வெள்ளி, 13 ஜனவரி, 2017

மேகம் கருக்கையிலே..

இப்பிடி ஒரு பாட்டு கேட்டிருப்பீங்க. ஹொகனேக்கல் போனபோது இந்தப்பாட்டு மனசுல ரீவைண்ட் ஆயிட்டே இருந்தது. விலாவாரியான இடுகை பின்னாடி போடுறேன். இப்ப சில புகைப்படங்கள்

இந்த வட்டு/பரிசல்ல சுத்தும்போது கொஞ்சம் பயமா கூட இருந்தது. நாலு பேர் போனா சீப். ரெண்டுபேர் போனோம். ரெண்டு பேர் போனா 750 ரூ ந்னு நினைக்கிறேன் ( ரங்க்ஸ் கிட்ட கேக்கணும் ) .போட்காரர் பத்ரமா திருப்பி கொண்டாந்து விட்டதுக்காக (!) அவருக்கு 100 ரூ டிப்ஸ் கொடுத்தார்.

என்ன கொடுத்தீங்க ஏது கொடுத்தீங்கன்னு எதையும் அதிகம் விசாரிச்சா எகனை மொகனை ஆயிடும்னு கேக்குறதுல்ல. கூட்டிட்டுப் போனாங்களா ஜம்முன்னு சுத்திட்டு ஃபோட்டோவை சுட்டமான்னு வந்திட்டா யாருக்கும் பிரச்சனை இல்லை பாருங்க. ஹிஹி.

ஹொகனேக்கல் கர்நாடகா பார்டரில் இருப்பதால் இங்கிருந்து அந்த பார்டர் உள்ள கரை வரை சென்றுவிட்டு திரும்பி வரலாம். அவர்கள் ஹொகனேக்கல் வந்து திரும்பலாம்.

போட்காரர்களுக்கும் யூனிஃபார்ம். நீல யூனிஃபார்ம் போட்டவங்க தமிழ்நாட்டுத் தோணியர்கள். மஞ்சள் யூனிஃபார்ம் போட்டவங்க கர்நாடகா தோணியர்கள்.

நாங்க போட்டிருந்த லைஃப் ஜாக்கெட்டுமே இரு கலர்கள். நமக்கு ஆரஞ்ச் கலர் லைஃப் ஜாக்கெட். கர்நாடகா மக்களுக்கு ப்ளாக் கலர் லைஃப் ஜாக்கெட் கொடுத்திருக்காங்க. அதையும் வெயிட் பார்த்து அணிந்து கொண்டு போட்டில் ( வட்டில் ) ஏறணும்.

ஓகே இனி கொஞ்சம் போட்டும் ஃபோட்டோஸும்.

ஹைட்டுப் பார்த்து வெயிட்டுப் பார்த்து பாலன்ஸ் பண்ணி வட்டுல ஏறி உக்கார்ந்தாச்சு. 

அடித்துச் செல்லும் தண்ணீர்ப்பயணம்.
ஆகாச கங்கை பூந்தேன் மலர் தூவி..
அங்கே இருந்த பொந்துக்குள்ள போய் பார்த்துட்டு வர்றாங்க இளைஞர்கள்.. என்னே ஒரு ஆராய்ச்சி. செய்யாதேன்னா செய்யணும்.



குடிக்கக் கூடாதுன்னு ரூல்ஸ் இருக்கு . அதுபோல குடிச்சிட்டு எண்ணெய் தேச்சுக்கக் கூடாதுன்னும். இப்ப புதுசா எண்ணெய்க் குளியலும் சுற்றுச் சூழலைப்  பாதிக்குதுன்னு தடை செய்துட்டாங்களாம்.

348.
வறுத்த மீன் விக்குது. அத வாங்கி சிலர் சாப்பிடுறாங்க. ஆனா எனக்கு வஞ்சிரம்தான் பிடிச்சிது. அங்கே இருக்கும் மீன் டேஸ்ட் பிடிக்கலை ( லஞ்ச் டைமில் ஹோட்டலில் சாப்பிட்டது )
அந்த மஞ்சள் பனியன் & கருப்பு லைப் ஜாக்கெட் போட்டவங்க கர்நாடகாக்காரங்க.
சூடா சேப்ப்பா வறுத்த மீன் வாங்கித் துண்ணுறாங்க :)

இங்க கூட பார்டர் கடைப்பிடிக்கப்படுது. :)

ரோட்ரூல்ஸ் மாதிரி தமிழ்நாட்டு போட்டுல போறவங்க எல்லாம் இடது கை ஓரம். திரும்பும்போதும் அதே போல இடது கை ஓரம்.

அதே போல கர்நாடகா போட்டும். உன் எல்லைல நான் குறுக்கிடல என் எல்லைல நீ குறுக்கிடாதேன்னு.
ரகசிய வளைவுகள்.
சுற்றும் வட்டுகள்.
நதியோரம் தவழும் வட்டுகள்.
பேக் டு த பெவிலியன்.

