செவ்வாய், 20 ஆகஸ்ட், 2013

தலைவா.. TIME TO LEAD .. எனது பார்வையில்.

”தமிழ் நாட்டுக்குத் தண்ணீர் கொண்டு வர முடியல.. நீங்க ஆஸ்த்ரேலியாவுக்கே தண்ணீர் கொண்டு வந்திட்டீங்க “ இந்த வசனத்தைக் கேக்கும்போதே விஜயின் பலம் தெரிஞ்சிருக்கும் உங்களுக்கு.

 படத்தில் டைட்டில் கார்டு போடும்போதே உலகத் தலைவர்கள் பத்தின சிறுகுறிப்பு மற்றும் படத்தோட( ஃபோட்டோவோட)  தலாய் லாமாலேருந்து லெனின், மாசேதுங், சே குவாரா வரைக்கும் காமிக்கிறாங்க. விஜயும் உலகத் தலைவர்களில் அடுத்த தலைவராயிட்டாரோன்னு தோணுச்சு.


தலைவா படத்தில் விஜயின் பெயர் “விஷ்வா” ஒரு முறை நண்பர் செல்வகுமார் முக்கூர் என்ற ஊரில் இருக்கும் விஸ்வம் என்ற கடவுளுக்கான பாடல்கள் எழுதித் தரச் சொன்னார். விஸ்வம் என்றால் எல்லாம் அடக்கம். ஆதி அந்தம் எல்லாம் அதுதான். சிவன் , விஷ்ணு, ப்ரம்மா எல்லாம்... சர்வமும் அடக்கம். அந்தக் கோயிலில் என்னுடைய பதிமூன்று பாடல்களும் இசையமைப்பாளர் விவேக நாராயணன் இசையமைத்துக் கொடுக்க பாடப்படுவதாகக் கூறினார்.

இந்தப்படத்தில் விஜய்யின் பெயர் விஷ்வா..  அதுபோல சர்வமும் அவர்தான் என்று வைக்கப்பட்டிருக்குமா என்று தெரியவில்லை. அவருடன் மோதும் வில்லன் பெயர் ”பீமா”.. புது வில்லன் பேரு அபிமன்யூ சிங். கொஞ்சம் டெரரா நல்லா நடிச்சிருக்காரு. லுக்குலேயே வில்லன்.

ஆஸ்த்ரேலியால இருக்க விஜய் அண்ட் சந்தானம் இருவரும் நண்பர்கள். தண்ணீர் பாட்டில் சப்ளை செய்றாங்க. அங்கே அமலா பால் இவரை மீட் பண்ணி டான்ஸ் கத்துக்குறாங்க. காதலிக்கிறாங்க. இந்தியாவுல இருக்கிற விஜயோட அப்பாவை மீட் பண்ண வந்து துப்பாக்கியை வச்சு மிரட்டுறாங்க. அவங்க அப்பா சுரேஷும் சேர்ந்து மிரட்டி நாங்க போலீஸ் அப்பிடிங்குறார்.

”அண்ணா” சத்யராஜோட பையன் விஜய்னு தெரியவருது. நாயகன் டைப் படத்துல பாதி சத்யராஜ். அதன் பின் பாதியில் தளபதி பட  தளபதி மாதிரியே விஜய் இருக்கிறார்.  இதுல சத்யராஜுக்கு வார்தா மாதிரி ரிதமிக்கா இருக்கட்டும்னு அண்ணான்னு பேர் வச்சாங்களோ அல்லது எந்த அண்ணாவை சொல்றாங்க..?

கத்தியைப் பிடிச்சவனை கத்தி காக்கும் அல்லது அழிக்கும் . ஆனா அத விட முடியாது. திரும்பிப் போக முடியாதுன்னு சொல்றாங்க.  ஜெயமோகனின் திரில்லர் நாவலில் வருவது போல வன்முறை ஒரு மனிதனை எப்பிடி ஆக்கிரமிக்குதுன்னு காமிக்கிறாங்க. ஒரு முறை சுவைத்துவிட்டால் வன்முறையின், ரத்தத்தின் ருசி அவனை விட்டு இறப்பு வரை போவதில்லை.

அமலா பால் எல்லாப் படங்களும் போல இதிலும் அழகு, இளமை, கடைசியில் வார்சா கோட்டையில் இவரை மட்டும் அனுப்பி விஜயைக் கைது செய்ய சொல்றாங்க.. அவ்ளோ போலீஸ் இருக்க இவர மட்டும் எதுக்கு அனுப்புறாங்க. . சினிமாவுல லாஜிக் பார்க்கப்படாது.

ஊரில் இருக்கும் முதிய வாலிபர்கள் அமலா பாலைக் காதலிக்க அவரோ விஜய்யைக் காதலிக்கிறார். நடுவில் விஜயிடம் சாம் ஆண்டர்சன் என் கணவர் என்று கூற (யூட்யூப் புகழ் நடிகர் )  சாம் அங்கே நேரிலேயே வர செம கலாட்டாவாகி  திருமணமாகவில்லை என உண்மையை ஒப்புக் கொள்கிறார்.  பின்பு தான் காதலித்த போலீஸ் வேலையைத் துறந்து விஜயை மணந்து கொள்கிறார்.

