செவ்வாய், 10 செப்டம்பர், 2019

நிம்மிசிவாவின் வானில்..

2012 இல் அகநாழிகை பதிப்பகம் வெளியிட்ட 24 நூல்களில் எனது நூலும் நிம்மி சிவாவின் நூலும் இடம்பெற்றிருந்தன. அவரது ” என் வானிலே “ என்ற கவிதை நூல் பற்றி நான் எனது வலைத்தளத்திலும் விமர்சனம் எழுதி உள்ளேன். மிக மென்மையான மனதுக்கும் உணர்வுக்கும் சொந்தக்காரர் , அழகிய கவி உள்ளம் படைத்தவர் நிம்மி சிவா.

பன்னாட்டுப் புலம்பெயர் எழுத்தாளர் சங்கம் 2016 ஆம் ஆண்டு நடத்திய திருக்குறள் சிறுகதைப் போட்டியில் என்னுடைய சூலம் என்ற கதைக்கு ஆறுதல் பரிசு கிடைத்தது. அந்தப் போட்டியின் முடிவை ஜெர்மனியில் இருந்து எனக்கு உடனடியாக முகநூலில் இன்பாக்ஸில் அறிவித்தவர் என் அன்புத்தோழி திருமதி நிம்மி சிவா. அக்கணம் முதல் அவரோடு மிக நெருக்கமாகி விட்டேன். நிம்மிசிவாவின் வானில் நானும் உலாப் போய் வந்தேன். அவற்றைப் பகிர்ந்திருக்கிறேன்.



ஜெர்மனி வரப்போகிறேன் என்று தெரிவித்தவுடன் என் வருகைக்காகக் காத்திருப்பதாக அவர் சொல்வது மிக இனிமையாக இருக்கும். அவருக்குப் பேரன் பிறந்தவுடன் நான் வர நேர்ந்ததால் சந்திக்க இயலுமோ என கவலையுற்றிருந்தேன். ஆனால் அவர் பேரனோடும் மகளோடும் துபாயிலிருந்து தன் டுசில்டார்ஃப் வீட்டுக்குத் திரும்பி விட்டதால் என் குடும்பத்தாரோடு சென்று சந்தித்து மகிழ்ந்தேன்.

என் மகனுக்கும் மருமகளுக்கும் மிகப் பிடித்தவர் அவர். அவர்களுக்கு நிம்மியும் திரு ராஜ் சிவா அவர்களும் தேவையான ஆலோசனைகளை அவ்வப்போது தந்து உதவுவார்கள். தங்கள் வீட்டின் அனைத்து நிகழ்வுகளிலும் கலந்து கொள்ள அழைத்துத் தங்கள் பிள்ளைகள் போல நடத்துவார்கள். 

ராஜ்சிவா அவர்களின் வீட்டில் அவரது நூலகம் வெகு அழகு. இவரது அறிவியல் கட்டுரைகள் சிந்தனைக்கு விருந்து. பல நூல்களும் வெளியிட்டு உள்ளார்.


நிம்மி சிவாவின் வீடோ கொள்ளை அழகு அவர்கள் அனைவரையும் போல.<3 .="" nbsp="" p="">


இது நிம்மியின் ராஜாங்கம். :)

தமிழ் ஆலயத்தில் ஜெர்மன் வாழ் தமிழ்க் குழந்தைகளுக்கு முன்பு தமிழ் கற்றுக் கொடுத்து வந்துள்ள நிம்மி சிவா அவர்களுக்கு ஆசிரியர் தின வாழ்த்துக்கள். &  ஆசிரியர் தினத்தில் பிறந்த ஆசிரியருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் <3 p="">

அழகான முகநூல் அறிமுகத்துக்கு நன்றி நிம்மி :)

////2012 ஆம் ஆண்டில் அகநாழிகைப் பதிப்பகத்தால் எனது கவிதை நூலுடன் , இவரது நூலும் சேர்ந்தே வெளியானது. அப்போதிருந்தே நட்பு வட்டத்தில் இருந்தாலும் கடந்த ஓரிரு வருடங்களாகத்தான் நட்பில் இறுக்கநிலை ஏற்பட்டது. அப்பப்போ வாட்ஸ் அப்பில் எழுதியும் போனில் பேசியும் அன்பைப் பரிமாறிக் கொள்வோம் . ஆனால் இவ்வளவு சீக்கிரம் நேரில் சந்திப்போம் என்று எதிர்பார்க்கவே இல்லை. இது வரை 10 நூல்களை எழுதிய Thenammai Lakshmanan அவர்கள் குடும்பத்தினருடன் எனது வீட்டிற்கு வந்து , சில மணி நேரங்கள் பேரனுடனும் கொஞ்சிப்பேசி மகிழ்வித்தமை நிறைவைத் தந்தது. இன்னும் சில வாரங்கள் இங்கே இருக்கப் போகும் தேனம்மாவை இன்னும் பார்ப்பேன் ..
இன்னும் பேசுவேன் ..
இன்னும் மகிழ்வேன் 🤗

#thankyou #thenu #Düsseldorf. #Germany #myhome #writter

உங்கள் மனம் நெகிழ்ந்த வார்த்தைகளில் கரைந்து நிற்கிறேன்.

மதுரை மீனாட்சியும் ஹம் காமாட்சியும்.
https://honeylaksh.blogspot.com/2019/09/blog-post.html
நன்றி நிம்மி. ஜெர்மனி பற்றி அதிகம் அறிந்துகொள்ள உதவினீர்கள்.
கிட்டத்தட்ட 18,000 க்கும் அதிகமான சுய உதவிக் குழுக்களில் உள்ள ( நாலு லட்சம் ) பெண்கள் வாசிக்கும் நமது மண்வாசம் செப்டம்பர், 2019 இதழில் இக்கட்டுரை வெளியாகி உள்ளது.

இக்கட்டுரைக்குத் தேவையான விவரங்கள் தந்துதவிய நிம்மிக்கு என் அன்பு நன்றிகள். விருந்தோம்புவதிலும் இவர் சிறந்தவர். இவர் இல்லத்தில் சிக்கன் பிரியாணி, தால், கத்திரிக்காய் பால் கறி, சிக்கன் வருவல், ரெய்தா, டெஸர்ட் ஆகியன சுவையாகச் செய்து பரிமாறினார்.


 இந்த பேப்பர் பிள்ளையார் ஓவியத்தில் ஒரு சிறப்பு உள்ளது. நிம்மி சிவா அவர்களின் மகள் பெயர் யாழினி - யாழு சிவா, மாப்பிள்ளையின் பெயர் கணேஷ். எனவே கணேஷின் கரங்களில் யாழ் வைத்ததுபோல் அழகான ஓவியமாக்கி இருக்கிறார் யாழினி சிவா. ( இவர் முகநூலில் தன் தந்தையைப் போல் அறிவியல் தொடர்கள் - அய்ன்ஸ்ரூலி என்ற காமிக் தொடர் எழுதிவருகிறார் என்பது சிறப்பு ) .கணேஷ் யாழினி தம்பதிக்கு இன்று இரண்டாம் ஆண்டு திருமணநாள். வாழ்த்துக்கள் அன்புச் செல்லங்களே. வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு. 

நிம்மி சிவாவின் மகன் இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜாவுடன் சேர்ந்து தமிழ்ப்படங்கள் சிலவற்றுக்கு இசையமைத்திருக்கிறார். அன்பும் மகிழ்ச்சியும் நிம்மி. இதே போல் மகிழ்ந்திருங்கள். வாழ்த்துக்கள். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)