சனி, 31 ஜூலை, 2010

அன்பின் மாலா...

அன்பின் மாலா..
அணையா விளக்கே..

செம்பருத்தியில் பூத்த சிகப்பழகி...
செம்மாதுளை பிளந்த சிரிப்பழகி...

மலைகளின் ராணியிடமிருந்து
விடைபெற்றுவந்த மகாராணி..


என் கவிதைகளின் ரசிகையே..
கவிதையாய் ஆனவளே..

மலரும் நினைவுகளில் உன்
மலர்ந்த சிரிப்பு மட்டுமே..

எங்கு சென்றாலும் வந்து என்னை
முன்பிருந்து வாழ்த்தியவளே..

சிரிப்பானைப் போட்டுவிட்டு
சிரிக்க வைத்து மகிழ்ந்தவளே..

என் பயணம் சிறக்க வாழ்த்தி
உன் பயணம் முடித்துக் கொண்டாய்..

காலடி வைத்தபோதே
காலனோடு போனாயோ...

ப்ரயாணம் என்றால் ப்ரியம் உனக்கு..
மீளாப் பயணத்தில் என்னை விட்டு..

வருவதாக சொன்னாயே..
விழி மலரக் காத்திருந்தேன்..

பிச்சியாக்கிச் சென்றாயே..
பித்துப் பிடித்து நின்றேன்..

பாமாலை புனைந்ததுண்டு
இன்று உனக்காய் பூமாலையும்....

புனர்ஜென்மம் எடுத்தாலும்..
உன் புன்னகையோடே வா..

இறைவன் அடி சேர்ந்த என்னவளே..
இனி வரும் பிறப்பிலும் என் தோழியாகவே வா..

டிஸ்கி:- என் அன்புத் தோழி மாலாவைப் பற்றி
உண்மைத்தமிழனின் பதிவு இங்கே..

32 கருத்துகள்:

  1. தேனக்கா,

    மாலா அவர்களின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்.

    அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தவிர வேறென்ன சொல்ல முடியும் நம்மால்..?

    பதிலளிநீக்கு
  2. கூற்றுவனுக்கு என்ன குணக்கேடா நானறியேன் என்ற கண்ணதாசன் வரிகள் தான் ஞாபகத்திற்கு வருகிறது.. இந்த இளம் வயதில் தனது பயணத்தை முடித்துக் கொண்டது தாங முடியா துயரம்..ஆழ்ந்த அனுதாபங்கள்..அவர் தம் குடும்பத்தினருக்கும் , உங்களைப் போன்ற நண்பர்களுக்கும்

    பதிலளிநீக்கு
  3. கூற்றுவனுக்கு என்ன குணக்கேடா நானறியேன் என்ற கண்ணதாசன் வரிகள் தான் ஞாபகத்திற்கு வருகிறது.. இந்த இளம் வயதில் தனது பயணத்தை முடித்துக் கொண்டது தாங முடியா துயரம்..ஆழ்ந்த அனுதாபங்கள்..அவர் தம் குடும்பத்தினருக்கும் , உங்களைப் போன்ற நண்பர்களுக்கும்

    பதிலளிநீக்கு
  4. மனம் கனக்கிறது.....
    உங்க வரிகளும் அவுங்க படம் இன்னும் கூடுதல் துயரம் ஏற்றுகிறது.

    மாலா அவர்களுக்கு என் மரியாதைக்குரிய அஞ்சலிகள்.

    பதிலளிநீக்கு
  5. அவர்கள் குடும்பத்தினருக்கும் தங்களுக்கும் மனம் சாந்தி பெற வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறேன் ...

    பதிலளிநீக்கு
  6. ஆறமுடியாத வேதனைதான் தேனக்கா.அஞ்சலிகள் அவர் சார்ந்தவர்களுக்கு.

    பதிலளிநீக்கு
  7. ஆழ்ந்த அனுதாபங்கள் உங்களுக்கும் அவரது குடும்பத்திற்கும் சகோ
    அவர்களின் ஆன்மா சாந்தி அடைய எனது வேண்டுதல்கள் இறைவனோடு

    விஷ்ணு

    பதிலளிநீக்கு
  8. அவருக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்...மனம் கனக்கிறது....

    பதிலளிநீக்கு
  9. ரொம்ப வருத்தமாக இருக்கிறது தேனக்கா..

    மாலா அக்காவின் ஆன்மா சாந்தியடைய இறைவனிடம் பிராத்திக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  10. உண்மைத்தமிழன் அவர்களின் பதிவின் மூலம் இச்செய்தி குறித்து அறிந்து மிகுந்த மனவருத்தம் கொண்டேன். சகோதரி மாலா அவர்களின் மறைவிற்கு எனது அஞ்சலிகள்.

    அவர்தம் குடும்பத்தாருக்கு எப்படி ஆறுதல் சொல்வதென்றே தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
  11. மாலாவின் ஆன்மா சாந்தியும் சமாதானமும் பெற வேண்டுகிறேன்...

    பதிலளிநீக்கு
  12. தேனக்கா,

    மாலா அவர்களின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்.

    அவர்தம் குடும்பத்தாருக்கு எப்படி ஆறுதல் சொல்வதென்றே தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
  13. சகோதரி மாலா அவர்களின் மறைவிற்கு எனது அஞ்சலிகள்.

    பதிலளிநீக்கு
  14. மாலா அவர்களின் ஆத்மா சாந்தியடைய
    எல்லாம்வல்லவனிடம் இறைஞ்சுகிறேன்.

    பதிலளிநீக்கு
  15. மாலாவின ஆத்மா சாந்தியடையவும், அவரது இழப்பை தாங்கும் சக்தியை அவரது குடும்பத்தாருக்கு இறைவன் அருளவும் எனது பிரார்த்தனைகள்

    பதிலளிநீக்கு
  16. என் துக்கத்திலும் பங்கெடுத்துக் கொண்டதற்கு நன்றி. ராம்ஜி., சத்ரியன்., செந்தில்.,முத்துலெட்சுமி., வெற்றி., கருணாகரசு.,ஜமால்., கண்ணகி., ஜெய்.,ஹேமா., விஷ்ணு .,மேனகா.,ரமேஷ்., ஸ்டார்ஜன், டி வி ஆர்.,அம்பிகா., சரவணா., கனி.,குமார்., சங்கர்., கலாநேசன்.,நிஜாம்., சக்தி., புதுகைத்தென்றல்..

    பதிலளிநீக்கு
  17. தங்கள் இடுகையும்,உண்மைத்தமிழனின் பதிவும் பார்த்து மனம் பதைத்து மரணம் இந்த மாலாவையா தழுவியது என்று விக்கித்து போனேன்.என் அஞ்சலிகள்.

    பதிலளிநீக்கு
  18. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  19. ஆழ்ந்த அனுதாபங்கள். ஆத்மா சாந்தியடைய பிராத்திக்கின்றேன்...

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)