வியாழன், 13 ஏப்ரல், 2017

விஜிபி கோல்டன் பீச், எஸ்ஸெல் வேர்ல்ட், டால்கட்டோரா பாக், அப்பு கர்.

வருடா வருடம் கோடை விடுமுறைக்கு இப்போ போல பயிற்சி வகுப்புகளுக்கு அனுப்பாத ஒரு காலத்தில் ஊர் ஊராகச் சுற்றி இருக்கிறோம். பிள்ளைகளுடன் நாமும் பிள்ளைகளாகி என்ஜாய் செய்திருக்கிறோம். கோடை வாசஸ்தலங்களுக்கும் தீம் பார்க்குகளுக்கும் சென்ற சில மகிழ்வான தருணங்கள் புகைப்படங்களில் பார்க்கும்போது குழந்தைகளின் குழந்தைப் பருவத்துக்குச் சென்று மீண்ட மகிழ்ச்சி ஏற்பட்டது.

இப்போது நிறைய தீம் பார்க்குகள் வந்துவிட்டன. ஆனா பதினைந்து வருடங்களுக்கு முன்பு மெட்ரோ சிட்டிகளில் மட்டுமே தீம் பார்க்குகள் இருந்தன. 

விஜிபி கோல்டன் பீச் :-

விஜிபி கோல்டன் பீச்சில் நுழைவுக் கட்டணம் போக ஒவ்வொரு ரைடுக்கும் பர் ஹெட் பத்து ரூபாய் வீதம் கட்ட வேண்டும். சென்னையில் இருந்தபோது ஒரு கோடை விடுமுறை சமயம் சென்றோம். இங்கேதான் அந்தப் பாட்டு எடுத்தாங்களாம். இங்கேதான் அந்தப் பட ஷூட்டிங் நடந்துச்சாம் எனப் பேசியபடி பார்த்தோம். :)
பெரிய தம்பிக்குத் திருமணமான புதிது. சாப்பாடு கட்டிக் கொண்டு குடும்ப சகிதமாய் ஒரு நாள் பூரா விஜிபியைச் சுற்றி வந்தோம். அங்கே ஒரு காவலர் பொம்மை போல் அசையாமல் நிற்பார். துபாய் மாலில் பார்க்குமுன்னர் வெகு காலத்துக்கு முன்பே இங்கே பார்த்திருக்கிறோம்.


அதன் பின் ரைடுகள். மாலையில் கடற்கரையில் மீம் ஷோ, மாஜிக் ஷோ, மிமிக்ரி, கரகம், காவடி, பொய்க்கால் குதிரை போன்ற கிராமியக் கலை நிகழ்ச்சிகள், சினிமாப்பாடல்களுக்கான நடனங்கள் நடைபெறும். நடந்து நடந்து கால் வலித்தவுடன் அங்கே அப்பளம், சுண்டல் வாங்கி சாப்பிட்டுவிட்டு பிள்ளைகளுடன் இரவு வீடு திரும்பியதுண்டு. :)
எஸ்ஸெல் வேர்ல்ட். :- 

மும்பையில் போரிவில்லியில் இருக்கும் இந்த ஃபன் உலகத்தில் பலவிதமான ரைடுகள் உள்ளன. இது வாட்டர் தீம் பார்க். ( கோவையின் ப்ளாக் தண்டர் போல. அங்கே எல்லாம் எடுத்த புகைப்படங்கள் பழைய லாப்டாப்பில் கோவிந்தா )

இங்கே குழந்தைகளுக்கான ரைடுகள் அதிகம். ஒவ்வொரு ரைடுக்கும் 30 ரூ என நினைக்கிறேன். அதிலும் உயரத்தில் இருந்து நேராக நீரில் விழுந்து வரும் வண்டி சலேர் என நீரை அடிக்கும் பாருங்கள் ரொம்ப உற்சாகம்.

இது போக விதம் விதமான ரோலர் கோஸ்டர்கள், ஜயண்ட் வீல், சர்ரென்று ராக்கெட் போல உயர்ந்து இறங்கும் ரைட் என வயிற்றைப் பதம் பார்த்து வெளியே தள்ளும் காப்ரா வஸ்துகள் அதிகம். தலைசுற்றல், ரத்த அழுத்தம் உள்ளவர்கள் எச்சரிக்கையாக வேடிக்கை பார்ப்பதோடு நகர்ந்து விடுதல் நல்லது :)

ஆனால் முக்கால் வாசி ரைடுகள் குழந்தைகளுக்குத்தான். பாதி ரைடுகள் பதின்பருவத்தினருக்கு. திகிலோடு அவர்கள் கத்துவது பார்த்தால் நமக்கு ஈரக்குலை நடுங்கும்.

நானும் என சின்ன மகனும் ஒரு கப்பல் ரைடில் ஏறிவிட்டு கிர்ரடித்து எப்படா இறக்கிவிடுவார்கள் என கிறக்கமாகி மயக்கமாகி நடந்தோம். கொஞ்ச நேரம் ஹார்ட் பீட் எகிறி நாம் கனவுலகில் நடக்கிறோமா, நனவுலகில் நடக்கிறோமா எனப் புரியவில்லை. ரங்க்ஸ் எச்சரிக்கையாக அநேகமானதில் ஏறவேஇல்லை.

