புதன், 27 பிப்ரவரி, 2013
தகுதியுள்ளது..
எங்கோ ஒரு சிறுமி
மறைமுக பாலியல்
துன்பியலில் பயந்து
நடுங்கிக் கிடக்கிறாள்.
நெடுஞ்சாலை ஓர
குத்துப் புதருக்குள்
காதலனை சந்திக்க
சென்றவளின் பிணம்.
மிதவாதியா அல்லவா
பிரிக்கத் தெரியாமல்
சூலுற்றவளுக்கு
சிறையில் பிரசவம்.
மறைமுக பாலியல்
துன்பியலில் பயந்து
நடுங்கிக் கிடக்கிறாள்.
நெடுஞ்சாலை ஓர
குத்துப் புதருக்குள்
காதலனை சந்திக்க
சென்றவளின் பிணம்.
மிதவாதியா அல்லவா
பிரிக்கத் தெரியாமல்
சூலுற்றவளுக்கு
சிறையில் பிரசவம்.
செவ்வாய், 26 பிப்ரவரி, 2013
ஷாம்பூ
”மம்மி.. ஷாம்பூ போடுங்க.. சீயக்கா வேணாம். கண் எரியும்.” சிணுங்கினாள் மீத்து.
”அம்மம்மாகிட்ட கேளு.சீயக்காய்தான் நல்லது. “ அம்மா ரேச்சல்.
“ஷாம்பூவே போடு. அதென்ன அம்மம்மாகிட்ட கேக்கிறது..” தன் அதிகாரத்தை நிலைநாட்டியபடி நகர்ந்தாள் மீத்துவின் தாதி ப்ரேம்.
டில்லிக்கு வேலை நிமித்தம் வந்தபோது பஞ்சாபின் திலீப் சர்மாவை காதல் மணம் செய்தவள் கேரள ரேச்சல்.
கேரளாவின் சிவப்பரிசிச் சோறு., குழாய்ப்புட்டு., கடலைக்குழம்பு., சாப்பிட்டு வளர்ந்த ரேச்சல் மாமியாருக்காக ரோட்டி., காலிதால் மாக்னி., பஞ்சாபி பனீர்., ஆலு கோபி., கோப்தா க்ரேவி., கடி., என உணவையும் மாற்றிக் கொண்டாள். தேங்காய் எண்ணெய், சீயக்காய் குளியல்தான் மாற்ற முடியவில்லை அவளால்.

திங்கள், 25 பிப்ரவரி, 2013
மனைவி சொல்லே மேனேஜ்மெண்ட் மந்திரம். ஷாரு ரெங்கனேகர். தமிழில் வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன். நூல் பார்வை
இந்த விமர்சனம் அமேஸானில் ”25 நூல்கள் - ஒரு பார்வை ( இரண்டாம் தொகுப்பு )” என்ற தலைப்பில் புத்தகமாக்கம் பெற்றுள்ளது. அங்கே படிக்கலாம். நன்றி மக்காஸ்.
டிஸ்கி :- இந்தக் கட்டுரை 19, மார்ச் , 2012 திண்ணையில் வெளியானது.
வெள்ளி, 22 பிப்ரவரி, 2013
லங்காதீபம் ( கவியருவி) விருது.
திருமதி கலைமகள் ஹிதாயா ரிஸ்வி அவர்கள் இலங்கையைச் சேர்ந்த பெண் எழுத்தாளர். இலங்கையில் செயல்படும் தடாகம் கலை இலக்கிய வட்டத்தின் அமைப்பாளர் இவர். இதன் சார்பாக இதன் தகவல் பிரிவின் செயலாளர் ரமலான் தீன் அனுப்பிய அழைப்பு இது. மிகச் சிறப்பான இந்த விருதுக்கு என்னைத் தேர்ந்தெடுத்தமைக்கு நன்றி ரமலான் & கலைமகள் ஹிதாயா ரிஸ்வி மேடம்.
வியாழன், 21 பிப்ரவரி, 2013
நெருஞ்சி. கவிதைத் தொகுதி எனது பார்வையில்
இந்த விமர்சனம் அமேஸானில் ”25 நூல்கள் - ஒரு பார்வை ( இரண்டாம் தொகுப்பு )” என்ற தலைப்பில் புத்தகமாக்கம் பெற்றுள்ளது. அங்கே படிக்கலாம். நன்றி மக்காஸ்.
