ஞாயிறு, 1 ஆகஸ்ட், 2010

நட்பூ

நானுமற்று நீயுமற்று
வலியிழந்து வலுவுற்று
நாமான காலம்..
என்றும் நிகழ்காலம்..

கைகோர்த்து விளையாடி
கைதூக்கி நிலைநிறுத்தி..
கிளியாந்தட்டாய்..
ஒருவரிடத்து ஒருவரை இழுத்து..

பள்ளி சென்றோமோ
பாடம் படித்தோமோ
நன்கு துயின்றோமோ
நாளெல்லாம் நட்பால் பூத்தோம்..


காதல்., காமம் அற்று
பால் வேற்றுமையற்று
உன் நோவை நான் வாங்கி
என் உயிரை நீ சுமந்து..

கவலையில் வீழும் போதெல்லாம்
நான் நடப்பதில்லை..
என்னைச் சுமந்து
நீதான் கடந்து செல்கிறாய்..

நெல்லிக்கனியோ., அவலோ.,
நம் நட்பூ உரைக்கப்
போதுமானதாயில்லை..
வடக்கிருந்து உயிர்
துறக்கவும் சித்தமாய்...

வாழ்வான வாழ்வு இது..
வளப்படுத்த வந்த வசந்தமே..
வாழுவோம் நமக்காய்..
நமக்கான அனைவருக்காய்..

ஏழு ஜென்மம் அல்ல..
எழுபது ஜென்மம் எடுத்தாலும்
எதிர்சேவை செய்யவந்த
என்னுயிரே... என் நட்பூவே ..நீ வாழி..

டிஸ்கி: 1 - இந்த நட்பூவும் போனவருடம்
டிசம்பர் மாதம் எழுதிய இந்த நட்பு கவிதையும்
உங்களுக்கெல்லாம் அர்ப்பணம் என் தோழமைகளே.
டிஸ்கி 2 : - இது இந்த வாரம் இளமை விகடன்ல நண்பர் தினக் கவிதையா வந்து இருக்கு மக்காஸ்..

32 கருத்துகள்:

  1. இந்த 'நட்பூ' கவிதை நட்பைப்
    பற்றிய நற்குணங்கள் கூறி
    மணம் பரப்பி வந்தது.
    உங்களுக்கும் அன்பர்களுக்கும்
    'நட்பர்' (நண்பர்) தின
    நல்வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  2. உங்கள் காயங்களுக்கு எங்கள் ஆறுதல்

    பதிலளிநீக்கு
  3. உங்கள் கவிதைகளை தொடர்ந்து வருகிறேன்.. தமிழ் உங்கள் வசமாகியுள்ளது..உணர்ர்சிக் குவியலை வ்ரிகளாக்க எப்படி முடிகிறது என்ற ஆச்சர்யம் தான் தங்கள் கவிதை படிக்கும் போதெல்லாம்..இப்படி கவி பாடி எங்கள் நட்பை கௌரவித்தமைக்கு நன்றிகள் ..அன்புடன் வெற்றி

    பதிலளிநீக்கு
  4. உணர்வு குவியல்களுக்கு கொடுத்த வார்த்தை வடிவம் ஜோர்!உங்கள் கவிதைகள் எல்லாமே படிக்கும் போது கொஞ்சம் கொஞ்சமாய் நகர்வது போல் ஒரு FEELING! KEEP IT UP!!

    பதிலளிநீக்கு
  5. காதல்., காமம் அற்று
    பால் வேற்றுமையற்று
    உன் நோவை நான் வாங்கி
    என் உயிரை நீ சுமந்து..]]


    வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  6. இனிய நட்பு நாள் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  7. கவிதை நன்றாக உள்ளது .நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  8. //ஏழு ஜென்மம் அல்ல..
    எழுபது ஜென்மம் எடுத்தாலும்
    எதிர்சேவை செய்யவந்த
    என்னுயிரே... என் நட்பூவே... நீ வாழி...//

    வாழ்த்துக்கள் தேனம்மை. நல்லதொரு நட்பின் வெளிப்பாட்டுக் கவிதை.

    பதிலளிநீக்கு
  9. காதல்., காமம் அற்று
    பால் வேற்றுமையற்று
    உன் நோவை நான் வாங்கி
    என் உயிரை நீ சுமந்து..


    ....ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க, அக்கா.. நட்பின் இனிமையை, அழகாக சொல்லி இருக்கீங்க....

    பதிலளிநீக்கு
  10. பத்திரிக்கை துறை சாராத எத்தனையோ இளைஞர்களிடமும், அனுபவசாளிகளிடமும் ஒளிந்து கிடக்கும் சிந்தனைகைளையும்
    வெளி உலகிற்கு கொண்டுவருவதே ஜீஜிக்ஸ்.காமின் (www.jeejix.com ) நோக்கம்.
    உங்களின் பதிவு செய்யும் சமூக மாற்றங்களை சுவாசியுங்கள் !!

    பதிலளிநீக்கு
  11. பத்திரிக்கை துறை சாராத எத்தனையோ இளைஞர்களிடமும், அனுபவசாளிகளிடமும் ஒளிந்து கிடக்கும் சிந்தனைகைளையும்
    வெளி உலகிற்கு கொண்டுவருவதே ஜீஜிக்ஸ்.காமின் (www.jeejix.com ) நோக்கம்.
    உங்களின் பதிவு செய்யும் சமூக மாற்றங்களை சுவாசியுங்கள் !!

    பதிலளிநீக்கு
  12. //கவலையில் வீழும் போதெல்லாம்
    நான் நடப்பதில்லை..
    என்னைச் சுமந்து
    நீதான் கடந்து செல்கிறாய்..//

    natpin ilakkanam.. ungal antpu kidaithadarku iraivanukku nandri

    பதிலளிநீக்கு
  13. அக்கா உங்கள் வரிகளில்

    நட்பின் ஞாபக சுவடுகளின் வடு வலிகளை சுமந்த அந்த நாட்களை நினைவுக்கு கொண்டு வந்து மனதை பாரமாக்கிவிட்டது

    இதுவும் சுகமாகத்தான் இருக்கு...

    நட்பு

    பதிலளிநீக்கு
  14. அக்கா கலக்கிடீங்க உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  15. நல்லதொரு நட்பின் கவிதை.மனம் நிறைந்த வாழ்த்துகள் தேனக்கா.

    பதிலளிநீக்கு
  16. கவிதை நன்றாக உள்ளது .

    நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  17. ஆமாம் அஷோக். நன்றீ.,நிஜாம்., குரு., வெற்றி., ஸ்ரீதர்.,அமைதிச்சாரல்., ஜமால்.,மாதங்கி., ஜெய்., இளம்தூயவன்.,மௌனமான நேரம்., சத்ரியன்.,சித்து.,கலாநேசன்., கௌசல்யா.,ஸ்வேதா,., முனியப்பன் சார்., கார்த்திக்.,செந்தில்., ராம்ஜி., சசி.,ரமேஷ்.,ஹேமா.,

    பதிலளிநீக்கு
  18. சூப்பர்ப் அக்கா..உங்களுக்கும் எங்களுடைய நண்பர்கள் தினவாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  19. நட்பிற்கான கவிதை அருமை...
    உங்க நட்பிற்கும், அன்பிற்கும் நன்றி அக்கா... :-)))

    பதிலளிநீக்கு
  20. நன்றி குமார்., விஜய்.,கீதா., யாநிலாவின் தந்தை.,ஆனந்தி..

    பதிலளிநீக்கு
  21. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)