 ஓடம் ஒரு நாள் வண்டில. வண்டியும் ஒரு நாள் ஓடத்துல அப்பிடிம்மாங்கள்ல அந்த முதுமொழி மாதிரி நம்ம போட்காரர் வட்டைத் தூக்கித் தலைமேலே வைச்சிட்டு நடந்த காட்சியை அடுத்த இடுகைல பார்ப்போம். :)

நடுவுல நாமளும் கொஞ்சம் இறங்கி ஏறணும்.

இனிய பொங்கல் நல் வாழ்த்துகள் மக்காஸ்.

13 கருத்துகள்:

  1. ரகசிய வளைவுகளே பயமா இருக்கு... இதுலே நாமளும் கொஞ்சம் இறங்கி ஏறணுமா...?

    பதிலளிநீக்கு
  2. எங்களுக்கும் ஹொகனேகல்லில் பரிசலில் (கொரக்கிளில்) பயணித்த அனுபவம் உண்டு அருகில் இருக்கும் மலை உச்சியில் இருந்து சிறுவர்கள் நீரில் குதித்துப்பணம்கேட்பார்கள் போகும் போது அது பற்றி நினைக்கவில்லை.கரைக்கு வந்தபின் தான் பயம் வந்தது இன்னொரு முறை போவோமோ தெரியலை. பொங்கல் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  3. த்ரில்லான பயணம். ஒரு முறை, சிறு வயதில், கொள்ளிடம் ஆற்றில் (அதிகம் தண்ணீர் ஓடிய காலத்தில்)படகு சவாரியின் போது, பயணம் செய்பவர்களை எழுந்து நிற்க வேண்டாம் என்று பரிசல்காரர் எச்சரிக்கை செய்தது நினைவில் வந்தது.

    எனது இனிய பொங்கல் நல் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  4. போன அனுபவம் உண்டு ஐயோ செம த்ரில். நானும் மகனும் ஆங்காங்கே சிறிதாக விழும், ஓடும் அருவிகளில் படுத்து, உட்கார்ந்து குளித்த அனுபவம் அதுபோல மேலே பாறைல ஏற விடுவார் பரிசல் காரர் வட்டை ஓரம் கட்டிவிட்டு. அங்கு ஒரு இடத்தில் கீழே ஓடும் ஆற்றில் மடிந்து விழும் அருவியில் நாங்கள் மேலே பாறையில் இடுக்கில் இறங்கி குளித்த அனுபவம் என்று இப்போது நினைவுக்கு வந்தது. கர்நாடகா கரையில் ஒதுக்கி அங்கு சற்றுகாடு போல் இருந்த இடத்தில் பரிசல்காரருக்கு ஓய்வாம்...நாங்களும் காலார நடந்து மீண்டும் பரிசல் ஏறிய இடத்தில் இறக்கிவிட...நாங்கள் பரிசல் ஏறிய இடமே செம இடம்...தண்ணீரில் இறங்கி பரிசலில் ஏறிய இடம்...அருமை..உங்கள் பதிவு மீண்டும் நினைவுகளை மீட்டெடுத்தது. படங்கள் மிக மிக அழகு...பரிசலில் போகும் போது மெயின் அருவி பார்க்கலாமே ? ஃபோட்டோ காணோம்??!!! மெயின் அருவிய கர்நாடகா திரை போட்டு மறைச்சு வைச்சுருச்சா...ஹஹஹஹ் ..

    கீதா

    பதிலளிநீக்கு
  5. சிறு வயதில் இங்கே சென்றதுண்டு..... நினைவுகள்......

    பதிலளிநீக்கு
  6. கல்லூரியில் படிக்கும் போது ஒகேனக்கல் போனோம்...

    அழகான படங்கள் அக்கா...


    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  7. தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  8. நான் சென்றிருக்கிறேன். பார்க்கவேண்டிய இடங்களில் ஒன்று.

    பதிலளிநீக்கு
  9. நான்கு கால் செல்வங்களுக்கு
    நம்மாளுங்க நன்றிக்கடன் செலுத்தும்
    பட்டிப் (மாட்டுப்) பொங்கல்
    பகலவனுக்கு (சூரியனுக்கு) நன்றிக்கடன் செலுத்தும்
    தைப்பொங்கல் வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  10. அங்கே படி இருக்கும் டிடி சகோ. சோ பயம் வேண்டாம் :)

    அருமையான நினைவுகள் நன்றி பாலா சார்

    நன்றி இளங்கோ சார்

    நன்றி கீதா.ஹாஹா இல்ல அடுத்த இடுகைக்காக நாந்தான் ஒளிச்சு வைச்சிருக்கேன் :)

    நன்றி வெங்கட் சகோ

    நன்றி குமார் சகோ

    நன்றி ஜெயக்குமார் சகோ

    நன்றி ஜம்பு சார்

    நன்றி யாழ்பாவண்ணன் சகோ. அருமையா சொன்னீங்க.

    பதிலளிநீக்கு
  11. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  12. படங்களும் பதிவும் அருமை. த்ரில்லிங்கான அனுபவங்கள். பகிர்வுக்கு நன்றிகள், மேடம்.

    பதிலளிநீக்கு
  13. பாராட்டுக்கு நன்றி விஜிகே சார்

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)