டிஸ்கி:- இந்தக் கட்டுரை 26, ஃபிப்ரவரி ,2012 திண்ணையில் வெளியானது.
புதன், 20 பிப்ரவரி, 2013
ஓய்வும் பயணமும்.
நடைப்பாதைப் பயணத்தில்
வெள்ளையடிக்கப்பட்ட மதகடியில்
ஓய்ந்தமர்ந்தேன்.
கரண்டுக் கம்பங்களில் காக்கையும்
மதகடி நீரில் கொக்கும்
வயல் வரப்புக்களில் நாரையும்
நெத்திலிகள் நெளிந்தோட
குட்டிச் சோலையாய்
விளைந்து கிடந்தது வாய்க்கால்.
வெள்ளையடிக்கப்பட்ட மதகடியில்
ஓய்ந்தமர்ந்தேன்.
கரண்டுக் கம்பங்களில் காக்கையும்
மதகடி நீரில் கொக்கும்
வயல் வரப்புக்களில் நாரையும்
நெத்திலிகள் நெளிந்தோட
குட்டிச் சோலையாய்
விளைந்து கிடந்தது வாய்க்கால்.
செவ்வாய், 19 பிப்ரவரி, 2013
நீ நதி போல ஓடிக் கொண்டிரு.. ஒரு பார்வை.
டிஸ்கி:- இந்தக் கட்டுரை டிசம்பர் 2, 2012 திண்ணையில் வெளிவந்தது.
திங்கள், 18 பிப்ரவரி, 2013
தீக்கதிரில் ..
சாஸ்த்ரி பவனில் நடைபெற்ற மகளிர் தினவிழா ( 2011) வுக்கு டாக்டர் கமலா செல்வராஜை சிறப்பு விருந்தினராகவும். என்னை சிறப்புப் பேச்சாளராகவும் அழைத்திருந்தார்கள். பெண்களுக்கான சங்கம் ஒன்றும் தலித் பெண்களுக்கான சங்கம் ஒன்றும் இணைந்து செயல்படுகிறது அங்கு. அந்த நிகழ்வில் டாக்டர் பெண்களின் கர்ப்பகால சிகிச்சைகள் பற்றிய முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்கள்.
வெள்ளி, 15 பிப்ரவரி, 2013
விஸ்வரூபம்.. எனது பார்வையில்
விஸ்வரூபம்..
ஒரு பெரியவர் புறாக்களுக்கு தீவனம் அளித்தபடி தோன்றுகிறார். ஒரு புறாவை மட்டும் எடுத்துப் பறக்க விடுகிறார். பின்னால் அமர்ந்திருந்த இருவரில் ஒருவர் “ இவர் கமலஹாசனா.. ? “ இன்னொருவர் “ இவர் கமலஹாசனாவும் இருக்கலாம். அவர் எந்த ரோலும் பண்ணுவார்.” என்கிறார்.
பயங்கர எதிர்ப்பார்ப்போடு படம் பார்க்கத் துவங்குகிறோம். விஸ்வநாதனின் மனைவி பூஜா குமார் தனக்கு ஏற்படும் சமீப அனுபவங்களை ஒரு டாக்டரிடம் பகிர்கிறார். அதே நேரம் ஒரு டிடக்டிவை ஏற்பாடு செய்து தன் கணவரைப் பின் தொடரச் செய்கிறார். அவர் புகைப்படம் எடுத்து பூஜாவின் கணவர் ஒரு முஸ்லீம் என்பதை பதிவு செய்கிறார். கண்ணாடிச் சுவர்களுடன் மாஸ்க் என்பது வெளிநாடுகளில் இருக்குமோ.. # டவுட் நம். 1.

வியாழன், 14 பிப்ரவரி, 2013
காதல் கசப்பா இனிப்பா..
காதல் கசப்பா இனிப்பா..
இன்னிக்கு வாலண்டைஸ் டே..