 சினிமால அடிதடின்னா என்னண்ணே தெரியாம வளர்ற பசங்க தன்னோட அப்பா அடிதடிக்கின்னே பிறந்தவர்னு தெரிஞ்சதும் அவங்களும் அடிதடி ஸ்பெஷலிஸ்டா மாறிடுறாங்க. கலர்ஃபுல் காஸ்ட்யூமில் இருக்கும் விஜய் அடிதடிக்கு வந்ததும் ஃபுல் ஃபார்மில் ஃபார்மல்வேருக்கு மாறுகிறார். புஜம் தெரியும் அளவு டைட்டாக ஷர்ட், பாண்ட் டக்கின் செய்து ஏக் தம் ஃபிட்டாக இருக்கிறார். சிவப்பு துண்டை ஸ்டைலாக அப்பாவைப் போல ( லொள்ளு மைனஸ் சத்யராஜ்) அணிந்து ஏழை பாழைகளுக்காகப் போராடுகிறார். பாடுபடுகிறார். நீதி வழங்குகிறார்.

கூடவே இருக்கும் பொன்வண்ணன் ஹாலிவுட் படங்களைப் போலக் கடைசி நிமிடத்தில் வண்ணம் மாறுகிறார்.

 விஜயிடம் ஹீரோவுக்கான சகல லக்‌ஷணமும் இருக்கு. டான்ஸ் எல்லாம் பின்னிப்பெடலெடுக்கிறார். இரண்டு குழந்தைகளுக்குத் தகப்பன் இருந்தும் தொப்பையும் இல்லை., சிக்ஸ் பேக்ஸும் இல்லை. செம ஸ்மார்ட் லுக். ஹீரோவா எல்லாமே டபுள் ஓகே. ஆனால் மக்கள் தலைவனா இன்னும் நிறைய செய்யணும் பாஸ்.

வழக்கமான ஸ்டெப்ஸ் போக இதில் இன்னும் அதிரடி ஸ்டெப்ஸ். ஆனா ஆவன்னாவை இந்தப் புதுயுக குழந்தைகள் இந்தப்படம் பார்த்து முணுமுணுக்கத் துவங்கலாம். தமிழைப் பாடல்களில் கொண்டு வந்த முத்துக் குமாருக்கும், விஜய் அண்ட் விஜய்க்கும் டபுள் ஷொட்டு. அதே போல தமிழ்ப் பசங்க என்று அடிக்கடி சொல்லிக் கொள்வதும் ரசனைக்குரியதாக இருந்தது. அதேபோல சந்தானமும் விஜயும் என்ன ப்ரோ என்று அழைத்துக் கொள்வதும் அழகு.

வாங்கண்ணா வாங்கண்ணா பாடல் எம்ஜியாரின் ”நீங்க நல்லா இருக்கோணும் நாடு முன்னேற” என்ற  பாட்டை ஞாபகப் படுத்தியது. அட சினிமாவுல நடிக்கிறவங்களை எல்லாம் ஏன் அரசியலுக்குக் கூப்பிடுறீங்கன்னு கேக்க தோணுச்சு. ஒரு வேளை சினிமா ஜெயிக்க பண்ற அரசியலோ என்னவோ.

கோச்சுகிட்டா எம்ஜியார் ரசிகர்கள்தான் கோச்சுக்கணும். இதுல என்ன அரசியல் இருக்குன்னு வெடிகுண்டும், உண்ணாவிரதமும்னு புரியல. இதுக்கு நடுவுல தயாரிப்பாளர் சந்த்ர பிரகாஷ் ஜெயினுக்கும் நெஞ்சு வலின்னாங்க. படம் எடுத்து ரிலீஸ் ஆகாட்டா யாரா இருந்தாலும் வரும்தான்..

 எம்ஜியாருக்குப் போடுற ஆளுயர மாலையை விஜயின் தோள்களில் இயக்குநர் விஜய் போட்டு இருக்காரு. இளம் தோள்கள் இந்தச் சுமையைத் தாங்குமா தெரியலை. இளைய தளபதி விஜயின் இளம் ரசிகர்கள் தாங்கிப் பிடிக்கலாம்.

விஜயிடம்  ஹீரோவுக்கான சகல குணங்களும் இருக்கு.  அதோடு எளிமையும் இருக்கு. எப்பவுமே அலட்டிக்க மாட்டார். ஆனா அவரை ஏசுநாதர் ரேஞ்சுக்கு கப்பல் உச்சியில் நிக்க வச்சிருக்கும் சீன்ஸ் எல்லாம் இருக்கு. ஒரு அளவுக்கு மேல் அவரின் மேல் சுமையை ஏற்றுகின்றார்களோ என்று தோன்றுகிறது.

