வியாழன், 13 ஏப்ரல், 2017

தாமரைக் கோயிலில் தியானம்.



தாமரைக் கோயிலில் தியானம்.

நியூடெல்லியில் இருந்தபோது பணிக்கர் ட்ராவல்ஸில் சிட்டி டூர் சென்றிருக்கிறோம். பிர்லா மந்திர், ந்தர் மந்தர், டால்கடோரா பாக், இண்டியா கேட், குதுப் மினார், தீன் மூர்த்தி பவன், இந்திராகாந்தி சமாதி, காந்தி சமாதி, ஓல்ட் ஃபோர்ட், லால் கிலா, சாய்பாபா டெம்பிள், மலை மந்திர் ஆகியவற்றோடு மறக்கமுடியாத ஒரு இடமும் உண்டு என்றால் அது லோட்டஸ் டெம்பிள் என்ற பஹாய் டெம்பிள்தான். ( நாங்களாகச் சென்று பார்த்தது சங்கர்ஸ் டால் மியூசியமும் மியூசிக் ஃபவுண்டனும்தான் . ) 


தாமரை வடிவில் அமைந்த வெண்ணிற இதழ்களால் 1986 இல் அமைக்கப்பட்ட கோயில் அது. 27 இதழ்களை மூன்று பகுதிகளாக உள் வரிசை, வெளி வைரிசை, மூன்றாவதாக வெளிப்புற எண்ட்ரன்ஸ் என்ற அமைப்பில் கட்டப்பட்ட கோயில் அது. ஒன்பது வாயில் உண்டு.

உள்ளே சர்ச் அமைப்பில் நீண்ட மேசையும் சேர்களும் உண்டு. பால்நிற ஒளி உள்ளே ஊடுருவி இருக்கும். அமர்ந்து தியானம் செய்யலாம். மிக அமைதியான மனநிறைவைத் தந்த கோயில் அது. டெல்லியில் கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்று. சாதி மத பேதமற்று யாவரும் சென்று வழிபடலாம். 

உலகம் முழுமைக்கும் ஒரே சமயமாக முன்னிறுத்தப்பட்ட சமயம் பஹாய். இதை நிறுவியர் பாரசீகத்தின் தெஹ்ராவைச் சேர்ந்த பஹா ’உல்’ லா. இவர் முதலில் பாப் என்ற சமயத்தைப் பின்பற்றினார். அதன் தலைவர் கொல்லப்பட இவர்தான் காரணம் என தவறாக அரசால் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். அப்போது அந்தப் பாதாளாச் சிறையின் இருட்டறையில் இவருக்கு ஆன்மீக ஜோதி  வெளிப்பட தன் ஆன்மீகக் கேள்விகளுக்கு விடையறிந்தார். 

ரஷ்யாவின் உதவியால் விடுவிக்கப்பட்டவுடன் 1863 வரை பாக்தாத்தில் வசித்தார். டைக்ரீஸ் நதிக்கரையிலுள்ள ரித்வான் தோட்டம் அருகில் அதே ஆண்டு ஏப்ரலில் பஹா உல் லாவின் குரு – பாப் அறிவித்ததைப் போல ‘நானே கடவுள்’ என பகிரங்கமாக அறிவித்தார். இதனால் ஆட்சியாளர்களின் கோபத்துக்கு ஆளாகி இஸ்ரேலின் ஆக்கா சிறையில் அடைக்கப்பட்டு உயிர் துறந்தார்.

இவர் மனைவி ஆசியா, மகன்கள் அப்துல் பஹா, பாஹிய்யா கான், மிர்சா மிஹ்டி ஆகியோர் தந்தையின் மறைவுக்குப் பின் இந்தச் சமயத்தைப் பரப்பினார்கள். இதன் கருத்துக்கள் ஒரே கடவுள், சமயங்களின் ஒற்றுமை, மனிதகுலத்தில் ஒற்றுமை இவைதான். 

ஆண் பெண் சமத்துவம் பேணல், ஏழை பணக்காரர் பேதம் களைதல் மனித குலம் முழுமைக்கும் கல்வி கிடைக்கச் செய்தல், சுற்றுச்சூழல், தொழில் நுட்பம் ஆகியவற்றுக்கிடையேயான சமநிலை பேணல் ஆகியன இதன் கொள்கைகள். இந்தச் சமயத்துக்கென்று தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் கூடிய ஆட்சிமன்றமும் உண்டு என்பது சிறப்புத் தகவல். !

2 கருத்துகள்:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  2. ...ஆகியவற்றோடு மறக்கமுடியாத ஒரு இடமும் உண்டு என்றால் அது லோட்டஸ் டெம்பிள் என்ற பஹாய் டெம்பிள்தான்.
    prsamy.org
    prsamy.wordpress.com

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)