நாமளும் எதுனாச்சும் கவுஜ சொல்லணும்னு பார்க்குறேன். அல்லது கருத்து பகிரணும்னு பார்க்குறேன்.
ரோசிச்சு ரோசிச்சு வயசான மாதிரி ஆயிடுச்சு..
"நம் தோழியி"ல் போட்டபடி
"காதலுக்கு தூது சென்றேன் . உதைத்தார்கள்." "அத்தைமகனும் தோழியும் பின்ன நானும்" என்றெல்லாம்
காதலுக்காவது தூது போயிருக்கமான்னு பார்த்தா ஒண்ணுமே இல்லை.
புதன், 13 பிப்ரவரி, 2013
மாமியார் vs மருமகள்
பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்கும்போதே பையனோட தகுதிகளோடு கூட மாமியார் நல்லவங்களா., பொண்ணை நல்லா வச்சிப்பாங்களா என்பதுதான் பெற்றோரின் கேள்வியாய் இருக்கும். பின்னாளில் இந்தப் பொண்ணு நம்ம நல்லா கவனிச்சுக்குவாளா என்பதே பையனைப் பெற்ற தாயின் எண்ணமாய் இருக்கும். ஒரு ஆண்மகன் மனைவி பக்கமோ, தாய் பக்கமோ பேசமுடியாதபடி நடுநிலைமை வகிக்க வேண்டியிருக்கும். இருவருமே அவருக்கு முக்கியம்.
செவ்வாய், 12 பிப்ரவரி, 2013
சாதனை அரசிகள் புத்தக வெளியீட்டில் திரு பாரதி மணி அவர்களின் உரை..
சாதனை அரசிகள் புத்தகம் ஜனவரி 8 அன்று ( பபாசியில் ) டிஸ்கவரி புத்தக நிலைய ஸ்டாலில் வெளியிடப்பட்டது. என் கணவர் வெளியிட முதல் காப்பியை நடிகர் மற்றும் பெருமதிப்பிற்குரிய நண்பர் திரு . பாரதி மணி அவர்களும் , இரண்டாம் காப்பியை கிரிக்கெட்டர் திருஷ்காமினியும் பெற்றுக் கொண்டார்கள்.
திங்கள், 11 பிப்ரவரி, 2013
குங்குமத்தில் பிரபல பதிவர்களின் கருத்துக்கள்.
குங்குமத்தில் இருந்து முகநூல் மற்றும் வலைத்தளம் குறித்தான கருத்துக்கள் கேட்டார்கள். நிறைய சந்தோஷ நட்புக்களைக் கொடுக்கும் இடமாக இருந்தாலும் சில பல சர்ச்சைகளிலும் சிக்க வைத்து அவதிப்படுத்தும் இடமாக அது மாறிவிடும் சில நேரம். எனவே என்னுடைய கருத்தாகப் பலதும் பகிர்ந்தாலும் அது எடிட் ஆகிக் கொஞ்சம்தான் வந்திருக்கிறது.
( சின்மயி மற்றும் ராஜன் பற்றிக் கூறவில்லை. எது சரி என்றும் எது தவறு என்றும் அவர்கள் இருவருக்குமே தெரிந்திருக்கும். ட்விட்டரில் அக்கவுண்ட் ஆரம்பித்துவிட்டு செல்லாமலே இருக்கிறேன். நடந்தது எதுவும் அங்கங்கே லிங்கில் கிடைக்கின்றன. எல்லாமே சரியா இல்லை இணைப்பா என்றும் தெரியவில்லை. சம்பந்தப்பட்டவர்கள் வாய்மொழியாக வந்தால்தான் உண்டு. எனவே நான் என்னுடைய கருத்தை மட்டும் சொன்னேன். )

வெள்ளி, 8 பிப்ரவரி, 2013
வியாழன், 7 பிப்ரவரி, 2013
சுவரோவியங்களும் குட்டீஸ் ஓவியங்களும்:-
சும்மா மோட்டு வளையை அல்லது சீலிங் பானைப் பார்த்தபடி படுத்திருக்கும் போது சுவத்துல குட்டீஸ் கலர் பென்சில், க்ரையான்ஸ்ல கிறுக்கி இருப்பதை பார்க்கலாம் . இது போக சுவத்துல தானே தண்ணீர் பட்டோ, கீறல் பட்டோ வெடிப்பு விழுந்தோ இயற்கையான உருவங்கள் தெரியும்..