அவர் கண்களில் ஒரு சின்ன மின்னல் இருக்கும். சிரிப்பிலும் ஒரு சின்ன வசீகரம் இருக்கும். என் உறவினர்களில் இளைய தலைமுறையினர் அனைவருமே விஜய் ரசிகர்கள்தான். அவர் மேனரிசம்களுக்கும் நடனத்துக்கும் நடிப்புக்கும் அவர்கள் அனைவருமே அடிமைகள். நம்மைப் போன்ற அனலைசிஸ் எல்லாம் செய்யாமல் அவர்கள் விஜயை விஜயாகவே ரசித்துக் கொண்டிருக்கிறார்கள்.

பெங்களூரு கோபாலன் மாலில் டிக்கெட் 220 ரூபாய். ஐந்து பேருக்கு 1200 ரூபாய். அரங்கம் நிறைந்த ஃபுல் கூட்டம்.  விஜய்க்கு இவ்ளோ ரசிகர்களா என்று தோன்றியது. துபாயில் இருந்து வந்திருந்த என் தம்பி மகன்  தலைவா பார்க்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டே இருந்தான். அவனுக்குப் பத்து வயது. அவனுக்காகவே சென்றோம். படம் முடிந்தும் எழுந்து கொள்ளாமல் சீட்டிலேயே அமர்ந்திருந்தான். அவ்ளோ ரசிகன்..:)

தமிழ் நாட்டில் இன்றைக்குத்தான் ரிலீசாமே.. நாங்க பார்த்து ஒரு வாரம் ஆச்சு. :)

விஜயிடம் இன்னும் நிறைத் திறமைகள் இருக்கு. மாஸ் அப்பீல் இருக்கு . இதே போல பஞ்ச் டயலாக், ஒரே தலைவன் என்ற சுழலுக்குள் மாட்டாமல் வெவ்வேறு தளங்களிலும் இயங்கி இன்னும் நல்ல படங்கள் வழங்கவேண்டும் என்பதே எனது எண்ணம்.

டிஸ்கி :-

இவற்றையும் பாருங்க.

1. எந்திரன் .. THE ROBOT.. எனது பார்வையில்.

2. ஸ்மைலியும் க்ளாடியும் கல்கியும்.


 


 


8 கருத்துகள்:

  1. அப்போ, பார்க்கலாம்னு சொல்றீங்க..

    பதிலளிநீக்கு
  2. முடிவில் உள்ள எண்ணம் உட்பட நல்ல விமர்சனம்...

    பதிலளிநீக்கு
  3. அட்டகாசம் தேனம்மை..

    அருமையான விமர்சனம்....

    படம் பார்க்கும்போது எனக்கு தோணின அத்தனையும் அற்புதமா விமர்சனத்தில் பதித்துவிட்டீர்கள்..

    குழந்தைகள் இருந்து வயதானவர் வரை ரஜினி ரசிகர்கள் இருப்பது போல..

    விஜய்க்கென்றே ரசிகர் கூட்டம் இருக்கிறது குட்டீஸ்ல இருந்து பெரியவர்கள் வரை...

    இந்தப்படம் அரசியலில் நுழைய எடுத்து வைத்த முதல் படியா இருக்குமோன்னு எனக்கு டவுட் தோணிருச்சு...

    விஜயகாந்த் இப்படி தான் ஆரம்பிச்சார்... இப்ப பக்கா அரசியல்வாதியா ஆகிட்டார்... அரசியல்வாதியா ஆகிரது தப்பே இல்லை நடிகர் நடிகைகள்.... அவங்களுக்கு மட்டும் அரசியலில் ஈசி எண்ட்ரி ஆகிறது.... படங்களில் செய்த நல்லவை எல்லாம் நிஜம் என்று நினைக்கு ஆட்டமந்தை கூட்டம் நாம்...

    அதை நிஜமாக்கினால் தான் என்ன?

    நல்லதை செய்தால் தான் என்ன?

    அரசியல்வாதியாக விஜய் ஹுஹும் சோபிக்க இயலாது...

    ஆனால் நடிகனாக... டான்ஸ் , நடிப்பு, நகைச்சுவை, சோகம் எல்லாமே ரசிக்கவைக்கும் மாஸ் நடிகர் தான் விஜய்...

    அன்பு நன்றிகள் தேனம்மை அட்டகாசமான விமர்சனத்திற்கு....

    பதிலளிநீக்கு
  4. "இன்னும் நல்ல படங்கள் வழங்கவேண்டும் என்பதே எனது எண்ணம். "

    நக்கலா !!!

    இன்னும் ஒரு நல்ல படம் கூட தரல. இதில இன்னும் நல்ல படமா ................

    விஜய்க்கு ரசிகனாக இருந்திட்டு போங்க ஆனா அதுக்காக இப்படி அண்ட புழுகை அவிழ்த்து விடாதீங்க

    பதிலளிநீக்கு
  5. திருட்டு dvd யில் பாருங்க.
    தியேட்டர் போயி உங்க பணத்தை கரியாக்காதீங்க

    பதிலளிநீக்கு
  6. Don't you have a common sense abt not revealing the entire story?

    பதிலளிநீக்கு
  7. ஆம் கோவை ஆவி

    நன்றி தனபாலன்

    நன்றி மஞ்சு

    நன்றி பெயரில்லாஸ்ஸ்ஸ் உங்க கருத்துக்களுக்கு

    பதிலளிநீக்கு
  8. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)