ஞாயிறு, 20 செப்டம்பர், 2015

காரைக்குடி வீடுகள்.- தேர்முட்டியார் வீடு. CHETTINAD HERITAGE HOUSES - பாகம் -9

முகப்பில் மட்டுமல்ல மாடியிலும் மிக அழகான ஆர்ச்சுகளோடு கட்டப்பட்ட வீடு இது. வாயிலுக்கு இரு பக்கமும் இரு அறைகள் நீண்டு அமைக்கப்பட்டிருப்பது அழகு.  வீட்டிற்கு வெளிச்சுவரிலும் தெரிகின்றாற்போல  தூண்கள்  அமைக்கப்பட்டிருப்பது வித்யாசம். அதன் மேல் உள்ள பாரபட் வால் போன்ற அமைப்பு நுணுக்கத்தோடு மழை நீர் விழும் வசதிகளோடு கட்டப்பட்டிருக்கு. காம்பவுண்டு சுவரிலும் வளையமாக டிசைன் செய்திருக்கின்றார்கள்.



இவை எல்லாம் காரைக்குடியில் உள்ள தற்காலத்திய வீடுகள். பழம்பெரும் வீடுகள் இடிக்கப்பட்டு ப்ளாட் போடப்பட்டு வீடுகளாகவோ அல்லது இதுபோல் மாடர்ன் பங்களாக்களாகவோ அமைக்கப்படுகின்றன.


அதே போல் உள்ள இன்னொரு வீடு. இதில் ஜன்னல் உப்பரிகை எஃபக்டில் இருக்கு.


இது அந்தக்காலத்து வீடுதான். இரு பக்கமும் பாருங்கள் மாட மாளிகை போல 164. உப்பரிகைகளுடன் இருக்கு அதன் கீழேயே குட்டி உப்பரிகைகளாக இரண்டும் அமைக்கப்பட்டிருக்கு. இவை இரண்டையும் இணைக்கும் சுவரில் மாலை போன்ற டிசைனும் நடுவில் வீட்டைக் காக்கும் தெய்வமும் உறைவது அழகு. கீழே தெரிவது கார் ஷெட். அந்தக் காலங்களில் குதிரை வண்டிகள் , வில் வண்டிகள் நிறுத்துமிடமாக இருந்திருக்கலாம். 165. குதிரை லாயம் .


166.கூட கோபுரம் போன்ற உப்பரிகையின் க்ளோசப் ஷாட். :) அதன் வேலைப்பாடுகளையும் கீழே 167. திருஷ்டி பொம்மையையும் பாருங்க. :) உச்சியில் ஒரு தாமரையும் சுற்றிலும் ஒவ்வொரு பெருந்தூணிலும் இரு வெளித்தூண்களும் அதன் மேல் 168. கலசமும் ( சாமை வரகு கொண்ட இடிதாங்கிக் கலசமும் ) அமைக்கப்பட்டிருக்கு.

இது இன்னொரு  வீட்டில் வெளிப்புறப்பகுதி. பாருங்கள் கலசங்களுக்குக் குறைவில்லை . மூன்று மாடியோடு நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டுள்ள இந்த வீடுகளில் இடி தாக்காமல் இருக்க இந்தக் கலசங்களே காரணம். காரைக்குடி வீடுகளில் கதவுகள் மட்டுமல்ல ஜன்னல்களும் பிரம்மாண்டமாய் இருக்கும்.


கொஞ்சம் வெளிச்சமாக ஒரு ஷாட். இதிலும் தூண்கள் கலசங்கள் அழகூட்டுகின்றன.


அதே வீட்டின் பின்புறத் தோற்றம். இவ்வகை வீடுகளில் 169. மூன்று மாடி என்பது அதிசயம்தான். அதிலும் ரோட்டிலிருந்து பத்து அடி உயரத்தில் வீடுகள் அமைக்கப்பட்டிருக்கும். தரைத் தளம் வரை 170. காரைக்கல்லும். ( அம்மா செம்புறாங்கல் என்று சொல்வார்கள் ) அதன் மேல் தான் உட்புறம் தளம் ஆரம்பிக்கும்.