எங்க தெரியுதுன்னு கேக்கிறீங்களா.. அதுக்கெல்லாம் கொஞ்சம் கலைக் கண் வேணுங்க..! ( ஹிஹி ).
எனக்குத் தெரிஞ்ச சில ஓவியங்கள் உங்கள் பார்வைக்கு.
இது சித்தன்ன வாசல், குடுமியான் மலை ஓவியங்களை ஞாபகப்படுத்துது இல்லையா. எதிர் காம்பவுண்டுல மண் சுவர் வீடு பேர்ந்து உருவான ஓவியம் இது. சிலருக்கு ஒரு படத்துல வடிவேலு தலை இப்படி இருந்தது ஞாபகம் வரலாம்.

புதன், 6 பிப்ரவரி, 2013
தானாய் நிரம்பும் கிணற்றடி ..அய்யப்பமாதவனின் சிறுகதைத் தொகுதி எனது பார்வையில் .
இந்த விமர்சனம் அமேஸானில் ”25 நூல்கள் - ஒரு பார்வை ( இரண்டாம் தொகுப்பு )” என்ற தலைப்பில் புத்தகமாக்கம் பெற்றுள்ளது. அங்கே படிக்கலாம். நன்றி மக்காஸ்.
செவ்வாய், 5 பிப்ரவரி, 2013
ப்ளூம்பாக்ஸ் (BLOOM BOX ) எப்போ இந்தியாவுக்கு வரும்
ப்ளூம்பாக்ஸ் எப்போ இந்தியாவுக்கு வரும்
**********************************************
சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் தயாரித்து வழங்க ( 3 ஆண்டுகளில் ) தமிழக அரசு திட்டம் அறிவித்து இருக்கும் நேரம் நானும் ஒரு தகவலைப் பகிர்ந்துக்க விரும்புறேன்.
நம்ம ஊரைச் சேர்ந்த கே. ஆர் . ஸ்ரீதர் கண்டுபிடிச்ச ‘ப்ளூம் பாக்ஸ்’ மூலமா ஆக்சிஜனும் ( ஆக்சிஜனையும் தயார் செய்து அனுப்பணும் ) இயற்கை எரிபொருள் அல்லது சூரிய சக்தி சேர்த்து ஒவ்வொரு வீட்டிற்கும் தேவையான மின்சாரத்தை நாமே தயாரிச்சுக்கலாம். ஆச்சர்யமாவும் சந்தோஷமாவும் இருக்கா..

திங்கள், 4 பிப்ரவரி, 2013
நிலங்களுக்கும் ரேஷன்.
நிலங்களுக்கும் ரேஷன்.
சென்ற சில மாதங்களாக தொடர்ந்து பயணங்கள் செய்யும் போது ஒரு விஷயம் பளிச்செனக் கண்களில் அறைந்தது. அது என்னவெனில் நம் தமிழ்நாடு முழுமைக்கும் ரியல் எஸ்டேட்டாக துண்டு போடப்பட்டிருக்கும் காட்சி. காடு, மலை, மேடு, கம்மாய் ஊரணி , அருவி போன்ற சில இடங்களைத் தவிர எல்லா இடங்களும் கற்களாலும் காம்பவுண்ட் சுவர்களாலும் கட்டம் பிரிக்கப்பட்டுக் கிடக்கின்றன.
நிறைய விவசாய நிலங்கள் மற்றும் தூர்ந்த குளங்கள், ஏரிகள் கூட. இதனால்தான் மழை வரும் நேரம் அந்த வீடுகள் எல்லாம் நீரில் மூழ்கிக்கிடக்கின்றன. நிறைய மரங்கள் வைப்பதன் மூலம் காற்றை உற்பத்தி செய்யலாம். கடல் நீரிலிருந்து குடிநீர் தயாரிக்கலாம் ஆனால் உற்பத்தி செய்ய முடியாத ஒன்று என்றால் அது நிலம் மட்டுமே.