உடம்பில் எமர்ஜென்சி ஸ்விம்சூட் மாட்டியபடி உயரத்தில் இருந்து அருவி போல ஐந்து இடங்களில் மடிப்புடன் உள்ள நீர்ச்சறுக்கும், சுழன்று சுழன்று இறங்கும் நீர்ச்சறுக்கும் , மிதந்து கொண்டே செல்லும் நீரோட்டமும் சென்று வந்தோம். அபாயம் அதிகமில்லை. செயற்கை அருவி, ஆறு, அலை ஆகியவற்றில் நனையலாம். :)
இந்த ரைட் எல்லாமே குழந்தைகளுக்கு மட்டும். இன்னும் இங்கே குழந்தைகள் தனித்து ஓட்ட ட்ராக்குடன்  பாட்டரி ஆபரேடட் பைக் எல்லாம் உண்டு. காலை பத்தரை - மாலை ஆறரை வரையே உண்டு.

சொல்ல மறந்துட்டேன். இது ஒரு தீவில் இருக்கு. அதுனால முதலில் வில்லே பார்லேயில் இருந்து (பாங்க் குவார்ட்டர்ஸ் இருக்கும் இடம் ) எலக்ட்ரிக் ட்ரெயினில் போய் அதன் பின் போட்டில் போய் இந்தத் தீவை அடைந்தோம். அப்புறம் லெமன் ஜூஸ் வித் சால்ட் & சோடா இந்த ஏரியா பூரா ஃபேமஸ். இதுல ஏதோ ஹாஜ் மூலாவைக் கரைச்சா மாதிரி இருக்கும் டேஸ்ட்.

டால்கட்ரோடா பாக் :-

 இது டெல்லியில் சவுத் அவென்யூவிற்கு அருகில் உள்ளது.  மிகப்பெரும் பார்க். ஆனால் பலதரப்பட்ட மனிதர்கள் இங்கே பார்க்கைக் கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். நாலாபுறமும் பார்த்தபடி குழந்தைகளோடு சிறிது எச்சரிக்கையாகவே சென்று வரவேண்டும்.
குழந்தைகள் விளையாட ஏற்ற இடம் . மாபெரும் தோட்டம். அடுக்கடுக்கான மலர்கள் வரவேற்கும் அழகுப் பூஞ்சோலை. இதன் அருகில் பிரசிடென்ஷியல் எஸ்டேட் இருக்கு. இங்கே முகல் கார்டன் குறிப்பிட்ட காலங்களில் திறப்பார்கள். அப்போது அங்கே வளர்க்கப்படும் வண்ணமயமான வித்யாசமான மலர்களைக் கண்டு களிக்கலாம். குடியரசு தின பரேடு நடப்பதைப் பார்க்க இந்த ஏரியா சென்றிருக்கிறோம்.  அதன் பின் இந்தியா கேட்டில் உள்ள ப்ளைன் ஆர்டிஃபிஷியல் லேக்கில் போட்டிங்க் போய்விட்டு பாப்கார்ன் சாப்பிட்டுவிட்டு வந்தோம்.  


அப்பு கர். :-

பிரகதி மைதானுக்கு அருகில் அமைந்திருக்கிறது இந்த அப்பு கர். குட்டியான யானைக்குட்டிப் படம் போட்ட இந்த அப்பு கரில் டான்ஸ் ஆட தண்ணீருக்குள் அமைந்த தளம் ஸ்பெஷல். பின்னணியில் இசை ஒலிக்க எல்லா வயதினரும் தடதடவென இறங்கிச் சென்று டான்ஸ் ஆடுகிறார்கள். அநேகமாக ஆடுவதில் மிகப் பிரியம் உள்ள அவர்கள் அனைவருமே பஞ்சாபியர்கள்தான். டெல்லிக்கு மிக அருகில் பஞ்சாப் இருப்பதால் அவர்கள் இங்கே அதிகம். பனியாக்களும் இருக்கிறார்கள். ஆனால் பஞ்சாபியர்கள் ( சிங்குகள் ) இன்னும் அதிகம். அதேபோல் டெல்லியில் பேசப்படும் இந்தியும் பஞ்சாபி போல் கடுபடு ஹிந்தியாக இருக்கும் :)

குழந்தைகள் மிகவும் என் ஜாய் செய்த இடம் என்றால் இதுவாகத்தான் இருக்கும். விதம் விதமான ஷேப்புகளில் ரைடுகள். நல்ல வெய்யில் காலத்தில் சாப்பாடு கட்டிக் கொண்டு சென்று நமக்குக் கொஞ்சம் வேலை அதிகம் :)
இது டேஷிங் கார்.
ஆனால் இங்கே வாங்கும் எண்ட்ரன்ஸ் டிக்கெட்டுக்கு நூடுல்ஸ், காஃபி எல்லாம் கிடைக்கும். 4 ஐட்டம் என்று நினைவு. சூப்பரா சுடச் சுட கிடைக்கும்.

அதுபோக ஹாலிவுட் டைனோசர்களை எல்லாம் இருட்குகைக்குள் சென்று திடீர் திடீரென்று எங்கிருந்தாவது  இருபக்கமும் பாறைகளில் இருந்து முளைத்துக் கத்தும்போது பார்த்துத் திகிலடைந்து நாமும் கத்தலாம்  என்பது கூடுதல் சுவாரசியம். . ! :)

இனி ரேட்டிங்க்ஸ் :- RATINGS.

VGB GOLDEN BEACH - **** ( FOUR STARS )
ESSEL WORLD  - **** ( FOUR STARS )
TALKATORA GARDENS - *** ( THREE STARS ) 
APPU GHAR - ***** ( FIVE STARS )


3 கருத்துகள்:

  1. முதல் இடத்திற்கு மற்றும் பலமுறை சென்றதுண்டு...

    பதிலளிநீக்கு
  2. அப்பு கர்.... இப்போது இல்லை! மூடி விட்டார்கள்.

    பதிலளிநீக்கு
  3. நன்றி டிடி சகோ

    அட அப்படியா வெங்கட் சகோ !

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)