171. இது ஒரு வீட்டின் முகப்பும் காவல் தெய்வங்களும் அடேயப்பா என்னா வீரம். உள்ளேயும் பணிப்பெண்கள் கவரி வீசி தேவதைகள் பூத்தூவி காவல் & ஏவல் செய்ய நான்முகன் அமர்ந்திருக்க திருமால், சொக்கநாதர் மீனாக்ஷி இருக்கும் மீனாக்ஷி திருக்கல்யாணம் என நினைக்கிறேன்.


172. இந்த வீட்டுக்குப் பெயர் தேர்முட்டியார் வீடு. இது மகர்நோன்புப் பொட்டலில் உள்ளது. இதில் தேர் முட்டி போல ( தேர் கோபுரம் ) அமைக்கப்பட்டிருப்பதால் இப்பெயர். இருபுறமும் இது அமைக்கப்பட்டிருக்கும்.( ஒருபுறம்தான் எடுத்துள்ளேன். ).



டிஸ்கி :- 1 :- இவற்றைப் பாருங்க. 

1. ஆச்சியும் அய்த்தானும் 

2. அப்பச்சியும் ஆத்தாவும்.

3. அயித்தையும் அம்மானும்.

4. ஆயாவின் வீடு. 

5. ஐயாக்காளையும் ஆத்தாப் பொண்ணும். 

6. செட்டிநாட்டு வீடுகள் முகப்பு. CHETTINADU HOUSES

7. செட்டிநாட்டு வீடுகள். பட்டாலை. (CHETTINADU HERITAGE HOUSES )

8. செட்டிநாட்டு வீடுகள் -வளவு (CHETTINADU HERITAGE HOUSES )

9. செட்டிநாட்டு வீடுகள் மேங்கோப்பு:- CHETTINAD HOUSES. CEILING


10.  செட்டிநாட்டு வீடுகள்- பத்தி . ( CHETTINAD HERITAGE HOUSES )

11. செட்டி நாட்டு வீடுகள் . இரண்டாம் கட்டும் ஆல்வீடும். அறைகளும். (CHETTINAD HERITAGE HOUSES - ROOMS )

12. செட்டிநாட்டு வீடுகள். சாமி வீடும் படைப்பும் . CHETTINAD HERITAGE HOUSES - SAAMI VEEDU & PADAIPPU.

13.செட்டிநாட்டு வீடுகள். சூர்யப் பலகையும் நிலைகளும். CHETTINAD HERITAGE HOUSES, SURYA PALAGAI

14.செட்டிநாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 1
 
15.செட்டி நாட்டு வீடுகளும் & கலைப்பொருட்களும். CHETTINAD HOUSES & ARTIFACTS. பாகம் -2.

16. செட்டிநாட்டு வீடுகளும் கலைபொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 3

17. செட்டி நாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 4.

18. செட்டிநாட்டு வீடுகள் & கலைப்பொருட்கள் & ஏடுகள். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 5.

19. காரைக்குடி வீடுகள் & பொருட்கள். CHETTINAD HERITAGE HOUSES பாகம் - 6.

20. காரைக்குடி வீடுகள் . CHETTINAD HERITAGE HOUSES - பாகம் - 7.

21. காரைக்குடி வீடுகள். CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 8

22. காரைக்குடி வீடுகள்.- தேர்முட்டியார் வீடு. CHETTINAD HERITAGE HOUSES - பாகம் -9

23. காரைக்குடி வீடுகள். கானாடுகாத்தான் அரண்மனை. CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 10. 

24. காரைக்குடி வீடுகளில் ஓவியங்கள். - தனலெக்ஷ்மியும் தான்யலெக்ஷ்மியும்.PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES - DHANALAKSHMI & DHANYALAKSHMI. பாகம் 11.

25. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். -2.TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 12.

26. காரைக்குடி வீடுகளில் ஓவியப் படங்கள். PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் 13.

27. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 14

28. காரைக்குடிச் சொல்வழக்கு. - ஆத்தீயும் அடியாத்தீயும் ஆத்தாடீயும்.

