குழல் இனிது யாழ் இனிது என்பர் தம் மக்கள்
மழலைச் சொல் கேளாதவர்.
இங்கே குறள் இனிது எனலாம். 3 வயதுப் பெண் குழந்தை ஒரு உபன்யாசகராக, சொற்பொழிவாளராக இருக்க முடியுமா.. அந்த அதிசயத்தைக் காண நேர்ந்தது துபாய்க்கு ஒரு குடும்ப விழாவுக்காகச் சென்றிருந்தபோது.
ஒரு 3 வயதுக் குழந்தை குழந்தைகளோடு குழந்தையாக விளையாடிக் கொண்டிருந்தது. அவளை அறிமுகப்படுத்தி மேடையேற்றியபோது மிக அழகாக மேடைக்கூச்சமில்லாமல் மேடையேறி மைக்கைப் பிடித்துப் பேசினாள்.
அவளின் அம்மா வடிவாம்பாள் இப்போது இவள் செட்டிநாட்டுத் திருமண நிகழ்வுகளைத் தொகுத்துக் கூறுவாள் என்று கூறியதும் பெண் பார்ப்பதிலிருந்து பெண் அழைப்பது வரை அழகாகக் கூறினாள். கணவன் மனைவி எப்படி இருக்கணும் என்று கேட்டதும் அதையும் சபையோர் சிரித்து ரசித்துப் புரையேறும் அளவு அழகாகச் சொன்னாள்.
ஒன்றரை வயதிலேயே 150 திருக்குறள்களைச் சொன்னதாகவும், கிட்டத்தட்ட 100 மேடைகளுக்கு மேல் உமையாள் பர்ஃபார்ம் செய்திருப்பதாகவும், சைல்ட் ப்ராஜிடி விருது மற்றும் இன்னும் பல விருதுகள் வாங்கி இருப்பதாகவும். அவளது தாய் குறிப்பிட்டார்.
காரைக்குடியில் ஒரு மேடையில் ஒன்றரை வயதில் 150 குறள்களைச் சொன்னபோது குறள்சூடி உமையாள் என்ற விருது வழங்கப்பட்டதாகக் கூறினார்.
குடும்ப விழாவில் ஆக்கபூர்வமான மைண்ட் அண்ட் பிசிகல் கேமை நடத்திக் கொண்டிருந்த நண்பர் குணா ( ஹியூமர் க்ளப் ) உமையாளின் தாயிடம் இவள் இப்படி சிறு வயதிலேயே எப்படி வர முடிந்தது. அதற்கு அந்தத் தாயின் பங்களிப்பு என்ன என்று கேட்டபோது அவரின் தாய், தனது குழந்தை பிறந்ததுமே அவளுக்கு அருகில் அமர்ந்து குறள்களைப் படித்ததாகவும், இன்னபிற விஷயங்களைத் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொடுத்ததாகவும் கூறினார்.
ஆஸ்பையர்.காம் என்ற இணையத்தின் மூலம் வார்த்தைகள் அடங்கிய போர்டுகளைக் கைக்குழந்தைகள் முன் தினம் காண்பித்து அதன் பேரைச் சொல்லித் தொடச் சொன்னால் அவர்கள் கரெக்டாகத் தொடுவதாகப் படித்திருக்கிறேன். சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம். என்பார்கள். இது தொட்டில் பழக்கமாக இருக்கிறது.
3 வயதிலேயே தாய் தந்தையை வெளிநாடு வரைக்கும் அழைத்து வந்த அந்தக் குழந்தையின் திறமை போற்றத்தக்கது. அவளின் தாயும் பாராட்டப்பட வேண்டியவர். குறள் சூடி உமையாள் இன்னும் பல கற்று வாழ்வில் உயர வாழ்த்தி வந்தேன்.
குறள்சூடி உமையாள் அவர்கள் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்... பாராட்டுக்கள்...
பதிலளிநீக்குWell done Umayal!
பதிலளிநீக்குநன்றி தனபால் சகோ
பதிலளிநீக்குநன்றி தெய்வா
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
தாயார் சகோதரிக்கு மிகுந்த பாராட்டுகள்! தெய்வக் குழந்தை உமையாள் அவர்களுக்கு மரியாதைகள், நல்வாழ்த்துகள்!
பதிலளிநீக்குஅன்புச் சகோதரி, வணக்கம்! அன்பு கூர்ந்து தங்களின் 'ள'கர மற்றும் 'ழ'கர வரிசை எழுத்துகளின் ஒலி ஓசைகளை முறைப் படுத்திக் கொண்டால் அது தங்களின் குழந்தைக்கும், வருங்காலச் சந்ததியனருக்கும் நலம் பயக்குமே! சிந்திப்பீர்களா? நன்றி!
தங்கள் குழந்தைக்கு தமிழின் சிறப்பு ஒலி ஓசைகளை அடியேன் முறைப் படுத்தும் தொண்டினை செய்ய விரும்புகிறேன். இந்த அண்ணனின் மின்னஞ்சல் அடையாளம்: TheProudIndian_2000@yahoo.co.in தொடர்பு கொள்ளவும். நன்றி.
வாழ்க வளமுடனே தொடர்ந்து....