வியாழன், 13 ஏப்ரல், 2017

மாடித்தோட்டமும் மலைப்பயிர்களும்.

மாடித்தோட்டம் போடவேண்டும் என பல நாட்களாக ஆசை . ஆனால் தற்போது இருக்கும் ஃப்ளாட்ஸில் மேலே முழுக்க மூடி ஆஸ்பெஸ்டாஸ் ஷீட்/இரும்பு ஷீட்ஸ் போட்டுப் பக்காவா இருக்கு. அது புறா பறவை எச்சங்கள் நிறைந்து வாக்கிங் போகவும் அசௌகர்யமா இருக்கு. சின்னஞ்சிறு நிகழ்ச்சிகள் நடத்தலாம். ஆனால் வருடாந்திரம் கூட யாரும் அங்கே ஒரு கெட்டுகெதர் கூட கொண்டாடியதில்லை.

அதை எடுத்தால் சோலார் பவர் நிர்மாணம் செய்யலாம் என்று ரங்க்ஸின் எண்ணம். எனக்கோ என் பழைய வீட்டைச் சுற்றி இருக்கும் தோட்டம் போல மாடி பூரா தோட்டம் அமைக்க எண்ணம். உஷாவின் தோட்டம் பார்த்து நப்பாசையும் கூட.

என் அன்புத் தோழி ஆரண்யா அல்லியை சேலத்தில் அவரது இல்லத்துக்குச் சென்று சந்தித்தேன். ஆர்கானிக் ஃபார்மிங்கில் அவர் எக்ஸ்பர்ட். உரம் பூச்சிக்கொல்லி இல்லாமல் இயற்கை விவசாயம் செய்யவும், மாடித்தோட்டம், பால்கனித் தோட்டம் அமைக்கவும் வழிகாட்டுகிறார்.

அவரது மாடித்தோட்டமே இது.

மூன்று டைப்பான வெல்க்ரோ பேக்குகள் வைத்து அவற்றில் மண், தென்னைக் கழிவான பித்,  இயற்கை உரம் நிரப்பி உயரத்துக்குத் தகுந்தவாறு புதினா, கொத்துமல்லி, வெந்தயக் கீரை, துளசி, அடுத்த லெவல் பேகில் கத்திரிக்காய் வெண்டை, தக்காளி, அதற்கு அடுத்த லெவல்பேகில் வாழை , முருங்கை எனப் பயிரிட்டு இருக்கிறார்.

பசுமஞ்சள் நல்ல பெரிய கிழங்காக அறுவடை செய்ததைக் காண்பித்தார். ( பேலியோவாசிகளின் கவனத்துக்கு ) . கொத்துக் கொத்தாய் கத்திரியும் தக்காளியும் காய்த்திருந்தது. !

அவரது மாடித் தோட்டத்தைச் சுட்டு வைத்திருக்கிறேன். ஆங்... சொல்ல மறந்துட்டேன் அந்த வெய்யிலிலும் வெள்ளை சாமந்தியும் காலிஃப்ளவரும் கூட இந்தத் தோட்டத்தில் மலர்ச்சியாகப் புன்னகைத்துக் கொண்டிருந்தன. :)
மடல் பிரியும் வாழை.



வெங்காயத்தாளும் வெங்காயமும் தோட்டத்திலிருந்து.
இந்தப் பச்சை மிளகு ஏற்காடு மலையடிவாரத் ( தம்புத் ) தோட்டத்தில் இருந்து எடுத்து வந்திருந்தார். இது போல் நான் கேரளா, பாலோடில் பார்த்திருக்கிறேன்.
அங்கேயிருந்து கொண்டு வரப்பட்ட பிரண்டைக் கொடி. இது துவையல், பச்சடி, குழம்பு செய்து சாப்பிட்டால் ஜீரணம் அதிகமாகி பசியைத் தூண்டும்.
நமக்கு ரொம்பத் தெரிஞ்சதுதான் இது. காபிக்கொட்டை :)

அவர் வீட்டில் மகள் பொழுதுபோக்கிற்காக புடவை வியாபாரம் செய்து வருகிறார். அவற்றைப் படம் பிடித்தேன். அவர் அழகு மகளின் அன்பும் , பேத்தியின் புத்திசாலித்தனமும் மறக்க இயலாதது.
இயற்கையின் காதலி ஆரண்யா அல்லியின் வீட்டுச் சாவி(ப் பறவை)கள் தங்குமிடமும் கூட மரத்தால் ஆன மர உருவம்தான். !

புடவைகளைப் பார்த்து எடுக்காமலிருந்தால் நாம் தென் தமிழ் நாட்டுத் தமிழச்சியா :) மூன்று எடுத்தேன். அவற்றில் விலை அதிகமுள்ள ஒன்று அவரின் அன்பின் வெகுமதியாய்க் கிடைத்தது.

அவர் விவசாயம் செய்யக் கற்பித்துவரும் நிலத்தைத்தான் பார்க்க இயலவில்லை. அடுத்த முறை பார்த்துக்கலாம்னு வந்துட்டேன். மாடித் தோட்டம் போட வழிநடத்தனும்னாலும் புடவைகளுக்காகவும் நீங்க அவரை இந்த எண்ணில் தொடர்பு கொள்ளலாம். வாட்ஸ் அப் எண். 9600800221./

அன்பும் நன்றியும்அணைப்புக்களும்டா அல்லி.  வாழ்க வளமுடன். :)

3 கருத்துகள்:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)