்தாலும் ப்ரயாணம் சுகமானதுங்கிறதால ட்ரெயிந்தான் நம்ம சாய்ஸ்.


3 கருத்துகள்:

  1. முன் பதிவு செய்ய மீண்டும் 60 நாட்களாக ஆக்கி விட்டார்கள்....

    90, 120, 60 என மாற்றிக் கொண்டே இருப்பது இவர்களுக்கு ஒரு பொழுது போக்கு! :(

    என்ன இருந்தாலும் ட்ரையின் தான் வசதி.

    பதிலளிநீக்கு
  2. ஆம் வெங்கட்..கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  3. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)