29. காரைக்குடிச் சொல்வழக்கு - பாயிவரப்பான், பட்டுக் கிடப்பான், அரசாளுவ . !!!

30. காரைக்குடிச் சொல்வழக்கு :- மக்களுக்கு அப்பச்சியும் நாச்சியா மகனும்.

31. காரைக்குடிச் சொல்வழக்கு. :- கழுத்துருவும் ( கழுத்தீரு ) கால்மோதிரமும்.

32. காரைக்குடி ஸ்பெஷல் உணவு வகைகளும் பந்தி விசாரணையும்.

33. காரைக்குடிச் சொல்வழக்கு :- கூடி ஆக்கி உண்ணுதலும் கோட்டை கட்டுதலும். 



டிஸ்கி :- 2 :- இவற்றையும் பாருங்க. 

 1. மானகிரிக்கு காசியிலிருந்து உலா வந்த (3 1/2 கிலோ தங்கம் ) சொர்ணலிங்கம் 

2. குமுதம் பக்தி ஸ்பெஷலில் திருவாசகம் என்னும் தேன்....

3. காரைக்குடியில் கார்த்திகை வேல் பூசை

4. நவராத்திரி கொலுவும் மகர்நோன்பும் அம்மன் அம்பு போடுதலும்.

5. ராமாயணம் பாராயணமும், ராமர் பட்டாபிஷேகமும்.

6. மகாகவி பாரதியும் காரைக்குடி ஹிந்து மதாபிமான சங்கமும்

7. கவியரசர் இல்லமும் கர்னகை கதையும்

8. காவிரிப்பூம்பட்டினமும் கண்ணகியும்

9.செட்டிநாட்டு அரசர்..டாக்டர் திரு. எம்.ஏ.எம். ராமசாமி செட்டியார் .ஒரு சகாப்தம்.
 
10. குமுதமும் யவண்டம் வைரவன் செட்டியார் அவர்களும்..

11. இது நகரத்தார் வீட்டுக் கல்யாணம், இவள் புதியவளில்.

12.கல்யாணத்திலே இத்தனை சடங்கா..?! (நகரத்தார் திருமணம் நம் தோழியில் )

13. வைரமே வைரம்...

14. குங்குமம் தோழி இணைப்பில் செட்டிநாடு ஸ்பெஷல் - 30 விதமான சமையல் குறிப்புக்கள்.

15. நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு - புத்தகம் ஒரு பார்வை

16. மங்கையர் மலரில் 32 ரெசிபிஸ் அறிமுகம்  

17. செட்டிநாட்டு காரசார சமையல் ரெசிபிஸ் 32 - மங்கையர் மலர்



7 கருத்துகள்:

  1. வீடுகள் அல்ல அரண்மனைகள்
    பார்த்து வியந்திருக்கிறேன்

    பதிலளிநீக்கு
  2. பிரம்மாண்டமான கலைநயம் மிகுந்த வீடுகள்! நேரில் பார்த்தது இல்லை! அருமை!

    பதிலளிநீக்கு
  3. சிறந்த பகிர்வு
    தொடருங்கள்

    முன்னேறும் உலகில் பின்னேறும் தமிழர் பண்பாடு!
    http://www.ypvnpubs.com/2015/09/blog-post_18.html

    பதிலளிநீக்கு
  4. அழகிய வீடுகள். புகைப்படங்களில் பார்த்து ரசித்தாலும், நேரிலும் சென்று பார்க்க ஆவல் உண்டு.....

    பதிலளிநீக்கு
  5. நன்றி ஜெயக்குமார் சகோ

    நன்றி ஆர் ஆர் ஆர்

    நன்றி சுரேஷ் சகோ

    நன்றி யாழ்பாவண்ணன் சகோ

    நன்றி வெங்கட் சகோ. சீக்கிரம் எங்கள் இல்லத்துக்கு அழைக்கிறோம். ஆதி ரோஷிணியுடன் வாருங்கள். :)

    பதிலளிநீக்கு
  6. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)