செவ்வாய், 26 பிப்ரவரி, 2013

ஷாம்பூ

”மம்மி.. ஷாம்பூ போடுங்க.. சீயக்கா வேணாம். கண் எரியும்.” சிணுங்கினாள் மீத்து.

”அம்மம்மாகிட்ட கேளு.சீயக்காய்தான் நல்லது. “ அம்மா ரேச்சல்.

“ஷாம்பூவே போடு. அதென்ன அம்மம்மாகிட்ட கேக்கிறது..” தன் அதிகாரத்தை நிலைநாட்டியபடி நகர்ந்தாள் மீத்துவின் தாதி ப்ரேம்.

டில்லிக்கு வேலை நிமித்தம் வந்தபோது பஞ்சாபின் திலீப் சர்மாவை காதல் மணம் செய்தவள் கேரள ரேச்சல்.

கேரளாவின் சிவப்பரிசிச் சோறு., குழாய்ப்புட்டு., கடலைக்குழம்பு., சாப்பிட்டு வளர்ந்த ரேச்சல் மாமியாருக்காக ரோட்டி., காலிதால் மாக்னி., பஞ்சாபி பனீர்., ஆலு கோபி., கோப்தா க்ரேவி., கடி., என உணவையும் மாற்றிக் கொண்டாள். தேங்காய் எண்ணெய், சீயக்காய் குளியல்தான் மாற்ற முடியவில்லை அவளால்.


ஒரு வழியாக மீத்துவுக்கு ஷாம்பூ போட்டுக் குளிக்க வைத்து அவள் நீளமுடியை ஹேர் ட்ரையரால் உலர்த்திக் கொண்டிருந்தாள் ரேச்சல்.

அவள் நாத்தனார் ரேணுவிடம் இருந்து போன்.,” பாபி., அம்மாவைக் கூப்பிடுங்க. இங்க பூஜா ஹென்னா போட்டுக்க மாட்டாளாம். ஷாம்பூதான் போடணுமாம். நானி சொன்னாதான் கேப்பா..”

ஃபோனை வாங்கிய மாமியார் ப்ரேம்., பூஜா.,நானி சொல்றதக் கேளு.. ஹென்னாதான் பெஸ்ட்., ஷாம்பூ வேஸ்ட். முடி கொட்டும்” என்று கூறியதைக் கேட்ட ரேஷ்மா விக்கித்து நின்றாள்.

டிஸ்கி:- இந்தச் சிறுகதை 10, அக்டோபர் , 2011 திண்ணையில் வெளியானது


3 கருத்துகள்:

  1. தனக்கென்று வரும் போது வேற தான்... உலக இயல்பு! நறுக் சுருக்குனு மனசுல தைச்சது தேனக்கா! அருமை!

    பதிலளிநீக்கு
  2. சிறப்பான கதை.

    எல்லா இடத்திலயும் இப்படித் தானா...:)

    பதிலளிநீக்கு
  3. நன்றி கணேஷ்

    நன்றி கோவை2தில்லி

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)